ஹரியாணா பேரவைத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடும்  போட்டி நிலவுகிறது.

ஹரியாணா மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி இன்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் பாஜக சற்றுமுன்னிலை வகித்தாலும், அடுத்தடுத்த சுற்றுகளில் இரண்டு கட்சிகளுக் கிடையே கடுமையான போட்டி நிலவத்தொடங்கியது.

ஹரியாணா மாநிலத்தில் மொத்தம் 90 பேரவைத் \தொகுதிகள் உள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 46 இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா பேரவைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

பாஜக கூட்டணி: 42 தொகுதிகள்

காங்கிரஸ் கூட்டணி: 29 தொகுதிகள்

பிற கட்சிகள்: 19 தொகுதிகள்

ஒருவேளை இதேநிலை நீடித்தால், அங்கு தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான சூழல் ஏற்படும்.

Comments are closed.