காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது 10 கோடி நஷ்டஈடு கேட்டு ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ம.பி., சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு எதிர்ப்புதெரிவித்தே அவர் இந்தநோட்டிசை அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ்கட்சி தன்னையும், தனது குடும்பத்தையும் மையபடுத்தியே மத்தியபிரதேசத்தை கொள்ளையடித்த பேராசை குடும்பம் என்று விளம்பரம் தந்துள்ளதாக முதலமைச்சர் சவுகான் புகார்தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு அனுப்பியதுபோல ம.பி., காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியாவுக்கும் நோட்டிஸ் அனுப்பபட உள்ளது. இதை செய்தியாளர்களிடம் உறுதிபடுத்திய பாஜக காங்கிரஸ் வன்முறையில் நுழைந்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply