பிரதமர்  மீது 1000 காவல் நிலையங்களில் புகார் நிலக்கரி ஊழல் தொடரபாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மீது பா.ஜ.க தமிழக இளைஞர்_அணி 1000 காவல் நிலையங்களில் புகார் தர உள்ளது.

நிலக்கரி ஊழல் விவகாரம் நாடுமுழுவதும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு

நெருக்கடியை உருவாக்கியுள்ளது . மேலும் டீசல் விலை உயர்வு, அன்னிய முதலீட்டுக்கு அனுமதித்தது உள்ளிட்ட மத்திய அரசின் முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தி நாடுமுழுவதும் முழு அடைப்பு நடந்தது.

இந்த முழு அடைப்பின்போது இராம நாதபுரம் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணியினர் ஆர்பபாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா மாநில இளைஞர் அணி செயலாளர் பொன். பால கணபதி, நிலக்கரி ஊழல் விவகாரம் தொடர்பாக பிரதமரின் மீது தமிழகத்தில் இருக்கும் 1000 காவல் நிலையங்களில் புகார் தரப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply