முகமத் பாரூக் ஷேக் மும்பையின் மிகப்பெரிய ஹவாலா பேர்வழி நேற்று அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் 10000 கோடி ரூபாய்க்கு மேல் இப்படி ஹவாலா பரிவர்த்தனை செய்திருப்பான் என்கிறது அமலாக்க துறை.

நிறுவனங்கள் தாங்கள் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலையை குறைத்து காட்டி அதற்கான வரியை குறைத்துக்கொள்வதும், அசல் விலையை அளிக்க தங்கள் வெளிநாட்டு கிளைகளுக்கு இப்படி ஹவாலா மூலம் பலம் அனுப்புவது வழக்கம். குறிப்பாக தங்கம் மற்றும் நவரத்தின கற்கள் தொழிலில் தான் அதிகமாக இப்படி நடைபெறுகிறது.

ஏனென்றால் சிலகோடி ரூபாய் நவரத்தின கற்கள் அல்லது வைர கற்கள் ஒரு சிறு பெட்டியில் அடைக்கப்பட்டு விடும் அதன் மதிப்பை அவ்வளவு எளிதில் சுங்கத்துறையால் கண்டுபிடிக்க முடியாது, அதிலும் சிலரை விலைக்கு வாங்கி விடுவார்கள் முடிந்தது கதை. இங்கிருந்து பெரிதாக ஏற்றுமதி போல காண்பிப்பார்கள். ஒரு சுக்கும் இருக்காது இதை வைத்து வங்கியில் கடன் பெறுவார்கள் அதை திரும்ப செலுத்த மாட்டார்கள். வட்டி கொடுக்க மேலும் கடன் கேட்பார்கள். இது ஒரு விஷச்சுழல் என்றே ஆகிவிடும்.

இவர்கள் பெரும்பாலும் இதை போல ஹவாலா பரிவர்த்தனை தான் செய்வார்கள். முன்பு இப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாது ஏனென்றால் பழைய 500,1000 நோட்டுகள் 18 லட்சம் கோடிகளுக்கு இருந்தன அவற்றில் 50% வங்கிகளுக்கே வராமல் வெளியில் சுற்றிக்கொண்டு இருந்தது. அதை யார் வைத்திருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. இன்று கதையே வேறு. அதோடு பெரும் பணத்தை வங்கிகள் வெளியில் தருவதில்லை. அதனால் இந்த ஹவாலா புரோக்கர்களுக்கு கொடுக்க காசோலைகள் தான் தரப்படுகிறது. அதை மாற்ற முயலும் போது பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

இனிமேலும் பலர் பிடிபட்டுக்கொண்டே இருப்பார்கள் இது நிற்கப் போவதில்லை. இப்படி ஊரை ஏமாற்றி தொழில் செய்த காலம் எல்லாம் முடிந்து விட்டது. மும்பையில் பல பெரும் நகைக்கடைகள் தங்கள் மொத்த வரவு செலவையும் ஒரு ராத்திரியில் வெள்ளையாக மாற்றிக்கொண்டு விட்டது என்று நண்பர் ஒருவர் சொன்னார். நாடு முழுதும் இது தான் நிலை ஏனென்றால் அவரே ஒரு நகைக்கடை அதிபர். மோடி இந்தியாவிற்கு செய்த மிகப்பெரிய சேவை என்பது இது தான். இந்த நாடு ஒரு திறந்து போடப்பட்ட சத்திரம் போல இருந்தது எவன் வருகிறான் போகிறான் என்ன செய்கிறான் என்றே தெரியாது.

பல்லாயிரம் கோடிகள் ஆண்டுதோறும் மதமாற்றவென்றே இங்கு வந்தது. இன்று அவையெல்லாம் வரமுடியாது. தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில் இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது. ஒரு டாலர் வந்தால் கூட கணக்கு கொடுக்க வேண்டும். அந்நிய பணப்பரிவர்த்தனை கட்டுப்பாட்டு அமைப்பில் இணைந்து உங்கள் வரவு செலவுகளை காண்பிக்க வேண்டும். இனி இது தொடரும் அதனால் தான் சத்தம் கீழே பலமாக இருக்கிறது..!

தலையில் கால்வைத்து நசுக்கியாகி விட்டது சிறிது நேரம் வால் துடிக்கத்தான் செய்யும்..! 😜😜

நன்றி -கோபிநாத்

Leave a Reply