குஜராத்தின் காந்தி நகரில் 10,000 இருக்கைகள்கொண்ட டி.சி.எஸ்.,ஸின்  நவீன பசுமைகட்டிட அலுவலகத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று திறந்து வைத்தார் .

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காந்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி திறந்துவைத்தார். இந்த அலுவலகம் 25.5 ஏக்கர் பரப்பளவில் 16 லட்சம் சதுர அடியுடன் கட்டப் பட்டுள்ளது. இதில், மின்சாரத்தை சிக்கனப் படுத்தும் நடவடிக்கையாக குறைந்த மின்சாரத்தில் இயங்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும், இயற்கைவெளிச்சம் இருக்கும் பட்சத்தில், இந்த விளக்குகள் தானாகவே மேலும்மங்கலாக எரிந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தும் நவீனகருவிகளுடன் அமைந்துள்ளன. இது தவிர மின் சக்திக்காக சூரிய ஒளி தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

Leave a Reply