பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வார இறுதியில் சுமார் 63 குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த உத்திரப்பிரதேச பாஜக முதல்வர் யோகிஆதித்யநாத், ‘குழந்தைகள் இறந்தது மூளைவீக்கத்தால்தான் என்பது நிறுவப்பட்டு விட்டது. கடந்த 40 ஆண்டுகளாக குழந்தைகள் மூளைவீக்கத்தால் சாகிறார்கள். ஆனால், இப்போது ஏன் கூக்குரலும், அழுகையும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மே மாதத்தில் 92 லட்சம் குழந்தைகளுக்கு அம்மைதடுப்பூசி போடப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக 20 மாவட்டங்களில் தீவிரசிகிச்சை பிரிவுகளை அமைத்துள்ளோம். மருத்துவமனைகளில் மூளைவிக்கத்தை குணப்படுத்த மருத்துவ வசதிகளை அளித்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் உயிரிழந்த கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத் 1998 முதல் 20 ஆண்டுகளாக மக்களவை உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply