சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில தலைவருக்கான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில்,பாஜக தேசிய செய்திதொடர்பாளர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மராவ்,

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து,எதிர் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார். அதற்கு எதிர்வினை ஆற்றுவதை நிறுத்திவிட்டு,நாடு முழுவதும் வீடு வீடாகச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினர். தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டுவரும் மாநிலத்தில், தமிழகம் மோசமான நிலையில் உள்ளதாக கூறினார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் ஒவைசி போல் பேசி வருவதாக நரசிம்மராவ் குற்றம்சாட்டியுள்ளார்.

Comments are closed.