விவசாயக் கடன் 10,000 கோடிக்கு ஊழல் மத்திய அரசின் ரூ. 52,000 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி திட்டத்தில் கிட்டத்தட்ட ரூ. 10,000 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது .

இது குறித்து பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் தெரிவித்ததாவது , காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழலை தொடர்ந்து ஐமு., கூட்டணி அரசின் மற்றொரு ஊழல் இப்போது அம்பலமாகி உள்ளது . விவசாயகடன் தள்ளுபடி திட்டத்தில் பெரும்அளவில் முறைகேடு நடந்திருப்பதை தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

ரூ.52,000 கோடி கடன் தள்ளு படியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கிறது . தகுதியுள்ள 34 லட்சம் விவசாயிகளின்கடன் தள்ளுபடி செய்யப்பட வில்லை. ஆனால் தகுதி இல்லாத 24 லட்சம் பேரின் கடன் தள்ளுபடிசலுகை பெற்று பெரியளவில் ஆதாயம் அடைந்துள்ளனர்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போதே, ஒரு சார்புடையதாக இருந்தது. குறிப்பாக கடன்பெற்ற விவசாயிகள் ஒரு முறை தவணைத் தொகைசெலுத்தியிருந்தாலும், அவர்களுக்கு தள்ளுபடிவழங்க முடியாது என அறிவிக்கப்பட்டது. அதனால் தான் ரூ. 52 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்ட போதிலும், உண்மையான, தகுதி வாய்ந்த விவசாயிகள் பலர் கடன்சுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகதொகையும், பிறகட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைவானதொகையும் கடன்தள்ளுபடி வழங்கப்பட்டது. இது போன்று பாரபட்சமாக செயல்படுவது தான் ஐ.மு., கூட்டணி அரசின் உண்மை முகமாகும்.

இந்த ஊழலுக்கு காரண மானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றார்

Leave a Reply