100 கோடி பேரின் ஆதார், வங்கிக்கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை இணைக்கும் மெகாதிட்டத்தை மத்திய அரசு விரைவில் முன்னெடுக்கவுள்ளது. உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கருப்புப்பணம் புழக்கத்திற்கு வந்திருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

நடவடிக்கையின் முடிவுகொடுத்த ஊக்கத்தால் மத்திய அரசு புதிய மெகாதிட்டம் ஒன்றை தீட்டி இருக்கிறது. இதன் படி நாட்டில் உள்ள 100 கோடி பேரின் ஆதார் எண், வங்கிக்கணக்குகள் மற்றும் மொபைல் எண்களை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், இது அமல்படுத்தப் பட்டால் மின்னணு பணப்பரிவர்த்தனை மற்றும் நிதி சார்ந்த துறைகளை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply