விவசாயிகளின் வருமானத்தை 2022ம் ஆண்டிற்குள் இரண்டுமடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும்வகையிலும் கிசான்ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

முதல் கிசான்ரெயில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அறிமுகம் செய்யபட்டது. இந்தரெயில் மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாலியில் இருந்து பீகாரின் தானாபூர் வரை இயக்கப்பட்டது. பின்னர் முசாபர்பூர்வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு விவசாயிகளின் வரவேற்பைப் பொருத்து நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் கிசான்ரெயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

அவ்வகையில் விவசாயிகளுக்கான 100-வது கிசான்ரயிலை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கிவைத்தார். மகாராஷ்டிராவின் சங்கோலாவில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் வரை இயக்கப்படும் இந்த ரெயில்சேவை இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர், ரெயில்வேமந்திரி பியூஷ் கோயல் ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாடு முழுவதும் உள்ள கோடிகணக்கான விவசாயிகளுக்கு எனதுவாழ்த்துக்கள். கொரோனா பெருந்தொற்று சவால் இருந்தபோதிலும், கிசான் ரெயில்சேவை கடந்த நான்குமாதங்களில் விரிவடைந்து அதன் 100 வது ரயிலை இப்போது பெற்றுள்ளது. கிசான்ரயில் சேவை விவசாயிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஒருபெரிய படியாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.