குஜராத் மாநிலம், வதோதராவில், சர்வதேசதரத்தில், ரூ 110 கோடி செலவில், பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, , குஜராத் முதல்வர், நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

வரலாற்று சிறப்புமிக்க, வதோதரா நகரில், 110 கோடி ரூபாய் செலவில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த பேருந்துநிலையத்தில், வதோதரா நகரின் வரலாற்று சிறப்பை குறிக்கும் புகைப் படங்கள், வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏழுபெரிய ஸ்கீரின்கள், நவீன பட்ஜெட் ஓட்டல்கள், பயணிகள் ஓய்வு அறை, மாற்று திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறைகள், வீல்சேர்கள், எலக்டரானிக் கால அட்டவணை ஆகியவை, இந்த நவீனபேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்களில் சில. மேலும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக, தரைக்குகீழ், இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply