பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கலே இருப்பதால் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது .மேலும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசாரபணிகளை மாநிலம் வாரியாக தீவிரப் படுத்தி வருகிறார்.

மேலும் பாஜக. மூத்த தலைவர்கள் அனைவருடனும் அவர் அடிக்கடி ஆலோசனை நடத்திவருகிறார். பாஜக.வின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்கான வியூகங்களை வகுத்து அவர் செயல்படுத்திவருகிறார்.

அந்த வகையில் பாஜக. எம்பி.க்கள் 116 பேரையும் சந்தித்துபேச நரேந்திரமோடி திட்டமிட்டுள்ளார். டெல்லியில் அடுத்தமாதம் (டிசம்பர்) முதல் வாரத்தில் இந்தசந்திப்பு நடைபெற உள்ளது.

ஒவ்வொரு எம்பி.யையும் அவர் தனி தனியாக சந்தித்துபேச உள்ளார். அப்போது 116 தொகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள பணிகளை கேட்டறிய மோடி முடிவுசெய்துள்ளார்.

அந்த 116 தொகுதிகளிலும் கூடுதல்கவனம் செலுத்தி வெற்றியை உறுதிப்படுத்த நரேந்திரமோடி ஆலோசனைகள் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply