மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு பிரதமர் மோடியுடன் டிஜிட்டலில் செல்ஃபி எடுக்கும் சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 3 ஆண்டுகால மத்திய அரசு நிறைவுபெற்றுள்ளது. இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும்,

மத்திய அரசின் சாதனைகளை விளக்கவும் சென்னை வேளச்சேரியில் மத்திய விளம்பரத் துறை சார்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண் காட்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். கண்காட்சியில் முழுக்கமுழுக்க எங்குபார்த்தாலும் பிரதமர் மோடி புகைப்படங்களால் நிரப்பட்டுள்ளது.

மக்கள்மீது அக்கறைகாட்டும் அரசு பாஜக, மேக் இன் இந்தியா மற்றும் துறைரீதியாக மத்திய அரசு செய்துள்ள அனைத்து விஷயங்களும் பேனர்களாக வைக்கப் பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் தமிழில் தலைப்பிடப்பட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளது.
 
சென்னையில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கண்காட்சியை பார்வை யிட்டனர்.
 
இதுமட்டுமல்ல இளைஞர்கள் மற்றும் செல்ஃபி பிரியர்களை கவர சிறப்பான திட்டமும் செய்யப் பட்டுள்ளது. ஆம் டிஜிட்டல் முறையில் பிரதமர் மோடி அருகில்நின்று செல்ஃபி எடுப்பது போன்ற நூதன ஏற்பாடையும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை செய்துள்ளது.
 

Leave a Reply