''ஊரை சுத்தப்-படுத்தும் ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது,'' என, தமிழக பா.ஜ க ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது : மத்திய அரசின் தூய்மை இந்தியாதிட்டத்தை, ஸ்டாலின் பின்பற்றுவது பாராட்டுக்குரியது. ஆனால், ஸ்டாலினால் ஊரை சுத்தப்படுத்த முடியுமேதவிர, ஊழலை சுத்தப்படுத்தமுடியாது. ஏனென்றால் ஊழலில் திளைத்தகட்சி தி.மு.க., வரும்காலத்தில் தமிழகத்தில் மாற்று சக்தியாக பா.ஜ க., இருக்கும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, ஆளும்கட்சி விரைவாக நடத்தவேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு, மாநிலஅரசு நடவடிக்கை எடுத்துவந்தாலும், அதன் வீரியம் அதிகமாக இருப்பதால், நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும். பா.ஜ., மாநிலபொதுக்குழு வரும், 24ல் கரூரில் நடக்கிறது. இதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply