எழை, எளியோர், கூலி தொழிலாளர்களுக்கு சுகாதாரமாக உணவு தரும் வகையில், சென்னையில், 1,000ம் இடங்களில், முதல்வரின் பெயரில், “அடக்க விலை’ சிற்றுண்டி உணவகங்களை திறப்பதற்கு , மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.

இந்த உணவகத்தில் சாம்பார் சாதம், இட்லி, சாப்பாடு, தயிர் சாதம்

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் எனவும், தேவைபட்டால் மற்ற உணவுகளையும் விர்ப்பதர்க்கு முயற்சி செய்யப்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

சமையல் கூடங்களில் வேலைசெய்யவும், உணவு எடுத்துசெல்லவும் மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்படுத்தி கொள்ளப்பட உள்ளனர். சாலையோரம், நடைபாதைகளில் சிற்றுண்டி உணவகங்கள் நடத்துவோர் விருப்பம் தெரிவித்தால் அவர்களும் இத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply