மதுரையில் கடந்த மூன்று நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, சனிக்கிழமை (ஏப்.28) தொடங்க இருந்த பாரதிய ஜனதாவின் மாநில மாநாடு ஒத்தி வைக்கபட்டுள்ளது. மாநாடு நடை பெறும் புதிய தேதியை தமிழக பாரதிய ஜனதா மையக்குழு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : பாஜகவின் மாநில

மாநாட்டு பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வந்தன. இந்நிலையில் காண மழை காரணமாக உணவுக் கூடம், கழிப்பறைகள் அமைக்கும் பணி தடைபட்டுள்ளது. வெள்ளி, சனிக் கிழமைகளிலும் மழைநீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

மழைநீரால் தேங்கியிருக்கும் பகுதிகளைச் சீர் செய்யவும், எஞ்சியபணிகளை முடிக்கவும் மேலும் 10நாள்கள் ஆகும். எனவே மாநில மாநாட்டை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். மாநாட்டுக்கான புதியதேதியை தமிழக பாஜக மையக்குழு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 27) அறிவிக்கும் என்றார்.

Tags:

Leave a Reply