மும்பையில் நேற்று நடந்த, மகாகர்ஜனை கூட்டத்தில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர் மோடியை, டீ வியாபாரி என்று சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட ஊழல் கட்சியினர் விமர்சித்ததை அடுத்து, மும்பையைச்சேர்ந்த, 10 ஆயிரம் டீ வியாபாரிகளுக்கு, இந்தகூட்டத்தில் பங்கேற்பதற்கு, சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களும், ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

* பா.ஜ.க தொண்டர்கள் மாநிலம் முழுவதிலிருந்தும் பரவலாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, 22 தொலைதூர சிறப்புரயில்கள் இயக்கப்பட்டன.

*பொதுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. குஜராத்தின் பிரபலமான, தெப்லா என்ற, தின்பண்டம் வழங்கப்பட்டது.

*இந்தகூட்டத்துக்காக, பல அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 5,000 போலீசார், பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மும்பை, குஜராத்மக்களின் இரண்டாவது வீடு என, நரேந்திரமோடி பேசியபோது, கூட்டத்தில், பலத்த கைதட்டலும், கரகோஷமும் எழுந்தது.

இந்தகூட்டத்தில் பங்கேற்பதற்காக, 10 ஆயிரம் டீ வியாபாரிகளுக்கு, சிறப்பு விருந்தினருக்கான, பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், சாதாரணமக்கள், விஐபி.,க்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தில் அமெரிக்காமீது மக்கள் கோபமாக இருப்பதையடுத்து மோடியின் கூட்டத்திற்காக அமெரிக்க தூதரகத்திற்கு விடுத்த அழைப்பை பாஜக வாபஸ்பெற்றது.

Leave a Reply