மும்பை கடலில் பரிசோதனைக்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஐஎன்எஸ். சிந்து ரத்னா என்ற நீர் மூழ்கி கப்பலில் கடந்த 26ம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் காணாமல் போன 7 பேரில் 2 அதிகாரிகள் பிணமாக மீட்கப்பட்டனர்.

கடற்படையில் தொடர்விபத்துகள் ஏற்பட்டதால், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய கடற்படை தளபதி டிகே.ஜோஷி தனது பதவியை ராஜினாமாசெய்தார். அவரது ராஜினாமாவை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக் கொண்டது.

அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக., ‘இந்திய கடற்படையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 10 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடற்படையின் நிர்வாக சீர்கேட்டினை இந்தவிபத்துகள் சுட்டிக் காட்டுகின்றன.

இது தொடர்பாக பஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:- இந்திய கடற்படைக்காக கால் நூற்றண்டுக்கு முன்னர் வாங்கிய நீர் மூழ்கி கப்பலகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு புதியகப்பலகளை வாங்குவதிலும், பழைய கப்பல்களை முறையாக பராமரிப்பதிலும் அக்கறையே செலுத்தவில்லை. தற்போதைய ‘சிந்துரத்னா’ நீர்மூழ்கி கப்பல் விபத்தில்கூட பழைய பேட்டரிகளுக்கு பதிலாக புதிய பேட்டரிகளை வாங்குவதிலும்கூட அரசு தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதால் 2 கடற்படை அதிகாரிகல் பலியாகியுள்ளனர்.

இந்திய கடற்படையில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 10விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்தியகடற்படை தளபதி டிகே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் பொறுப்புமுடிந்து போய் விட்டதாக பிரதமரும், பாதுகாப்பு மந்திரியும் அமைதியாக இருக்கிறார்கள்.

இந்த பரிதாபத்துக்குரிய நிலைக்கு மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். பாதுகாப்புதுறை மந்திரி ஏ.கே.அந்தோனி உடனடியாக ராஜினாமா செய்தே தீரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply