நடப்பு பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நீர்மின் திட்டங்களின் உற்பத்தி திறனை 10,000 மெகாவாட் அதிகரிக்க மத்திய மின்துறை அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

எனினும் இந்த இலக்கினை எட்டுவதற்கு பல்வேறு தடைக்கற்களை தாண்டி வரவேண்டிய சூழல் நிலவுகிறது. சுற்றுச் சுழல் பாதுகாப்பு பிரச்சினை, தேவையான நிலங்களைப் பெறு வதில் சிக்கல் மற்றும்

வனத் துறை உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அனுமதியைப் பெறுவதில் காலதாமதம் போன்ற பல்வேறு இடர்பாடுகளை நீக்கிய பின்னரே நீர்மின் உற்பத்தி திறனை 10,000 மெகா வாட் அதிகரிக்க முடியும் என தெரிகிறது.

தற்போது நாட்டின் மொத்த நீர்மின் உற்பத்தி திறன் 39,000 மெகா வாட்டாக உள்ளது. இது இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி திறனில் 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன் 2 லட்சம் மெகா வாட்டடை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply