சமையல் உருளையின்  விலை ரூ.11.42 உயர்வு சமையல் உருளையின் விலையில் ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது .

சமையல் உருளை டீலர்களுக்கான கமிஷன்தொகைகளை உயர்த்த அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளது .

முன்னதாக, டீலர்களுக்கு 14.2 கிலோ எடைகொண்ட ஒரு சிலிண்டர் மீதான கமிஷனை ரூ.25.83-லிருந்து 37.25 ஆக உயர்த்துவதற்கான உத்தரவை பெட்ரோலிய அமைச்சகம் வெள்ளிக் கிழமை பிறப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் , கமிஷன்தொகையில் 44 சதவீத உயர்வு அல்லது சிலிண்டர் மீது ரூ.11.42 உயர்வு என்பது அமலுக்கு வந்துள்ளது.

Tags:

Leave a Reply