நரேந்திர மோடி பிரதமர் ஆவாரா? , உலக முழுவதும் இது தொடர்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. உண்மையிலே மோடிக்கு பிரதமர் ஆகும் யோகமும், திறமையும் உள்ளதா?

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பிரபலஜோதிடர் பார்த்தசாரதியிடம் மோடியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அவர் கூறியதாவது:–

நரேந்திர மோடி 1950–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி பகல் 11 மணிக்கு பிறந்தார். அவரது ஜென்மலக்னம் விருச்சிகம்

வளர் பிறை சஷ்டியில் அனுஷம் 2ம் பாதத்தில் பிறந்தவர். அவர் பிறந்தசமயத்தில் அவரது ஜாதக அமைப்பு சரியாக அமையவில்லை. குறிப்பாக புதன்திசை நடந்தபோது அதாவது 28 வயதுவரை அவர் பல கஷ்டங்களையும் அவதிகளையும் அனுபவித்தார்.

1985–ம் ஆண்டு தான் அவரது ஜாதக அமைப்பு அவருக்குசாதகமான அம்சங்களுடன் உருவாக தொடங்கின. சுமார் 20 ஆண்டுகள் அவருக்கு சுக்கிரதிசை இருந்தது. 1985–ம் ஆண்டு தொடங்கி 2005ம் ஆண்டுவரை அவர் ராஜயோகத்தில் வலம் வந்தார். அவர் மக்களின் யதார்த்தநிலை பற்றிய ஞானம் பெற்றது இந்த காலகட்டத்தில்தான்.

அதனால் தான் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அவரால் குஜராத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைப்பெற முடிந்தது.

2005ம் ஆண்டு மோடியின் ஜாதகத்தில் 6 ஆண்டு சூரிய திசை தொடங்கியது. இதனால் 2011ம் ஆண்டு வரை அவர் பலவிதமான எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கநேர்ந்தது. ஆனால் மற்ற கிரக அமைப்புகள் சாதகமாக இருந்ததால் மோடியால் தொடர்வெற்றிகளை பெறமுடிந்தது. புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முடிந்தது.

2011–ல் அவருக்கு சூரியதிசை முடிந்து சந்திர திசை தொடங்கியுள்ளது. சந்திரதிசை 10 ஆண்டுகள் இருக்கும். தற்போது மோடிக்கு சந்திர திசை நடக்கிறது. அதாவது 2021–ம் ஆண்டு வரை மோடிக்கு சந்திர திசை நடைபெறும். லக்னத்தில் சந்திரன் உள்ளது. இது ஒன்றும் பெரிய பலன் களைத்தராது.

ஆனால் அந்த கட்டத்தில் சந்திரனுடன் செவ்வாயும் சேர்ந்துள்ளது. இந்த இருகிரகங்களின் சேர்க்கைதான் இன்று நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது.

இந்த கிரகசேர்க்கை காரணமாக தற்போது நரேந்திர மோடிக்கு மகாராஜ யோகம் கிடைத்துள்ளது. அது மட்டுமல்ல… சந்திரமங்கள யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், மாளவிகா யோகம் என்று அடுத்தடுத்து பலயோகங்கள் மோடிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கின்றன.

மோடியின் ஜாதகத்தில் 10ம் இடத்தில் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்துள்ளன. இதற்கு ''சண்டாளயோகம்'' என்று பெயர்.

இந்த யோகத்தைப் பெற்றவர்கள் என்ன செய்தாலும், அது வெற்றியாகவே முடியும். அவர்களை யாராலும் எந்தவிதத்திலும் அசைக்க முடியாது.

பொதுவாக ஒருநபர், நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ மிகஉயர்ந்த பதவிக்கு வர வேண்டுமானால், அந்த நபரின் ஜாதகத்தில் உள்ள 10ம் இடத்தின் ராசியும், லக்னமும் அவருக்கு உதவிசெய்யும் வகையில் இருக்க வேண்டும்.

10ம் இடம் பதவியை கொடுத்தாலும், அந்தபதவியை நிர்வகிக்கும் ஆற்றலும் திறமையும், அந்த ஜாதககாரருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த ஆற்றல் நரேந்திர மோடியிடம் அபரிதமாக உள்ளது.

எனவே இந்தியாவின் அடுத்தபிரதமர் பதவியை ஏற்க ஜாதக அமைப்புப்படி மோடிக்கு அதிகப்படியான வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.

மோடியின் ஜாதகப்படி அவருக்கு கற்றகல்வி கை கொடுக்காது. சிறுவயதில் பெற்ற உலக நடப்பு ஞானமும், அரசியல் அனுபவங்களும்தான் அவரை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.குறிப்பிட்டு கூற வேண்டுமானால் நரேந்திரமோடி ஜாதகத்தில் தற்போது சுக்கிரனும், சனியும் சேர்ந்து வலுவாக உள்ளன.

சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களும் மோடிக்கு சாதகமான நிலையில் உள்ளன. இந்த 5 கிரகங்களும் சேர்ந்து நிச்சயம் அவரை பிரதமர்பதவியில் உட்கார வைக்க 100 சதவீத வாய்ப்புள்ளது.

2021–ம் ஆண்டு மோடிக்கு சந்திரதிசை முடிந்து செவ்வாய் திசை பிறக்கும். செவ்வாய் திசை 7 ஆண்டுகள் அதாவது 2028ம் ஆண்டு வரை நீடிக்கும்.

இந்த 7 ஆண்டுகளும் மோடியின்வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். நாட்டில் நிறைய மாற்றங்களை செய்வார். அவர் நினைத்தது எல்லாமே வளர்ச்சி திட்டங்களாகி, சாதனைகளாக மாறும். இந்த 7 வருடமும் அவர் ஓய்வே இல்லாமல் உழைப்பார். அந்த உழைப்பு கொடுக்கும் திருப்தியில் மகிழ்ச்சியில் திளைப்பார். அந்த 7 ஆண்டுகளும் பித்ருக்கள் புண்ணியத்தால் நிறைய நல்லது செய்வார். இதன் மூலம் அவர் தனது இந்த பிறவிக்கு தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வார்.

மொத்தத்தில் மோடி ஜாதகத்தில் 10ம் இடத்து சனி சுபபார்வை பார்ப்பதால் அடுத்த 14 ஆண்டுகளுக்கு அவரது ராஜ்ஜியம்தான் என்று சொல்லலாம். மோடி ஜாதகத்தில் தற்போது புது ஆதித்யயோகம், நீச்சபங்க ராஜயோகம், ரூசகயோகம், கஜகேசரி யோகம் போன்றவையும் உள்ளன. நடப்பு தசா புத்தியான சந்திரன் அவருக்கு அதிகப்படியான வெற்றிகளைத் தரும்.

மேலும் இந்த ஆண்டு வர உள்ள குருபெயர்ச்சியும் மோடிக்கு நன்மை தருவதாக உள்ளது. குருபுத்தியால் மோடிக்கு அதிக வெற்றி தேடிவரும் இவ்வாறு ஜோதிடர் பார்த்தசாரதி கூறினார்.

Leave a Reply