லண்டன் சதி வழக்கு 1890 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் , இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசு, காரணமின்றி தேசத்தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, கடுந்தண்டனைகளை வழங்கி வந்தது,

மராட்டியத்தின் மகத்தான தலைவர் லோகமான்ய பால கங்காதர திலகர் மீது "கேசரி" பத்திரிகையில் எழுதிய தேசபக்த கட்டுரைகளுக்காகவும் சில சொற்பொழிவுகளுக்காகவும் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து, ஆறு ஆண்டுகள் பால கங்காதர திலகர்  தீவாந்திரசிட்சை தண்டனை அளித்து, பர்மாவுக்கு நாடு கடத்தி மாண்டலே சிறையில் அடைத்தனர்.

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய், அஜீத்சிங் (பகத்சிங்கின் பெரியப்பா) ஆகியோர் மீதும் 1907இல் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து, தண்டனை வழங்கி ஜெர்மனிக்கு நாடு கடத்தினர்.

தமிழகத்தின் தன்னிகரில்லா சிங்கம் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, ஆகிய இருவர் மீதும் 1908இல் ராஜத்துவேஷ வழக்கு தொடுத்து பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் அடைத்தனர், சிறையில் வ.உ.சி கல்லுடைத்து, செக்கிழுத்து, அவதிப்பட்டார், சுப்பிரமணிய சிவா குஷ்ட கணேஷ் சாவர்க்கர்   ரோகியாக வெளியே வந்தார்,

1909 இல்வீர சாவர்க்கரின் அண்ணன் கணேஷ் சாவர்க்கர் மீது ராஜத்துவேஷ குற்றம் சாட்டி, பொய் வழக்கு போட்டு தீவாந்திரசிட்சை தண்டனை வழங்கி பூலோக நரகம் என்று அழைக்கப்படும் அந்தமான் தீவிலுள்ள தனிமை சிறையில் அடைத்தனர்,

தேசபக்தர்கள் மீது வேண்டுமென்றே பழி வாங்கும் வகையில் பிரிட்ஷ் அரசாங்கம் தொடுத்து வந்த கொடுந்தண்டனைகளும் தேசபக்தி மிக்க இந்திய இளைஞர்களின் ரத்தத்தினை கொதிக்க வைத்தது,

கணேஷ் சாவர்க்கரை தண்டித்த கலெக்டர் ஜாக்சனை, நாசிக் நகர நாடக அரங்கில் நேருக்கு நேர் சுட்டு பொசுக்கி தூக்கு கயிற்றில் தனது உயிரை மாய்த்தான் ஆனந்த லட்சுமண் கார்கரே,

தொடரும்

வரலாற்று நினைவுகளுடன் ராம்குமார்

Leave a Reply