மோடியின் வெற்றியின் ரகசியம் என்ன? கட்சியில் வெற்றிபெற்று பிரதமர் வேட்பாளர்.. தேர்தலில் வெற்றி பெற்று பிரதம மந்திரி… ஆட்சியில் வெற்றி பெற என்ன செய்ய போகிறார்?

இதுதான் இன்றைய ஊடகங்கள், அரசியல்வாதிகள். மற்றும் பொதுமக்களிடம் பேசப்படும் "ஹாட் டாப்பிக்"

மோடியை பற்றி "அதிகமான விவரங்கள்" வலைதளங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, எழுதுபவர்களின் எண்ணக் கிடைக்கைக்கு ஏற்ப மோடியின் வெற்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது…

"மோடி சர்வாதியாகிறார்—மந்திரிகள் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்–அதிகாரிகளே இனி ஆட்சி புரிவார்கள்–ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட இருக்கிறது–"–இப்படி பலவாறு பல கோணங்களில் பத்திரிக்கைகள் தலையங்கம் எழுத துவங்கிவிட்டன…

ஜனநாயகத்தில் மக்கள் ஓட்டுப்போட்டால், "கூலித்தொழிலாளி முதல், குற்றம் சுமத்தப்பட்ட கேடி வரை, அரசில் இருந்த அதிகாரி முதல், ஆட்டிவைக்கும் அம்பானிகள் வரை "–யார் வேண்டுமானாலும், எம்பி ஆகலாம்.. மந்திரி ஆகலாம்..இதில் ஏற்கனவே நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகள் மற்றும், தொழிலதிபர்களை தவிர மற்ற அரசியல் வாதிகளுக்கு, குறிப்பாக.அரசு நிர்வாகம் தெரிந்திருக்காது..

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 4 லட்சம் பேருக்கு 10 ஆயிரம்பேரை தெரிவு செய்து இரண்டாம் நிலை "மெயின்ஸ்" தேர்வில் அதை 3 ஆயிரமாக கழித்துக்கட்டி, "இண்டர்வியூ"வில் ஆயிரம் பேரை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒண்ணரை ஆண்டுகாலம் அரசின் அத்த்னை துறை நிர்வாகத்திலும் அயல் நாட்டு பயிற்சி உட்பட கடுமையான பயிற்சி கொடுத்து.."சிவில் சர்வண்ட்" எனபடும், "பிரோகிரசி" –எனப்படும் அதிகாரிகள் உருவாக்கப்படுகிறார்கள்..பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து நிர்வாகத்திரமையில், "பட்டை தீட்டப்படுகிறார்கள்"

சிவில் சர்வீஸ் தேர்வுகளே வடி கட்டி, வடி கட்டி, "கிரீம்களையே" தேர்வு செய்கிறது..அதிலும் வடிகட்டிய "கீரீம்களை" வெளியுறவுத்துறை ஐ.எஃப்.எஸ்..தனக்கு எடுத்துக்கொள்கிறது..

இப்படி தெரிவு செய்யப்படும் அதிகாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு,அரசியல்வாதிகளான ஆட்சியாளர்களே ஆட்சி செய்ய முடியாதா?-அதிகாரிகள் இந்திய ஆட்சிமுறையில் முக்கியமானவர்களா?–இன்று பரவலாக பேசப்படும் இரண்டு கேள்விகளுக்கும் பதில் "ஆம்""தான்..

அரசின் பல்வேறுதுறைகளீல் பணி புரிந்து அரசின் சட்ட திட்டங்களையும் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளையும், கிரமமாக தெரிந்து வைத்திருப்பதால்..அதிகாரிகளே''மக்களுக்கும் ஆளும் மகேசனுக்கும்" இடையுலுள்ள தூதுவர்களாக இருக்கிறார்கள்..

எனவே அதிகாரிகள் "ஓய்ந்தால்—காய்ந்தால்—ஆட்சி சாய்ந்துவிடும்"

மோடியின் நிர்வாக வெற்றியின் ரகசியம் என்ன?..

2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் முதல்வராக பொறுப்பேற்கும் வரை மோடி–  அரசாங்கத்தில் ஒரு பதவியும் வகிக்கவில்லை..சட்டமன்ற /பாராளுமன்ற அனுபவம் இல்லாமலே..முதல்மந்திரி ஆனார்..

தொடரும்——-

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply