அக்னி-1 ஏவுகணையை முதன் முதலாக இரவுநேரத்தில் பரிசோதித்து இந்தியா, வெற்றிபெற்றுள்ளது.அணு ஆயுதங்களை சுமந்துசென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்திகொண்டது இந்த அக்னி-1 ஏவுகணை.

1000கிலோ எடைசுமக்கும்:12 டன் எடையுடன் 15 மீ நீளமுள்ள அக்னி-1 ஏவுகணை, 1000 கிலோ எடைகொண்ட அணு ஆயுதம் உள்ளிட்ட பெரிய ஆயுதங்களை சுமந்தபடி, சீறிப்பாய்ந்து சென்று 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் சக்திகொண்டதாகும்.

இரவில் பரிசோதனை விருப்பம்:இந்த ரக ஏவுகணைகளை இதுவரை பகல் நேரங்களில் மட்டுமேபரிசோதித்து வந்திருக்கிறார்கள். இரவிலும் இதை பரிசோதிக்க விரும்பி, நேற்று இரவு 11.10 மணியளவில் ஒடிசா மாநிலம், பலசோர் அருகேயுள்ள வீல்ஸ் தீவில் இருந்து அக்னி-1 ஏவப்பட்டது. ஏவியவேகத்தில் 700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி இலக்கை அது துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Leave a Reply