வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி 100 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போது அவர் கூறியதாவது.

இந்தியாவில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சியால் உத்திர பிரதேசம், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை அதே போன்ற நிலை தற்போது ஏற்பட்டிருகிறது.

இந்தமோசமான நிலைக்கு காங்கிரஸ்கட்சி தலைவர்களே காரணம் . மக்கள் வாஜ்பாய் அளித்தது போன்ற ஒரு ஆட்சியை விரும்புகின்றனர் , பாஜக முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிகதொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அத்வானி குறிப்பிட்டார்.

Leave a Reply