ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (சாய்) என்ற பெயர்மாற்றம் செய்யப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது. ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (சாய்) என்ற பெயர் மாற்றப்படஉள்ளது. விளையாட்டு துறையை மேம்படுத்தும்விதமாக வரும் 2022-ம் ஆண்டிற்குள் துறையை 50 சதவீதம் அளவிற்கு பலப் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . சாயின் வரவுசெலவு திட்டத்தின் ஒருபகுதி விளையாட்டு அல்லாத வேலைகளுக்கு திருப்பி விடப்படுகிறது.

8-வயது முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் திறமையாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த ஆண்டு நாடு முழுவதும் திறமைவேட்டை துவங்கப்படும். மேலும் சிறப்புதேர்வு பள்ளிகளில் அவர்களுக்கு விளையாட்டு மற்றும் கல்விவசதி வழங்கப்படும். ஒலிம்பிக் போட்டியில் யாராவது ஒருவர் ஏதேனும் ஒருபதக்கம் வென்றால் அவர்கள் கிரேடு ஏ வேலைகளில் இட ஒதுக்கீடு பெறவேண்டும். என கூறினார்.

Leave a Reply