ஹஜ் புனிதபயணம் மேற்கொள்ள முஸ்லிம்களுக்கு அளித்து வந்த மானியத்தை மத்திய அரசு ரத்துசெய்தது. 2012ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உததரவின் அடிப்படையில், இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டுதோறும் ஏராளமான முஸ்லிம்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து செல்லும் ஹஜ்பயணியருக்கு மத்திய அரசு, கடந்த 1954ம் வருடம் முதல் மத்திய அரசு மானியம் மானியம் வழங்கிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவிலிருந்து சராசரியாக 1.5 லட்சம்பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஒருநபருக்கு சுமார் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்வரை மானியமாக அளிக்கப்பட்டுவந்தது. இந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவுள்ள நிலையில் இதற்காக சுமார் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், ஹஜ்மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி இந்த நடைமுறை அமல்படுத்தப் படுகிறது. இதனை மத்திய சிறுபான்மைதுறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். மேலும், இந்தநிதி சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்படும். கடல்வழியே யாத்திரை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும். சவுதி அரசு இதனை ஏற்றுகொண்டுள்ளது. என்றும் கூறினார்.

2012 மே மாதம் ஒருவழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதிகள் அல்டாமஸ்கபீர் மற்றும் ரஞ்சனா தேசாய் அடங்கிய பெஞ்ச், ஹஜ் மானியத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் படி உத்தரவிட்டிருந்தது. அதன்படியே இந்தமுடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதுதொடர்பாக, புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய சிறுபான் மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஹஜ்மானியத்தை படிப்படியாக குறைத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, சிறுபான்மையினர் விவகாரங்கள் துறையின் அதிகாரம்பெற்ற குழு அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஆண்டில் இருந்து ஹஜ் மானியத்தை ரத்துசெய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கண்ணியமான முறையில் சிறுபான்மையினத்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு இது என்றும் குறிப்பிட்ட அவர், ஹஜ் மானியத்துக்காக செலவழிக்கப் படும் தொகை இனி சிறுபான்மை யினத்தவர்களின் பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன் படுத்தப்படும் என கூறினார்

 

Leave a Reply