கோவாவில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.11 குறைகிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மனோகர் பாரிக்கரின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பெட்ரோல் விலையை குறைப்பதாக தேர்தல்வாக்குறுதியில் தெரிவித்திருந்தது .

இதன்படி மார்ச் 21ம் தேதி தாக்கல்செய்ய உள்ள பட்ஜெட்டில் பெட்ரோலின் மீதான மதிப்புகூட்டு வரியை (வாட்) குறைக்க

திட்டமிட்டுள்ளது. பெட்ரோலின் மீதான மதிப்புகூட்டு வரியை முற்றிலும்_நீக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் பாரிக்கர் தெரிவித்தார். அதன்படி பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 11 குறையும். பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்தை காட்டிலும் கோவாவில் பெட்ரோல்_விலை லிட்டருக்கு ரூ. 16 குறையும்.

Leave a Reply