''வைகோ சந்தர்ப்பவாத அரசியல்நடத்துகிறார். நம்பிக்கையுடன் ஆர்கே. நகரில் களம்காண்கிறோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.


மதுரையில் அவர் கூறியதாவது: புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனுடன் பார்வையிட்டேன். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. புயல்பாதித்த பகுதிகளில் இறப்பு குறித்து தவறான தகவல் கூறுகின்றனர். எதுவும் உண்மை இல்லை.


புயல் பாதித்துள்ள இடங்களில் ஆக்க பூர்வமாக பணிகள் செய்துள்ள எங்கள் கட்சி குறித்து சில தலைவர்கள் கருத்துசொல்வது சரியில்லை. புயல்பாதித்த பகுதியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்கவேண்டும். கடலுக்குள் எத்தனை மீனவர்கள் சென்றனர் என்ற கணக்கு தமிழகஅரசிடம் இல்லை. எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் கணக்கீடு செய்யவில்லை. வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். ஆர்கே. நகரில் நம்பிக்கையுடன் களம் காண்கிறோம், என்றார்.

Leave a Reply