லண்டனில் நடைபெற்று வரும் உலக சுற்றுலா பொருட்காட்சியில் இந்தியா இரண்டு விருதுகளை வென்றுள்ளது. ‘சுற்றுலாவுக்கு ஏற்ற நாடு’ என்ற வகையில் ஒரு விருதினையும், ‘உலகின் சிறந்த சுற்றுலா வாரியம்’ என்பதற்காக மற்றொரு விருதினையும் இந்தியா பெற்றுள்ளது.

லண்டன் எக்ஸல் பொருட்காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘உலக சுற்றுலா விருது’ அமைப்பின் தலைவரான கிரஹாம் இ குக்கிடமிருந்து இந்திய சுற்றுலா துறை அமைச்சர் சுபோத் காந்த் சஹாய், இந்த விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்திய சுற்றுலாத்துறை வளர்ச்சி குறித்து அவர் கூறுகையில், “அடுத்த ஐந்த ஆண்டுகளில் இந்தியா மேலும் சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும். இவர்களின் வசதிக்காக சுமார் 20 லட்சம் அறைகள் திறன் கொண்ட ஹோட்டல் வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வசதி பொது மற்றும் தனியார் துறை கூட்டுடன் ஏற்படுத்தப்படும். அதன் காரணமாக பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் இந்திய சுற்றுலா துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்கப்படும். வறுமை ஒழிப்புக்கு சுற்றுலா துறை மிகவும் பயனுள்ள துறை” என தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 0.6 சதவீதமாக உள்ளது. இதனை 1 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது சஹாய் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply