காவிரி விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசினார்.சென்னை வந்தவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது:

காவிரி விவகாரத்தில் தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது. நாங்களும் தமிழன் தான். 50 ஆண்டுகாலம் தமிழ் சமுதாயத்தை ஏமாற்றி வருகின்றனர். நடைபயணம் என்பது ஏமாற்றுசெயல். ஸ்டாலின் நடத்துவது தமிழர்களுக்காக போராட்டமா அல்லது கூட்டணி கட்சியினர் வெற்றிபெற போராட்டம் நடத்துகின்றாரா.


பார்லி.,யில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்கின்றனர். காவிரி மேலாண்வாரியம் அமைக்க காங்கிரஸ் கட்சியிடம் ஏன் ஸ்டாலின் ஆதரவுகேட்கவில்லை ? ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என கேட்கின்றனர். சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் தமிழகத்தில் உள்ள தொழில்கள் மேலும் அங்குசெல்லும். காவிரி போராட்டத்திற்கு காங்கிரசையும் ஏன் அழைக்கவில்லை ? இதற்கு திமுக பதில்சொல்லியே தீர வேண்டும்.

பார்லி.,யில் அதிமுக, திமுக போராட்டம் நடத்திவருகின்றனர். காவிரி மேலாண்வாரியம் அமைக்க கூடாது என காங்கிரஸ் போராடி வருகிறது. இதற்கு தளபதியார் விளக்கம் சொல்லட்டும். பாதயாத்திரை பெங்களூரு க்கி சென்றால் பாராட்டுவேன். இது தமிழர்களுக்காக நடத்தும் பாதயாத்திரை அல்ல. இது அரசியலுக்காக நடத்தும் யாத்திரை.

 

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவுக்கு ஆதரவாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக எல்லாம் நடக்கிறது. ஆபத்துவந்தால் மட்டும் தண்ணீர் திறந்துவிடுவார்கள். கர்நாடக முதல்வர் ஆட்சியை தக்கவைக்க, காங்கிரசும், திமுகவும் தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர். அங்கு சித்தராமையா ஆட்சிவந்தால் தண்ணீர் கிடைக்காது. கர்நாடகாவில் ஆட்சிமாற்றம் வந்தால்தான் எதுவும் செய்யமுடியும். நான் அங்கு சித்தராமையாவுக்கு எதிராக பிரசாரம்செய்ய தயார். ஸ்டாலின் அங்குவர தயாரா ? தமிழக மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் நபர் பிரதமர் மோடி தான். இவ்வாறு கூறினார்.

Leave a Reply