ஊழல், லஞ்சத்தை ஒழிக்க விழிப்புணர்வு ரதயாத்திரை நடத்திகொண்டிருக்கும் அத்வானியின் ரத யாத்திரை மதுரையிலிருந்து தென்காசிசெல்லும் வழியில் அத்வானியை கொலைசெய்யும் நோக்கதோடு பயங்கரவாதிகள் வெடி குண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்.இந்தகுண்டுகளை கண்டுபிடித்து அதனை

காவல் துறைக்கு தெரிவித்து பெரும் இழப்பிலிருந்து தடுத்த செல்வம் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களின் சிறந்த செயல்பாட்டை பா ஜ க தலை வணங்கி பாராட்டுகிறது.

அவர்களதுபணியை பாராட்டி 3ந் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாவட்ட_தலைவர்கள் கூட்டத்தில் தேசிய இணை பொது செயலாளர் சதீஸ் சிறப்புசெய்ய உள்ளார். இருவருக்கும் தலா ரூ.1 லட்சம்_பணமுடிப்பு வழங்கவும் தமிழக பா ஜ க முடிவுசெய்துள்ளது என்று தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply