பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவை தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் விமர்சித் திருந்தார்.

இந்நிலையில் வேல் முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாடும், உலகநாடுகளும் காஷ்மீரில் கொண்டு வரப்பட்டிருக்கும் மறுசீரமைப்பை ஆதரிக்கும் சூழ்நிலையில், பிரிவினையை தூண்டும்வகையில் வேல்முருகன் பேசியதையும் அண்ணன் H.ராஜா அவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும்பப்பெறவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.