"ஆம் ஆத்மீயின் –ஜன்தா தர்பார்" ரில் கூச்சல்–குழப்பம்–திடீர் ரத்து" ஆட்சிக்கு புதியவர்..ஆசைகள் அதிகம்–ஒரேநாளில் அத்தனையும் மாற்ற முடியும் –என காட்ட நினைக்கிறார்.. கெஜ்ரிவால்..அதனால் ஏற்பாடுகளில் குழப்பம்..எதிர்பார்க்காத அளவு கூட்டம்..

ஜனநெரிசல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

2000 பேரை எதிர்பார்த்து— 1500 சேர்கள் போடப்பட்டு—50 ஆயிரம் பேர் கூடியுள்ளனர்..என்பது எதை காட்டுகிறது..

15ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் சீரழிவை காட்டுகிறது..

காங்கிரசால் சீரழிந்த டெல்லி மக்கள் கெஜ்ரிவாலிடம் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிகிறது..

மக்களை கெஜ்ரிவால் காப்பாற்றுவாரா?—காங்கிரசின்மீது ஏறி சவாரி செய்துகொண்டே காங்கிரசின் கண்ணை குத்த காங்கிரஸ் அனுமதிக்குமா? ..

"கன்னா–பின்னா" அறிக்கைகள் விடும் கட்சிக்காரர்களின் வாயை மூடி—மற்றகட்சிக்காரார்களின் "வாயில் விழாமல்" இருந்தால் கெஜ்ரிவாலுக்கு பாதி வெற்றிதான்..என்ன செய்யப்போகிறார்…

அன்று திமுக ஆட்சி அமைத்தபோது கர்மவீரர் காமராசரும்–இன்று வாழும் காமராசர் "பொன்னாரும்" சொன்னது போல்–குறைந்தது 100 நாட்கள் பொறுத்திருந்து பார்ப்போம்..

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply