மின்மோட்டாருக்கு தேவையான காப்பர் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் சாதாரண பேன், மிக்சி, கிரைண்டர், வாஷிங்மெசின் முதலான் வீட்டு உபயோக பொருட்கள் விலை உயரக்கூடும்.
இதன் மூலம் சீன தயாரிப்புகள் இந்திய தயாரிப்புகளை துடைத்து எறிந்து விடும்.

கோவையின் மின் மோட்டார் தொழில் முற்றிலுமாக நெருக்கடியில் விழும். இது மறைமுகமாக விவசாயிகளை பாதிப்பதோடு, பல்லாயிரம் இத்துறை தொழிலாளர்களையும் பாதிக்கும்.

அடுத்து ஆட்டோமொபைல் எலக்ரிக்கல் நிறுவனங்கள், தென்னிந்தியாவில் இயங்கும் சினைடர் , ஏ.பி.பி போன்ற பல எலக்ட்ரிக்கல் நிறுவனங்கள் மூலப்பொருளையே இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டால், மூலப்பொருள் கிடைக்கும் நாடுகளுக்கு நகர ஆரம்பிக்கும்.

அதுமட்டுமில்லாது இந்தியாவில் ஏசியின் பங்களிப்பு சொல்ல வேண்டியதில்லை. இதற்கான கம்ரசர் காப்பர் பிரச்சனை வரும் பட்சத்தில் அதுவும் இற்க்குமதியை நம்ப வேண்டியிருக்கும்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒரு விசயம் மத்திய அரசு 2030-க்குள் வாகன போக்குவரத்து மின்மயம் ஆக வேண்டும் என முடிவெடுத்துள்ளது. அப்படி மின்மோட்டார் வாகன பயன்பாடு அதிகரிக்கும் போது இப்போது தேவைப்படும் காப்பரை போன்று பல மெட்ரிக் டன் காப்பர் அதிகமாக தேவைப்படும்.

மின் வாகன தேவைக்கான காப்பர் இறக்குமதியை நம்பி மட்டுமே இருந்தால், இப்போது பெட்ரோலுக்கு கொடுப்பதை போன்று காப்பருக்காக நமது நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு செல்லும்! அதுமட்டுமில்லாது ஆட்டோமொபைல் துறையில் பிற நாடுகளுக்கு நகர்வுகள் இருக்கும். இந்தியாவில் இத்துறையின் வீழ்ச்சி இந்தியாவிற்கான வீழ்ச்சி தான்.

ஒரு சாமானியனாக எனது பார்வைக்கு தெரிவது இத்தைனை எனில், தொழிற்துறை நிதி துறை, அறிவியல் துறை நிபுணர்கள் பார்வையில் இன்னும் பல பிரச்சனைகள் தெரிய வரலாம்.

Leave a Reply