ஹனுமான் சாலிசாவைப் நாளொன்றுக்கு 5 முறை பாராயணம் செய்துவந்தால் கரோனா தொற்றில் இருந்து விடுபடலாம் என்று பாஜக எம்பி. பிரக்யாசிங் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா வைரஸ்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பாஜக எம்.பி. பிரக்யாசிங் தாகூர், ‘ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை ஹனுமான் சாலிசாவை ஒருநாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்ய வேண்டும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கரோனா தொற்றில் இருந்து நாடு விடுபடுவதற்கும் மக்கள் அனைவரும் இணைந்து இதனை செய்யவேண்டும். இறுதியாக ஆகஸ்ட் 5-ஆம் தேதி அனுமனுக்கு பூஜை செய்து இச்சடங்கை முடிக்க வேண்டும்.

இதனை முடிக்கும் நேரத்தில் அதாவது ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும். இதன் மூலமாக கடவுள் ஹனுமான் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மைகாப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.