தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திரமோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் உள்ள நான்காவது யூனிட்டில் நேற்றிரவு (வியாழக்கிழமை) 11 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துசிதறியது.

விபத்து நடந்த போது நான்காவது யூனிட்டில் 19 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அவர்களில் 10 பேர் சுரங்கப் பாதை வழியாக வெளியேறி தப்பினார். அதில் 6 பேர் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 9 பேரை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்திலிருந்து பாதுகாப்புஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சிக்கிக்கொண்ட 9 பேரையும் தேடிக்கண்டு பிடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே ஸ்ரீசைலம் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ”ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீவிபத்து எதிர்பாராதது. விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடுதிரும்புவார்கள் என நம்புகிறேன்” இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்

Comments are closed.