ரயில்வே உட்கட்டமைப்பில் 100 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பிலான மசோதாவுக்கு மத்தியஅமைச்சரவை நேற்று புதன் கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, கடந்தமாதம் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்தது. அதில், ரயில்வேயில் பல்வேறு புதிய நலத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், ரயில்வேயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நேரடி அந்நியமுதலீடுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரயில்வே உள்கட்டமைப்பில் 100 சதவிகிதம் நேரடி அந்நியமுதலீடு அனுமதிக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல்வழங்கியுள்ளது.

மேலும், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ரயில்வே போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளையும் செய்துத்தர மத்திய ரயில்வேத்துறை பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்துள்ளது என்பது இந்த வேளையில் குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply