மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு, 10 நாட்களுக்குள் இந்திய கடலோர காவல்படை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா எட்டிமங்கலத்தை சேர்ந்த வழ‌க்க‌றிஞ‌ர் பி.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்

, இந்திய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அரசு பாதுகாப்பு கொடுக்கிறது. ஆனால் மீனவர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

எனவே இந்திய கடற்படை கப்பல்களை இந்திய-இலங்கை எல்லையில் நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு இந்திய கடல் எல்லையை மறு வரைவு செய்ய வேண்டும். இந்திய மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை எல்லையை வரையறுக்க வேண்டும் மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் கே.என்.பாஷா, வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நே‌ற்று விசாரணைக்கு வந்தது. அ‌ப்போது, மனுதாரர் ஸ்டாலின் தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடுகை‌யி‌ல், ஆஸ்‌ட்ரேலிய நாட்டில் வடநாட்டு மாணவர்கள் தாக்கப்படும் போது, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. சோமாலியா கொள்ளையர்களை பிடிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழர்கள் விஷயத்தில் மட்டும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

ஆனால் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக மீனவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை. எனவே உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியமாகிறது எ‌ன்றா‌‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதாக மனுதாரர் குற்றம்சா‌ற்‌றியுள்ளார். எனவே இந்திய கடல் எல்லையில் தமிழக கடலோர காவல் படையினரும், இந்திய கடலோர காவல் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இந்திய கடலோர காவல் படையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் எ‌ன்று கூ‌றி வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆ‌ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

{qtube vid:=7PYivdgSWys}

Tags:

Leave a Reply