விவசாயிகளின் நலன்கருதி  100 கடிதங்களுக்கு மேல் எழுதுவேன்; நிதின் கட்காரி மகாராஷ்டிரவின் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த காட்சி ரோலி மாவட்டத்தில் இருக்கும் விதர்பா பகுதியில் தேசாய் கன்ச்ல் இன்று விவசாயிகளின் பேரணி நடந்தது . இதில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி கலந்துகொண்டார்.

இதில் அவர் பேசியதாவது ; மகாராஷ்டிரா மாநில நீர்ப்பாசன திட்டங்களுக்கு விரைவில் நிதிஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன் , விவசாயிகளின் நலன்கருதி அதுபோன்று 100 கடிதங்களுக்கு மேல் எழுதுவேன் . மேலும், கடிதங்களை விவசாயிகளின் நலனுக்காகவே எழுதுவேனே தவிர, ஒப்பந்ததாரர்களின் நலனுக்காக எழுதமாட்டேன் என நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply