கடந்த 100 ஆண்டுகளில் நிகழாத பேரிடர் நிகழ்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயல்காரணமாக, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வுமேற்கொண்டார்.

தொடர்ந்து பத்திரக்கை யாளர்களுக்கு பேட்டிய ளிக்கையில் , ‛‛ கடந்த 100 ஆண்டுகளில் நிகழாதவகையில் கன்னியாகுமரி பகுதியில் புயல் ஏற்பட்டுள்ளது. மீனவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்துவருகிறது. பல்வேறு கப்பல்கள், விமானங்கள் தேடுதல்பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்பிட் முறையில் கப்பல், விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். பல மீனவர்கள் லட்ச தீவுகள், கர்நாடக, மகாராஷ்டிரா பகுதியில் பத்திரமாக உள்ளனர். ' என்றார்.

 

 

Leave a Reply