குஜராத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடமும், அவர்களின் பெற்றோரிடமும் புதுமையான விதத்தில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார் மோடி. பாஜக.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பிரசார யுக்தியின் அடுத்த அவதாரமாக, குஜராத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் செல்போனில் அழைத்து திடீர்வாழ்த்துகள் கூறி அசத்துகிறார் மோடி.

இம்மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுதேர்வுகள் தொடங்கியுள்ளது . லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களின் செல்போனுக்கு திடீரென ஒரு அழைப்புசெல்கிறது. அதை அவர்கள் எடுத்ததும், மறுமுனையில் கணீரென்ற குரல் ஒலிக்கிறது. ‘நமஸ்தே… மாணவ நண்பர்களே…. நான் நரேந்திரமோடி பேசுகிறேன். பொதுத்தேர்வு எழுதும் உங்களுக்கு வாழ்த்துசொல்லவே அழைத்தேன். உங்களை போலவே நானும் தேர்வு எழுதுகிறேன். ஆனால், என்னைபோலவே நீங்களும் தேர்வை நினைத்து கவலைப்படகூடாது.

தேர்வு என்பது வாழ்க்கையில் இயற்கையானது. நமதுகடின உழைப்பு நல்லமுடிவை தரும். பொதுத்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வுபெறுவதற்கு, என்னுடைய வாழ்த்துகள் எப்போதும் உங்களுடன் இருக்கும். நீங்களும், உங்கள் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கடினமாக உழைத்து இருப்பீர்கள். அது உங்களுக்கு நல்லமுடிவை தேடித்தரும். உங்களுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகள்…”- இவ்வாறு மோடி பேசுகிறார். இது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட செய்தி. மாநிலம்முழுவதும் தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள், மோடியிடம் இருந்துசெல்கிறது. பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அவருடைய வாழ்த்து இன்ப அதிர்ச்சியை தருகிறது .”மோடியிடம் இருந்து என் மகனுக்கு அழைப்புவந்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். மாணவர்களை போலவே தானும் தேர்தல்தேர்வு எழுதுவதாக அவர் கூறுவது மனதை தொடுவதாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply