விமான விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநில முதல்வர் ஓய்எஸ்.ராஜசேகர ரெட்டி பதவிவகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியதுதொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைகுழு சட்சபையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது .

2006ம் ஆண்டு முதல் 2011 வரை நிலஒதுக்கீடு தொடர்பாக இந்த

 

தணிக்கைகுழு ஆய்வு செய்தது. இதில் அதிக நிலஒதுக்கீடு முதல்வராக இருந்த ஓய்.எஸ்.ஆர்., காலத்தில்தான் ஒதுக்க பட்டது என்று தெரிவிக்க பட்டுள்ளது , நிலங்கள் முழுவதும் வர்த்தகமையங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் ,அப்பார்ட்மென்ட் உள்ளிட்ட வர்த்தக ரீதியிலானவை .

இதில் பயன் அடைந்த கம்பெனிகள் ஜெகன் மோகன்ரெட்டி நடத்தும் தொலைக்காட்சி , மற்றும் நாளிதழ்களில் பங்குதாரராக பலகோடிகளை கொட்டியுள்ளனர்

தணிக்கை குழுவின் அறிக்கையின் படி ;இந்தநிலங்கள் சட்டத்திற் உட்படாமல், நியாயமற்ற முறையில் நடந்திருக்கிறது என தெளிவாக கூறப்பட்டுள்ளது . சந்தை மதிப்புதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கபட்டுள்ளது .

Leave a Reply