இந்திய அரசியல் வாதிகள் சுயநலத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

முதலில்.. இதை சொல்லிவிடுகிறேன்..

சிதம்பரத்திற்க்கு அடுத்தபடியாய் ஷரத் பவார் போன்ற தேசத்தின் மாபெரும் துரோகி.. எவருமே இருக்க முடியாது.. இதை ஆகப்பெரும் சோகத்துடனேயே சொல்கிறேன்..

காரணம், அரசியல் இயக்கம் என்பது.. மக்களில் ஏதோ ஒருசாராரின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இயக்கமாய் ஆரம்பித்து, பின்னர், அது தலைவர்களின் பணம்சேர்க்கும் இயக்கமாய் மாறிப்போவது.. அரசியலில் அந்த இயக்கம் இறந்து கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. இப்படித்தான் நம்மூரிலும் உள்ள ஒரு இயக்கமுமே, டயபர் மாற்றுவதிலும் போட்டி போட்டு கொண்டிருக்கிறதும் இதேகாரணம்தான்.

ஷரத் பவார், ஏதோ ஓரு காரணத்திற்காக.. தாவூத் இப்ராஹிம்மை இன்று வரை மறைமுகமாய் ஆதரித்தே வந்திருப்பது அரசியல் வேசித்தனத்தின் உச்சகட்டம். சின்ன சின்ன குற்றங்களை, அரசியல் சார்போடு மும்பையில் செய்துவந்த தாவூத் அரசியல் பிண்ணனி காரணமாய் மாபெரும் தாதாவாக.. இதன் தொடர்ச்சி..

March 1993.. தாவூதின்/பாகிஸ்தான் தயவில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடித்தது. அப்போதைய முதல் மந்திரி ஷரத் பவார். அவர் அப்போது 13 இடங்களில் குண்டு வெடித்தது என்றார். கடைசியாய் அவர் சேர்த்துக் கொண்டது மஸ்ஜித். இது பெருவாரியான செக்யூலர்களை..பார் வேறு யாரோ சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்று, கட்டமைக்க உதவ, Divert செய்ய உதவியது.

இப்படி மும்பை நிலைகுலைந்த சமயத்தில்.. தாவூத் இப்ராஹிம் தப்பி துபாய் போய்.. பின் பாக்கிஸ்தான் போய்சேர.. உதவியதே இந்த சரத்பவார்தான் என்றும் பலர் குற்றம் சாட்டுகிறார்கள். இன்றுவரை, அந்தகேஸில் தாவூத் இப்ராஹிம், மீது சுண்டு விரல் கூட படவில்லை. அதைவிட.. அவரின் சொத்துக்கள்.. முகம்மது அலிரோடு, ஜோகேஷ்வரி இங்கெல்லாம் இருந்தாலும்.. மும்பை போலீஸ் தாவூத் இப்ராஹிம், இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்திய பின்னரும் ஷரத் பவார் ,தாவூத் இப்ராஹிம்க்கும் இதுக்கும் சம்பந்தம் என்றே சொல்லி வந்தார்

மேலும் ஷரத் பவார்.. ஒற்றை வரியில்.. தாவூத் இப்ராஹிம் க்கு.. மும்பையில் எந்த சொத்தும் இல்லை என்று சொன்னது.. அவரின் அன்பின் வெளிப்பாட்டை உறுதிபடுத்தியது.

தற்போது.. பாலகோட் தாக்குதல் பற்றி சொல்லும் போதுமே கூட .. இது தீவிரவாதிகளின் மீதான தாக்குதலில்லை.. காஷ்மீர் மீதான தாக்குதல் என்று இவர் சொன்னதின் உள்புதைந்த அர்த்தத்தை புரிந்துகொள்ள முனையுங்கள்.

இதே சமயத்தில்.. உளவு ஸ்தாபனங்களான ரா மற்றும் ஐபி டெஹ்ரான் மற்றும் கல்ஃபில் பரிதாபகரமான நிலமையில் இருந்தது. இதற்கு முழுமுதல் காரணம்.. அப்போதைய ஈரானிய தூதர் ஹமீத் அன்சாரி என்கிற, ஈரான் காதலர்.. ஒருமாதிரி ரா ஐபியை ஒழித்திருந்தார். அதைத்தாண்டி ரத்தன் சேகால் என்கிற ரா உளவாளி சிஐஏக்கு இந்திய மூவ்களை தந்துவிட்டு அமெரிக்கா தப்பியதையும் நினைவில் கொள்ளவேண்டும்..

ஷரத் பவார்-2

மும்பையில் வெடி வைத்த பின்.. எல்லாவித தீவிரவாத குண்டர்களும்.. இந்தியாவை விட்டு சமர்த்தாய் வெளியேற முடிந்தது. இதற்கு உழைத்தபின்னால் நிழலாய் இருந்தவர்களையும்.. ஒளிந்து கொள்ள வசதியும் தரப்பட்டது. இதெல்லாம் சாதாரண அரசு அல்லது போலீஸ் தரப்பால் செய்துவிட முடியாத அளவு காரியங்கள். இதற்கு அசுரத்தனமான அரசியல்பலங்கள் தேவை. இது இருந்தது யாரிடம் என்று உங்களின் கணிப்புக்கே விட்டு விடுகிறேன்..

பின் ஒரு நாளில் அஜித் தோவல் கராச்சியில் தாவூதை குறிவைத்து எல்லா ஆபரேஷனும் சரியாக ப்ளான் பண்ணியநாளில்.. கார் கராச்சி க்ளிப்டனில் இருந்து இன்றைக்கு எப்படிவரும்.. யார் முதல் சிக்னல் தருவது? யார் எந்தபக்கம் சுடுவது என்று முடிவு ஆன பிறகு.. கடைசி தொடியில் அவசர அவசரமாய் தில்லியில் இருந்து, கால்வந்து.. ஆபரேஷனையே கேன்சல் செய்த அரசியல் உத்தரவு பற்றி இது தாண்டி இங்கு சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன். ஆனால்.. இரண்டாவதாக ஒரு சான்ஸ் வந்தது..

தாவூதின் மகளை மியான்தாதின் மகன் ஜூனைதின் திருமணம் துபாயில்.. அதற்கு தாவூத் வரப்போகிற செய்தி. 09/07/2005இல் நிச்சயம். 23 ஜூலையில் அங்கு திருமணம். இந்த நேரத்தில்..துரிதமாய் காரியங்களை செய்ய ஐபி மற்றும் ரா முடிவெடுத்தது. நம்முடைய ஐ பி மற்றும் ராவின் அடிப்படையையே காலிபண்ணிய அன்சாரியால் கல்ஃபில் எதையும் செய்ய முடியாத நிலையில் இருந்த சமயம் அதனால் தாவூதை துபாயிலும் எப்படி கை வைக்கலாம் என்று யோசித்தபோது..

பாங்காக்கில் சோட்டா ராஜனை போட்டுத்தள்ள தாவூத் முயன்றபோது.. இந்திய ஏஜன்ஸிகளின் உதவியால் ராஜன் தப்பியது பின்னாளில் இந்திய ஏஜென்ஸிகளுக்கு உதவியது. அஜித்தோவல் 2005இல் ரிடையர் ஆனாலுமே.. இனடெல் ஆபரேஷன் அவர் கையில். அப்போது.. சோட்டா ராஜன் மூலம் தாவூதை முடிக்க.. ராஜனின்.. ஆட்கள ..பரீத் மற்றும் விக்கி மல்ஹோத்ராவை ஐபி மற்றும் ரா தயார் செய்தது. காரணம்.. அரசு ஏஜன்ஸிகள் நேரடியாக இப்படியான காரியங்களை செய்ய அப்போதைய மன் மோகன் தயாரில்லை.

இரண்டு ஆட்களும் வந்தாகி விட்டது.பாஸ்போர்ட் மற்றும் உபகரணங்கள் ரெடி.. தோவலின் காரில் இவர்களுக்கு கடைசி கட்டங்களை சொல்லிகொடுத்து கொண்டிருந்தார். அடுத்து பயணம்தான். காரில் டாப்பிங் செய்ய முடியாது, அதனால்.. தில்லி ஹௌஸ் காஸ்க்கு அருகே..வந்தபோது.. அப்போதைய மும்பை போலீஸ் சீஃப் கமால் காவால் தடுக்கப்பட்டு, தோவலின் எதிர்ப்பையும் மீறி ராஜனின் இரண்டு ஆட்களும் கைது செய்யப் பட்டனர். அடுத்த நாள்.. மும்பை ஹோட்டலில் கைது ஆனது போல் செய்திவந்தது. தாவூதும் தப்பினான்.

ஒரு DCP இப்படியான கைதுசெய்வது.. Political தலைவர்களின் ஆசியல்லாமல் செய்ய முடியாது. மேலதிகாரி சொன்னாலும் முடியாது என்றும் அதிகாரிகள் சொல்வார்கள். இதை ஆராய்ந்தால் யாரிடம் போகிறது என்பதையும் உங்களின் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன்.

ஷரத் பவாரின் ஊழல்களை சொல்ல.. ஒருவருடமாகும். தொட்ட எல்லாம் ஊழல்தான்.. ஆனால்.. இந்த சம்பவம் என்னை.. என்னைப்போன்ற தேசியவாதிகளை.. குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உறவினர்களை, இப்படி பலரையும் வெறுப்பேற்ற செய்தது. அப்போதைய முதல்வர் ஷரத் பவார்.

இன்னும் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும் பவார். அத்தனை ஊழல்களும் வெளியில் வரவேண்டும். பசிக்கு துணையாய் தில்லியில் வசிக்க ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.

(எழுதிய அனைத்தும் பொது தளங்களில் கிடைக்கிறது)

Comments are closed.