நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின் மானிய சுமை பட்ஜெட் மதிப்பை காட்டிலும் சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் என மதிப்பிட பட்டுள்ளது . இதனை தொடர்ந்து , நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.7 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.

உரங்களை உர நிறுவனங்கள் மத்திய அரசு நிர்ணயம் செய்த

விலையில் விற்பனை செய்கின்றன. இவை அடக்க விலைக்கும் குறைவாக இருப்பதால், உர நிறுவனங்களுக்கு ஏற்படும இழப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு மானியம் வழங்குகிறது. மத்திய பட்ஜெட்டில் இந்த மானியம் ரூ.50,000 கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் உரங்கள் விலை அதிகரித்து வருவதாலும், ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவினம் உயர்ந்துள்ளதாலும் உர மானியச் சுமை ரூ.90,000 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

டீசல், மண்எண்ணெய், சமையல் எரிவாயுவை பொதுத் துறை நிறுவனங்கள் மத்திய அரசு நிர்ணயம் செய்த விலையில் விற்பனை செய்கின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு ரூ.1.32 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த இழப்பில் 33 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. பட்ஜெட்டில் இது ரூ.24,000 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த மானியச் சுமையும் உயருகிறது.

ஆக, மானிய சுமை மற்றும் இதர செலவினங்கள் அதிகரித்து வருவதால், நடப்பு நிதி ஆண்டில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மிகவும் அதிகரிக்கும் என்ற அச்சப்பாடு நிலவி வருகிறது.

Tags:

Leave a Reply