தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து (ஞாயிற்றுக்கிழமை) புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது . இதற்கான உத்தரவை தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் வெள்ளிக் கிழமை வழங்கியது.

புதிய மின் கட்டணத்தின் படி வீடுகள் உள்ளிட்ட குறைந் தழுத்த மின் இணைப்புகளுகான கட்டணம் ஒட்டு மொத்தமாக 45% வரை உயருகிறது. தொழிற்சாலை உள்ளிட்ட உயரழுத்த மின் இணைப்பு களுக்கான கட்டணம் 25% வரை உயருகிறது.

புதிய மின்கட்டண விபரம் வருமாறு ,

100 யூனிட்கள் வரை யூனிட்டிற்கு ரூ.1.10
101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80
201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3
251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் 4 பிரிவுகளாக உயர்த்தபட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள்_வரை பயன்படுத்து பவர்களுக்கு ரூ.3ம் ,
201 லிருந்து – 500 யூனிட்வரை பயன்படுத்து பவர்களுக்கு யூனிட்க்கு ரூ. 4ம்,
501 யூனிட்களுக்குமேல் பயன்படுத்து பவர்களுக்கு ஒருயூனிட் 5.75 எனவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags; மின் கட்டணம் மின் கட்டண உயர்வு , புதிய மின்கட்டண விபரம்

Leave a Reply