ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வராக கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரான ஜெய்ராம்தாக்குர் தேர்வு  செய்யப் பட்டுள்ளதாகவும் . இது தொடர்பான முறையான அறிவிப்பு வெள்ளியன்று வெளியாகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவை தேர்தல்களில் ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸிடமிருந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான பிரேம்குமார் துமல் தனது சுஜன்பூர் தொகுதியில் தோல்வி யடைந்தார்.     

இதனைத்தொடர்ந்து புதிய சட்டப்பேரவைக்கு குழுத்தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி  கட்சித் தலைமைக்கு உருவானது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா மற்றும் மூத்த தலைவர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. இதில் ஐந்து முறை எம்.எல்.வாக இருந்தவரும், மூத்த தலைவருமான ஜெய்ராம்தாக்குர் முதல்வராகத் தேர்வு  செய்யப் பட்டுள்ளார். இது தொடர்பான முறையான அறிவிப்பு வெள்ளியன்று வெளியாகும் என  எதிர்பார்க்கப் படுகிறது.       

இதற்காக கட்சி எம்எல்ஏ.,க்களுடன் பேசுவதற்காக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நரிந்தர்சிங் தோமர் அடங்கிய குழு வியாழன் அன்று ஷிம்லா வந்துள்ளது.

Leave a Reply