11-வது ஐந்தாண்டு திட்டக் காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழ-ல் இந்திய பொருளாதாரம் முன்பு இருந்ததைவிட மிகவும் வலுவாக உள்ளது, 9-வது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் (1997-1998 முதல் 2001-2002 வரை) ஆண்டு சராசரி வளர்ச்சி விகிதம் 5,5 சதவீதம் என்ற அளவுக்கு மந்தமான நிலையி-ருந்தது, அதன் பின்னர் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் விரைவடைந்து 10-ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் (2002-2003 முதல் 2006-2007 வரை) சராசரியாக 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது, இது 10-ஆவது திட்டக்கால இலக்கான 8சதவீதத்தை விட குறைவு என்ற போதிலும் இதுவரையிலான திட்டக் காலங்களில் எட்டப்பட்டதைவிட மிக அதிக வளர்ச்சியாகும், இந்த பொருளாதார வளர்ச்சி பல்வேறு துறைகளில் நமது பொருளாதார வ-மையை பிரதிப-க்கும் அதே நேரத்தில் நமது நாட்டு மக்களில் பெரும்பாலானோர். தங்களது வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தை இன்னும் எட்டவில்லை, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் சதவீதம் குறைந்து வருகிறது, ஆனால். அந்த வேகம் மிகவும் குறைவாக உள்ளது, ஏராளமான மக்களுக்கு அடிப்படை தேவைகளான சுகாதாரம். கல்வி. சுத்தமான குடிநீர். துப்புரவு வசதிகள் போன்றவை இன்னும் கிடைக்கவில்லை, அவர்களுக்கு அந்த வசதிகளை அளிக்காவிட்டால் வளர்ச்சியில் அவர்கள் பங்குபெற முடியாது, இந்தப் பிரச்சினைகள் ஒருசில மாநிலங்களில் மிகவும் கடுமையாக உள்ளது, அதிலும் பொதுவாக கிராமப்புறங்களில் இந்தப் பிரச்சினைகள் மிகவும் அதிகமாக உள்ளது, 1,1 11-வது திட்டத்திற்கான ஒரு பார்வை 11-வது ஐந்தாண்டுத் திட்டம் இதுவரை இருந்த கொள்கைகளை மாற்றி விரிவான. விரைவான. வறுமையை விரைவில் ஒழிக்கக் கூடிய. மக்களின் வாழ்க்கைத்தரத்தில் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான ஒரு வளர்ச்சிப்பாதையை எட்டும் வகையில் புதிய கொள்கைகளை உருவாக்குவதற்குரிய வாய்ப்பை நமக்கு வழங்குகிறது, இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் 10-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தின் மத்தியில் துவக்கப்பட்டன, அந்த நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டு 11-வது ஐந்தாண்டு திட்டத்திற்கான யுத்தியாக மாற்றப்பட வேண்டும், விரைவாக வளரும் பொருளாதாரம் மூலமாகவே மக்களின் வருவாயை பெருக்கி அவர்களின்வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் விரைவான பொருளாதார வளர்ச்சிதான் புதிய யுத்தியின் அங்கமாக இருக்க முடியும், அதிர்ஷ்டவசமாக பொருளாதார வளர்ச்சிக்கான இலக்கு இதற்கு முன்பு எட்டக்கூடிய மதிப்பீடுகளின்படி இருந்ததைவிட தற்போது எட்டக்கூடிய அளவில் உள்ளது, மத்திய திட்டக்குழுவிலும் அதற்கு வெளியிலும் செய்யப்பட்ட முறையான கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் ஆண்டுக்கு 8 முதல் 9 விழுக்காடு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை 1,5 சதவீதம் பெருகி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் இந்திய மக்களின் சராசரி வருவாயை 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக பெருக்கும், மேலும். இந்த கொள்கையை கடைபிடிப்பதன் மூலம் கிராமப்புறங்கள் உட்பட அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையிலான பொருளதாதார வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும், இந்த கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது மட்டுமின்றி சுகாதாரம். கல்வி. சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை கிடைக்காத பகுதிகளுக்கு அவற்றை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், இத்தகைய அடிப்படை வசதிகள் மக்கள் நலனின் மிகக் குறைந்த காலத்தில் நேரடி நலனை ஏற்படுத்துவதுடன் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளையும் வரையறுக்கும், வருமானத்தை பெருக்கும் வகையில் வளர்ச்சி ஏற்படும்போதுகூட இந்த வசதிகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது, அனைத்து மட்டங்களிலும் இந்த வசதிகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும், சுகாதாரம். கல்வி ஆகியவற்றை மேம் படுத்துவது வளர்ச்சியை வரையறுப்பதற்கு முக்கியக் காரணியாகும், விரிவான வளர்ச்சியை ஏற்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றாலும்கூட பல தரப்பட்ட மக்கள் இன்னும் ஒதுக்கப்படும் நிலையே காணப்படுகிறது, பழங்குடி இன மக்கள். பருவப் பெண்கள். 3 வயது வரை உடைய குழந்தைகள் போன்ற தங்களது உரிமைகளை பெறுவதற்கு போதிய வலுவான அமைப்பில்லாத மக்கள் ஒதுக்கப்படும் பிரிவினரில் அடங்குவர், அந்த பிரிவினரின் தேவைகளை பூர்த்தி செய்ய 11-வது ஐந்தாண்டுத் திட்டம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், விரைவான. விரிவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு விவசாயம். சிறுதொழில் நிறுவனங்கள். வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார்த்துறை முக்கிய பங்காற்ற வேண்டும், நமது பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த முதலீட்டில் இந்த துறைகள்தான் 70 சதவீத பங்கு வகிக்கின்றன, மேலும். தொழில்துறை வளர்ச்சியடைவதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் நமது கொள்கைகள் அமைய வேண்டும், இதற்கான திட்டங்களில் தனியார் துறை மட்டுமின்றி அரசு சார்பிலான ஒதுக்கீடும் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும், பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்தால் இதற்கான ஆதாரங்களை திரட்டுவது மிகவும் எளிதாக அமையும், எனவே வளர்ச்சி என்பது இரண்டு காரணங்களுக்காக மிகவும் முக்கியமானதாகிறது, ஒன்று வருவாய் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிப்பது. மற்றொன்று விரிவான பொருளாதாரத்தை உறுதிசெய்ய தேவையான திட்டங்களுக்கு உதவுவது, சாத்தியமான அனைத்து வழிகளிலும் முயன்றால்தான் இதை சாதிக்க முடியும், நமது கைகளில் உள்ள வாய்ப்புகளை எல்லாம் எட்டப்படும் இலக்காக மாற்றுவது மிகப்பெரிய பணியாகும், தற்போதுள்ள முறைகளிலேயே நமது நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்த இலக்கை எட்ட முடியாது, எனவே நமது திட்டங்களை மறு ஆய்வு செய்வதும். எவையெல்லாம் பயனளிக்கின்றன. எவையெல்லாம் பயனளிக்கவில்லை என்பதை ஆராய்வதும் அவசியமாகும், சில இலக்குகளை எட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட திட்டங்கள் அதற்காக பெருமளவு செலவு செய்யப்பட்ட போதிலும் தோல்வியடைந்து விடுகின்றன, அவற்றுக்கான ஒதுக்கீட்டில் கவனம் செலுத்துவதில் இருந்து விலகி அதனால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதும் அவசியமாகும், 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நமக்கு சாதகமான அம்சங்களை வலுப்படுத்தி பாதகமான அம்சங்களை சரி செய்து இந்த பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான யோசனையை இந்த ஆய்வறிக்கை வழங்குகிறது, 1,2 பொருளாதாரத்தின் வ-மைகள் நமது பொருளாதாரத்தின் வ-மைகள் நன்றாக அறியப்பட்டவைதான், அவை 10-வது ஐந்தாண்டு திட்டத்தை 9-வது ஐந்தாண்டு திட்டத்துடன் ஒப்பிடுவதற்கான அட்டவணையில் இடம் பெற்றுள்ள பெரு நிலை பொருளாதார காரணிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, 9-வது ஐந்தாண்டு திட்டத்துடன் ஒப்பிடும்போது நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது, பெருநிலை பொருளாதாரத்திற்கான அடிப்படைகளும் வ-மையாக உள்ளன, உள்நாட்டு சேமிப்பு விகிதம் வளர்ச்சி அடைந்து 2004-2005-ம் ஆண்டில் 29,1 சதவீதம் என்ற அளவை எட்டியுள்ளன, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதி பற்றாக்குறை. இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக உள்ளது, எனினும் அது குறையத் தொடங்கி உள்ளது, 2006-2007-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை கணக்கீடுகள் இந்த நிதி பற்றாக்குறை 7 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கின்றன, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெருமளவு உயர்வு ஏற்பட்ட போதிலும் நாட்டின் பணவீக்கம் மிதமாகவே உள்ளது, 10-வது திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் நமது நடைமுறை கணக்கில் உபரி இருந்தது, 3-வது ஆண்டான அட்டவணை-1 : பெருநிலை பொருளாதார காரணிகள் 9-வது திட்டம் 10-வது திட்டம் (1997-1998 முதல் (2002-2003 முதல் 2001-2002) 2006-2007 ஒட்டுமொத்த வளர்ச்சி 5,5% ஆக இருப்பதற்கு 7% ஆக இருப்பதற்கு அதில்,,, விவசாயம் 2,0% 1,8% தொழில் துறை 4,6% 8,0% சேவைத்துறை 8,1% 8,9% ஒட்டுமொத்த உள்நாட்டு சேமிப்பு (சந்தை விலையின் அடிப்படையில்) 23,1% 28,2% ஒட்டுமொத்த உள்நாட்டு முதலீடு (சந்தை விலையின் அடிப்படையில்) 23,8% 27,5% நடப்பு கணக்கில் நிலுவை -0,7% 0,7% மத்திய. மாநில அரசுகளின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை 8,8% 8,4% அந்நிய செலாவணி கையிருப்பு (டாலர்/பில்-யன்களில்) 54,2% 151,6% பணவீக்க விகிதம் (மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில்) 4,9% 4,8% 2004-2005-ல் நடப்புக் கணக்கில் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒரு சதவீத அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இது 2005-2006-ம் ஆண்டு முதல் 9 மாதங்களில் 2,3 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, எண்ணெய் விலை உயர்வு. முதலீடுகளை உயிர்ப்பித்தல் ஆகியவை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது, இந்த பற்றாக்குறை சமாளிக்கக் கூடிய ஒன்றுதான், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பும். 15.500 கோடி டாலர் என்ற மிகவும் திருப்திகரமான நிலையிலேயே உள்ளது, குறிப்பு : 1, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 1993-94-ம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் உள்ளது, இது 10-வது திட்டக்காலத்தில் 2002-03 முதல் 2005-06 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கானதாகும், 2, ஒட்டுமொத்த சேமிப்பு விகிதம் ஒட்டு மொத்த முதலீட்டு விகிதம். நடப்பு கணக்கு நிலுவை அனைத்தும் தற்போதுள்ள விலைகளின் அடிப்படையில் சராசரியாக வழங்கப்பட்டுள்ளன, 10-ஆவது திட்டக் காலத்தில் இவை 2002-03 முதல் 2004-05 வரையிலான மூன்று ஆண்டுகளின் சராசரியாகும், 3, ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை திட்டக் காலங்களின் சராசரி அளவாகும், 10-ஆவது திட்டத்தில் இது 2002-03 முதல் 2005-06 வரையிலான நான்கு ஆண்டுகளின் சராசரி ஆகும், 4, அந்நிய செலாவணி கையிருப்பு 5 9-வது திட்டக் காலத்தில் 29,3,2002 அன்றுள்ள படியும் 10-வது திட்டக் காலத்தில் 31,3,2006 அன்றுள்ள படியும் வழங்கப்பட்டுள்ளது, 5, பணவீக்க விகிதம் 10-வது திட்டக் காலத்தில் 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான சராசரி ஆகும், கடந்த 20 ஆண்டுகளில் அடுத்தடுத்து வந்த அரசுகள் செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களின் பயனாக நமது பொருளாதாரம் பல துறைகளிலும் முதிர்ச்சி அடைந்துள்ளது, நமது பொருளாதாரம் தற்போது உலகப் பொருளாதாரத்துடன் மிகவும் ஒருங்கிணைந்துள்ளது, அதன் காரணமாக நமது பொருளாதாரம் பயனடைந்துள்ளது, தகவல் தொழில்நுட்பத்திலும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளிலும் நாம் பெற்றுள்ள மிகப்பெரிய வெற்றி இந்தியர்களின்திறமையை வெளிப்படுத்தியதுடன். சரியான சூழல் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளது, இந்த வ-மை மருத்துவப் பொருட்கள் தயாரிப்புத் துறை. வாகன உதிரி பாகங்கள் தயாரிப்புத் துறை. ஜவுளித்துறை போன்றவற்றிலும் ஏற்பட்டுள்ளது, உலகப் பொருளாதாரத்துடன் நாம் ஒருங்கிணைந்ததால் ஏற்பட்டுள்ள மற்றொரு பயன் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்-திருப்பதாகும், இது 9-வது திட்டக் காலத்தில் சராசரியாக 370 கோடி டாலர் என்ற அளவில் இருந்து 10-வது திட்டக் காலத்தின் முதல் நான்கு ஆண்டுகளில் அதாவது டிசம்பர் 2005 வரை சராசரியாக 540 கோடி டாலர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது, இது நமக்குள்ள ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது குறைவானது தான், இந்தியா தற்போது பெறும் அந்நிய முதலீட்டை விட மூன்று மடங்கு அதிகமாக பெற வேண்டும் என்று தேசிய குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இது நியாயமான இலக்குதான், இதை 11-வது திட்டக் காலத்தில் எட்டிவிட முடியும், உள் நாட்டு பொருளாதார நடை-முறைகளின் மூலம் நமக்கு மற்றொரு வ-மை கிடைத்துள்ளது, மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கும் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது, ஆனால். இது சீனாவிலும் தொழில்மயமான நாடுகளிலும் அதிகரித்து வருகிறது, தற்போதுள்ள சூழலை நாம் முறையாகக் கையாண்டு மனிதவள மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்ல பயன் விளையும், 1,3 சில முக்கிய சவால்கள் இதுவரை குறிப்பிடப்பட்டுள்ள வ-மையான அம்சங்கள் அனைத்தும் உண்மையானவை, அதன் அடிப்படையில் 11-வது திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும், எனினும் நாம் சமாளிக்க வேண்டிய சில முக்கியமான சவால்களும் உள்ளன, அ)ஏழைகளுக்கு அடிப்படை பொது சேவைகளை வழங்குதல் நம்முன் உள்ள மிகவும் முக்கியமான சவால் இதுவரை கல்வி. சுகாதாரம் போன்ற அடிப்படை பொது சேவைகளை பெறாத மக்களுக்கு அந்தச் சேவைகளை எவ்வாறு வழங்கப்போகிறோம் என்பதுதான், ஏழை மக்களை வளர்ச்சிப் பாதையில் பங்கேற்கச் செய்வதில் கல்விதான் முக்கியக் காரணியாகும், அதை வழங்குவதற்கு நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளன, நாட்டின் கல்வி அறிவு விகிதம் 70 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் ஆரம்பப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள போதிலும். தரமான கல்வி இன்னும் வழங்கப்படவில்லை, அறிவுசார் உலகத்திற்கு மிகவும் முக்கியமானத் தேவை அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி கிடைக்கச் செய்வதுதான், அதற்கான பணிகளை நாம் வேகமாகச் செய்ய வேண்டும், சுகாதாரத் துறையை எடுத்துக்கொண்டால் மருத்துவ சேவை மற்றும் அது சார்ந்த 6 மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன். தூய்மையான குடிநீர். அடிப்படை சுகாதார வசதிகள் போன்ற சேவைகளை வழங்குவதில் பெரும் இடைவெளி உள்ளது, நமது நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு. குறிப்பாக ஏழைகளுக்கு இந்த வசதி குறைந்த அளவு கூட கிடைக்கவில்லை, கல்வி. சுகாதாரம் போன்ற சில சேவைகள் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது, இந்த சேவைகள் அதிக செலவு பிடிப்பவையாக இருப்பதுடன் சாதாரண மனிதனுக்கு எட்டாத அளவில் உள்ளன, தனியார் மூலம் வழங்கப்படும் சேவைகள் வேறுபட்ட தரத்தை கொண்டவையாக உள்ளன, இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு மூலம் நிதி உதவி வழங்கினால் மட்டுமே அனைத்து மக்களுக்கும் இந்தச் சேவைகளை வழங்க முடியும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். சமூக சேவை அமைப்புகள் போன்ற தனியார் அமைப்புகளுடன் இணைந்து இந்த சேவைகளை வழங்க வாய்ப்புள்ள போதிலும் பெரும்பாலான சேவைகளை அரசே வழங்க வேண்டியுள்ளது, இந்தத் துறையில் மற்றொரு சவால் என்னவென்றால் தற்போது இந்தச் சேவைகளை வழங்கும் அமைப்புக்கள் உள்ளபோதிலும். வழங்கப்படும் சேவைகளின் தரம் மிகவும் குறைவாக உள்ளது, அதற்கு யார் காரணம் என்பதை சரியாக கண்டுபிடித்து நிரூபிக்க முடிவதில்லை, அவ்வாறு கண்டுபிடிக்கும் நிலை ஏற்படுத்தப்படாத நிலையில். கூடுதல் நிதியை ஏற்படுத்தினாலும் தரமான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் சிரமமாகும், இது அரசு எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய சவாலாகும், ஆ)இழந்த வேளாண் திறனை மீண்டும் பெறுதல், 11-வது திட்டத்தில் நமக்குள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று 1980-ம் ஆண்டு முதல் 1996-97-ஆம் ஆண்டு வரை 3,2 விழுக்காடாக இருந்து அதன் பின்னர் 1,5 விழுக்காடாக குறைந்துவிட்ட வேளாண் வளர்ச்சியை மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருவதாகும், வேளாண் வளர்ச்சியில் ஏற்பட்ட இந்த வின்னடைவு தான் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மூலக் காரணம் ஆகும், இது சிறு மற்றும் குறு விவசாயிகள். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் சந்திக்கும் பிரச்சினைகளால் ஏற்பட்டது மட்டும் அல்ல, அனைத்துத் தரப்பு விவசாயிகளையும் இது பாதித்துள்ளது, இந்த பின்னடைவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல சிறு குறு விவசாயிகள் மட்டுமின்றி நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள உற்பத்திக் குறைவால் அவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர், வேளாண் வளர்ச்சியை 4 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த இரண்டாவது பசுமைப் புரட்சி மிகவும் அவசியமாகும், இது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, ஏனெனில் காடு வளர்ப்பு. மீன் வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சேர்த்து வேளாண் துறையின் வளர்ச்சி 10-ஆவது திட்டக் காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு சதவிகிதமாகவே உள்ளது, 2005-2006 மற்றும் 2006-2007-ஆம் ஆண்டிற்கான மதிப்பீடுகள்கூட ஒட்டுமொத்த ஐந்தாண்டு திட்டக் காலத்தில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது, வேளாண் வளர்ச்சியை குறைந்தபட்சம் 2 மடங்காக உயர்த்துவதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய சவால் ஆகும், இதற்கு விநியோகத் தரப்பிலும். கொள்முதல் தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும், இ) தொழில்துறையில் போட்டியிடும் தன்மையை அதிகரித்தல், தொழில்துறையும் எதிர்பார்த்த அளவுக்கு வளரவில்லை, 9-வது திட்டக் காலத்துடன் 7 ஒப்பிடும்போது தொழில்துறையின் சராசரி வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ள போதிலும். 10-வது திட்டக் காலத்தில் இது 8 சதவிகிதத்தை தாண்டாது, நமது நாட்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 9 சதவீதமாக இருப்பதற்கு தொழில்துறை ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சியடைய வேண்டியது மிகவும் அவசியமாகும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளில் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது, உற்பத்தித்துறையில் நம்மைவிட சீனாவுக்கு அதிக வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாகவும். தகவல் தொழில்நுட்பத் துறையில் நமக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி. அதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர், இந்த அணுகுமுறை சரியானது அல்ல, தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் இந்தியாவின் சாதனை மிகப்பெரிய வ-மைதான், அதேநேரத்தில் உற்பத்தித் துறையில் இந்தியா அலட்சியமாக இருந்துவிடக் கூடாது, உற்பத்தித் துறையில் இரண்டு இலக்க அளவில் வளர்ச்சியை எட்டுவதற்கான அனைத்து திறன்களும் இந்தியாவிடம் உள்ளன, உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு திறனும். நம்பிக்கையும் கொண்ட தொழில்துறையினர் நம்மிடம் உள்ளனர், தகுதி வாய்ந்த தொழிலாளர்களும் அற்புதமான நிர்வாகிகளும் இந்தியாவில் உள்ளனர், எனினும் தொழிலாளர் சார்ந்த உற்பத்தி போன்ற சில அம்சங்கள் நமது போட்டியிடும் தன்மைக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துகின்றன, இந்த பிரச்சினைகளுக்கு 11-வது திட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும், தொழில் துறையில் அதிக வளர்ச்சியை எட்டுவதற்கு உள்ள முக்கியத் தடைகளில் ஒன்று சாலை. இரயில் பாதை. துறைமுகம். விமான நிலையம். தகவல் தொடர்பு முறைகள். மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் நமக்குப் போட்டியாக உள்ள நாடுகளில் உள்ள அளவுக்கு நம்மிடம் இல்லாததுதான், நமது தொழில் நிறுவனங்கள் மற்ற நாடுகளுடன் திறமையாக போட்டியிடுவதற்கு ஏற்ப இந்த கட்டமைப்பு வசதி குறைபாடுகள் அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் சரி செய்யப்பட வேண்டும், போட்டி மிகுந்த இந்த உலகில் நமது நாட்டு தொழில் துறையினர் ஏற்றுமதி சந்தையில் மட்டுமின்றி உள்நாட்டு சந்தையிலும் நமது பங்கை அதிகரிக்க கடுமையாக போட்டியிட வேண்டும், இந்திய தொழில்துறை இதை உணர்ந்து கொண்டுள்ளது, அதன் காரணமாக அரசு வழங்கும் பாதுகாப்பின் உதவியுடனேயே தாக்குப் பிடித்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பை தனியார் தொழில்துறை கைவிட்டுள்ளது, அதே நேரத்தில் மற்ற நாடுகளுக்கு இணையாக தரமான கட்டமைப்பு வசதிகளை இந்திய தொழில்துறையினர் எதிர்பார்க்கிறார்கள், அவற்றை நிறைவேற்ற 11-வது திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், மின் தட்டுப்பாடு. மின் விநியோகத்தை நம்ப முடியாதத் தன்மை போன்றவைதான் இந்தியாவின் வளர்ச்சியை தாமதப் படுத்துகின்றன என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, அதே நேரத்தில் நமது போட்டியாளர்கள் 24 மணி நேரமும் நிலையான அழுத்தம் கொண்ட மின்சாரத்தைப் பெறுவதால் நம்மைவிட முன்னணியில் உள்ளனர், ஆனால். இந்தியாவின் பல பகுதிகளில் இத்தகைய சாதகமான அம்சம் இல்லை, மின் வசதியை நிர்வகித்தல் குறிப்பாக. சிறப்பு மின் விநியோகம் போன்றவை மாநில அரசின் பொறுப்புகள்தான், அவற்றை மேம்படுத்துவது மிக முக்கிய சவாலாகும், ஈ, மனித வளத்தை மேம்படுத்துதல் தரமான உயர்கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்குடன் பல ஆண்டுகளுக்கு முன் ஐ,ஐ,டி, உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை நாம் ஏற்படுத்தியது தற்போது நல்லப் பலனை தந்துள்ளது, 8 ஆனாலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது, திறமையும். அறிவும் மிகுந்த தொழில் பிரிவுக்குத் தேவையான ஊழியர்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன, இந்த நிலை நமது போட்டியிடும் தன்மையை சீரழித்துவிடும், தரமான திறமை மிகுந்த ஊழியர்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்களில் அதிக அளவு முதலீடு செய்வதுடன் கல்வி திட்டங்களிலும் மாற்றங்களை செய்வது அவசியமாகும், மேலும். திறமை வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்குவதும் அவசியமாகும், தனியார் துறை மூலம் உயர் கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் கல்வித்தரம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இவை அனைத்தும் உடனடியாக செய்யப்படாவிட்டால் உலகத்தரத்தை எட்டுவதில் நாம் தோல்வியடைந்து விடுவோம், இந்தியா போன்ற பொருளாதார வளர்ச்சியுடைய நாட்டில் அனைவரையும் மருத்துவர்களாகவோ. பொறியாளர்களாகவோ. மென்பொருள் வல்லுநர்களாகவோ. நிதித்துறை நிபுணர்களாகவோ. குறைந்தபட்சம் பல்கலைக்கழக அளவிலான கல்வி பெறுபவர்களாகவோ மாற்றுவது சாத்தியமானது அல்ல, இந்திய தொழில்துறையும் அதைச் சார்ந்த தொழில்களில் திறன் கொண்ட ஊழியர்களை எதிர்பார்க்கிறது, ஆனால். இந்த விஷயத்தில் இந்தியாவில் உள்ள நிலைமை திருப்திகரமாக இல்லை, காலம் காலமாகவே தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை பயிற்சியில் இந்தியா பின்தங்கியே உள்ளது, தற்போதைய நிலையில்கூட ஐ,டி,ஐ, செவி-யர் பயிற்சி. கணினிப் பயிற்சி போன்ற தொழில் கல்வி நிறுவனங்களில் சேருவோரின் எண்ணிக்கை உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிலேயே உள்ளது, ஆனால். ஆசிய நாடுகளிலும் இதற்கு நேர் மாறான நிலை உள்ளது, எனவே ஊழியர்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் துறையில் நம்மை அந்த நாடுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டன, எனவே இந்தியாவில் ஐ,டி,ஐகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும், அங்கு அளிக்கப்படும் கல்வி மற்றும் பயிற்சியின் தரம் மாறி வரும் பொருளாதார தேவைக்கு இணையாக வளர வேண்டும், உ, சுற்றுச்சூழலை பாதுகாத்தல் இந்தியாவிலும். உலகிலும் சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன, பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டிய அதே நேரத்தில் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும், நீர் ஆதாரங்களை அதிகமாக பயன்படுத்துதல். காடுகளை அழித்தல் போன்றவை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும், பருவநிலை மாற்றம் என்ற அச்சுறுத்தல் வருங்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, எனவே. அதை நாம் ஒதுக்கிவிடக் கூடாது, இத்தகைய சுற்றுச்சூழல் கவலைகளை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் வளர்ச்சி யுத்தி வரையறுக்கப்பட வேண்டும், ஊ,மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்துதல் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப் படுவோருக்கு நமது நாட்டில் செய்து தரப்படும் மறுவாழ்வுத் திட்டங்கள் தரம் குறைந்தவையாக உள்ளன, இவையே சம்பந்தப்பட்ட மக்கள் ஒதுக்கப்படுவதற்கும். தாங்கள் புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் கருதுவதற்கும் காரணமாக அமைகின்றன, பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அதிகம் 9 ஆகும், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு மிகவும் குறைவு என்பதால் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் தனியார் நலன் கருதி நிலம் கையகப்படுத்தப்படும்போது அதிருப்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் அமைதிக்கும். வளர்ச்சிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதையும். மோதல் ஏற்படுவதையும் தடுக்க முறையான இழப்பீடு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த திட்டங்களால் பயன் கிடைக்கச் செய்தல் போன்றவை அடங்கிய கொள்கைகள் வரையறுக்கப்பட வேண்டும், சமூக காரணங்களுக்காக இடம் பெயர்வோரும். முறையாக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், எ) ஆட்சித்திறனை மேம்படுத்துதல் பொதுநலத் திட்டங்கள் செயல்படுத்தப் படுதல். சாதாரண குடிமக்களை அரசு அணுகும் விதம் போன்றவற்றில் நல்லாட்சி நடப்பது உறுதி செய்யப்படா விட்டால் விரிவான. விரைவான வளர்ச்சியை எட்டுவதற்கான நமது முயற்சிகள் பயன் அளிக்காமல் போய்விடும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்பது மிகப்பெரிய நோயாக மாறி வருகிறது, இந்தப் பிரச்சினை உடனடியாக களையப்பட வேண்டும், திட்டங்களை சிறப்பாக வடிவமைத்து செயல்படுத்துவதன் மூலம் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துதல். இதற்காக அரசுத் துறைகளின் அளவுக்கு அதிகமான அதிகாரத்தை குறைத்தல். வெளிப்படையான. மற்றவர்களுக்கு பதில் கூறக்கூடிய வகையிலான நிர்வாகத்தை உருவாக்குதல். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும், சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம். மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தை பெறும் உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது, எனவே. அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ள நாம் தயாராக வேண்டும், விரைவான. அதிக செலவில்லாத நீதி வழங்கும் முறை நல்ல நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகும், ஒரு சமூகம் வெற்றகரமாக அமைய இது அடிப்படை தேவையாகும், இந்தியாவில் நீதி வழங்கும் முறை அதன் சுதந்திர தன்மைக்காகவும். நியாயத்திற்காகவும் மதிக்கப்படுகிறது, ஆனால். நீதி வழங்குவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுவது அதிலுள்ள குறைபாடாகும், முடிவு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் நீதியை மறுப்பதற்கு ஒப்பானதாகும், இந்த தாமதத்தால் பெருமளவு செலவு ஏற்படுகிறது, எனவே ஏழைகள் நீதி பெறுவது சிரமமாக உள்ளது, இந்த நிலையை மாற்றி விரைவான. செலவில்லாத நீதி கிடைக்க அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும், 1,3 ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளிகளும் மேலே குறிப்பிடப்பட்ட சவால்களை-யெல்லாம் நாம் சரிவர கையாண்டு சமாளிப்பதுடன். நாம் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை சரிசெய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும், இன்னும் கேட்டால் இடைவெளிகள் அதிகரித்து விட்டன என்ற உண்மையையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இது மிகைப்படுத்தப் பட்டதைப் போல தோன்றும் போதிலும். அதில் உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாது, எனவே சமுதாய இடை வெளிகளைக் குறைக்க 11-வது திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சமுதாயத்தில் பலவிதமான இடைவெளிகள் உள்ளன, அவற்றை போக்க சம கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம், அவற்றில் மிக முக்கியமான இடைவெளி ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியாகும், 5,1-ல் விளக்கப்பட்டதைப் போல இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது, ஆனால். அது மெல்ல மெல்லத்தான் குறைந்து வருகிறது, வறுமைக் கோடு என்பது மிகக் குறைந்த வருவாயை அடிப்படையாகக் கொண்டு 10 நிர்ணயிக்கப்படுவதால் வறுமை ஒழிப்பில் இவ்வளவு குறைவான வேகத்தை ஒப்புக்கொள்ள முடியாது, எனவே. வறுமை ஒழிப்பின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும், இது தவிர அடிப்படை சேவைகளை யார் யார் பெறுகிறார்கள். யார் யார் பெறவில்லை என்பதில் உள்ள இடைவெளியும் முக்கியமானதாகும், இதன் காரணமாக சுகாதாரம். சத்துணவு. கல்வி. பணித்திறன். தூய்மையான குடிநீர். துப்புறவு வசதிகள் போன்றவற்றை பெறுவதிலும் இரு பிரிவினருக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது, தாழ்த்தப்பட்ட வகுப்பினர். பழங்குடியினர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். சில பிரிவு சிறுபான்மையினர் ஆகிய ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்ற வகுப்பினரை விட மிகவும் பின்தங்கியே உள்ளனர், அட்டவணை-2 : சில சமூக பொருளாதார காரணிகளின் நிலவரம் அகில இந்திய சராசரி சிறந்த மோசமான மாநிலம் மாநிலம் 1999ம் ஆண்டு சமீபத்திய சமீபத்திய சமீபத்திய வாக்கில் ஆண்டு ஆண்டு ஆண்டு தனி நபர் தேசிய உற்பத்தி (1993-94ம் ஆண்டு விலைகளின்படி) ரூ, 7321 ரூ,11799 ரூ, 16679 ரூ, 3557 வறுமை விகிதம் (சதவீத அடிப்படை கணக்கெடுப்பு) 36,0 27,8 6,16 47,15 கல்வியறிவு (7 வயதிற்கு மேற்பட்ட ஆண்) 64,1% 75,3% 94,2% 59,7% கல்வியறிவு (7 வயதிற்கு மேற்பட்ட பெண்) 39,3% 53,7% 87,7% 33,1% ஆரம்பக்கல்வி பயில்பவர் (6-14 வயது வரை) 55,3 71,1 103,1 55,8 பா-ன விகிதம் (பெண்கள்/1000 ஆண்கள்) 927 933 1058 709 குழந்தை இறப்பு விகிதம் : 2003 (1000 பிறப்புகளின் அடிப்படையில்) 80 60 11 83 பிரசவ நேரத்தின்போது இறக்கும் தாய்மார்கள் 4 சத்துக்குறைவான குழந்தைகள் : (1998-99) வயதுக்கேற்ற எடை 47,0 20,6 55,7 வயதுக்கேற்ற வளர்ச்சி 45,5 18,1 55,5 வளர்ச்சிகேற்ற எடை 15,5 4,8 24,3 குறிப்பு : 1, 1990-91 மற்றும் 2003-2004ஆம் ஆண்டுகளுக்கானது, 2, கொடுக்கப்பட்ட வறுமை நிலவரம் 1993-94 மற்றும் சமீபத்திய மதிப்பீடுகள் 1993-94ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடக் கூடிய என்,எஸ்,எஸ், 2004-2005 கணக்கெடுப்பின் அடிப்படையிலானது, 3, 1991 மற்றும் 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான தகவல்களில் இருந்து மதிப்பிடப்பட்டது, 4, எஸ்,ஆர்,எஸ், அடிப்படையிலானது, 5, உலக மக்கள் தொகையின் சராசரி அளவி-ருந்து இந்த அளவு இரண்டு புள்ளிகள் தர விலகல் நிலையில் உள்ளன, 11 உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டிய மற்றொரு இடைவெளி பா-ன பாரபட்சமாகும், பா-ன விகிதம் குறைவதில் தொடங்கி ஆண். பெண் கல்வி விகிதத்தில் உள்ள வித்தியாசம். பிரசவத்தின்போது பெண்கள் அதிக அளவில் மரணம் அடைதல் ஆகியவை வரை இந்த இடைவெளி தொடருகிறது, அட்டவணை 2-ல் தரப் பட்டுள்ள புள்ளி விவரங்கள் தற்போதைய நிலைமையை பிரதிப-க்கும்போதிலும் முழு உண்மையையும் சொல்லவில்லை, கல்வித்தரம். பொருளாதார அதிகாரம் போன்றவற்றில் உள்ள இடைவெளிகள் பெண்களுக்கு எதிரானவையாகவே உள்ளன, பெண்கள் பொருளாதார ரீதியாக அதிகாரம் கொண்டவர்களாக மாறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சமூக ரீதியாகவும். பொருளாதார ரீதியாகவும் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான இடைவெளியும் தற்போது உண்மையாகியுள்ளது, இந்த இடைவெளியை பல்வேறு வகைகளிலும் குறைப்பதற்காக மத்திய அரசு பல்முனை நடவடிக்கையை கடைபிடித்து வருகிறது, கிராமப்புற கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியை போக்கவும். நீர்ப்பாசனம். சாலை இணைப்பு வசதி. வீட்டு வசதி. குடிநீர் விநியோகம். மின் விநியோகம். தொலைபேசி வசதிகள் போன்றவற்றை வழங்கவும். பாரத் நிர்மாண் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது, கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் உறுதி செய்யப்பட்ட வேலைவாய்ப்பை வழங்குவதுடன் கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் உதவுவதால் அச்சட்டம் மிகப் பெரிய சமூக பாதுகாப்பு வளையமாக திகழ்கிறது, அனைவருக்கும் கல்வித் திட்டம். தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி. அடிப்படை சுகாதார வசதி கிடைப்பதற்காக செயல்படுத்தப் படுகின்றன, கிராமப்புற மக்களுக்கு அதிக பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்தத் திட்டங்கள் கொண்டு வரப் பட்டுள்ளன, இந்த திட்டங்கள் மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படுவதில் முழுமையான வெற்றி பெற மாநில அரசுகளும். உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், சில பகுதிகள் பிராந்திய ரீதியாக பின்தங்கி இருப்பது மற்றொரு கவலை அளிக்கும் அம்சமாகும், இது ஒருபுறம் இருக்க. ஒரே மாநிலத்துக்குள்ளேயே இடத்துக்கு இடம் வளர்ச்சியில் இடைவெளி அதிகரிப்பது மற்றொரு பிரச்சினையாக உள்ளது, அதை சரி செய்ய மத்திய. மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அதிருப்தி. அநீதி. விரக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்கித் தவிப்பதை நாம் அனுமதிக்கக்கூடாது, அவ்வாறு செய்தால் அது தீவிரவாதத்துக்குத் தான் வழிகோலும், நாட்டில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்ச-சம் பரவியிருப்பது நமக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும், மதவாதத்தால் பாதிக்கப் பட்ட பகுதி மக்கள் மத்தியிலும் கோபம் பெருகி வருகிறது, நல்ல நிர்வாகம். வளர்ச்சியின் பயனை மக்கள் அனுபவிப்பதற்கான சூழ்நிலை போன்றவற்றை ஏற்படுத்தித்தர அரசு நிர்வாகம் தவறிவிட்டதே பல பகுதிகளில் மக்கள் மத்தியில் மனக்கசப்பு ஏற்படக் காரணமாகும், இந்த அதிருப்தியைப் போக்கி. நீதி வழங்கி மக்கள் மத்தியில் நம்பிக்கை. கண்ணியம். நியாய உணர்வு போன்றவற்றை ஏற்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டின் மற்ற பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியும் தடைபடும், அது மட்டுமின்றி நல்ல சமூகத்திற்கான கண்ணியத்தையும். பெருமையையும் நம்மால் பெற முடியாமல் போய்விடும், பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண 12 பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான நிதி வாய்ப்பளிக்கிறது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள சவால்களை சரி செய்வதற்கான விரிவான கொள்கை பற்றி இந்த ஆய்வுக் கட்டுரையின் இனி வரும் பகுதிகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது, 2, 11வது திட்டத்தில் வளர்ச்சிக்கான ஆதாரங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மூன்று விரிவான ஆதாரங்கள் உள்ளன, ஒன்று கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், இரண்டு மனித முதலீட்டை திரட்டுதல், மூன்றாவது தொழில்நுட்ப மாற்றங்கள் அல்லது அமைப்பு மாற்றத்தின் மூலம் உற்பத்தியைப் பெருக்குதல், இந்தியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 11வது திட்டத்தில் மேற்கண்ட மூன்று ஆதாரங்களும் ஆராயப்பட வேண்டும், இந்த பகுதியில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றத்திற்கான பெருநிலை பொருளாதார காரணிகளை வழங்கியுள்ளோம், 2,1 பெருநிலை பொருளாதார மதிப்பீடுகள் பல்வேறு ஆய்வுகளை செய்து பார்த்த போது புதிய கொள்கை மாற்றங்கள் எதுவும் செய்யப்படாமல் தற்போதுள்ள நிலையே தொடர்ந்தால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு சுமார் 7 சதவிகிதமாக இருக்கும், அதேநேரத்தில் புதிய கொள்கை முயற்சிகள் செய்யப்பட்டால் 11வது திட்ட காலத்தில் வளர்ச்சி விகிதம் 8 -ருந்து 9 விழுக்காட்டிற்குள் இருக்கும், 10வது திட்ட காலத்தில் வளர்ச்சி விகிதம் ஏழு சதவிகிதத்தி-ருந்து அதிகரித்ததற்கு காரணமான பெருநிலை பொருளாதார அம்சங்கள் பற்றி கீழ்வரும் பகுதிகளில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது, அ, முதலீட்டு சேமிப்பு தேவைகள் 11வது திட்ட காலத்தில் பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டத் தேவையான முதலீடு மற்றும் சேமிப்பு தேவைகள் பற்றிய மதிப்பீடு கீழே தரப்பட்டுள்ள மூன்றாவது அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி பொருளாதார வளர்ச்சியை 7 சதவிகிதத்தி-ருந்து 9 சதவிகிதமாக உயர்த்துவதற்கு ஒட்டுமொத்த முதலீட்டு விகிதம் 29,1 சதவிகிதத்தி-ருந்து 35,1 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும், சீனாவுடன் ஒப்பிடும்போது இந்த முதலீட்டு விகிதம் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது, மிகக் குறைந்த முதலீட்டிலேயே சீனாவுடன் ஒப்பிடும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டும் நிலையில் இந்தியா உள்ளது, நாட்டிலுள்ள தனியார் துறையினரும் பொதுத் துறையினரும் எந்த அளவுக்கு முதலீடு செய்ய தயாராக உள்ளார்கள். அதற்கு நிதி உதவி செய்யும் நமது திறன் என்ன என்பதை பொறுத்தே இந்த வளர்ச்சியின் அளவு இருக்கும், அட்டவணை-3 : 11வது திட்டத்தின் பல்வேறு வளர்ச்சி நிலைகள் 11வது திட்டத்தில் வளர்ச்சி விகித இலக்கு 7,0% 8,0% 9,0% ஆக இருப்பதற்கு ஆக இருப்பதற்கு ஆக இருப்பதற்கு சராசரி முதலீட்டு விகிதம் 29,1 32,0 35,1 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரி நடப்புக் கணக்கு பற்றாக்குறை விகிதம் 2,0 2,4 2,8 உள்நாட்டு சேமிப்பு விகிதம் 27,1 29,6 32,3 அதில் வீட்டு சேமிப்பு 20,1 20,5 21,0 வணிக நிறுவனங்களின் சேமிப்பு 5,0 5,5 6,1 பொதுத்துறை நிறுவனங்களின் சேமிப்பு 3,1 3,1 2,8 அரசு -1,1 0,5 2,4 13 இத்தகைய அதிக முதலீடுகளை உள்நாட்டு சேமிப்பை அதிகரிப்பதன் வாயிலாகவும் வெளிநாட்டு முதலீடுகள் மூலமும் பெறலாம், வளர்ச்சி விகிதம் ஒட்டுமொத்த வளர்ச்சி 9 சதவிகிதமாக உயரும்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் 2,8 சதவிகிதமாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது, இந்த பற்றாக் குறை விகிதம் சமாளிக்கக்கூடியதுதான், இந்த முதலீடு வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நீண்டகால வெளிநாட்டுக் கடன் போன்றவை மூலம் செய்யப்பட்டால் தற்போதைய நிலையில் எந்த ஆபத்தும் ஏற்படாது, முதலீட்டுக்கான நிதியுதவி வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் கிடைத்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் அதிகரிப்பதை சில காலங்களுக்கு சகித்துக் கொள்ளலாம், ஆனால் பொதுவாக நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் மூன்று சதவிகிதத்துக்கு குறைவாகவே இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும், நடப்பு கணக்கு பற்றாக்குறை விகிதம் அந்த அளவில் இருக்க வேண்டுமானால் ஒட்டுமொத்த உள்நாட்டு சேமிப்பு விகிதம் 27,1 சதவிகிதத்தி-ருந்து 32,3 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும், வீட்டு சேமிப்பு மற்றும் வணிக நிறுவன சேமிப்புகள். வருவாய் அதிகரிப்பு. வளர்ச்சி அதிகரிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு நடைமுறை காரணிகளை வைத்து கணிக்கப்பட வேண்டும், அரசின் கொள்கைகளால் இந்த அம்சங்களில் ஓரளவு மாற்றங்களை மட்டுமே செய்ய முடியும், அதற்கு மாறாக உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்க. அரசின் சேமிப்பும் உயர்த்தப்பட வேண்டும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 9 சதவிகிதமாக இருப்பதற்கு அரசின் சேமிப்பு விகிதம் 2,5% உயர்த்தப்பட வேண்டும் என்று அட்டவணை மூன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பட்ஜெட்டை மிகக் கடுமையாக தயாரிக்க வேண்டியது அவசியமாகும், அதிருஷ்டவசமாக அரசாங்கங்களின் வரி வருவாயில் சமீப ஆண்டுகளில் அதிக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, வரி விகிதம். வரி நிர்வாகம் ஆகியவற்றில் செய்யப்பட்ட மாற்றங்களின் பயனாக இந்த நிலை உருவாகியுள்ளது, இந்த முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டால் மத்திய மாநில அரசுகளின் வரி வருவாய் மிக வேகமாக வளரும், இதற்கு அரசின் செலவுகள். குறிப்பாக மானியம் போன்றவற்றிற்கான செலவுகள் மிதமாக இருக்க வேண்டும், அதேபோல் பொதுத்துறை நிறுவனங்களின் அதிக இழப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும், இந்த அம்சங்கள் பற்றி 6,1-ம் பகுதியில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது, ஆ, அரசு மற்றும் தனியார் முதலீடுகள் மூன்றாவதுஅட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சேமிப்பு நிலைகள் 11வது திட்ட காலத்திற்கான முதலீட்டு அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும், இதனை நான்காவது அட்டவணை தெளிவாக விளக்குகிறது, பொது மற்றும் தனியார் துறைகளில் செய்யப்பட்டு வந்துள்ள முதலீடுகளின் தன்மைக்கு ஏற்ப 7,0 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஒட்டுமொத்த முதலீட்டில் அரசின் பங்கு என்ன? தனியார் நிறுவனங்களின் பங்கு என்ன? என்பதை வேறுபடுத்திக் காட்டுவது எளிதான விஷயமல்ல, தனியார் நிறுவனங்களின் முதலீடு கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தும் அமையும், ஆனால் அரசின் முதலீடு தேக்க நிலையி-ருந்து விடுபட்டு தற்போது முன்னேறி வருகிறது, நாட்டின் வளர்ச்சி விகிதம் சராசரி அளவான 6,5 விழுக்காட்டி-ருந்து அதிகரிப்பதற்கு தனியார்த்துறை முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று அட்டவணை 4-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது, தனியார்த்துறை முதலீடு எந்த அளவுக்கு இருக்கும் என்பது பொதுத்துறை முதலீட்டை சார்ந்தே அமைகிறது, இதற்காக பொதுத்துறை முதலீட்டை அதிக அளவில். அதிலும் குறிப்பாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 14 வைத்திருக்க வேண்டியது அவசியமாகும், மேலும் தனியார் முதலீட்டின் தேவையை தொடர்ந்து கண்காணித்து வருவதும் அதற்கான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுப்பதும் முக்கியமாகும், நான்காவது அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ள கணக்கீடுகள் அரசு மற்றும் தனியார்த்துறை கூட்டாக செய்துள்ள முதலீட்டை வெளிப்படையாக தெரிவிக்க-வில்லை, அவ்வாறு தெரிவிக்கப்பட்டால் பொதுத்துறை கணக்கில் காட்டப்பட்டுள்ள முதலீட்டின் ஒரு பகுதி தனியார்த்துறை கணக்குக்கு மாற்றப்பட்டு தனியார்த்துறை முதலீடு ஓரளவு அதிகரிக்கும், கடந்த காலங்களில் (1994-95 முதல் 96-97 வரை) தனியார் முதலீடு ஆண்டுக்கு 18 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் வளர்ந்து வருகிறது, முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் இதே நிலை மீண்டும் ஏற்படும், அரசு மற்றும் தனியார்த்துறை கூட்டணி சில முக்கியத்துறைகளில் முதலீட்டை அதிகரிக்க வகை செய்கிறது, அரசுத்துறை முதலீடு செய்வதில் உள்ள சில சிக்கல்களை பார்க்கும்போது இத்தகைய அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை கூட்டணி முதலீடு பொருளாதார வ-மையை அதிகரிக்கும் (மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள பெட்டி செய்தியை பார்க்கவும்), அட்டவணை-4 : 11வது திட்டத்தில் சேமிப்பு தேவைகளால் ஏற்படும் சில மாற்றங்கள் 11வது திட்டத்தில் வளர்ச்சி இலக்கு (%) 7,0 8,0 9,0 பொது முதலீடு (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) 8,4 9,8 11,2 தனியார் முதலீடு (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) 20,7 22,2 23,9 அரசின் வருவாய் நிலுவை (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) -2,9 -1,3 0,6 அரசின் நிதி நிலுவை (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) -6,4 -6,2 -6,0 2,2 துறைவாரியான வளர்ச்சி விகிதம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி நிலவரத்திற்கு ஏற்ப அமையக்கூடிய துறைவாரியான வளர்ச்சி விகிதம் அட்டவணை – 5ல் தரப்பட்டுள்ளது, வேளாண் வளர்ச்சியை அதிகரிக்காமல் இருக்கச் செய்வதுடன் ஏற்றுமதி ஆண்டுக்கு 10 சதவிகிதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட வேண்டும், பொருளாதார வளர்ச்சியை எட்ட சேவைத்துறை எந்த அளவில் வளர்ச்சியடைய வேண்டும் என்பது பற்றியும் தெரிவிக்கப் பட்டுள்ளது, இதில் 1,1 சதவிகித அளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம், வர்த்தகப் புள்ளி விவரங்கள் ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு. உள்நாட்டு தேவை மற்றும் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது, இறக்குமதி வளர்ச்சி ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இதில் 1,5 சதவிகித அளவுக்கு மாற்றங்கள் இருக்கலாம், இது கடந்தகால சராசரியான 1,3 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது சற்று அதிகமாகும், இந்த 1,5 சதவீத மாற்றமானது. வர்த்தகத்தில் தாராள மயமாக்கல். எரிபொருள் தேவைக்கு இறக்குமதியை அதிகம் சார்ந்திருத்தல் ஆகியவற்றின் தாக்கத்தைப் புலப்படுத்துகிறது, அட்டவணை 5ல் தெரிவிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வளர்ச்சி அளவு ஏற்றுமதி தொடர்பான பல்வேறு கணக்கீடுகளி-ருந்து தயாரிக்கப்பட்டுள்ளது, 15 அட்டவணை-5 : பல்வேறு சூழ்நிலைகளில் வளர்ச்சி அமைப்பு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7,0% 8,0% 9,0% வேளாண்மை வளர்ச்சி 3,2% 3,7% 4,1% தொழிற்துறை வளர்ச்சி 8,2% 9,4% 10,5% சேவைத்துறை வளர்ச்சி 7,7% 8,8% 9,9% இறக்குமதி + 10,9% 11,7% 12,5% ஏற்றுமதி + 14,2% 15,4% 16,4% அட்டவணை-6 : இரண்டு சதவிகித வேளாண் வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7,0% 8,0% 9,0% வேளாண்மை 2,0% 2,0% 2,0% தொழிற்துறை 8,6% 9,9% 11,2% சேவைத்துறை 8,1% 9,3% 10,5% இறக்குமதி 11,8% 13,9% 15,3% ஏற்றுமதி 19,6% 23,0% 25,9% குறிப்பு – + அமெரிக்க டாலரின் மதிப்பில் கணக்கிடப்பட்டுள்ளன, இறக்குமதியைப் பொறுத்தவரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2006-07ஆம் ஆண்டி-ருந்து பீப்பாய்க்கு 70 டாலர் என்ற அளவில் நிலையாக இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளது, சராசரி வரி விகிதம் 2008-09ம் ஆண்டு முதல் பத்து விழுக்காடு என்ற அளவில் நிலையாக இருக்கும் என்பதை அடிப்படையாக கொள்ளப் பட்டுள்ளது, ஆண்டுக்கு 9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும்போது வேளாண் பொருட்களுக்கான தேவைகள் அதன் வளர்ச்சியை 3 சதவிகிதத்தி-ருந்து 4 சதவிகிதம் என்ற அளவிலேயே கட்டுப்படுத்தி வைத்திருக்கும், சேவைத்துறை 8 முதல் பத்து சதவிகிதம் வரையும் தொழிற்துறை அதைவிட சற்று அதிகமாக 10 சதவிகிதத்திற்கு மேலாகவும் வளரும், அதேபோல் உற்பத்தித் துறையின் வளர்ச்சி சுமார் 12 சதவிகிதத்தை ஒட்டியிருக்கும், தொழிற்துறை. சேவைத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி இலக்குகள் கடந்தகால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போது சாத்தியமானதாகவே உள்ளன, அதே நேரத்தில் வேளாண் துறை வளர்ச்சி இலக்கு கடந்த கால செயல்பாடுகளைவிட சற்று அதிகமாகும், எனினும் வேளாண்துறை வளர்ச்சி இலக்கை எட்டுவதில் நாம் தோல்வியடைந்தால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட மற்ற துறைகளின் இலக்குகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், எனவே வேளாண் துறை வளர்ச்சி இலக்கை எட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும், வேளாண் துறை வளர்ச்சியடைய வேண்டியது போதுமான அளவு உணவு உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்ல, வேளாண் துறை சாராத மற்ற துறைகளின் வளர்ச்சிக்கும் கிராமப்புறங்கள் அதிக பங்காற்ற வேண்டியுள்ளன, இதற்காக வேளாண் துறை சாராத செயல்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது, அவற்றின் மூலம் கிராமப்புற பகுதிகளில் வேளாண்மை சாராத இதர வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும், 16 வேளாண்துறை வளர்ச்சி இலக்கை எட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதை காட்டும் வகையில் அட்டவணை-6 அமைந்துள்ளது, வேளாண் துறை வளர்ச்சி கடந்த காலங்களைப்போல தொடர்ந்து 2 சதவிகிதமாகவே இருந்தால் மற்ற துறைகளின் வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை இந்த அட்டவணை காட்டுகிறது, பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டுவதற்காக தொழில்துறை அடைய வேண்டிய வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும், அது மட்டுமின்றி தொழில்துறை கூடுதலாக வளர்ச்சியடைவதை சமாளிப்பதற்காக ஏற்றுமதி வளர்ச்சியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும், வேளாண் துறை வளர்ச்சி குறைந்தால் எட்டு சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட ஏற்றுமதி வளர்ச்சி இலக்கு அட்டவணை 5-ல் தெரிவிக்கப்பட்ட 15,4 சதவிகிதம் என்ற அளவி-ருந்து 23 சதவிகிதமாக உயர வேண்டும், அதே நேரத்தில் இறக்குமதித் தேவைகள் பெரிய அளவில் உயராது, அதிக அளவு ஏற்றுமதி இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல, சமீப காலங்களில் நமது ஏற்றுமதி வளர்ச்சி அதிகரித்துள்ள போதிலும் இந்த அளவு வளர்ச்சியை எட்டுவது கடினமாகும், எனவே ஒட்டுமொத்த வளர்ச்சி இலக்கை எட்ட வேளாண் துறை வளர்ச்சியை விரைவு படுத்தும் வகையில் உத்தி தயாரிக்கப்பட வேண்டும், கிராமப்புறங்களில் வருவாயை பெருக்கவும் வறுமையை குறைக்கவும் வேளாண் வளர்ச்சியை அதிகரிப்பது அவசியமாகும், அது மட்டுமின்றி வேளாண் வளர்ச்சி குறைந்தால் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாலும் வேளாண் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், 2,3 வெளி சூழ்நிலைகள் 2006ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு நிலையற்ற சூழல்கள் உள்ளன, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள் விரிவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர் கொண்டுள்ளன, இந்த ஏற்றத் தாழ்வுகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட உள்ளன என்பது உறுதியாகத் தெரியவில்லை, இந்த நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்திருப்பதும் நிலைமையை மோசமாக்கி உள்ளது, இவையெல்லாம் இந்தியாவின் நடுத்தரக் கால வாய்ப்புகளை எப்படி பாதிக்கும் என்பதை கணிப்பது மிகவும் சிரமமாகும், இந்த ஏற்றத் தாழ்வுகள் சுமுகமாக தீர்க்கப் படுவதுடன் எண்ணெய் விலைகளும் குறைந்து உலக வர்த்தக நிறுவன பேச்சு வார்த்தை நல்ல பயனை அளித்தால் நமக்கு நிச்சயமாக பயன் கிடைக்கும், தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் முதலீடு செய்ய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பது தான் நமக்குள்ள ஒரே சாதகமான அம்சமாகும், அதே நேரத்தில் எண்ணெய் கவலையளிக்கும் விஷயமாகவே இருந்து வருகிறது, அ)வெளிநாட்டு நேரடி முதலீடு இந்தியா சிறப்பாக செயல்பட்டுவரும் சந்தை நாடாக அனைவராலும் பார்க்கப் படுகிறது, வளர்ச்சியின் தற்போதுள்ள முட்டுக்கட்டைகளை சமாளிக்க சரியான கொள்கைகள் முன் வைக்கப்பட்டால் இந்தியா அடுத்த 20 ஆண்டுகளுக்கு 8 சதவிகிதத்திற்கும் அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று அனைவரும் கருதுகிறார்கள், இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்தியாவில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் பெரும்பாலானவை தங்களது விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளன, இதன் காரணமாக 2005 -06 ஆண்டில் 600 கோடி டாலர்களாக இருந்த அன்னிய நேரடி முதலீடு 11வது திட்ட காலத்தில் கணிசமாக அதிகரிக்கும், அட்டவணை – 3ல் தெரிவிக்கப்பட்டபடி 2011-12வது ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 17 8 சதவிகிதமாக இருந்தால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை விகிதம் 2,4 சதவிகிதமாக இருக்கும், பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருந்தால் நடப்புக்கணக்கு பற்றாக்குறை விகிதம் 2,8 சதவிகிதமாக இருக்கும், இந்த அளவு நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தீர்க்க நிதியுதவி செய்வது பெரும்பாலும் வெளிநாட்டு நேரடி முதலீடு வருவதைப் பொறுத்தே அமையும், அதே நேரத்தில் இந்திய நேரடி முதலீட்டை வெளிநாடுகளில் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிறுவனங்களையும் உலகமயமாக்கலாம், ஆ)எண்ணெய் விலை அடுத்த ஐந்தாண்டுகளில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் சிரமமாகும், எனினும் தற்போதைய மதிப்பீடுகளின்படி எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும், இது நமது நாட்டு பொருளாதாரத்தில் நேரடியாகவும் உலக பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் விலை நிலவரம் ஏற்படுத்தும் தாக்கத்தின் எதிர் விளைவுகள் மூலமாகவும் முரண்பாடான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும், எண்ணெய் விலை உயர்வால் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது, அதற்குக் காரணம் தொழில் மயமாக்கப்பட்ட நாடுகள் எண்ணெய் விலை உயர்வை தாங்கிக் கொள்ளும் திறனுடன் இருப்பதுதான், அதே நேரத்தில் எண்ணெய் விலை உயர்வால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படும் அளவுக்கு அதில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன, இந்தியாவைப் பொருத்தவரை எண்ணெய் விலை உயர்வு காணரமாக கீழ்க்கண்ட மூன்று கடினமான வாய்ப்புகளில் ஒன்றைத் தான் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது, ஒன்று எண்ணெய் விலை உயர்வை நுகர்வோர் மீது சுமத்துவது. இரண்டு பெட்ரோ-ய பொருட்களின் மீதான வரிகளைக் குறைப்பது, மூன்று எண்ணெய் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்வது, இந்த மூன்று வாய்ப்புகளில் எதைச் செய்தாலும் மோசமான விளைவுகள்தான் ஏற்படும், இந்த மூன்று வாய்ப்புகளையுமே இந்திய அரசு கடந்த ஓராண்டில் செயல்படுத்திப் பார்த்துள்ளது, மத்திய காலத்தில் நம் முன் உள்ள ஒரே வாய்ப்பு பெட்ரோ-ய பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்து அதன் பின்னர் எண்ணெய் விலை உயர்வை நுகர்வோர் மீது சுமத்துவதுதான், அதே நேரத்தில் இதனால் ஏழைகள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதும் அவசியமாகும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இலக்கு தற்போதைய எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரித்தால் அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி விகிதம் திட்டமிடப்பட்டதைவிட 0,5 சதவிகிதம் முதல் ஒரு சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளது, இந்த கணக்கீடுகள் அனைத்திலுமே பெரிய அளவு குறைகள் இருக்கவும் வாய்ப்புள்ளது, இதன் மூலம் தெரிவிக்க வருவது என்னவென்றால் சரியான எண்ணெய் விலைக் கொள்கை. ஏற்றுமதி அதிகரிப்பு. முறையான நிதிக்கொள்கை போன்றவற்றின் மூலம் எண்ணெய் விலை உயர்வால் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம் என்பதுதான், இவ்வாறு செய்வதன் மூலம் எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் பாதிப்பு தாங்கிக் கொள்ளும் அளவுக்கு இருப்பதுடன் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம், 2,4 11வது திட்டத்திற்கான வளர்ச்சி இலக்கு இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டதை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 18 கடுமையான நிதி நடவடிக்கைகள். பெருநிலை பொருளாதார சாத்தியக் கூறுகள் ஆகியவற்றின் உதவியுடன் 11வது திட்ட காலத்தில் ஆண்டுக்கு 8 முதல் 9 விழுக்காடு வளர்ச்சியை எட்டுவது கடினமான விஷயம்தான் என்றாலும் அது சாதிக்க முடியாத ஒன்றல்ல, எனவே 11வது திட்ட காலத்தில் ஆண்டுக்கு 8,5 விழுக்காடு வளர்ச்சி என்ற இலக்கை முன்மொழியலாம், 8,5 விழுக்காடு பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய பெருநிலை பொருளாதார காரணிகள் அட்டவணை 7-ல் தெரிவிக்கப்பட்டுள்ளன, அட்டவணை-7 : 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான பெருநிலை பொருளாதாரக் காரணிகள் 1, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 8,5% அதில் -வேளாண்மை வளர்ச்சி 3,9% தொழில்துறை வளர்ச்சி 9,9% சேவைத்துறை வளர்ச்சி 9,4% 2, முதலீட்டு விகிதம் (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) 33,6% அதில் -பொதுத்துறை முதலீடு 10,4 தனியார்த்துறை 23,2 3, உள்நாட்டு சேமிப்பு விகிதம் (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) 31,0 அதில் -வீட்டு சேமிப்பு 20,7 வர்த்தக நிறுவனங்கள் 5,8 பொதுத்துறை நிறுவனங்கள் 3,0 4, நடப்பு கணக்கு நிலுவை (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) -2,6 இறக்குமதி வளர்ச்சி விகிதம் 12,1 ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 16,0 5, அரசின் வருவாய் நிலுவை (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) -0,5 6, அரசின் நிதி நிலுவை (ஒட்டுமொத்த வளர்ச்சியில் %) -6,1 ஆண்டுக்கு 8,5 சதவிகித பொருளாதார வளர்ச்சி இலக்கை நாம் நிர்ணயிக்கும்போது அதை எட்டுவதில் சில பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது : ஏ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் உயர்வதன் காரணமாகவோ சர்வதேச அளவில் காணப்படும் பெருநிலை ஏற்றத்தாழ்வுகள் மூலமாகவோ உலகப் பொருளாதாரத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது என்ற அடிப்படையில் இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன, அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் நமது வளர்ச்சி விகிதமும் சில ஆண்டுகளுக்கு பாதிக்கப்படக்கூடும், ஏ கடந்த பத்தாண்டுகளில் கிடைத்த அனுபவங்களின்படி மந்தமான வர்த்தகம் காரணமாக பெருநிலை பொருளாதாரத்தில்மாற்றங்கள் ஏற்படலாம், இதை நாம் முன்கூட்டியே உணர்ந்து கொண்டால் தேவையான நிதி நடவடிக்கைகள் மூலம் அதை சமாளிக்கலாம், 19 ஏ 11வது திட்ட காலத்தின் முதல் இரண்டாண்டுகள் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள ஆண்டுகளாகும், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு. அதன் காரணமாக வர்த்தகத்தில் ஏற்படும் மந்தப் போக்கு. மத்திய மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியாத நிலைமை போன்றவற்றால் அந்த கால கட்டத்தில் பாதிப்புகள் ஏற்படலாம், ஏ பெருநிலை பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது, பொருளாதார வளர்ச்சி தொடர்பான அனைத்து கணக்கீடுகளும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளன, அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை மாற்று நடவடிக்கைகள் மூலம் சரிசெய்து கிராமப்புற மக்களின் பாதிப்பையும் வளர்ச்சி விகிதத்தில் ஏற்படும் தடையையும் தடுக்க முடியும், ஏ இந்த அத்தியாயத்தில் விரிவாக்கப்பட்ட பெருநிலை பொருளாதார காரணி வாய்ப்புகள் அனைத்தும் ஒரு சோதனை தான், வளர்ச்சி இலக்கை நாம் முழுமையாக எட்டுவதற்கும் வளர்ச்சி விகிதம் விரிவாக அமைவதற்கும் பெருமளவில் கொள்கை மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும், இவை பற்றியெல்லாம் இனி வரும் பகுதிகளில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளன, 3, 11வது திட்டத்திற்கான துறைவாரியான கொள்கைகள் மிகவும் விரைவான மற்றும் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டியது அவசியமாகும், இதற்காக சிறப்பான கொள்கைகளை உருவாக்குவதுடன் தேவைப்படும் முக்கியத் துறைகளை வலுப்படுத்த வேண்டியதும் அவசியமாகும், தற்போதுள்ள நிலையிலேயே பணிகள் தொடர்ந்தால் வளர்ச்சி சாத்தியமல்ல என்பதால் சில துறைகளை விரிவாக மறு சீரமைக்க வேண்டியது அவசியமாகும், 11வது ஐந்தாண்டு திட்டத்தின்போது உருவாக்கப்பட வேண்டிய கொள்கைகள் பற்றிய மதிப்பீட்டை இந்த அத்தியாயத்திலும் அடுத்த அத்தியாயத்திலும் நாம் வழங்குகிறோம், 3,1 வேளாண் வளர்ச்சியை அதிகரித்தல் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டதைப்போல வேளாண்துறை வளர்ச்சியை நான்கு சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்துவது எளிதான பணி அல்ல, பத்தாவது ஐந்தாண்டுத்திட்ட காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளில் விவசாயம். காடு வளர்ப்பு. மீன் பிடி தொழில் ஆகியவை இணைந்து ஒரு சதவிகித வளர்ச்சிதான் கிடைத்துள்ளது, 2005-06. 2006-07 ஆகிய ஆண்டுகளுக்கான வளர்ச்சி விகிதமும் ஐந்தாண்டுகளுக்கான சராசரி வளர்ச்சி இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கணக்கிடப் பட்டுள்ளது, எனவே பத்தாவது திட்டத்தில் எட்டப்பட்ட வேளாண் வளர்ச்சியை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டிய சவால் நமக்கு ஏற்பட்டுள்ளது, அதற்கு வினியோகத் தரப்பிலும் தேவை தரப்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும், அ)தேவைத் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் விவசாயிகள் பல்வேறு மோசமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர், கடந்த பத்தாண்டுகளில் வேளாண் வளர்ச்சி குறைந்தது மட்டுமின்றி வேளாண் உற்பத்திக்கான விலையும் மற்ற பொருட்களுக்கு இணையாக உயரவில்லை, அதன் விளைவாக விவசாயிகளின் லாபம் குறைந்து விட்டது, பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளைப் பார்க்கும்போது ஒட்டுமொத்த பொருளாதா வளர்ச்சி எட்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக 20 இல்லாத நிலையில் 4 சதவிகித வேளாண் வளர்ச்சியை எட்ட முடியாது என்று தெரிய வருகிறது, இதற்காக சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, சமீபத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க உதவும், பொதுத்துறை கல்வி நிலையங்கள் சுகாதார வசதிகள் ஆகியவற்றின் தரத்தை உயர்த்துவதுடன் அதை பயன் படுத்துவோரின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும், அதன் மூலம் அவற்றுக்காக ஏழை மக்கள் செய்யும் செலவுகள் குறைவதுடன் அவற்றை வேளாண் தேவைகளுக்கு திருப்பிவிடும் நிலையையும் ஏற்படுத்தலாம், பாரத் நிர்மாண் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களை இணைக்கும் வகையில் பல கட்டமைப்பு வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன, அவற்றின் மூலம் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் ஏற்பட்டு அவற்றில் விவசாயிகள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் நிலையும் அதன் மூலம் ஒருவரின் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்யும் நிலையும் ஏற்படும், ஆரம்பகட்டத்தில் இத்தகைய கிராமங்களுக்கிடையிலான வர்த்தகம். வேளாண் ஏற்றுமதி விரிவான வேளாண் நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகியவற்றைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவையாகும், அதைப்போலவே வேளாண் ஏற்றுமதியை ஊக்குவித்தல் வேளாண் பொருட்களை பதப்படுத்துதல் போன்றவற்றுக்கான தேவைகளை ஆதரிப்பதும் முக்கியமானதாகும், அவற்றில் வேளாண் பொருட்களை பதப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களின் முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது, போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்ட பின் இது சாத்தியமாகும், ஆ)வினியோகம் மற்றும் உத்திகள் வேளாண் துறை வளர்ச்சியை இரண்டு மடங்காக பெருக்குவதில் வினியோகத்துறை சந்திக்கும் சவால் மிகப் பெரியதாகும், குறிப்பாக பசுமைப்புரட்சியின்போது ஏற்பட்டது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எதுவும் தற்போது நமது கண்களுக்கு புலப்படாத நிலையில் இந்த அளவு வளர்ச்சி கடினம்தான், அது மட்டுமின்றி தற்போது இருக்கின்ற தொழில் நுட்பங்களையும் முழுமையாக நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை, பருப்பு. உணவு தானியம். எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றுக்கு தேவையான வளர்ச்சி அவற்றின் உற்பத்தி குறைவாக உள்ள பகுதிகளில் அதை அதிகரிப்பதன் மூலமே சாத்தியமாகும், இத்தகைய பொருட்களின் உற்பத்தி குறைவதற்கு காரணமான முட்டுக்கட்டைகளையும் கொள்கை குறை பாடுகளையும் கண்டுபிடிப்பது அவசியமாகும், உற்பத்தி குறைவு பற்றி ஆய்வு நடத்திய தேசிய விவசாயிகள் ஆணையம் பயிர் பற்றிய போதிய அறிவு இல்லாததுதான் அதிக உற்பத்திக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தெரிவித்துள்ளது, இந்த குறைபாடுகளைக் களைய பல்கலைக்கழகங்கள் மற்றும் சிறப்பான விவசாய நடைமுறைகளுடன் விவசாயிகளுக்கு தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும், அதை சாதிக்க சிறப்பான தொடர்பு முறை அவசியமாகும், ஆனால் துரதிருஷ்டவசமாக திட்டம் சாராத செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்ததால் பல மாநிலங்களில் இந்த தொடர்பு முறை முற்றிலுமாக செய-ழந்து விட்டன, இந்திய வேளாண் ஆய்வு குழுவால் பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட விவசாய அறிவியல் மையங்கள் இத்தகைய தொடர்பு முறை மூலம் விவசாயிகளுடன் மிகக் குறைந்த அளவிலேயே தொடர்பு கொண்டுள்ளன, இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் பயிர் சாகுபடி முறைகள் சிறப்பானதாக இல்லை, பயிர் செய்யப்படும் நிலத்தில் என்னென்ன சத்துக்கள் இல்லை என்னென்ன சத்துக்கள் தேவை என்பதை கண்டுபிடிப்பதற்கான மண் பரிசோதனை 21 முறைகள் ஏதோ ஒரு சில இடங்களில் மட்டுமே செய்யப்படுகின்றன, அது மட்டுமின்றி உரமிடும் முறையும் முறையாக இல்லை, 1, சென்ற பத்தாண்டுகளில். உணவுக்காக கூடுதலாக செலவிடும் முறை மாறி. சுகாதாரம். கல்வி. போக்குவரத்து ஆகியவற்றுக்கு கூடுதலாகச் செலவிடும் நிலை உருவாகியுள்ளது, இந்த நிலை சில மாற்றங்களுக்கு உட்படக் கூடியது, பல இடங்களில் நைட்ரஜன் நிறைந்த யூரியா போன்ற உரங்கள் தேவைக்கதிகமாகவே பயன்படுத்தப்படுகின்றன, இது பயிர் உற்பத்திக்கு எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை விவசாயிகள் இன்னும் உணரவில்லை, இதற்குக் காரணம் உரங்களுக்கான மானியம் முறையாக இல்லாததும் நைட்ரஜன் சத்துள்ள உரங்களுக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படுவதும் தான், அது தவிர வேளாண் உற்பத்தி குறைய. குறைந்த வட்டியில் கடன் கிடைக்காததும் ஒரு காரணமாகும், இது நாட்டின் பல பகுதிகளில் கூட்டுறவு கடன் வழங்கும் முறை சீர்குலைந்து விட்டதையே காட்டுகிறது, அமைப்பு ரீதியிலான கடன் வழங்கும் முறை சீர்குலைந்ததன் விளைவாக அதிக அளவு வட்டியில் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அளவுக்கு மீறிய கடன் தான் விவசாயிகளின் பிரச்னைக்கு மூலகாரணமாக உள்ளது, விரைவான வேளாண் வளர்ச்சிக்கு தோட்டக்கலை மற்றும் மலர் வளர்ப்பு போன்ற துறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, அதன் பயனாக விவசாயம் மற்றும் விவசாயம் சாராத தொழில்களுக்கு இடையேயான அடிப்படை உறவில் மாற்றங்கள் ஏற்படும், இந்த மாற்றங்கள் என்பது திறமையான சந்தைத் தொடர்பு. தரவாரியான விற்பனை முறை. அறுவடைக்கு பிந்தைய பயிர் நிர்வாகம் போன்றவை அடங்கியதாகும், நவீன வேளாண் சந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டிய தேவையும் தற்போது ஏற்பட்டுள்ளது, இதற்காக வேளாண் விளைபொருள் வணிகக்குழு. சட்டத்தை திருத்த வேண்டியது அவசியம், அதற்கான பணிகள் தொடங்கி விட்ட போதிலும் அவை விரைவுபடுத்தப்பட வேண்டியது அவசியமாகும், பயிர் முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது அந்தப் பயிர்கள் விற்கப்படும் பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பார்த்துக் கொள்வதுதான், ஒரு குறிப்பிட்ட சந்தைப் பகுதி உள்ளூர் விற்பனையை அடிப்படையாகக் கொண்டதா அல்லது உணவுப் பதனீட்டுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டதா அல்லது ஏற்றுமதி நோக்கமுடையதா என்பதைப் பொறுத்து பயிரிடும் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும், இதற்காக பயிர் வகைகளில் மாற்றம் கொண்டுவரும் முறை தற்போது பல மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே செயல்படுத்தப்பட்டு வரும் போதிலும் பல மாநிலங்களில் இந்த நடைமுறையை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பல சிறு விவசாயிகள் ஒன்றுபட்டு குழு விவசாயம் செய்வதை சாத்தியமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இத்தகைய மாற்றங்கள் செய்வதை வர்த்தகத் துறையிலுள்ள சில சக்திகள் எதிர்க்கக்கூடும், ஆனால் அதையெல்லாம் மீறி இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும், விவசாயிகள் இதுவரை கடைப்பிடிக்காத புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் உரம் போன்றவற்றின் அளவை அதிகரிக்கும்போதும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும், புதிய தொழில்நுட்பம். புதிய விதை வகைகள் ஆகியவை பற்றி போதிய அறிவு இல்லாததால் இந்த பாதிப்புகளை விவசாயிகள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை, அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பாதிப்புகளை புரிந்துகொள்ளும் சக்தியில்லை, எனவே தான் புதிய வகை விதைகள் எதிர்பார்த்த அளவு 22 விளைச்சலை தராதபோதும் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் கிடைக்காததால் செலவிட்ட தொகை வீணாகும் போதும் சந்தைகளில் விலை குறையும் போதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது, இத்தகைய பாதிப்புகளி-ருந்து விவசாயிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதற்கு காப்பீடு ஒரு மிகச் சிறந்த வழியாகும், ஆனால் தற்போதுள்ள பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றில் செலவு எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாலும். திரும்பத் திரும்ப நிதி ஒதுக்க வேண்டியிருப்பதாலும். இவை சரியான திட்டங்களாகத் தெரியவில்லை, எனவே இந்த பாதிப்புகள் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய மற்ற பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான வழிமுறைகள் 11வது திட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும், 11வது திட்டத்தில் வேளாண் வளர்ச்சித் திட்ட உத்திகள் ஒவ்வொரு வேளாண் பகுதிக்கும் தேவையான உத்திகளை உள்ளடக்கி அமைய வேண்டும், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான பயிர் வளர்ப்பு முறையும் தொழில்நுட்ப உத்திகளும் உள்ளன, எனவே ஒவ்வொரு பகுதிக்கும் என்னென்ன தேவை என்பதை கருத்தில் கொண்டு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும், இதற்கான உத்திகள் மத்திய மாநில அரசுகளிடையே பேச்சு வார்த்தை நடத்துவதன் மூலம் வரையறுக்கப்பட வேண்டும், இ) வேளாண் ஆராய்ச்சி எதிர்காலத்தில் தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சி மூலமாகவே வேளாண் உற்பத்தியை அதிகரிக்க முடியும், அதிலும் குறிப்பாக தற்போது இயற்கை வளங்கள் குறைந்துவிட்டதாலும் தட்பவெப்ப நிலை மாறி வருவதாலும் அவற்றை சமாளிப்பதற்கான அடிப்படை ஆராய்ச்சி உத்திகள் வரையறுக்கப்பட வேண்டும், மேலும் தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு மூலம் முறையான ஆராய்ச்சி உத்திகளை வலுப்படுத்தும் வகையில் 11வது திட்டம் தயாரிக்கப்பட வேண்டும், அடிப்படை ஆராய்ச்சி மற்றும் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடையே பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளாக தேசிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு செயல்பட வேண்டும், அடிப்படை ஆராய்ச்சி உடனடி பலனைத் தராது, சமீபத்தில் உருவாக்கப்பட்ட தேசிய வேளாண் ஆராய்ச்சி உத்தி நிதியம் 11வது திட்ட காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு ஆராய்ச்சி ஊக்குவிப்பை அடிப்படையாகக் கொண்டு செயல்படச் செய்ய வேண்டும், வேளாண் உற்பத்தியில் சாதனைகளைப் படைப்பதற்கு அறிவியல் பூர்வமான புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் அவசியமாகும், பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய இந்தியாவில் தற்போதுள்ள சவால்களை சமாளிக்க யோசனை கூறும்படி மிகப் பெரிய வேளாண் ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக் கொள்ளப்பட வேண்டும், இதில் இதுவரை கடைப்பிடிக்கப் பட்டு வந்த நடைமுறைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது, தற்போது உள்ள வேளாண் முறைகள் அடியோடு மாற்றப்பட்டு டாக்டர் எம்,எஸ், சுவாமிநாதன். ஆர்,ஏ, மஷேல்கர் போன்ற விஞ்ஞானிகள் தலைமையிலான குழுக்கள் பரிந்துரைகளின்படி புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட வேண்டும், ஈ) நீர் நிர்வாகமும் நீர்ப்பாசனமும் விவசாயத்திற்கு நீர் அத்தியாவசியத் தேவையாகும், எனவே நீர்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும், அதற்கான வாய்ப்பு இல்லாத பகுதிகளில் நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது என்பது பற்றிய நீர் நிர்வாகம் கற்றுத்தர வேண்டும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள கொள்கைகள் போதுமானதல்ல, நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்துவதில் அரசின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன, நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்படுவதால் பல 23 நீர்ப்பாசன திட்டங்கள் இன்னும் கட்டுமான நிலையிலேயே உள்ளன, பாரத் நிர்மாண் திட்டத்தின்படி அடுத்த நான்காண்டுகளில் ஒரு கோடி ஹெக்டேர் நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதை சாதிக்க ஆண்டுக்கு 14 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் செய்து தரப்படும் நீர்ப்பாசன வசதிகள் 25 லட்சம் ஹெக்டேர் நிலம் என்ற அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும், பாரத் நிர்மாண் திட்டத்தின் கீழ் நமக்கு புதிய நிதி ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் ஒட்டுமொத்த இலக்கில் பாதியை முதல் இரண்டு ஆண்டுகளிலேயே அதாவது 2007-08. 2008-09ஆம் ஆண்டுகளிலேயே செய்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதே நிலை அதன் பிறகும் தொடர்ந்தால் 11வது திட்ட காலத்தில் ஒரு கோடியே பத்து லட்சம் ஹெக்டேர் அளவுக்கு நிலங்கள் பாசன வசதி பெறும், அவற்றில் 55 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசனத்தையும் 35 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நடுத்தர அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்களையும் 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் நிலத்தடி நீரை மேம்படுத்துவதன் மூலமும் பாசன வசதி பெறும், இது தவிர மேலும் 30 முதல் 40 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பெரிய. நடுத்தர மற்றும் சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் மூலம் பயன்பெறும், பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்திற்கு மத்திய அரசு ஆதரவுடன் மாநில அரசுகளிடமிருந்து நிதியுதவி தேவைப்படுகிறது, அதேநேரத்தில் இந்த திட்டங்கள் மாநில அரசின் மூலமாகவே செயல்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும், நீர்வள ஆதாரங்கள் உருவாக்கப் படுவதன் வேகத்தை கண்காணிப்பது மிகவும் முக்கியமானதாகும், இதை மத்திய நீர்வள ஆணையம் கண்காணிப்பது மட்டுமின்றி தொலையுணர்வு தொழில்நுட்பம் மூலமும் நீர்வள ஆதாரங்கள் உருவாவதை கண்காணிக்க முடியும், இந்த நடைமுறை பத்தாவது திட்ட காலத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது, நீர்ப்பாசன வசதிகளை விரிவு படுத்துவதுடன் நீர் சமமாக பகிர்ந்தளிக்கப் படுவதையும் சிக்கனமாக பயன்படுத்தப் படுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், கடந்த காலங்களில் முதல்நிலை பாசனப் பகுதியில் உள்ளவர்கள் அதிக நீர் உறிஞ்சும் பயிர்களை பயிரிட்டதன் காரணமாக கடைமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நீர் கிடைக்காத நிலை இருந்தது, அந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக வழியில் அமைக்கப்பட்ட நீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் மூலம் பங்கேற்பு நீர்ப்பாசன நிர்வாகத்தை கடைப்பிடிக்கலாம், அந்த சங்கங்கள் நீரை பயன்படுத்துவோரிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வசூ-த்து அதில் ஒரு பகுதியை தாங்களே வைத்துக் கொண்டு கால்வாய்களை சீரமைத்தல். நீர்ப்பாசன பரப்பை விரிவுபடுத்துதல். கடைமடைப் பாசனப்பகுதி விவசாயிகளுக்கும் நீரை சமமாக பகிர்ந்தளித்தல் போன்றவற்றை செய்ய முடியும், குஜராத் மாநிலத்தில் இத்தகைய பங்கேற்பு நீர்ப்பாசன நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது, எனவே 11வது திட்ட காலத்தில் பங்கேற்பு நீர்ப்பாசன முறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மானாவாரி நிலப்பகுதிகளிலுள்ள 60 சதவிகித நிலங்களுக்கு நீர் அவசியத் தேவையாகும், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் நிர்வாகம் மிகவும் முக்கியம் என்பதால் அதற்கு 11வது திட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் பாசன வசதி இல்லாத பகுதிகளில் மிகப் பெரிய வேளாண் பிரச்னையை இந்தியா எதிர்கொள்ள நேரிடும், நீர் மிகவும் அரிதான ஆதாரம், எனவே ஒவ்வொரு துளி நீரும் சிக்கனமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்த வேண்டும், இந்த விஷயத்தில் சில மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் பிரச்னையை ஏற்படுத்துகின்றன, சில 24 மாநிலங்களில் இலவசமாகவும் மற்ற அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவு மானியத்துடனும் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவதால் தண்ணீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்பட்டு. நிலத்தடி நீர் பயன்பாடு உள்ள பகுதிகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது, நாட்டிலுள்ள 29 சதவிகித ஒன்றியங்களில் இந்த நிலை உள்ளது, நீர்ப்பிடிப்பு பகுதி மேலாண்மை. மழை நீர் சேமிப்பு. நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் போன்றவை மானாவாரிப் பகுதிகளில் நீர் இருப்பை அதிகரிக்கும், நீர் நிர்வாகத்திற்காக கட்டிடங்களை கட்டி அவற்றை பராமரிப்பது கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும், இது தவிர நிலங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதும் வேலைவாய்ப்புக்கு வழி வகுக்கும், மழையை நம்பியுள்ள மானாவாரிப் பகுதி வேளாண் நிலங்களை மேம்படுத்துவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய மானாவாரி நிலப்பகுதி ஆணையம் இந்த ஆண்டு உருவாக்கப்படவுள்ளது, நாட்டின் எட்டு கோடி ஹெக்டேர் நிலத்தில் உற்பத்தித் திறன் மேம்படுத்தப் பட உள்ளது, ஒரு ஹெக்டேருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகும் என்பதால் ஒட்டு மொத்தமாக இந்த திட்டத்திற்கு எண்பதாயிரம் கோடி ரூபாய் செலவு பிடிக்கும், 11வது திட்ட காலத்தில் இவ்வளவு பெரிய நிதியை திரட்டி பயன்படுத்த இந்தத் திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்றவற்றுடன் இணைந்து செயல்படுத்தப் பட வேண்டும், உ) கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளம் வேளாண்மை மற்றும் அவை சார்ந்த தொழில்துறையில் கால்நடை மற்றும் மீன்வளத்துறை 30 சதவிகித பங்கு வகிக்கிறது, அது மட்டுமின்றி ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தினரில் 5,5 சதவிகிதம் பேருக்கு இந்தத் துறை பகுதி நேர வேலைவாய்ப்பும் முழு நேர வேலைவாய்ப்பும் வழங்குகிறது, கடந்த 2003-04ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் அந்தத் துறையின் பங்களிப்பு மட்டும் 6,3 சதவிகிதமாகும், இந்தத் துறைகள் வேகமாக வளர்வதற்கான உத்திகள் 11வது திட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும், வேளாண் துறை வளர்ச்சியைத் துடிப்புள்ளதாக்க நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்பதால் இந்தத் துறைகள் மீதும் கவனம் செலுத்த வேண்டும், 2005-06ஆம் ஆண்டு 9 கோடியே 10 லட்சம் டன் பால் உற்பத்தி செய்துள்ள இந்தியா உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை. தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது, 2003-04ஆம் ஆண்டில் அரிசி. கோதுமை. கரும்பு ஆகியவை ஒட்டுமொத்தமாக பொருளாதார வளர்ச்சிக்கு அளித்த பங்கைவிட பால் மூலமாக மட்டும் கிடைத்த பங்களிப்பு அதிகமாகும், எனினும் இந்தியாவில் ஒவ்வொரு நபருக்கும் தினமும் கிடைக்கும் பா-ன் அளவு 231 கிராம் என்ற மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது, இறைச்சியின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது, இறைச்சியின் துணைப்பொருட்களை முறையாக யாரும் பயன்படுத்துவதில்லை, அதேபோல் கடந்த காலங்களில் கோழி வளர்ப்பும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது, அதற்குக் காரணம் கோழி வளர்ப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியதும் கோழி வளர்ப்பை தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செய்ததும்தான், இந்த துறைகளின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட வேண்டிய முக்கியமான சில நடவடிக்கைகள் வருமாறு : ப் கால்நடைகளில் தற்போதுள்ள இனங்களைப் பாதுகாப்பதுடன் கலப்பினங்களாக உருவாக்க வேண்டும், ப் கால்நடை சந்தை அமைப்பை உருவாக்க வேண்டும், ப் கிராமப் பகுதிகளில். கூட்டுறவு சந்தை முறையில் வீட்டுப்புறக்கடைக் கோழிப்பண்ணைகள் ஏற்படுத்தப்பட 25 வேண்டும், ப் கூட்டுறவு பால் பண்ணைகளை மேம்படுத்த வேண்டும், ப் கால்நடை விரிவாக்கப் பணியை வலுப்படுத்துதல், ப் தனியார் கால்நடை மருத்துவமனைகளை ஊக்குவிக்க வேண்டும், ப் நீர் சேகரிப்பு மற்றும் மீன் வளர்ப்புக்காக நீர்நிலைகளை உருவாக்குவதற்கும். நீர்நிலைகளை தன்னிலைக்கு சீர்திருத்தி கொண்டு வரவும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும், ப் இந்தத் துறையில் இழப்பைத் தடுக்க காப்பீட்டு திட்ட வசதி கொண்டு வரப்பட வேண்டும், கிராமப்புற நிலங்கள் தொடர்ந்து பயன்படுவதற்கு அவற்றில் மேய்ச்சல் பகுதியுடன் கால்நடைகளை வளர்க்கும் முறை மிகவும் அவசியமாகும், உள்ளூர் உயிரி பலதரப்புத்தன்மையை பாதுக்காக்கவும். பாலைவனம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீருக்கு பாதகமின்றி உணவு உற்பத்திக்கும் இதுவழி வகுக்கும், எனினும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் வனவிலங்கு சரணாலயங்களாகவும் தேசியபூங்காக்களாகவும் மாற்றப்பட்ட முந்தைய மேய்ச்சல் பகுதிகளில் மேய்ச்சல் உரிமங்கள் மறுக்கப்படுவதால் இத்தகைய முறையை விரிவுபடுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன, மேலும் மேய்ப்பு நிலங்களும் விலங்குகள் குடிநீர் அருந்துவதற்கான குளங்களும் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அல்லது வேறு வசதிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, தாவர எரிபொருளுக்கான காட்டாமணக்கு செடியை வளர்க்கும்படி அரசு நிறுவனங்களே ஆலோசனை வழங்குகின்றன, அதே நேரத்தில் அந்த செடிகளை வளர்ப்பதால் விலங்குகள் ஓரிடத்தி-ருந்து மற்றொரு இடத்திற்கு மந்தையாக இடம் பெயரும் பாதைகள் தடுக்கப் படுகிறது என்பதை அரசு நிறுவனங்கள் உணரவில்லை, 3,2 தொழில் வளர்ச்சி கடந்த 15 ஆண்டுகளில் செயல்படுத்தப் பட்ட தாராளமயமாக்கல் கொள்கையின் பயனாக தொழில்துறை வேகமாக வளர்ந்து வருகிறது, மோட்டார் வாகன உதிரி பாகங்கள். மருந்துப் பொருட்கள். சிறப்பு வேதிப் பொருட்கள். ஜவுளி போன்றவை உலகச் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு போட்டியை சந்தித்து வருவதால் தொழிற்சாலை உற்பத்திக் குறியீட்டெண் வேகமாக வளர்ந்து வருகிறது, எனினும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பல்வேறு முட்டுக்கட்டைகள் இன்னும் களையப்படவில்லை, (அ) தொழிற்துறை வளர்ச்சியை மேம்படுத்துதல் 11வது திட்டத்தில் தொழில்துறை வளர்ச்சிக்கு 10 சதவிகிதமும் உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு 12 சதவிகிதமும் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும், உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு குறுகியகாலத் தடையாக இருப்பது சர்வதேச தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் திறன்வாய்ந்த மனிதவளம் போதிய அளவுக்கு கிடைக்காததும்தான், எனவே 11வது திட்ட காலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திறன்வாய்ந்த மனிதவளத்தை உருவாக்கவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், இது பற்றி இந்த ஆய்வறிக்கையின் 3,5 மற்றும் 4,1 அத்தியாயங்களில் விரிவாக விளக்கப் பட்டுள்ளது, இது தவிர விரைவான தொழில் வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க 11வது திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், (1) வரிகளும் தீர்வைகளும் சர்வதேச அளவில் போட்டியிடத்தக்க வகையிலும். இடையூறாக இல்லாத வகையிலும் அமைய வேண்டும், ஒருங்கிணைந்த தேசிய சந்தைமுறையுடன் இணைந்துபோகும் அளவுக்கு வரி விதிப்பு முறை இருக்க வேண்டும், அப்போதுதான் விரிவான பொருளாதாரத்தின் பயன்களை இந்தியத் 26 தொழிற்துறை அனுபவிக்க முடியும், இது தவிர விவசாயம் சாராத பொருட்கள் மீது வரிக்குறைப்பு தொடர வேண்டும், வரிக்குறைப்பு மூலமாக சில பொருட்களுக்கு எதிர்மறையான பாதுகாப்பு அளிக்கும் வழக்கம் குறைக்கப்பட வேண்டும், இறுதியில் அந்த முறை ஒழிக்கப்பட வேண்டும், (2) பொதுவாக அனைத்துப் பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது முக்கியமானதுதான், அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். சிறப்புப் பொருளாதார பகுதிகள் போன்றவற்றில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், இவற்றில் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களி-ருந்து வேறுபடுகின்றன, சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளுக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படுவதுபோல ஏற்றுமதி வரிச்சலுகைகள் அளிக்கப் படுவதில்லை, (3) அதிக தொழில்வளர்ச்சிக்கு தொழில் நுட்பத்தை நவீனமயமாக்குதல் மிகவும் அவசியமாகும், வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதால் தொழில் நுட்பத்தை நவீனப்படுத்திக் கொள்ளவும் சர்வதேச நிறுவனங்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இது பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும், (4) ஒவ்வொரு மாநில அரசும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும், தொழிற்சாலை அமைப்பதற்கான விண்ணப்பங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவதன் மூலம் நிலப்பதிவு. குடிநீர் இணைப்பு. சுற்றுச்சூழல் அனுமதி போன்றவற்றை பெறுவதற்கு ஏற்படும் கால தாமதத்தைக் குறைக்கலாம், (5) தொழிலாளர்களை அதிகம் பயன்படுத்தும் உற்பத்தி பிரிவுகளின் மூலம் தொழில் துறையில் வேலைவாய்ப்பை விரிவு படுத்த முடியும், இந்த விஷயத்தில் சீன அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது, அதன் காரணமாக சீனாவை உலக சந்தையாக அந்நாடு திறந்துவிட்டுள்ளது, அதில் நாமும் போட்டியிட முடியும், தொழில்துறை வளர்ச்சிக்கு தொழிலாளர் சட்டங்களில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும், குறிப்பாக தொழிற்சாலை தாவா சட்டத்தின் ஐந்து – பி பிரிவில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், அதன் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஏற்படுத்தி சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு இந்தியத் தொழிற்துறையை தயார் செய்ய முடியும், (6) தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள மற்றொரு அம்சம் பல பொருட்களை சிறுதொழில் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நடைமுறை இருப்பதுதான், வர்த்தகத் தடைகள் குறைக்கப்பட்டிருப்பதுடன் அண்டை நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நமது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வெளிநாட்டவர்களுடன் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, ஆனால் சில பொருட்களை சிறுதொழில் துறையினர் மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிபந்தனை காரணமாக அவர்கள் தங்கள் தொழிற்சாலைகளை நவீனமயமாக்க முடியாமல் போய்விடும், சிறுதொழில் நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலையி-ருந்த 800 பொருட்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 326 உள்ளன, 11வது திட்ட காலத்தில் இந்தக் கொள்கை இன்னும் வேகமாக செயல் படுத்தப்பட வேண்டும், (7) தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் முறை பல தொழில்களில் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும் சர்க்கரை 27 ஆலை. பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை. உரம் மற்றும் மருந்துப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை போன்றவற்றுக்கு உரிமம் பெறவேண்டிய நிலை இன்னும் நிலவுகிறது, அந்தத் தொழில்களுக்கும் உரிமம் பெறும் நிலை ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான 1956வது ஆண்டு கம்பெனிகள் சட்டத்தில் எங்கெல்லாம் திருத்தம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் திருத்தம் செய்யப்பட வேண்டும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் நுகர்வோரை பாதுகாப்பதற்கு. அதிலும் குறிப்பாக படிக்காதவர்கள். ஒதுக்கப்பட்ட கிராமப்புற மக்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்க 11வது ஐந்தாண்டு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், நுகர்வோரின் பாதுகாப்பிற்கு தொழில் துறையினரிடையே நிலவும் போட்டிதான் சிறந்த வழி என்பதால் அது ஊக்குவிக்கப்பட வேண்டும், (ஆ) கிராமப்புற மற்றும் சிறுதொழில்கள் நாடு முழுவதும் பரந்துவிரிந்து கிடக்கும் வரைமுறைப்படுத்தப்படாத கிராமப்புற மற்றும் குறுந்தொழில்துறை நமது கொள்கை வகுப்போருக்கு. மிகப் பெரிய சவாலையும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன, கைத்தறி. கைவினைப் பொருட்கள். பட்டுப்பூச்சி வளர்ப்பு. கம்பளி. விசைத்தறி. கதர் கிராமத் தொழில். கயறு திரிப்பு. உணவு பதனிடுதல் உட்பட பல்வேறு ஊரக தொழில்கள் அடங்கிய தொழில் துறைதான் இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது, அதன் மூலம் வேலைபெறுவோரில் பாதி பேர் பெண்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தத் தொழிற்துறைதான் ந-வடைந்த மற்றும் அமைப்பு சாரா மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது, இந்தியாவில் உள்ள கிராமப்புற குறு தொழில்களில் 57 சதவிகிதம் அவற்றின் உரிமையாளர்களை மட்டுமே வைத்து செயல்படும் ஒரு நபர் நிறுவனங்களாகும், ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் அவர்கள் 32 சதவிகிதமாகும், அவர்களில் 29 சதவிகிதம் பேர் விவசாயம்சாராத மற்றும் தனியார் அமைப்பு சாராத நிறுவனங்களைச் சார்ந்த மதிப்புக்கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாகும், சிறப்பான வடிவமைப்பு. நவீனமான சந்தை வாய்ப்பு. சரியான தொழில்நுட்பம் ஆகியவை வெற்றிகரமாக புகுத்தப்பட்டால் இந்த தொழில்துறை சுயச்சார்பு கலாச்சாரத்திற்கும் தொழில் போட்டியை சமாளிப்பதற்கும் மிகப்பெரிய உதாரணமாக அமையும், கிராமப்புற மற்றும் குறுந்தொழில் துறையின் கீழ்வரும் நடவடிக்கைகளை பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் நிறுவனங்களும் கண்காணிக்கின்றன, கிராமப்புற மற்றும் குறுந்தொழில் துறைக்கு ஆதரவாக ஏராளமான திட்டங்களும் உள்ளன, ஆனால் கிராமப்புற தொழில்துறையில் வெறும் 13 சதவிகித தொழில்நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதால் மிகக்குறைந்த அளவினரே அதன் பயனைப் பெறுகிறார்கள், எனவே பதிவு செய்யப்படாத குறுந்தொழில் நிறுவனங்களும் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகள் 11வது திட்டத்தில் எடுக்கப்பட வேண்டும், மானியங்கள் அளித்தால்தான் குறுந்தொழில்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த முடியும் என்ற அணுகுமுறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், பல நிறுவனங்களை இணைத்து குழு போல அமைத்து அவற்றுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை குறைந்த செலவில் செய்து தருவது நல்ல பலனை அளிக்கும், எனவே இந்தத் துறையில் தேவைப் படுவோருக்கு மட்டும் மானியம் வழங்கும் முறையை கொண்டுவர வேண்டும், அதன் மூலம் மானியத்தின்பயன்கள்மற்றவர்களுக்கும் கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும், மேலும் புதுமை மற்றும் செயல் திறனுக்கு 28 ஊக்கமளிக்கும் நிலை 11வது திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும், தொழில் தொடங்குவதற்கான முட்டுக்கட்டைகளை நீக்குவதன் மூலம் புதிய தொழில் தொடங்குவதில் உள்ள பாதிப்புகளை குறைக்க வேண்டும், அது மட்டுமின்றி சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் போட்டித் தன்மையை அதிகரிக்க வடிவமைப்பு நிலையங்கள். உபகரண மையங்கள் அமைத்தல். சந்தை ஆதரவளித்தல் போன்றவை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி சார்பில் செய்யப்பட வேண்டும், (இ) சுரங்கத்துறை தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு தாதுக் கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும், இந்தியாவில் உள்ள தாதுப் படிமங்களை கண்டுபிடிப்பதிலும் சுரங்க பணிகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்திய சுரங்கம் மற்றும் தாது சட்டமும் தாது சலுகை விதிகளும் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையும் பலமுறை மாற்றப்பட்டுள்ளன, ஆனால் அதன்பிறகும் பல்வேறு நடைமுறை சிக்கல்களாலும் சட்டத்திலுள்ள சில பிரிவுகளாலும் இந்தத் துறைகளுக்கு வரும் வெளிநாட்டு நேரடி முதலீடு மிகவும் குறைவாகவே உள்ளது, சுரங்கத்துறை செயல்பாடுகளுக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் உள்ள முட்டுக்கட்டைகளைப் போக்க சட்டம் மற்றும் விதிமுறைகளையும் கொள்கைகளையும் மறு ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும், அதற்கான நடைமுறைகள் சுரங்கம் குத்தகைக்கு உரிமம் வழங்குவது தொடங்கி உத்தரவாத குத்தகைக்காலம் அதிகரிக்கப்படுவது வரை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும், சுரங்கம் அமைப்பதற்காக நிலம் அளித்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்கான நடைமுறைகளும் வெளிப்படையாக்கப்பட வேண்டும், 3,3 சேவைத்துறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 54 சதவிகிதம் சேவைத் துறையின் பங்காகும், இந்தியாவில் மிக வேகமாக வளரும் துறை சேவைத் துறைதான், கடந்த 1990ஆம் ஆண்டுகளின் மத்தியி-ருந்து ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்ற அளவில் சேவைத்துறை வளர்ந்து வருகிறது, இந்தத் துறை வரும் 2020ஆம் ஆண்டுக்குள் நான்கு கோடி வேலைவாய்ப்புகளையும் ஆண்டுக்கு 20.000 கோடி டாலர் கூடுதல் வருமானத்தையும் ஏற்படுத்தும் திறன் கொண்டதாகும், உலகிலேயே சேவைத் துறை ஊழியர்களின் வருமானம் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது என்பதாலும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் இந்தியாவில் இந்தத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது, எனவே இந்தத் துறையில் உள்ள வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாக எட்டும் வகையில் 11வது திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், (அ) தொழில்முறைச் சேவைகள் ஆற்றல் பணிச் சேவையில் தகவல் தொழில்நுட்ப சேவை. நுகர்வோர் உறவு நிர்வாகம். சுகாதார சேவை. கணக்கியல் சேவை. சட்ட சேவை. கல்வி சேவை. கட்டுமானம் மற்றும் பொறியியல் சேவை. கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு சேவை என பல்வேறு பிரிவுகள் உள்ளன, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் நாம் செய்த புரட்சியின் காரணமாக இந்த சேவைகளை உலகம் முழுவதற்கும் வழங்க முடிகிறது, அது மட்டுமின்றி அறிவுசார் பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக மற்ற நாடுகள் அங்கீகரிக்கும் அளவுக்கு பல்வேறு துறைகளிலும் இந்தியர்கள் முத்திரைப் பதித்துள்ளனர், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் 65 சதவிகித பங்கையும் அயல் வணிக சேவையில் 46 சதவிகித பங்கையும் இந்தியாபெற்றிருப்பதன் மூலம் அயற்பணிச்சந்தையில் இந்தியா அதிக 29 பங்கைப் பெற்றுள்ளது, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏற்றுமதியில் 28 சதவிகித ஆண்டு வளர்ச்சி என்ற ஒப்பிட முடியாத சாதனை மூலமே இது சாத்தியமாகியுள்ளது, அதிருஷ்டவசமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளின் ஒட்டுமொத்த ஆதாரத்தில் பத்து சதவிகிதம் மட்டுமே இதுவரை எட்டப் பட்டுள்ளதால் இத்துறை எதிர்காலத்திலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது, உலக சந்தையில் 30.000 கோடி டாலர் மதிப்புள்ள மீதமுள்ள 90 சதவிகித ஆதாரம் இன்னும் எட்டப்படவில்லை, அந்த முழு ஆதாரத்தையும் எட்டுவதற்காக நமது திறமை. அமெரிக்கர்களுக்கு 24 மணி நேரமும் உழைப்பு வழங்கும் வகையிலான பூகோள அமைப்பு. பணிபுரிவதில் மிகச் சிறந்தவர்கள் என்ற பெருமை. தொலைத் தொடர்பு கட்டமைப்பு. பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இன்னும் முடுக்கி விடப்பட வேண்டும், சர்வதேச அயல் வணிகப் பணிகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக உலக வர்த்தக அமைப்பின் மூலம் பணியாற்ற வேண்டும், மேலும் சிறந்த மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை உருவாக்குவது. அரசு மற்றும் தனியார்துறை கூட்டமைப்பின் மூலம் நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவையும் மேற் கொள்ளப்பட வேண்டும், தொழில்முறை சேவைப் பிரிவில் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி மிகப்பெரிய சாதனைதான் என்றபோதிலும் சமீப காலமாக திறமை குறைபாடு அதிகரித்து வருவதை அந்தத் துறையில் உள்ள வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர், கலைத் துறையி-ருந்து வரும் பட்டதாரிகள் மட்டுமின்றி பொறியியல் மற்றும் அறிவியல் துறைகளி-ருந்து வரும் பெரும்பாலான பட்டதாரிகளுக்கும் அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளகூடுதல் பயிற்சி தேவைப்படுவதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர், இந்தியாவில் உருவாக்கப்படும் தொழில் நுட்ப நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் அதே நேரத்தில் அவர்களின் கல்வித் தரம் குறைந்து விடாமல் பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும், சேவைத் துறையிலும் வர்த்தக தாராளமயமாக்கலை இந்திய அரசு செயல்படுத்தி வருவதால் இந்திய நிபுணர்கள் உலகில் மிகச் சிறந்த வல்லுனர்களாக இருக்க வேண்டியதை உறுதி செய்ய வேண்டும், ஆ)கட்டுமானம். வீட்டு வசதி மற்றும் வீடு. மனை சேவை பல்வேறு தொழில் தெரிந்தவர்களுக்கும் எந்தத் துறையிலும் பயிற்சி இல்லாதவர்களுக்கும் கட்டுமானத்துறை மிகப்பெரிய அளவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளிக்கிறது, தற்போதைய நிலையில் மூன்று கோடி பேருக்கு வேலை அளித்துவரும் கட்டுமானத்துறை கடந்த ஐந்தாண்டுகளாக ஆண்டுக்கு பத்து சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியடைந்து வருகிறது, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறக் கட்டமைப்பு. சாலைகள். விமான நிலையங்கள். துறைமுகங்கள். வணிக வளாகங்கள். குடியிருப்புகள் என அனைத்து வகையான கட்டுமானங்களையும் இத்துறை கவனித்துக் கொள்கிறது, கட்டமைப்பு மேம்பாடு என்பது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய துறை என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது, அதற்காக பாரத் நிர்மாண் திட்டம். பிரதமரின் கிராமப்புற சுய வேலைவாய்ப்புத் திட்டம். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம். விமான நிலைய நவீனமயமாக்கல் போன்ற திட்டங்களின் மூலம் கட்டமைப்பு மேம்பாட்டின் முக்கியத்துவம் வ-யுறுத்தப்படுகிறது, உழைக்கும் மக்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதாலும் தனி குடும்பங்கள் பெருகி வருவதாலும் வீடுகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக குறைந்த வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்கள் வழங்கப்படுவதால் இந்தத் தேவை 30 இன்னும் அதிகரித்து வருகிறது, கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மிகப்பெரிய அளவில் சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும், பல மாநிலங்களில் நிலங்களை மேம்படுத்துவதில் பல முட்டுக்கட்டைகள் உள்ளன, அவை அனைத்தும் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும், அந்த முட்டுக் கட்டைகளில் முக்கியமானது சில மாநிலங்களில் இன்னும் நடைமுறையில் இருக்கும் நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டம்தான், வெளிப்படைத் தன்மையில்லாத நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளும் பிரச்னையை மேலும் சிக்கலாக்குகின்றன, நகர்ப்புற வாடகைக் கட்டுப்பாடு. அதிக அளவு முத்திரைத் தாள் கட்டணம். இதர நிலமாற்ற செலவுகள் ஆகியவையும் கட்டுமானத் தொழிலுக்கு முட்டுக்கட்டையாக விளங்குகின்றன, இத்தகைய கொள்கைகளை மாநில அரசுகளும் நகராட்சி அமைப்புகளும் விரிவாக மறு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும், அதி நவீன நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இந்த சட்டத் திருத்தங்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செய்யப்பட வேண்டும், நகர்ப்பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் நிலங்களை மாற்றிக் கொள்ளும் நடைமுறையை மாநில அரசுகள் எளிமையாகவும் விரைவாகவும் இருக்கும்படி மாற்ற வேண்டும், நகர்ப்புற சாலை திட்டங்களுக்கு மிகக் குறைந்த அளவே முதலீடு செய்யப்படும் நிலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது, விரைவான போக்குவரத்து அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டால் மக்கள்தொகை நகர்ப்புறங்களில் குவிவது தடுக்கப்பட்டு பரவலாக்கப்படும், சீனாவில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டில் கிட்டத்தட்ட பாதி அளவு வீட்டு வசதித்துறைக்குதான் செல்கிறது, அதேபோல் இந்தியாவிலும் கட்டுமானத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு வாய்ப்புகளை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், கட்டுமானத் துறைக்கு ஏற்ற வகையில் அனைவரையும் ஈர்க்கும் நிதி அம்சங்களுடன் நிதிச்சந்தையில் சில மாற்றங்களை அரசும் செபி நிறுவனமும் செய்தால் இந்தத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிக்கும், (இ) சுற்றுலா 2002-03ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சுற்றுலாத்துறை அளித்த பங்கு 5,83 சதவிகிதமாகும், இந்தியாவில் மிக அதிக அன்னிய செலாவணியை ஈட்டும் துறையில் சுற்றுலாத்துறை மூன்றாவது இடத்தில் உள்ளது, 2005ஆம் ஆண்டில் மட்டும் சுற்றுலாத்துறை மொத்தம் 600 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி ஈட்டியுள்ளது, கடந்த 2002-03ஆம் ஆண்டு நிலவரப்படி சுற்றுலாத்துறையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகள் 3 கோடியே 86 லட்சமாகும், இது இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் 8,27 சதவிகிதமாகும், 11வது திட்ட காலத்தில் சுற்றுலாத்துறை மூலம் இரண்டு கோடியே 70 லட்சம் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும், இயற்கை. கலாச்சாரம். வர்த்தகம். ஓய்வு. ஆன்மிகம். மத நம்பிக்கை. சுற்றுச்சூழல். சாகசம் செய்யும் ஆர்வம். மருத்துவ சுற்றுலா போன்றவற்றின் முழு பயனையும் அடையும் நோக்குடன் விமான நிலையங்களை விரிவுபடுத்துதல். நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சாதாரண ஹோட்டல்களில் தங்கும் வசதிகளை அதிகரித்தல். சுற்றுலாத் தலங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற சுற்றுலாக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் 11வது திட்டம் கவனம் செலுத்த வேண்டும், (ஈ) சில்லரை வணிகம் மற்றும் அமைப்பு சார்ந்த சில்லரை வர்த்தகம் இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 31 ஒன்பது லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சில்லரை விற்பனை நடைபெற்று வருகிறது, இதில் அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை வெறும் மூன்று சதவிகிதம்தான், வணிக வளாகங்கள் (2,20 கோடி சதுர அடி) சூப்பர் மார்க்கெட்கள் (4,7). ஹைப்பர் மார்க்கெட்டுகள் (3,6). தள்ளுபடி விற்பனை மையங்கள் (2,7). சிறப்பு வர்த்தக நிறுவனங்கள் (4,5). பல்பொருள் அங்காடிகள் (1,8). விருப்பம் போல வாங்கும் நிறுவனங்கள் (0,9). கணினி வர்த்தகம் (0,9 கோடி ச,அ,) ஆகியவை இதில் அடங்கும், சில்லரை வர்த்தகமும் அது தொடர்பான சேவைகளும் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன, தெரு வியாபாரிகள். நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கு சில்லரை விற்பனைதான் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக உள்ளது, சில்லரை விற்பனை மூலம் எவர் வேண்டுமானாலும் வாழ்வாதாரம் தேட முடியும், சில்லரை விற்பனை பெரும்பாலும் சிறிய அளவில் சாதாரண முறையில் நடைபெறுவதால் அது நவீனமாக இருக்கும் வகையில் சீரமைக்கப்பட வேண்டும், அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை பொருட்களின் தயாரிப்பாளர்களுக்கும் அது சார்ந்த நுகர்வோர்க்கும் பல நன்மைகளை அளிக்கிறது, மேலும் அதிக தகுதியுடன் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது, வேளாண் உற்பத்திப் பொருட்களையும் அமைப்பு சார்ந்த சில்லரை விற்பனை மூலம் விற்றால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதுடன் உணவுப் பயனீட்டுத் தொழில் துறையினரையும் ஆதரித்ததுபோல அமையும், தற்போதுள்ள நவீன சில்லரை விற்பனை புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதுடன் விலையும் குறைய வகை செய்கிறது, இதன் மூலம் தேவை அதிகரித்து உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு பெருக்குகிறது, சில்லரை விற்பனைத் துறையில் ஒரு குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது, இந்தத் துறையில் முக்கியப் பங்காற்ற ஹைபர் மார்க்கெட். பல்முனை சில்லரை விற்பனை நிலையங்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர், இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவுவதால் சரியான கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டும், சில்லரை விற்பனையில் சீனா உள்ளிட்ட பெரும் பாலான வளரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப் படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும், (உ) பொழுதுபோக்கும் மற்றும் தகவல் சாதன சேவைகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியைவிட ஒவ்வொராண்டும் அதிக அளவில் வளர்ந்து வரும் துறைகளில் பொழுதுபோக்கு மற்றும் தகவல் சாதன துறையும் ஒன்றாகும், 2010ஆம் ஆண்டு வரை அந்தத் துறையின் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 19 சதவிகிதமாக இருக்கும், அதற்குமேல் 11வது திட்ட காலத்தில் இன்னும் அதிக வளர்ச்சி அடையும், இந்தத் துறையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் (ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 42%). திரைப்படங்கள் (19%). வானொ- (1%). இசை (2%). பத்திரிக்கைகள் (31%). நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் (2%). விளம்பரங்கள் (3%) ஆகியவை அடங்கியுள்ளன, இந்தத் துறையில் தேவை அதிகரித்து வருகிறது, எனவே இந்தத் துறையின் வளர்ச்சி தொடரும் என நம்பலாம், அனைத்து வகையான தகவல் தொடர்பு அமைப்புகளும் பொதுவான டிஜிடல் முறையில் ஒருங்கிணைந்து உயர்ந்த தொழில்நுட்பத்துடன் வழங்கப்பட்டால் இன்னும் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளது, அத்துறையில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்க வழி இருப்பதால் அதற்கான சூழலை ஏற்படுத்தும் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும், 32 3,5 கட்டமைப்பு மேம்பாடு இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் போதுமான கட்டமைப்பு வசதி இல்லாததுதான், இது பத்தாவது திட்ட காலத்தின் இடைநிலை மதிப்பீட்டு அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப் பட்டுள்ளது, இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக பிரதமர் தலைமையில் கட்டமைப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அந்த கமிட்டி 11வது திட்ட காலம் முழுவதும் செயல்படுத்தக் கூடிய அளவில் விரிவான கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது, முதல்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சாலை. ரயில்பாதை. வான் மற்றும் கடல் போக்குவரத்து. மின் உற்பத்தி. தொலைத் தொடர்பு. குடிநீர் வினியோகம். நீர்ப்பாசனம். நீர்த்தேக்கம் ஆகியவற்றுக்கான முதலீடு தற்போதுள்ள ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4,6 சதவிகிதம் என்ற அளவி-ருந்து 11வது திட்ட காலத்தில் 7 முதல் 8 சதவிகிதம் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப் பட்டுள்ளது, இதையே வேறுவிதமாக சொல்ல வேண்டுமானால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை 7 சதவிகிதத்தி-ருந்து 9 சதவிகிதமாக உயர்த்துவதற்கு கூடுதலாகத் தேவைப்படும் 6 சதவிகித முதலீட்டில் பாதி உட்கட்டமைப்புக்கு செலவிட வேண்டும், இது கட்டமைப்புத்துறையில் அதிக முதலீட்டைச் செய்ய வேண்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும், பொதுத்துறை நிறுவனங்களின் ஆதாரம் மிகவும் குறைவு என்பதால் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை கூட்டணியை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும், அனைத்து கட்டமைப்பு வசதிகளிலும் இந்தக்கூட்டணி சாத்தியமானதல்ல, எனினும் சில வகைகளில் அது சாத்தியம், அந்த வகை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டணியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இத்தகைய கூட்டணி மூலம் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10வது திட்ட காலத்தின் கடைசி இரண்டாண்டுகளில் ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்துள்ளன, அதன் பயனாக எந்தெந்த சூழ்நிலைகளில் இந்தக் கூட்டம் வெற்றி பெறும் என்பதை கண்டறிவதற்கான அனுபவம் அரசுகளுக்கு கிடைத்துள்ளது (பார்க்க பெட்டி – 1) 33 பெட்டி – 1 பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணி நெடுஞ்சாலைகள். விமான நிலையங்கள். துறைமுகங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பராமரிக்க பொதுத்துறை தனியார் கூட்டணியே சிறந்த வழியாக கருதப்படுகிறது, வளர்ந்த நாடுகளிலும் வளர்ந்துவரும் நாடுகளிலும் இதே நிலையே உள்ளது, பொது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும் அதற்கு தனியார் முதலீட்டை ஈர்ப்பதிலும் அந்த வசதிகளை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதிலும் பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது, பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணிகள் உருவாக்கி. இயக்கி ஒப்படைக்கும் முறை உருவாக்கி. இயக்கி. சொந்தமாக்கி. ஒப்படைக்கும் முறை உட்பட பலவழிகளில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன, இதன்மூலம் அரசாங்கங்கள் கட்டுமானம் மற்றும் வணிக ரீதியான சிக்கல்களை தனியாரின் பொறுப்பில் விட்டுவிடலாம், கட்டமைப்பு வசதிகளை நிர்வகிக்கவும் தனியார் நிறுவனங்களே சிறந்தனை, எனினும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தனியார் முதலீட்டை ஈர்ப்பது மட்டுமின்றி அதன்மூலம் பொதுமக்களுக்கும் நன்மை ஏற்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், இந்த வசதிகள் நியாயமான செலவில் வெளிப்படையான முறையில் அமைத்துத் தரப்பட்டால் இந்தக் கூட்டணி மிகச் சிறந்த கூட்டணி என்பது உறுதியாகும், சிறந்த நடைமுறைகளை நாம் பின்பற்றினால் நம்பகத்தன்மை மிகுந்த பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணித் திட்டங்களை உருவாக்குவது சாத்தியமானதுதான், அதற்கு பொதுமக்களிடமும் அமோக வரவேற்பு இருக்கும், இந்த வரவேற்பால் திட்டம் தொடர்பான நிதி விவகாரங்களில் மறுபேச்சு வார்த்தை நடத்துதல். அரசுக்கோ தனியாருக்கோ ஏற்படும் இழப்பை வழங்குதல் போன்ற பிரச்னை எழுவதற்கு வாய்ப்பே இல்லை, நிலையான கொள்கை. முறைப்படுத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நிலையான ஏற்பாடுகளின் மூலம் பொதுத்துறை தனியார்த் துறை கூட்டணியை சிறப்பாக செயல்படுத்தலாம், இந்த அமைப்பில் தனியாரின் முதலீட்டிற்கு நல்ல வருவாயும் மிகக் குறைந்த அளவே சிக்கலும் ஏற்படும், நிலையான ஒழுங்குமுறை மற்றும் கொள்கை வழிமுறைகளை வகுப்பதற்கு. மாதிரி சலுகை உடன்படிக்கையை பயன்படுத்திக் கொள்ளலாம், நெடுஞ்சாலைகளை அமைப்பதில் பொதுத்துறை தனியார் கூட்டணிக்கான மாதிரி சலுகை உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது, மற்ற துறைகளுக்கான உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கும் பணியும் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது, பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணியில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக அரசு நடந்து கொள்ளுமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை, அதைப்போக்கவும் பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணி திட்டங்கள் தொடர்பான நம்பிக்கையை அதிகரிக்கவும் வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொள்வதுடன் அதில் தொடர்புடையவர்களுடன் முறையான ஆலோசனை நடத்துவது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான உரிமத்தை ஒப்பந்தப்புள்ளி முறை மூலம் வழங்குவது போன்றவற்றை கடைப்பிடிக்கலாம், இது அந்தத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கும் நிம்மதியைக் கொடுக்கும், பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணியை அனைவரும் ஏற்றக்கொள்ளச் செய்வதற்கான சிறந்த வழி. தனியார்த் திட்டங்களுக்கு அரசு நிதியாதாரங்களைச் செலவிடாமல் அரசு திட்டங்களுக்கு தனியார் நிதியாதாரத்தைப் பெறும் உத்தியே இது என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்துவதாகும், 34 அ)சாலைகள் போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி பத்தாவது திட்டத்தில் வ-யுறுத்தப்பட்டுள்ளது, அதன்படி மொத்தம் 5846 கிலோ மீட்டர் நீளத்திற்கு தங்க நாற்கர சாலையை நான்குவழி பாதையாக மாற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டது, அதன் பின்னர் 7472 கிலோ மீட்டர் நீளத்திற்கு வடக்கு தெற்கு பெருவழிச் சாலை. கிழக்கு மேற்கு பெருவழிச் சாலை ஆகியவற்றை அமைக்கும் திட்டம் தயாரிக்கப் பட்டது, இவை இரண்டு திட்டங்களும் பிரதம மந்திரி கிராமசாலைத் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டன, பிரதம மந்திரியின் கிராமப்புறச் சாலை மேம்பாட்டுத் திட்டம் சமீபத்தில் விரிவாக்கப்பட்டு பாரத் நிர்மாண் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கும் கிராமங்கள் அனைத்திற்கும் 2008-09ஆம் ஆண்டுக்குள் அனைத்து தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சாலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது, மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் 500 பேர் வசித்தாலே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும், இந்தத் திட்டத்தின் மூலம் கிராமங்களை சந்தைப் பொருளாதாரத்திற்கு அழைத்து வர முடியும், அதேபோல் வடகிழக்கு பகுதிக்கான விரிவு படுத்தப்பட்ட சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இது அப்பகுதியை மேம்படுத்தி நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்க உதவும், நாடு முழுவதும் சாலை இணைப்பு மற்றும் போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் இதுவரை செயல்படுத்தப்பட்ட இரண்டு கட்டங்கள் தவிர மேலும் ஐந்து கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது (பெட்டி-2 பார்க்க) பெரும் நிதியுதவி தேவைப்படும் இந்தத் திட்டம் பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணி மூலம் உருவாக்கி இயக்கி ஒப்படைக்கும் முறையில் செயல்படுத்தப்படும், இது பழங்கால ஒப்பந்தம் வழங்கும் முறையை விட பல சிறப்பம்சங்களை கொண்டது (பார்க்க பெட்டி-1), தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டம் முதல் செயல்படுத்தப்பட உள்ள அனைத்து சாலைத் திட்டங்களுக்கும் உருவாக்கி இயக்கி ஒப்படைக்கும் முறையிலேயே ஒப்பந்தம் வழங்கப்படும், தவிர்க்க முடியாத சில பகுதிகளில் மட்டுமே பழங்கால ஒப்பந்த முறையில் ஒப்பந்தம் வழங்கப்படும், ஒப்பந்தங்களை விரைவாக வழங்குவதற்காக மாதிரி சலுகை உடன்படிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது, பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணியில் இது முக்கிய கண்டுபிடிப்பாகும், பெட்டி – 2 தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் உட்கட்டமைப்பு குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த ஒட்டுமொத்தமாக 2.20.000 கோடி ரூ, செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது, திட்டத்தின் சில பணிகள் 2011-12ம் ஆண்டுக்கு பிறகும் நடைபெறும், பத்தாவது திட்டகாலத்தில் நெடுஞ்சாலைத் திட்டத்திற்காக ரூ, 59.490 கோடியுடன் (உண்மையான ஒதுக்கீடு ரூ, 51.000 கோடியாக இருக்கும்) ஒப்பிடும்போது 11வது திட்டத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாகும், ஏழு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் திட்டத்தின் விபரங்கள் வருமாறு : 35 தற்போதுள்ள சாலைப் போக்குவரத்தில் மோட்டார் வசதியில்லாத வாகனங்களும் குறைந்த சக்திகொண்ட வாகனங்களும் இருப்பதால் போக்குவரத்து குறைந்த வேகத்திலேயே நடைபெறுகிறது, பெரும்பாலான நெடுஞ்சாலைகள் குடியிருப்புகள் வழியாகவும் குறுகிய பாதைகள் வழியாகவும் செல்வது ஒரு பெரிய பிரச்னையாகும், எனவே நாடு முழுவதும் விரைவு வழிசாலைத் தொடர்பை ஏற்படுத்துவது அவசியமாகும், அதற்காக 11வது திட்டத்தில் முன்கூட்டியே திட்டங்கள் உருவாக்கப்படும், அந்த விரைவு வழிகளை (ஏற்கனவே முடிக்கப்பட்ட 1000 கிலோ மீட்டர் நீங்கலாக) அமைக்கும் பணி 12வது திட்டத்தில் செயல்படுத்தப்படும், விரைவான சாலைப் போக்குவரத்துக்கு முக்கிய சாலைகள் அனைத்தும் உலகத் தரத்துடன் இருக்க வேண்டியது அவசியம், நெடுஞ்சாலைகள் தவிர மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளை மேம்படுத்த போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை, எனவே மாநில நெடுஞ்சாலைகள். பெரிய மாவட்ட சாலைகள். இதர மாவட்ட சாலைகள் அனைத்தையும் மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், கிராமப்புறச் சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வழக்கமும் தொடரும், அதன்படி பிரதமரின் கிராமப்புறச் சாலைத்திட்டத்தின் கீழ் இதுவரை சாலை வசதியில்லாத 1.72.000 குடியிருப்புப் பகுதிகளில் பெரும்பாலானவற்றிற்கு அனைத்து பருவநிலைகளையும் தாங்கும் வகையிலான சாலைகள் அமைத்துத் தரப்படும், நிதிப்பற்றாக்குறை காரணமாக சாலைகளை பராமரிப்பதில் மாநில அரசுகள் போதிய அக்கறை காட்டவில்லை, இதனால் சாலையில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது, இது பொருளாதார ரீதியாக சரியானதல்ல, சாலை பராமரிப்புக்காக நாம் ஒரு ரூபாய் செலவிட்டால் போக்குவரத்து செலவில் இரண்டு முதல் மூன்று ரூபாய் வரை மீதமாகும், அது மட்டுமின்றி சாலைப் போக்குவரத்தும் சீராக இருக்கும், இதைக் கருத்தில் கொண்டு 2006-07 முதல் 2009-10 வரை நான்காண்டுகளுக்கு சாலைகள் மற்றும் கட்டம்-பிரிவு திட்டத்தின் பெயர் நீளம் (கி,மீ,) செலவு (ரூ, கோடியில்) என் எச் டி பி-1ஏ தங்க நாற்கர சாலை 1738 8811 என் எச் டி பி-2ஏ கிழக்கு மேற்கு-வடக்கு தெற்கு பெருவழிச்சாலை 6736 43623 என் எச் டி பி-3 முக்கிய சாலைகளை நான்கு வழியாக்குதல் 10000 65197 என் எச் டி பி-4 இரண்டு வழி சாலையமைத்தல் 20000 27800 என் எச் டி பி-5 தங்க நாற்கர சாலையை ஆறு வழிப்பாதையாக்குதல் 6500 41210 என் எச் டி பி-6 விரைவு வழிப்பாதைகள் 1000 16680 என் எச் டி பி-7 புறவழிச் சாலைகள் புறவட்டப்பாதைகள் இறுதி செய்யப்படவில்லை 16680 மொத்தம் 45974 220000 ஏ மீதமுள்ள பணிகள் மட்டுமே 36 பாலங்களை பராமரிக்க கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கும்படி 12வது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இரண்டு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய சாலைப்பணியை செயல்படுத்தும் பொறுப்பு உள்ளது, எனவே அந்த அமைப்புக்கு தன்னாட்சி அதிகாரம் மற்றும் திட்டங்களின் தரத்திற்கு பொறுப்பேற்கும் தன்மை தொழில்நுட்பத்திறன் ஆகியவற்றை அளிக்கும் வகையில் அந்த அமைப்பு சீரமைக்கப்படுகிறது, இந்திய சாலைகள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன, இதனால் ஏராளமான உயிரிழப்பையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது, எனவே சாலைப் பாதுகாப்பை வ-யுறுத்துவதற்காகவே தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது, சாலை பராமரிப்புக்காக வசூ-க்கப்படும் கூடுதல் வரியில் ஒரு சதவிகிதம் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், ஆ)ரயில்பாதை ரயில்வே அமைப்பை நவீனப்படுத்தியும். தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தியும். கட்டணங்களைக் குறைத்தும். பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரித்தும். விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் பற்றி பத்தாவது திட்டத்தில் வ-யுறுத்தப்பட்டிருந்தது, ரயில்வே துறையில் வருவாய் பெருகியதன் பயனாக இந்த விஷயத்தில் பத்தாவது திட்ட காலத்தில் கடைசி இரண்டாண்டுகளில் மிகப் பெரிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது, எனினும் துறைமுகங்களில் சரக்கு பெட்டகங்கள் குவிந்து கிடக்கும் நிலை உள்ளது, அந்த நிலையை மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக தில்–மும்பை மற்றும் தில்–ஹெளரா மார்க்கங்களில் சரக்கு போக்குவரத்திற்காக தனிப்பாதை அமைக்க 11வது திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பொதுத்துறை மற்றும் தனியார்துறைக்கு போட்டியாக சரக்கு பெட்டகங்களை எடுத்துச் செல்லும் முயற்சியை ரயில்வே எடுத்திருப்பது நுகர்வோர்க்கு சாதகமான விஷயம் மட்டுமின்றி மற்ற வகைப் போக்குவரத்துக்களால் ரயில்வே இழந்த சந்தைப் பங்கை மீண்டும் பெறுவதற்கும் இது உதவும், சரக்கு கட்டணங்களை மேலும் குறைத்தல். தகவல் தொழில்நுட்ப சேவைகளை அதிகமாக பயன்படுத்துதல். பொதுத்துறை தனியார்த்துறை கூட்டணி மூலம் ரயில் கட்டமைப்பை ஏற்படுத்துதல். கட்டமைப்பு பூங்காக்களை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் ரயில்வே துறை செய்ய வேண்டியுள்ளது, இந்த மிகப்பெரிய திட்டங்களுக்கு பொது நிதி மட்டும் போதுமானதல்ல, ரயில்வே துறையின் நவீனமயமாக்கல் 11வது திட்ட காலத்தில் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும், ரயில்வே சேவை வழங்குவதில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும், ரயில் நிலையங்களில் தரமான சேவைகள். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதி. ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துதல். சரக்கு போக்குவரத்துக்காக புதிய வடிவமைப்புடன் பெட்டிகளை தயாரித்தல் போன்ற மாற்றங்களும் செய்யப்பட வேண்டும், ரயில்வேத் துறை அதன் அமைப்பை மறு சீரமைத்து உட்கட்டமைப்பு மற்றும் செயல் பாட்டுத் துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும், உற்பத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் சீனாவில் உள்ளதைப் போல தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும், மற்ற பணிகளில் அயல் வர்த்தக முறையை நடைமுறைப்படுத்தவும் வாய்ப்புள்ளது, பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் அதிக அளவு சரக்குகளைக் கையாளலாம், பயணிகள் கட்டணத்திற்கு மானியம் வழங்குவதற்காக உயர் வகுப்பு கட்டணத்தை உயர்த்துவதும் சரக்குகளுக்கு 37 அதிக கட்டணம் வசூ-ப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் நீடிக்கக்கூடாது, அப்படி செய்தால் சரக்கு போக்குவரத்து சாலை மார்க்கத்திற்கும் உயர்வகுப்பு பயணிகள் விமானங்களுக்கும் மாறிவிட வாய்ப்புள்ளது, ரயில் கட்டணங்கள் நியாயமான அளவில் இருக்க ரயில் கட்டணத்தை முறைப்படுத்தும் ஆணையத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும், இ) துறைமுகங்கள் பத்தாவது திட்டகாலத்தில் துறைமுகங்கள் ஓரளவு மேம்பாடு அடைந்துள்ளன, எனினும் எதிர்கால வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்களை விரிவுபடுத்தி நவீனமயமாக்கும் பயணிகள் மேற்கொள்ளப் பட வேண்டும், 11வது திட்டத்தில் துறைமுகங்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் சர்வதேச தர அளவிற்கு கொண்டு வரவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் சரக்கு பெட்டகங்களைக் கையாளவும் வகை செய்யப்படும், தற்போதைய நிலையை மனதில் கொண்டு பார்த்தால் 2004-05ஆம் ஆண்டில் 520 மெட்ரிக் டன்னாக இருக்கும் சரக்கு போக்குவரத்து 2012ஆம் ஆண்டில் 800 மெட்ரிக் டன்னாக உயரும், இதற்காக பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களில் கையாளும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும், ஆழ்கடல் துறைமுகம் ஒன்று மேம்படுத்தப் படுவதுடன் தற்போதுள்ள துறைமுகங்களின் ஆழங்கள் அதிகரிக்கப்படுவதும் அவசியமாகும், இந்தப் பணிகள் பொதுத்துறை தனியார்துறை கூட்டணி மூலம் செயல்படுத்தப்படலாம் (பார்க்க பெட்டி-1), துறைமுகங்கள் அனைத்தும் ரயில்பாதை மற்றும் சாலை மூலமாக இணைக்கப்படுவது மிகவும் முக்கியம் என்பதால் அந்த வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் மேம்படுத்தப்பட வேண்டும், பொதுவான இந்த வசதிகளை துறைமுகப் பொறுப்புக் கழகங்கள் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்துவோர் ஆகியோருடன் இணைந்து அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும், ஈ) விமான நிலையங்கள் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி காரணமாக விமானப் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்துள்ளது, விமானப் போக்குவரத்து ஆண்டுக்கு 16 சதவிகிதம் என்ற அளவுக்கு வளரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த இரண்டாண்டுகளில் அது 24-28 சதவிகிதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது, அதன் விளைவாக விமான நிறுவனங்களுக்கு கட்டமைப்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன, தரையிறங்க போதுமான இடமின்மை. விமானங்களை நிறுத்த இடமின்மை. நெரிசல் நேரங்களில் இடநெருக்கடி போன்ற இடர்ப்பாடுகளை அவை எதிர்கொண்டு வருகின்றன, இது தவிர பெரும்பாலான உள்நாட்டு விமான நிலையங்கள் மேம்படுத்தப் படாததால் உள்நாட்டு விமான சேவையின் தேவை குறைந்துள்ளது, மிக விரைவான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 11வது ஐந்தாண்டுத் திட்டம் வ-யுறுத்தும், தில்-. மும்பை விமான நிலையங்களை மறு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, அவற்றை நவீன மயமாக்கும் பணிகள் 2010ஆம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதற்கான ஒப்பந்த முறையிலேயே. சென்னை. கொல்கத்தா விமான நிலையங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும், பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் அமைக்கப்பட்டு வரும் பசுமை வெளி விமான நிலையங்கள் திறக்கப்படுவதற்கு தயாராகி வருகின்றன, போக்குவரத்து வளர்ச்சியை எதிர்கொள்ள மற்ற நகரங்களிலும் பசுமைவெளி விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட வேண்டும், இது தவிர பெரு நகரங்கள் அல்லாத நகரங்களில் உள்ள 35 விமான நிலையங்கள் விமான நிலைய ஆணையம் மூலம் அதன் சொந்த ஆதாரங்களைக் கொண்டும் பொதுத்துறை தனியார்துறை கூட்டணி மூலமும் மேம்படுத்தப் படவுள்ளன, 38 விமான நிறுவனங்கள் விமான நிலைய இயக்குனர்கள் ஆகியோரின் திறனை மேம்படுத்தும் வகையில் விமானப் பயணப்பாதை கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு விரைவில் அமைக்கப்பட உள்ளது, மேலும் குடிப்பெயர்ச்சி. சுங்கத்துறை போன்ற முறைப் படுத்தும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பயிற்சியையும் தகவல் தொழில்நுட்ப திறனை வழங்குவதன் மூலம் அவர்களின் செயல் பாடுகளும் மேம்படுத்தப்படும், உ) மின் சக்தி விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக மின்சக்தியின் தேவை அதிகரிக்கும், ஆனால் மின் உற்பத்தித் துறையில் நாம் மிகவும் பலவீனமாக உள்ளோம், இந்தத் துறையில் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, அதன் பயனாக மின்துûறியல் மிகத்திறமையாகவும் மற்ற அமைப்புகளுடன் போட்டியிடும் அளவுக்கும் தேவையான அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, ஏ மின்துறைச் சட்டம் 2003 நடைமுறையில் உள்ளது, ஏ அந்த சட்டத்தில் வரையறுக்கப்பட்ட தேசிய மின்சாரம் மற்றும் கட்டண கொள்கைகள்அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன, ஏ அனைத்து மாநிலங்களிலும் ஒழுங்கு முறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் மின்துறையை ஒழுங்குபடுத்துவதற்கான பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, அவை பல மாநிலங்களிலும் பலவிதமாக உள்ள மின் கட்டணத்தை சீரமைக்கவும் தொழில்துறைக்கான மின்கட்டணத்தை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் தொடக்கமாகும், பல மாநில அரசுகள் தங்களது மின்சார வாரியத்தை உற்பத்தி. மின் வினியோகம். மின்சாரத்தைக்கொண்டுவருதல் ஆகியவற்றுக்கான தனித்தனி நிறுவனங்களாக பிரித்துள்ளன, வெளிப்படையான செயல்பாடு. மக்களுக்கு பதில் கூறும் கடமை ஆகியவற்றை ஏற்படுத்த வசதியாக இந்த நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன, இவையெல்லாம் செய்யப்பட்டபோதிலும் முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டபடி மின்தட்டுப்பாடும் அதை பெறுவதில் உள்ள குறைபாடுகளும். பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து முட்டுக்கட்டைகளாக உள்ளன, பத்தாவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் பயன்பாட்டுக்கான மின்சார உற்பத்தி சுமார் 30 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் நிலையான தொடர்ச்சியான மின்சாரத்தைப் பெறவும் ஆண்டு வளர்ச்சி வீதம் எட்டு முதல் ஒன்பது சதவிகிதத்திற்குள் இருப்பதை உறுதி செய்யவும் 11வது திட்ட காலத்தில் மின் உற்பத்தியை 60 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரிக்க திட்டங்கள் தீட்டப்பட வேண்டும், மேலும் இந்தியாவில் உள்ள நீர்மின் உற்பத்தி மற்றும் அணுசக்தியைப் பயன்படுத்தி குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுவதையும் உறுதி செய்ய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும், புதிய தலைமுறை மின்உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தி மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு பல படித்தான பணிகள் அவசியம், 1) புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி. இயற்கை வாயு போன்ற பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், 2) எரிபொருளுக்கான உரிமத்தொகை எரிபொருள் எடுக்கப்படும் மாநிலத்திற்கான இழப்பீடு ஆகியவை தொடர்பாக தேசிய அளவில் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும், 3) முதலீட்டுச் செலவைக் குறைப்பதற்காக 39 நீண்டகால கடனுதவிகள் வழங்கப்பட வேண்டும், 4) மின் உற்பத்தி செலவைக் குறைக்கவும் மின் பயன்பாட்டுக்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டவும் தற்போது பொதுத்துறை நிறுவனங்களுக்காக உறுதி அளிக்கப்பட்டுள்ள லாபத்திற்கு பிந்தைய வருவாய் விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும், 5) மின்சாரத்தை ஒரு பகுதியி-ருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரே மாநிலத்திற்குள்ளும் ஒரு மாநிலத்தி-ருந்து மற்றொரு மாநிலத்திற்கும் இடையே மின்கடத்து வசதி செய்யப்பட வேண்டும், 6) இழப்பு குறைவான. திறமையான மின் வினியோக முறையால் மட்டுமே நிதி ரீதியாக சாத்தியப்படும் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள முடியும், 7) மின் உற்பத்திதிறனை அதிகரிப்பதற்காக அனல்மின் நிலையங்களின் திறனை மேம்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும், 8) நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், 9) 11வது திட்ட காலத்தில் அடிப்படை மின் தேவையை ஐந்து முதல் ஏழு சதவிகிதம் வரை குறைப்பதற்காக உற்பத்தி தரப்பிலும் வினியோகத் தரப்பிலும் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், 10) மின் உற்பத்திக்காக சுத்தமாக்கப்பட்ட நிலக்கரியை பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும், 11) மின் கட்டமைப்புகளுக்கு உதவுவதற்காக சுயசார்பு மின்உற்பத்தித் திறன் மேம்படுத்தப்பட வேண்டும், இந்திய மின்துறையின் மிகப்பெரிய பலவீனம் மின் வினியோகம் முழுக்க முழுக்க மாநில அரசுகளின் பொறுப்பில் இருப்பதுதான், மாநில மின் உற்பத்தி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, அதன் காரணமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நிலையில் பலவீனமாக உள்ளன, அதனால் மின் உற்பத்தி திட்டங்க்ளுக்கு போதுமான அளவு முதலீடு செய்ய முடியவில்லை, இத்தகைய காரணங்களால் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தனியார் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியிலும் ஓரளவே வெற்றி கிடைத்துள்ளது, 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்சார மேம்பாடு மற்றும் சீர்த்திருத்த திட்டத்தின் மூலம் பத்தாவது திட்ட கால இறுதிக்குள் ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் 15 சதவிகிதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போதைய நிலையில் அனைத்து மாநிலங்களின் சராசரி இழப்பு (வசூ-க்கப்படாத மின் கட்டணங்கள் உட்பட) 40 சதவிகிதமாக உள்ளது, அதேநேரத்தில் தொடர்ச்சியான நிர்வாக நடவடிக்கைகளின் காரணமாக பல நகரங்களிலும். சிறிய பகுதிகளிலும் மின் வினியோக இழப்பு வெற்றிகரமாக குறைக்கப்பட்டிருப்பதும் நிகழ்ந்துள்ளது, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் சமீப காலங்களாக ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த விஷயத்தில் சராசரிக்கும் அதிகமாக செயல்பட்டுள்ளன, இதன் மூலம் ஒவ்வொரு மின் வினியோக நிலையத்தையும் கண்காணிப்பது. மின் அளவீட்டை நவீனப் படுத்துவது போன்ற உயர்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விரைவுபடுத்தப் பட்ட மின் மேம்பாடு மற்றும் சீர்த்திருத்த திட்டத்தை எப்படி மறு ஆய்வு செய்யலாம் என்பதற்கான யோசனையும் நம்பிக்கையும் கிடைத்துள்ளன, எனவே ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பை தற்போதுள்ள 40 சதவிகிதத்தி-ருந்து 11வது 40 திட்டக்கால இறுதிக்குள் 15 சதவிகிதமாக குறைக்க மாநில அரசுகள் இலக்கு நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும், மாநில மின்வாரியங்கள் தொழில் ரீதியாகவும் அரசியல் குறுக்கீடின்றி தன்னாட்சி அதிகாரத்துடனும் செயல்பட அனுமதிக்கப்பட்டால் இவை சாத்தியமாகும், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிபேர் மின்சாரம் இல்லாமலோ அல்லது தொடர்ச்சியான மின் வினியோகம் கிடைக்காமலோ உள்ளனர், நாடு முழுவதுமுள்ள அனைத்து வீடுகளுக்கும் குறிப்பாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கும் மின் வினியோகம் வழங்கும் நோக்கத்திற்காக ராஜீவ் காந்தி கிராம மின்சார திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இந்த சிறப்பான திட்டம் வெற்றி பெறுவது போதுமான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதையும் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி செய்யப் படுவதையும் பொறுத்தே அமையும், போதுமான அளவு மின் உற்பத்தி இல்லாமல் வெறும் மின் இணைப்பு மட்டும் வழங்குவது சம்பந்தப்பட்ட மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட வழி வகுக்கும், ஊ)நிலக்கரி வணிக ரீதியான மின் உற்பத்திக்கு நிலக்கரிதான் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது, 2005-06ஆம் ஆண்டில் 43 கோடியே 20 லட்சம் டன்னாக இருக்கும் நிலக்கரியின் தேவை 2011-12ஆம் ஆண்டில் 67 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் மின் உற்பத்தித் துறையின் நிலக்கரித் தேவை மட்டுமே இந்தக் காலத்தில் 18 கோடி டன் அளவுக்கு அதிகரித்து 2011-12ஆம் ஆண்டில் மொத்த தேவை 50 கோடி டன்னாக இருக்கும், இந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும், எனவே 11வது திட்ட காலத்தில் நிலக்கரி உற்பத்தியை 60 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த இந்திய நிலக்கரி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது, இதற்காக அவசர உற்பத்தி திட்டத்திற்கும் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, எனினும் எதார்த்த நிலையைக் கூறுவதென்றால் நிலக்கரி உற்பத்தியில் தற்போது ஏற்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் அதை உயர்த்துவதற்கான கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்த அளவு மின் உற்பத்தி அதிகரிப்பை நிலக்கரி இந்தியா நிறுவனத்தால் மட்டுமே சாதித்துவிட முடியாது, இந்தியாவில் நிலக்கரி உற்பத்தி தற்போது தேசிய மயமாக்கப்பட்டுள்ளது, மின்சாரம். இரும்பு. சிமெண்ட் போன்ற சில துறைகளின் தேவைக்காக மட்டுமே நிலக்கரி உற்பத்தி செய்ய தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது, எரிசக்தி உற்பத்தியில் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு பார்க்கும்போது நிலக்கரி உற்பத்தித் துறையை தாராளமயமாக்கி அதில் தனியார்த்துறை முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும், நிலக்கரியைவிட அதிக மதிப்புள்ள பெட்ரோல் துறையில் தனியார் அனுமதிக்கப்படும்போது நிலக்கரித் துறையிலும் தனியாரை தாராளமாக அனுமதிக்கலாம், அதிலும் குறிப்பாக எதிர்காலத் தேவைக்கு எரிசக்தியை உற்பத்தி செய்வதல் உள்ள சிக்கல்கள். புதிய நிலக்கரித் தொழில்நுட்பத்தை கொண்டுவர வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும் போது நிலக்கரி உற்பத்தித் துறையில் தனியாரை அனுமதிக்கலாம், இந்த விஷயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இது ஒருபுறமிருக்க சிறிய அளவிலான சுரங்கங்கள் மூலம் நிலக்கரி உற்பத்தியை விரிவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், மின்உற்பத்தித் துறையினர் போன்ற அதிக அளவில் நிலக்கரியை பயன்படுத்தும் தனியார்த் துறையினருக்கு ஒரு குறிப்பிட்ட அளவு நிலக்கரி உள்ள பகுதியை ஒதுக்கி அதில் அவர்கள் சுரங்கம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கலாம், 41 நிலக்கரித் தேவை தொடர்பாக செய்யப் பட்ட ஆய்வுகளின்படி 11வது திட்டகால இறுதியில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர அதிக தரமுள்ள நிலக்கரியை 4 முதல் 5 கோடி டன் வரை வெளிநாடுகளி-ருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, தெற்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளில் உள்ள அனல்மின் உற்பத்தி நிலையங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன, நாட்டின் மின்தேவையை கணக்கில் கொள்ளும்போது இத்தகைய நிலக்கரி இறக்குமதி நியாயமானது தான், இதற்காக துறைமுகங்களில் நிலக்கரியை கையாள போதுமான வசதி செய்யப்ட வேண்டும், மேலும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்துவதற்காக அனல் மின் உற்பத்தி நிலையங்களின் திறன் 12 ஆயிரம் மெகாவாட்டி-ருந்து 15 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்தப்பட வேண்டும், நிலக்கரி விலை மற்றும் சந்தைப்படுத்துதல் முறையும் நவீனமயமாக்கப்பட வேண்டும், மின் அணுமுறை மூலம் நிலக்கரியை ஏலம்விடும் மின்னணு ஏலமுறை சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளது மேலும் நுகர்வோருக்கு நியாயமான விலை கிடைக்கவும் இந்த முறை வகை செய்துள்ளது, எனவே 11வது திட்ட காலத்தில் இந்த ஏலமுறை விரிவுபடுத்தப்பட வேண்டும், இது தவிர தற்போதுள்ள நடைமுறைக்குப் பதிலாக நிலக்கரியின் வெப்ப சக்திக்கு ஏற்ற வகையில் விலை நிர்ணயம் செய்யும் புதிய முறை கொண்டு வரப்பட வேண்டும், எ) எண்ணெய் மற்றும் வாயு எண்ணெய் மற்றும் வாயுத் தேவைக்காக கச்சா எண்ணெய் இறக்குமதியையே இந்தியாதொடர்ந்துநம்பியுள்ளது, அதிருஷ்டவசமாக பத்தாவது திட்ட காலத்தில் முதல் நான்காண்டுகளில் பெட்ரோ-யப் பொருட்களின் தேவை 2,7 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது, 2005-06ஆம் ஆண்டு 112 மெட்ரிக் டன்னாக இருக்கும் பெட்ரோ-ய பொருட்களின் பயன்பாடு 11வது திட்ட காலத்தில் 135 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும், அப்போது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி 110 மெட்ரிக் டன்னாக இருக்கும், அதேபோல் வாயு பயன்பாடும் சுமார் 55 எம் டி ஓ இ என்ற அளவுக்கு அதிகரிக்கும், 11வது திட்ட காலத்திற்குள் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட கிருஷ்ணா கோதாவரி இயற்கை வாயு சுரங்கத்தில் உற்பத்தி தொடங்கப்படாத நிலையில் வாயு இறக்குமதி 20 எம் டி ஓ இ ஆக அதிகரிக்கும், 11வது திட்ட கால இறுதிக்குள் நாப்தாவை அடிப்படையாகக் கொண்டு செயல் படும் உர உற்பத்தி வாயுவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் என்ற யூகத்தில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது, நீண்ட கால நலனைக் கருத்தில் கொண்டு நாடுகளுக்கிடையே எரிவாயு குழாய்ப்பாதை அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஆராய வேண்டும், எனினும்11வது திட்டகாலத்தின்போது நமக்கு தேவைப்படும் அளவுக்கு வாயுவை இறக்குமதி செய்வதற்காக எந்த குழாய்ப்பாதையும் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, எனவே திரவமயமாக்கப் பட்ட பெட்ரோ-ய எரிவாயு இறக்குமதி தற்போதுள்ள ஐம்பது லட்சம் டன் என்ற அளவி-ருந்து 4 மடங்கு அதிகரிக்க வேண்டும், எண்ணெய் மற்றும் வாயுத்துறையில் உள்ள மிக முக்கிய கொள்கைப் பிரச்னை பெட்ரோ-யப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வதாகும், கச்சா எண்ணெயின் விலையில் சமீபத்தில் ஏற்பட்ட உயர்வு இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக சில பெட்ரோ-யப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்ட போதிலும் கொள்முதல்மற்றும் விற்பனை விலை இடையிலான இடைவெளி இன்னும் அதிகமாகவே உள்ளது, அதில் ஒரு பாதி எண்ணெய் நிறுவனங்கள் மூலமாகவும் 42 மற்றொரு பாதியை எண்ணெய் நிறுவனங்களுக்காக மத்திய அரசு வெளியிட்ட பத்திரங்கள் மூலமாகவும் ஈடு செய்யப்படுகிறது, இதுதவிர இந்தத் துறையில் உள்ள இன்னும் சில முக்கியப் பிரச்னைகள் வருமாறு : 1, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு விலை நிர்ணயம் செய்து அதை மின்சாரம் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்குதல், 2, எண்ணெய் மற்றும் வாயுத்துறை கட்டுப்பாடுகளை வலுப்படுத்துதல், 3, விரைவில் ஏற்படுத்தப்படவுள்ள குழாய்ப் பாதை மாற்றும் வாயுத் தொகுப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதையும் அதில் போட்டித் தன்மை ஏற்படுவதையும் உறுதி செய்தல், சர்வதேச சந்தையில் அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க ஒரே ஒரு ஏற்புடைய திட்டம்தான் உள்ளது, பெட்ரோ-யப் பொருள்கள் மீதான வரிச்சுமையை படிப்படியாகக் குறைப்பது; பெட்ரோ-யப் பொருட்கள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கும் அதிக லாபத்தைக் குறைப்பது; போட்டியை அதிகரிப்பதன் மூலம் சுத்திகரிப்புத் துறையில் திறனை மேம்படுத்துவது ஆகியவை அடங்கியதே அந்தத் திட்டம், இதனால் சமாளிக்கப்பட்டது போக மீதமுள்ள விலை உயர்வு சுமையை நுகர்வோர் மீது சுமத்தலாம், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு முடிந்த அளவு மானியம் வழங்கலாம், இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி அடிப்படையில் பெட்ரோ-யப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும், இந்தியா கச்சா எண்ணெய் தட்டுப்பாடு உள்ள நாடு, அதே நேரத்தில் பெட்ரோ-ய சுத்திகரிப்பு பணியைத் தேவைக்கு அதிகமாகவே செய்து வருகிறது, எனவே ஏற்றுமதி அடிப்படையில் பெட்ரோ-யப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், இது இறக்குமதி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் விலையை விட குறைவாகவே இருக்கும், பெட்ரோ-யப் பொருட்களின் மீதான பத்து சதவிகித வரியை 7,5 சதவிகிதமாக சமீபத்தில் குறைத்தது சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும், இதை ஐந்து சதவிகிதமாக குறைக்க வேண்டும், ஏ) இதர ஆற்றல் வளங்கள் தொடர்பான முயற்சிகள் 11வது திட்டகாலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு வகையான சக்திகளை உள்ளடக்கிய எரிசக்திக் கொள்கையை விரிவாக ஆராய வேண்டும், 11வது திட்டத்தில் மத்திய மாநில அரசுகள்தான் எரிசக்தித் துறையில் முக்கியப் பங்காற்றும், எனவே எரிசக்திக் கொள்கை ஒவ்வொரு துறை வாரியாக தயாரிக்கப்படக் கூடாது, அனைத்து வகையான சக்திகளையும் ஒரே மாதிரியாக கருதும் வகையில் விரிவான வெளிப்படையான கொள்கை தயாரிக்கப்பட வேண்டும், அத்தகைய கொள்கை பின்வரும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், 1, எரிசக்தித் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் போட்டியை உறுதி செய்ய வேண்டும், அத்துறையில் நுழைவதற்கான தடைகள் நீக்கப்பட்டு அதன் மூலம் சக்தியை உற்பத்தி செய்து மாற்றியமைத்து. வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பயன்படுத்துவதில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வகை செய்யப்பட வேண்டும், 2, உகந்த எரிபொருள் தேர்வு. பலவித எரிபொருள்களை பயன்படுத்தும் வசதி. தொழில்நுட்பம் போன்றவற்றை திறமையாக தேர்வு செய்யும் வகையில் அவற்றுக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், அப்போதுதான் சந்தை சக்திகளின் அடிப்படையில் அவற்றுக்கான 43 ஆதார ஒதுக்கீடு கிடைக்கும், அதற்கு குறிப்பிட்ட பெட்ரோ-யப் பொருள் நம்மிடம் கூடுதலாக உள்ளதா அல்லது குறைவாக உள்ளதா என்பதை கருத்தில் கொண்டு அவற்றின் ஏற்றுமதி அடிப்படையிலோ இறக்குமதி அடிப்படையிலோ விலை நிர்ணயம் செய்யும்முறை கொண்டு வரப்பட வேண்டும், (நமது தேவைக்கு 70% பெட்ரோ-யம் இறக்குமதி செய்யப் படுகிறது) 3, வேளாண்மை. தொழில்துறை. வணிகம். வீட்டு உபயோகம். தனிநபர் போக்குவரத்து. பொதுத்துறை போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும் சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும், 4, எரிசக்தித் துறையில் தனியார்த் துறையினரும் பொதுத்துறையினரும் சம நிலையில் செயல்படும் வகையில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும், அனைத்து வகையான எரிசக்தி தயாரிப்பாளர்களுக்கும் கணிசமான ஊக்கத்தொகை கிடைக்க வகை செய்யப்பட வேண்டும், 5, அனைத்து வகையான எரிசக்தித் துறைக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும், ஒருவகை சக்திக்கு மற்ற வகை சக்திகளை விட அதிக வரி விதிக்கும் முறை இருக்கக் கூடாது, 6, இந்தத் துறையில் சமூக நோக்கங்களையும் பார்க்க வேண்டும், உண்மையாகவே உதவி தேவைப்படுவோருக்கு அந்த உதவி நேரடியாக வழங்கப்பட வேண்டும், 7, சுற்றுச்சூழல் அம்சங்களையும் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை சீர் குலைப்பவர் அதற்கான இழப்பீட்டை செலுத்த வகை செய்யப்பட வேண்டும், இத்தகைய கொள்கையை உருவாக்குவதன் மூலம் எரிசக்தி துறைகளில் உள்ள வேறுபாடுகள் குறைக்கப்படும், அதே நேரத்தில் திறன் அதிகரிக்கும், எரிசக்தியை பாதுகாக்கவும் எரிசக்தித்திறனை மேம்படுத்தவும் பாடுபடும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும், புதுப்பிக்கப்படக் கூடிய சக்திகள் மற்றும் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களை மேம்படுத்தும் முயற்சி எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை, இதற்கு 11வது திட்ட காலத்தில் வகை செய்யப்பட வேண்டும், மேலும் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியை தயாரிக்கும் திட்ட முதலீட்டிற்கு உதவி வழங்குவதைவிட அந்த நிறுவனங்கள் எந்த அளவு புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தியை தயாரிக்கின்றனவோ அந்த அடிப்படையில் அவற்றிற்கு மானியங்களை வழங்கலாம், பூமியில் படிந்து கிடக்கும் எரிசக்தி ஆதாரங்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தோண்டி எடுக்கலாம், நிலக்கரி சுரங்கத்திலுள்ள மீதேன் வாயு முழுமையாக எடுக்கப்பட வேண்டும், காற்றாலை மின்சாரம். தாவரக்கழிவு மின்சாரம். தாவர எரிபொருள் போன்ற புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி ஒட்டு மொத்த எரிசக்தித் தேவையில் மிகக்குறைந்த அளவாகவே உள்ளது, இதை 11வது ஆண்டு காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று சதவிகிதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும், 11வது திட்ட காலத்தில் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தவும் எரிசக்தித் துறையில் தற்சார்பு நிலையை அடையவும் திறமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், சூரிய எரிசக்தி. எரிசக்தி சேமிப்பு போன்ற துறைகளில் நவீன தொழில்நுட்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வேளாண் கழிவி-ருந்து எத்தனால் தயாரிப்பது உட்பட பல்வேறு வகையான உயிரி எரிபொருள் 44 தயாரிப்பு முறை பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும், ஐ) நகர்ப்புறக் கட்டமைப்பு விரைவான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நகரமயமாக்கல் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது, ஆனால் துரதிருஷ்டவசமாக நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் பொருளாதார வளர்ச்சியால் நாம் பயனடைய முடியாத அளவுக்கு சீரழிந்து கிடக்கின்றன, மோசமான நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர், நெரிசல் மிகுந்த சாலைகள். மோசமான பொது போக்குவரத்து வசதி. போதுமான அளவு தண்ணீர் இல்லாமை. சாக்கடைக் கழிவுகளை சரியாக சுத்திகரிக்காதது. அகற்றப்படாத குப்பைகள். போதுமான வசதியில்லாத வீடுகள். அதன் காரணமாக குடிசைகளில் வசிக்கும் 50 சதவிகித நகர்ப்புற மக்கள் போன்றவற்றால் நகர்ப்புற வாழ்க்கைத் தரம் குறைந்துவிட்டது, வளர்ந்து வரும் மற்ற நாடுகளை விட இந்திய நகரங்களின் தரம் குறைவாக இருந்தால் நம்மால் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியைப் பெற முடியாது, நகர்மயமாக்கல் வேகமாக நடைபெற்று வருவதால் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டு இயக்கம் ஏற்படுத்தப்பட்டது, ஏழு ஆண்டுகளுக்கு செயல் படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் நகர்ப்புறப் பகுதிகளை புதுப்பிக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது, முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 63 நகரங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தத் தொடங்கி உள்து, நகர்ப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சீர்த்திருத்தம் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் 11வது திட்ட காலத்தில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு இயக்கத்திற்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட வேண்டும், (பார்க்க பெட்டி-3) பெட்டி-3 ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் கூடுதல் மத்திய உதவி அடிப்படையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதன்படி நகர்ப்புறங்களை புதுப்பிக்க ஆகும் செலவில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை 100 சதவிகித மானிய உதவி என்ற அடிப்படையில் கூடுதல் மத்திய உதவியாக மத்திய அரசு வழங்கும், பெருநகரங்களில் புதுப்பிக்கும் பணிக்கு ஆகும் செலவில் 35 சதவிகிதத்தையும் வடகிழக்கு மாநிலங்களில் 90 சதவிகிதத்தையும் மத்திய அரசு வழங்கும், இந்தத் திட்டங்களை செயல் படுத்துவதால் பலன் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகள் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும், மேலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், மத்திய நகர்ப்புற வளர்ச்சி. நகர்ப்புற வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய மத்திய அரசுத்துறைகள் இதற்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரும், 45 11வது திட்டகாலத்தின் இறுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள அனைத்து நகரங்களிலும் கீழ்க்கண்ட வசதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கும், 1, அனைத்துவகையானஅரசு நிர்வாகங்களுக்கும்நகர்ப்புற சேவைகளுக்கும் வெளிப்படையான. நிதி நிலை கணக்கு. நிதி நிர்வாக அமைப்பு, 2, நிர்வாகம் மற்றும் திட்டமிடுதலுக்காக நகர்வாரியாக கொள்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப் பட்டிருக்கும், 3, நகர்ப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு அடிப்படை நகர வசதிகள் ஏற்படுத்தித் தருதல், 4, நகர்ப்புற நிர்வாகத்தை கவனிக்க நிதி வசதியில் தற்சார்பு பெற்ற அமைப்புகளை உருவாக்குதல், 5, முறையான தெரு விளக்கு வசதிகள். சிறந்த போக்குவரத்து வசதி. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு பெண்கள் அச்சமின்றி செல்வதற்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப் பட்டிருக்கும், 6, உள்ளூர் சேவைகளில் வெளிப்படையான தன்மையும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் கூறும் நிலைமையும் ஏற்படும், 7, நகர்ப்புற நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளில் மின்னணு ஆளுமை கொண்டு வரப்பட வேண்டும், ஒ) தொலைத்தொடர்பு மற்றும் இணையதள இணைப்பு வசதி கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மிகப் பெரிய தொலைத்தொடர்பு புரட்சியைச் சந்தித்துள்ளது, உலகிலேயே மிக அதிக அளவு தொலைபேசி கட்டணம் வசூ-க்கும் நாடாக இருந்த இந்தியா தற்போது மிகக் குறைந்த கட்டணம் வசூ-க்கும் நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது, கடந்த இரண்டாண்டுகளில் ஒவ்வொரு மாதமும் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, அதில் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியப் பங்காற்றுகின்றன, நகர்ப்புறங்களில் தொலைபேசி இணைப்புகள் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் தொலைபேசி அடர்த்தி 14,4 ஆக உள்ளது, கிராமப் பகுதிகளிலும் தொலைத் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கைகள் 11வது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும், தொலைபேசி தவிர தகவல்களை பறிமாறிக் கொள்ள பயன்படும் இணையதள இணைப்பையும் நாம் ஏற்படுத்த வேண்டும், நகர்ப்புறப்பகுதிகளில் இணையதள இணைப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன, எனினும் கிராமப்புறப் பகுதிகளிலும் இந்த சேவை மிகவும் குறைவாகவே உள்ளது, எனவே கிராமப்பகுதிகளிலும் இணையதள சேவையை ஏற்படுத்தி தகவல்கள். வீடியோ படங்கள். ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல 11வது திட்ட காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், 3ஜி – ஜ எஸ் எம். சி டி எம் ஏ. வைப்பி-வைமாக்ஸ் போன்ற நவீன கம்பியில்லா தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு தொலைவுகளுக்கு பல்வேறு இணைப்புகள் வழங்கப்படுகின்றன, எனவே பாரம்பரியமான சாதாரண தொலைபேசியை கொண்டோ அல்லது கம்பியில்லாத் தொழில்நுட்ப தொலைபேசியைக் கொண்டோ அனைத்து கிராமங்களுக்கும் தொலைபேசி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், மாநில அளவிலான அகல கட்டமைப்பு இணைப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள ஆறாயிரம் ஒன்றிய தலைநகரங்களை கண்ணாடி இழை மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அனைத்து கிராமங்களின் கடைசி பகுதி வரையிலும் இணைப்பு வழங்க கம்பியில்லாத் 46 தொலைபேசிகளை பயன்படுத்தலாம், ஆந்திராவில் அனைத்து கிராமங்களையும் கண்ணாடி இழை மூலம் இணைத்து கிகாபிட்-அளவுக்கு இணைப்பு வசதி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது, இந்தியாவுக்கு எந்த வகையான தொலைபேசி முறை ஒத்துவரும் என்று முடிவெடுக்க பல்வேறு வாய்ப்புகளும் ஆராயப்பட வேண்டும், 3,6 நிதி மேம்பாடு விரைவான பொருளாதாரத்தை எட்ட வேண்டுமானால் தற்போதுள்ள நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க வசதியாக அவற்றின் நிதிநிலை மாற்றியமைக்கப்பட வேண்டும், மேலும் முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் தொழில்துறையினர் ஊக்குவிக்கப் பட வேண்டும், தொழிற்சாலை விரிவாக்கத் திட்டங்களுக்கு போதுமான அளவு நிதியுதவி அளிக்கப்பட்டால்தான் இவையெல்லாம் சாத்தியமாகும், இதற்கான பெருநிலை காரணிகளில் உள்நாட்டு சேமிப்பு பற்றி இரண்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது, பொதுத்துறை திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆறாவது அத்தியாயத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது, நிதி அமைப்பின் மூன்றாவது முக்கியத்தூண் என்பது நிதியமைப்புகளும். சேமிப்பு மூலம் கிடைக்கும் நிதியை தகுதிவாய்ந்த பயன் பாட்டாளர்களுக்கு வழங்கும் அவற்றின் திறனுமே, இந்தியாவில் நிதியமைப்பு முறை வணிக வங்கி, வங்கியல்லாத நிதி நிறுவனங்கள். முதலீட்டு நிறுவனங்கள். காப்பீடு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் ஆகியவற்றை அடக்கி இருப்பது மிகப்பெரிய பலமாகும், நிதிச் சந்தையிலும் நிதி நிறுவனங்களிலும் இந்தியர்கள் எவ்வளவு திறமையாக செயல் படுகிறார்கள் என்பது உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு விஷயமாகும், எனவே நிதியமைப்புகளை நாம் தொடர்ந்து வலுப் படுத்துவது அவசியமாகும், தாராளமயமாக்கல் காரணமாக ஏராளமான வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இந்தியாவில் நிதித்துறையில் இதுவரை கடைப் பிடிக்கப்பட்டு வந்த இந்த அணுகுமுறை பொதுவாக வெற்றி பெற்றிருப்பதுடன் நிதி வளர்ச்சிக்கும் உதவி செய்துள்ளது, நிதியமைப்பு ரீதியான ஸ்திரத்தன்மையால் நமக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது, அதை பயன்படுத்திக் கொண்டு புதிய திட்டங்களை நாம் ஊக்குவிக்கலாம், இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல அம்சங்கள் புதுமையை கடைப்பிடிக்கும்படி வ-யுறுத்துகின்றன, பல்வேறு வகையான பாதிப்புகளை சமாளிக்க புதுவிதமான காப்பீடுகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, இந்திய நிறுவனங்கள் பல வெளிநாட்டு நிறுவனங்களை விலைக்கு வாங்கி வருவதால் அவை பல்வேறு பாதிப்புகளுக்கு எதிராக பாதுகாப்பை தேடிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பெருமளவில் முதலீடு செய்யப் படுவதற்கு புதுமையான நிதியுதவித் திட்டங்களும் பாதிப்புகளை சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், நிதித்துறையில் புதுமையை ஊக்கப் படுத்தவும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் துணிச்சலாக முதலீடு செய்வதை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், நமது நிதிக்கொள்கைகள் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கும் வகையில் போதுமான நெகிழ்வுடன் அமைய வேண்டும், 3,7 சுற்றுச்சூழலை பாதுகாத்தல் பொருளாதார வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மக்கள்தொகை பெருக்கம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் சுற்றுச்சூழல் சீர்குலைவு 47 மேலும் தீவிரமடையும், அதற்காக பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாது, அவ்வாறு கட்டுப் படுத்தினால் அது ஒரு புதுவிதமான சுற்றுப்புறச் சீர்க்கேட்டை ஏற்படுத்தும், விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் பட்சத்தில் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுப்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இருக்க வேண்டும், அதேநேரத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு அணுகூலமாக இருக்கும் நிலையை நாம் உருவாக்க வேண்டும், பள்ளிக் குழந்தைகளிடையே விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முறையான கொள்கைகள் மூலம் இதை சாதிக்கலாம், எனவே மேம்பாட்டுத் திட்டம். சுற்றுச்சூழல் ஆகியவற்றை இணைக்கவும். சுற்றுச்சூழலை சீர்க்குலைப்பவர்கள் அதற்கான இழப்பீட்டைச் செலுத்தும் வகையிலும் 11வது திட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அ) காற்று மற்றும் நீரின் தரத்தை மேம்படுத்துதல் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வரையறுக்க காற்று மற்றும் நீரின் தரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியமாகும், நாடு முழுவதும் காற்றின் தரத்தை கண்காணிக்க 300 மையங்களும் நீரின் தரத்தை கண்காணிக்க 850 மையங்களும் உள்ளன, இவை எண்ணிக்கை அடிப்படையிலும் தொழில்நுட்ப அடிப்படையிலும் மேம்படுத்தப்பட வேண்டும், காலத்திற்கு ஏற்ற வகையில் காற்று மற்றும் நீர் சீர்க்கேட்டை கண்காணிப்பதற்கான புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும், முக்கிய நதிகளின் நீர்த்தரத்தை மேம்படுத்தி அவை குளிப்பதற்கு ஏற்றவை என்று அறிவிப்பதற்காகத்தான் நதிகளை சுத்தப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது, ஆனால் இந்த இலக்கை எட்டுவதற்கு இன்னும் வெகுதொலைவு செயல்ல வேண்டியுள்ளது, இந்த திட்டத்திற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் தற்போதைய உத்தியை தீவிரமாக மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது, பல பிரச்னைகளில் திட்டத்தின் தாக்குபிடிக்கும் தன்மை மற்றும் செயல்பாடுகள் தொடர்பான பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன, வீட்டுக்கழிவுகளையும் தொழிற்சாலைக் கழிவுகளையும் சுத்திகரிப்பதை இணைப்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும், 11வது திட்டகால இறுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுகளும் தொழிற்சாலைக் கழிவும் நகர்பகுதிகளி-ருந்து ஆறுகளில் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், ஆறுகள் மாசுபடாமல் தடுக்க குறைந்தபட்சமாக எவ்வளவு தண்ணீர் ஓட வேண்டும், அதை தொடர்ந்து பராமரிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்ட வேண்டும் என்பது பற்றியும் ஆராயப்பட வேண்டும், அது மட்டுமின்றி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் மாநிலங்களுக்கிடையே நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், மக்கள்தொகை பெருக்கத்தாலும் நகர்ப் பகுதிகள் பெருகி வருவதாலும் ஆறுகளை சுத்தம் செய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது, அது எந்த அளவு வெற்றி பெறும் என்பது ஆறுகளை நிர்வகிப்போர் மற்றும் பயன் படுத்துவோர் எடுக்கும் முயற்சிகளைப் பொறுத்தே அமையும், இதை சாதிக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த நடவடிக்கைகள் கொள்கை மற்றும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும், கடந்த 2001ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஏற்படுத்தப்பட்ட நீரின் தர அளவீட்டு ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் நீரின் தரம் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பது இன்னும் கணக்கிடப் படவில்லை, நீரின் தரத்தை கண்காணிக்கவும் தரத்தை மேம்படுத்தவும் நடைமுறைக்கு ஏற்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும், 48 ஆ)திடக்கழிவு மேலாண்மை புதுப்புது வகையான திடக்கழிவுகளை அதிகரித்து வருவது அனைத்து நகரங்களிலும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது, அகற்றப்படாத குப்பைகள் பார்ப்பதற்கு அசுத்தமாக இருப்பதுடன் நோய்கள் ஏற்படவும் காரணமாகிறது, நமதுநாட்டின் நகர்ப்பகுதிகளில் இட வசதி மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலங்களில் குப்பையைக் கொட்டுவது சரியான செயல் அல்ல, இவ்வாறு குப்பைகளைக் கொட்டுவது குறைக்கப்பட வேண்டும், பெரும் பாலான தொழில்மயமான நாடுகள் குப்பைகளை வகைப்படுத்தி மக்கும் குப்பைகள் என்றும் மக்காத குப்பைகள் எனவும் பிரித்துக் கொடுக்கும்படி மக்களை கேட்டுக் கொண்டுள்ளன, இந்தியாவில் குப்பை சேகரிப்பவர்கள்தான் அவற்றை வகைப்படுத்தும் பணியிலும் ஈடுபடுகின்றனர், பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் சேகரிப்போரின் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும், எனவே நகர்ப் பகுதிகளில் உள்ள மக்களிடையே குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என பிரித்து மக்காத குப்பைகளை மறு சூழற்றி செய்யவும் மக்கும் குப்பைகளை எருவாக்கவும் செய்யும் வகையிலான அமைப்பை. மக்களின் பங்கேற்புடன் ஏற்படுத்த வேண்டும், இ) வன விலங்குகளை பாதுகாத்தல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிர்வகிக்கவும். தேசிய பூங்காக்கள். சரணாலயங்கள் போன்றவற்றில் வசிக்கும் பல்வேறு வகையான உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை பற்றிய விபரங்களை பராமரிக்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், நாட்டிலுள்ள முக்கிய வன விலங்கு வசிப்பிடப் பகுதிகளை பொதுமக்களின் பங்களிப்புடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் செயல்படுத்தும் ஒருங்கிணைந்த வனப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காடுகள் மற்றும் வன விலங்குகளை கண்காணித்து அது பற்றிய தகவல்கள் திரட்டப்பட வேண்டும், வனப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்குள்ள விலங்குகளுக்கு தனிமையான இடம் வழங்கும் நோக்குடன் வேறு இடங்களுக்கு மாறுவது ஊக்கப்படுத்தப்பட வேண்டும், இதற்காக அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குதல் உட்பட பு-கள் பாதுகாப்பு அலுவல் குழு பரிந்துரைத்த அனைத்து சலுகைகளையும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், ஈ) பசுமைப் பரப்பை ஏற்படுத்துவதன் மூலம் நிலச் சீரழிவைத் தடுத்தல் நில ஆதாரங்களை தேவைக்கதிகமாக பயன்படுத்துவதே அவற்றின் சீரழிவுக்கு காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, நீர் மற்றும் நில வளத்தை பராமரிக்கவும் அப்பகுதி மக்களுக்கு வாழ்க்கை ஆதார முறையை வலுப்படுத்தவும் பயிர் செய்ய உகந்த கா-இடங்களில் காடு வளர்ப்பை மேற்கொள்ள வேண்டும், பொது நில ஆதாரங்களை பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சமூக காடு வளர்ப்பு திட்டத்தை செயல் படுத்துவது சிறந்த நடவடிக்கையாக அமையும், வேளாண் மற்றும் பண்ணை சார்ந்த காடுகளை ஊக்குவிப்பதும் விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதும் 1988ஆம் ஆண்டில் தேசிய வனக்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான உத்தியாகும், மரங்களை வளர்க்கும்படி விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் சாதகமான சுற்றுச்சூழலை ஏற்படுத்த முடியும், தொழில்துறையினருக்கு அரசு வனப் பகுதியி-ருந்து மானிய விலையில் மூலப் பொருட்களை வழங்கும் முறை கைவிடப்பட வேண்டும், பண்ணைக்காடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆதார விலை மூலம் உள்நாட்டு சந்தையிலும். வெளிநாட்டு 49 சந்தையிலும் விற்கப்படுவதற்கு வகை செய்யப் பட வேண்டும், பண்ணை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்குடன் அந்தத் துறையி-ருந்து வனத்துறை விலகிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், உ) பசுமைப் பரப்பை அதிகரித்தல் 2002ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் உதவியுடன் திரட்டப்பட்ட தகவ-ன்படி இந்தியாவின் ஒட்டுமொத்த பசுமைப்பரப்பு 23,68 சதவீதமாகும், இது 2000வது ஆண்டில் இருந்ததைவிட 0,65 சதவிகிதம் அதிகமாகும், இது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும், இதே நிலை நீடித்தால் 25 சதவிகித பசுமை பரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற பத்தாவது ஐந்தாண்டு திட்ட இலக்கு 2007ஆம் ஆண்டில் எட்டப்பட்டுவிடும், எனினும் பசுமை பரப்பின் தரம் குறைந்து வருகிறது என்பது கவலை தரும் விஷயமாகும், அடர்ந்த காடுகளின் அளவு 6,3 சதவிகிதம் குறைந்துள்ளது, வனப்பகுதிகளின் உற்பத்தியை பெருக்க மாநில வன நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தச்சு மரங்கள் மற்றும் இதர வகை மரங்கள் வளர்ப்பு அதிகரித்து அவை வெட்டியவுடன் மீண்டும் வளர்க்க வகை செய்ய வேண்டும், அதற்கான முதலீடுகளும் செய்யப்பட வேண்டும், இதை வன பராமரிப்புக்கான மானியம் மூலம் செய்யலாம் என 11ம் நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது, சீரழிந்து வரும் காடுகளை மேம்படுத்த பல்வேறு தரப்பினரையும் கொண்ட கூட்டு வன நிர்வாக முறை கடந்த 1990களில் உருவாக்கப் பட்டது, காடுகளை மேம்படுத்துவதால் கிடைக்கும் பயன்களை பகிர்ந்து கொள்ளும் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டது, ஆனால் மக்களால் நிர்வகிக்கப்பட்ட காடுகள் மோசமாக சீர்க்குலைந்து விட்டதாலும் அதி-ருந்து எந்த பயனும் கிடைக்காததாலும் இந்த முறை தோல்வியடைந்து விட்டது, எனினும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களின் தலைமையில் செயல்பட்டு வரும் குழுக்களின் பராமரிப்பில் உள்ள காட்டுப் பகுதிகளில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது, அதை அடிப்படையாகக் கொண்டு கூட்டு வன நிர்வாக முறை வலுப்படுத்தப்பட வேண்டும், அந்த முறையை நாடு முழுவதும் விரிவுபடுத்த பத்தாவது திட்டத்தில் முன் மொழியப்பட்டது, அதன்படி காடுகளை ஒட்டியுள்ள 1.70.000 கிராமங்களில் 2005ஆம் ஆண்டு வரை 99.708 கூட்டு வன நிர்வாகக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன, இது பத்தாவது திட்ட காலத்தி-ருந்த 62.890 குழுக்கள் என்ற அளவைவிட அதிகமாகும், 11வது திட்ட காலத்தில் கூட்டுவன நிர்வாக குழுக்களை வலுப்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், காடுகளை பராமரிக்கும் மக்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், 11வது திட்ட காலத்திற்கென பரிசீ-க்கப்பட வேண்டிய சில முயற்சிகள் 1, சமூக காடு வளர்ப்பு மூலம் பொது நில ஆதாரங்களை புதுப்பிக்க கிராம உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும், 2, காகிதம் மற்றும் காகிதக்கூழ் தொழிற் சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை தனியார் நிறுவனங்களே விவசாயிகளுடன் இணைந்து வேளாண் காடு வளர்ப்பு மூலம் தயாரித்துக் கொள்ளும் வகையில் விதி முறைகள் திருத்தப்பட வேண்டும், 3, சீரழிந்த நிலங்களை வனங்களாக மேம்படுத்தும் பணியில் வர்த்தகத் துறையினரும் ஈடுபடுவதை ஊக்குவிக்க வேண்டும், அதே நேரத்தில் அந்தப் பணியில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள மக்களின் முன்னுரிமைகள் விட்டுக் கொடுக்கப்படக்கூடாது, 4, காடு வளர்ப்புத் துறையில் முதலீட்டை விரைவுபடுத்தவும் உற்பத்தி மற்றும் 50 வேலைவாய்ப்பை பெருக்கவும் சுற்றுச் சூழல்சட்டப்பிரிவுகளை திருத்த வேண்டும், ஊ)சுற்றுச்சூழல் அனுமதி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக புதிய கொள்கையை நாம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம், இதன் காரணமாக ஏற்கனவே இருந்த பழைய உரிம அனுமதி முறை மீண்டும் ஏற்பட்டுவிடவோ அதன் காரணமாக அதற்கு முன்பு இருந்த எதிர்மறை விளைவுகள் மீண்டும் ஏற்படவோ வாய்ப்பு எழாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதைத் தடுக்கவும் அந்த முறை வெளிப்படையாக அமையவும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிகளை திருத்த வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் விரிவான வளர்ச்சிக்குத் தேவையான அதிக முதலீடு கிடைக்காமல் போய்விடும், 4, அனைத்தும் அடங்கிய வளர்ச்சிக்கு முக்கிய முயற்சிகள் மக்கள் வாழ்வாதாரத்தையும் வேலை வாய்ப்பு பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்ட துறைவாரிக் கொள்கைகளுடன். மேம்பாட்டு நடைமுறைகளில் விரிவான மக்கள் பங்கேற்பும் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதுமான அணுகுமுறையானது கல்வி. சுகாதாரம். அடிப்படை பொது வசதிகளின் அவசியத்தை வ-யுறுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது, இந்த அடிப்படை வசதிகள் கிடைக்காதது சமுதாயத்தின் பெரும்பகுதி மக்களின் நலனை நேரடியாக பாதிப்பது மட்டுமின்றி வளர்ச்சியின் பயன்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு மறுக்கிறது, அது மட்டுமின்றி மனிதவள மேம்பாட்டின் தரத்தை கட்டுப்படுத்துவது வளர்ச்சியையே கட்டுப்படுத்திக் கொள்வதாகும், 4,1 கல்வியின் மூலம் ஆற்றல் மேம்பாடு கல்வி மூலம் கிடைக்கும் அறிவும். திறமைகளும் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆக்கப்பூர்வமானவேலைவாய்ப்பை வழங்குவதால் ஆற்றல் மேம்பாட்டுக்கு கல்விதான் மிக முக்கிய கருவியாகும், எனவே. அனைவருக்கும் கல்வி வழங்குவதில் 11வது ஐந்தாண்டுத் திட்டம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் அவர்களால் எந்த அளவுக்கு கல்வியைப் பெற முடியுமோ அந்த அளவுக்கு கல்வியைப் பெற வேண்டும், அதற்கு அவர்களது பெற்றோரின் செலவழிக்கும் திறன் ஒரு தடையாக இருக்கக்கூடாது, அ)தொடக்கக்கல்வி : அனைவருக்கும் கல்வித் திட்டம் இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான பயனுள்ள ஆரம்பக் கல்வி வழங்குவதற்காக சர்வசிக்ஷ அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது, அத்திட்டத்திற்கு வழங்குவதற்காக அனைத்து வரிகளின் மீதும் இரண்டு சதவீதம் கல்வி வரியை கூடுதலாக வசூ-ப்பது என்ற மிகப்பெரிய நடவடிக்கை 2004-05ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது, சமூக ரீதியாகவும். பா-ன ரீதியாகவும். பிராந்திய ரீதியாகவும் கல்வி அடைவுகளில் குழந்தைகளிடையே உள்ள இடைவெளிகளை நிரப்பும் நோக்குடனும். பள்ளிகளை நிர்வகிப்பதில் சமுதாயத்தை கலந்துகொள்ளச் செய்யும் நோக்குடனும் இத்திட்டம் தொடங்கப் பட்டது, அதன் பின்னர் இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, 6 முதல் 14 வயது வரையுடைய அனைத்துக் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு 10-வது திட்டக்காலத்தின் இறுதிக்குள் எட்டப்பட்டுவிடும், எனினும். தற்போதைய நிலையில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது மட்டுமே முதல் நடவடிக்கையாக உள்ளது, இந்தக் குழந்தைகள் 51 ஈடுபடுவது. குழந்தைகளின் கவனத்தை ஈர்க்க முடியாத அளவுக்கு கற்பிக்கும் முறை இருப்பது. ஆசிரியர்களைக் கண்டு மாணவர்கள் அச்சப்படுவது போன்ற காரணங்கள்தான் மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிடுவதற்கான முக்கியக் காரணங்களாகும், ஏழைக் குடும்பங்களில் மாணவர்கள் அடிக்கடி வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் அவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுவிட்டு பணியாளர்களாக மாறி விடுகின்றனர், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஏழைக் குடும்பங்களுக்கு வருமானத்தை வழங்குவதால் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, இன்னும் சில குடும்பங்களில் பெற்றோர் வேலைக்குச் செல்லும் நேரத்தில் கைக்குழந்தைகளை மாணவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, ஆனால். வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள அந்த இடத்திலேயே வசதிகள் செய்து தரப் பட்டிருப்பதால் படிப்பை பாதியில் விடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும், இது ஒருபுறம் இருக்க. வேலைக்குச் செல்லும் குழந்தைகள் வேலை முடிந்து திரும்பிய பின்னர் அவர்களுக்காக முகாம்களை அமைத்து கல்வி வழங்குவதன் மூலம் அவர்களையும் கல்விப் பாதைக்கு திருப்ப முடியும் என்பது கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அந்த சேவையில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, மிகக் கொடிய வறுமை நிலவும் பகுதிகளில் சிறப்பாக நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகள். அப்பகுதியில் உள்ள குழந்தைகள் தெருக்கள் மற்றும் இரயில்வே நடைபாதைகளில் வசிப்பதையும். சிறுவயதிலேயே வேலைக்குச் செல்வதையும் கட்டுப்படுத்திட உதவியுள்ளன, மதிய உணவு திட்டத்தின் மூலம் சத்தான அனைவரும் 8 ஆண்டுகள் பயனுள்ள பள்ளிக் கல்வியை நிறைவு செய்வது அவசியமாகும், ஆனால். 2003-2004ஆம் ஆண்டு வாக்கில் தொடக்கப்பள்ளியில் பாதியில் நிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 31 சதவீதம் என்பதால் இந்த இலக்கை எட்டுவது பிரச்சினையாகவே உள்ளது, சில மாநிலங்களில் பள்ளியில் இருந்து இடைநிற்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியா விட்டாலும். அதன் அளவையாவது கணிசமாக குறைக்க வேண்டும், பள்ளிகள் ஒரே இடத்தில் அதிகாரம் கொண்ட அமைப்பு மூலம் நிர்வகிக்கப்படும் நடைமுறையை மாற்றி பெற்றோர்கள். கல்வியில் அக்கறை கொண்டவர்கள் அடங்கிய உள்ளூர் பள்ளி நிர்வாகக் குழுக்கள் மூலம். பள்ளிகள் நடத்தப்படும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் அந்தக் குழுக்களுக்கு தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தீர்வுகள் கிடைக்கச் செய்வது நிர்வாகத் திறமை கிடைக்கச் செய்வது போன்றவை அவசியமாகும், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் முன் உள்ள ஒரு முக்கியப் பணி குழந்தைகள் அனைவரையும் கவரும் வகையிலும். மகிழ்ச்சியான இடமாகவும். அனைவரும் விரும்பும் இடமாகவும் பள்ளிகளை மாற்றுவதுதான், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போதுமான பணியாளர்களை நியமிப்பது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கற்பித்தல் திறனை ஏற்படுத்துவது போன்றவற்றில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைய 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பள்ளிப்படிப்பை மாணாக்கர் பாதியிலேயே கைவிடுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன, பள்ளிகள் நீண்ட தூரத்தில் இருப்பது. பள்ளிகள் முறையாக செயல்படாதது. ஆசிரியர்கள் பள்ளிக்கு வராதது. பள்ளிக்கு வந்தாலும் கற்பிப்பதைத் தவிர மற்ற பணிகளில் 52 உணவு வழங்கப்படுவதால் பள்ளிக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அவர்களின் உடல் வளர்ச்சியும் ஊட்டச்சத்து நிலையும் மேம்படுத்தப்படுகிறது, மேலும். மதிய உணவு திட்டத்தில் அனைத்துக் குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவதால் அவர்களுக்கிடையே உள்ள ஜாதி. சமய. இன வேறுபாடுகள் அகற்றப்படுகின்றன, மதிய உணவு திட்டத்தின்படி உணவைத் தயாரிக்கும் பணியில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரே ஈடுபடுவதன் மூலம் தரமான உணவு தயாரிக்கப்படுவது உறுதி செய்யப் படுகிறது, எனவே. உணவு தயாரிக்கும் பணி குழந்தைகளின் தாயார்களின் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப் படலாம், மதிய உணவு திட்டத்தின் நிர்வாகமும். மேற்பார்வை அமைப்பும் மேம்படுத்தப்படுவது அவசியமாகும், இத்திட்டத்தின்மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட வேண்டும், இதற்காக பள்ளி சுகாதார திட்டங்கள் மதிய உணவு திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும், அதேபோல் மதிய உணவுத்திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டத்துடன் இணைக்கப்படுவதும் அவசியமாகும், தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்வது மிகவும் சிக்கலான பணியாகும், இந்த விஷயத்தில் தற்போதுள்ள நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது, பள்ளிகளில் நான்கு ஆண்டுகள் கல்வி பயின்ற 38 சதவீத குழந்தைகளால் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள மிகச்சிறிய வாக்கியங்கள் அடங்கிய பத்தியைக்கூட படிக்க முடியவில்லை என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 2 தெரிவிக்கின்றன, 55 சதவீத குழந்தைகளால் மூன்று இலக்க எண்ணை ஓர் இலக்க எண்ணால் வகுக்க முடியாத நிலையும் உள்ளது, இவை இப்படி இருக்கும்போது மற்ற பாடங்களை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க 11வது ஆண்டுத்திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், பல மாநிலங்களில் பிரச்சாரங்களின் மூலம் குழந்தைகளின் அடிப்படைத் திறனை மேம்படுத்தி சோதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, அத்தகைய சோதனை முயற்சிகள் மதிப்பிடப்பட வேண்டும், இதற்கான தேசிய அளவிலான சோதனை தர நிலைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் அடிப்படையில் தகுதிபெற்ற நிறுவனங்கள் குழந்தைகளின் நிலையை மதிப்பிட வேண்டும், அவ்வாறு செய்வது கற்றுக் கொள்ளும் திறனை மேம்படுத்தவும். அவற்றுக்கான இலக்குகளை நிர்ணயிக்கவும் உதவும், கற்றுக்கொள்ளும் திறன் மிகவும் மோசமாக இருப்பதற்கு. போதுமான ஆசிரியர்கள் இல்லாமை. அவர்களின் கற்பிக்கும் திறனும். குழந்தைகளுக்கு ஆர்வம் ஊட்டும் தன்மையும் பொறுப்புணர்வும் மிகவும் குறைவாக இருப்பது. ஆகியவை சில காரணங்களாகும், பல பகுதிகளில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கே வராமல் இருப்பது பெரிய பிரச்சினையாகும், ஆசிரியர்களுக்கான பயிற்சியும் போதுமான அளவு இல்லை, ஆசிரியர்களின் செயல் பாடுகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை ஊராட்சி அமைப்புகளுக்கும். பொதுமக்கள் அடங்கிய கல்விக் குழுவுக்கும் வழங்குவதன் மூலம் ஆசிரியர்களின் பொறுப்புணர்வை அதிகரிக்க முடியும், இவற்றையெல்லாம்விட ஆசிரியர்களுக்கு பொறுப்புணர்வை ஏற்படுத்த மிகவும் சக்திவாய்ந்த வழி தங்களது குழந்தைகள் எங்கு படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமையை பெற்றோர்களுக்கே வழங்குவது தான், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எதில் 2 கிராமப்புறங்களில் ஆண்டு கல்வி நிலை (அநஉத) 2005 – பிரம் அமைப்பு நடத்திய கணக்கெடுப்பு 53 வேண்டுமானாலும் குழந்தைகளை சேர்க்கும் உரிமை பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும், (தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் பட்சத்தில். அவர்களுக்கான கட்டணத்தை அரசிடம் இருந்து பள்ளிகள் பெறும் வசதியை ஏற்படுத்தலாம்), இதன் மூலம் பள்ளிகளிடையே போட்டி உணர்வை ஏற்படுத்தும் திட்டம் பரிசீ-க்கப்பட வேண்டும், இந்த திட்டம் சோதனை அடிப்படையில் நடத்தப்படலாம், குழந்தைகள் எந்த அளவுக்கு கற்றுக் கொள்கின்றன என்பதே தன்னாட்சி பெற்ற அமைப்புகள் மூலம் அவ்வப்போது சோதித்துப் பார்க்கலாம், இவ்வாறு செய்வதன் மூலம் பள்ளிகளை தரப்படுத்தலாம், தங்களது குழந்தைகளை எங்கு சேர்க்கலாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்ய அது உதவும், பள்ளிகள் குறுகிய நோக்குடன் வெறும் கல்வியை மட்டும் கற்றுத்தராமல் தொலை நோக்குடன் செயல்பட வேண்டும், குழந்தைகளின் இதர திறமைகளையும் பள்ளிகள் மேம்படுத்த வேண்டும், பா-ன வேறுபாட்டை களைதல். சுகாதாரக் கல்வி போன்றவையும் ஆரம்ப பள்ளி நிலையிலேயே பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், இதன் மூலம் குழந்தைகளின் அடிப்படைத் திறனை மேம்படுத்தலாம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும். திட்டமிட்டே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதை நிறுத்தவும். பா-ன சம நிலையின் அவசியம் பற்றியக் கல்வி இளம் வயதிலேயே வழங்கப்பட வேண்டும், பா-னங்களின் ஒரு தரப்பினர் உயர்ந்தவர்கள். மற்றொரு பிரிவினர் தாழ்ந்தவர்கள் என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் குழந்தைப் பருவத்திலேயே அகற்றப்பட வேண்டும், பள்ளிக்குச் செல்வது குழந்தை வளர்ச்சியில் ஒரு அம்சம் மட்டும்தான், அனைத்துக் குழந்தைகளின் வாழ்க்கையிலும் நல்ல ஆரம்பத்தைத் தருவதற்கு அவர்களை சிறப்பாக உருவாக்குவது முக்கியமாகும், குழந்தைகளுக்கு சரியான தொடக்கத்தை தருவதை இலக்காக வைத்து 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும், (பார்க்க பெட்டி-4) 54 ஆ)பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு உதவுதல் வீடின்றி தெருக்களில் வசிக்கும் குழந்தைகள். உடல் குறைபாடுடைய குழந்தைகள் மற்றும் இதர பின்தங்கிய குழந்தைகளை கண்டறிந்து அவர்களையும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும், சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் வார்த்தைத்திறன் குறைவாக இருப்பது உட்பட பல்வேறு காரணங்களால் பாடங்களை கற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள், தொடக்கப்பள்ளிக்கு முன்பான கல்வி முறையில் சிறப்பு உதவிகளை செய்வதன் மூலம் இந்த குறைபாட்டில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவலாம், கற்றுக்கொள்ளும் திறனை விரிவு படுத்தவும். கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான பங்காற்ற முடியும், மாநில அரசுகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் பொதுத்துறை. தனியார்துறை பங்களிப்புடன் இத்தகைய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை பள்ளிகளில் செயல்படுத்தலாம், ஐ.இ.ஈ.ந. – அங்கன்வாடி திட்டத்தின் பள்ளிக்கு முந்தைய கல்விமுறை மிகவும் பலவீனமாக உள்ளது, அதன் காரணமாக குறைந்த வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதும். தொடக்க வகுப்புகளிலேயே திரும்பத் திரும்பப் படிக்கும் அளவும் அதிகமாக உள்ளது, எனவே. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் சேருவதற்கு முன்பாகவே பெட்டி – 4 குழந்தை வளர்ப்பு – சரியான தொடக்கம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் மையக் கருத்தே குழந்தைகள் மேம்பாடுதான், நமது குழந்தைகள் அவர்களின் குழந்தை பருவத்தை வேலை. நோய். மனக்கசப்பு போன்றவற்றால் இழந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நாம் கடமைப் பட்டுள்ளோம், ஐ.இ.ஈ.ந. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி 6 வயது வரை உடைய குழந்தைகளுக்கு சரியான சத்துணவை தருவதும் நமது நோக்கமாகும், இது பெற்றோர் குழுவின் பங்களிப்புடன் கூடிய சமுதாயம் சார்ந்த திட்டமாகும், அதில் வழங்கப்படும் சத்துணவு பருவ நிலைக்கும். பிராந்தியங்களுக்கும் ஏற்ற வகையில் விதம் விதமாக இருக்க வேண்டும், மேலும் இத்திட்டம்கர்ப்பமாக இருக்கும் பெண்களையும். பலவீனமான நிலையில் உள்ள தாய்மார்களையும் கண்டறிந்து வலுப்படுத்தும், தற்போதைய நிலையில் ஐ.இ.ஈ.ந. திட்டத்தின் பள்ளிப் பருவத்திற்கு முந்தைய நிலை கல்வி வழங்குவது மிகவும் பலவீனமாக உள்ளது, இளம் பருவத்திலேயே கல்வி வழங்கும் திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், அதன்பின் குழந்தைகளுக்கு நல்ல சுகாதாரம் மற்றும் உடல் தூய்மை பயிற்சிகளை ஐ.இ.ஈ.ந. மையங்கள் வழங்க வேண்டும், அதற்கு அந்த மையங்களில் கழிப்பிட வசதியும். சுத்தமான குடிநீர் வசதியும் இருப்பது அவசியமாகும், நமது பாடத்திட்டங்களில் உள்ளூர் கவிதைகளும். நாட்டுப்புறக் கதைகளும். இல்லாத நிலையில் குழந்தைகளை விளையாடச் செய்தாலே அதி-ருந்து அவற்றை குழந்தைகள் கற்றுக்கொள்ளும், அவ்வாறு கற்றுக்கொள்ள வசதியாக சமுதாயத்தில் உள்ள மூத்தக் குடிமக்கள் அந்த மையங்களுக்குச் சென்று குழந்தைகள் சந்திக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் குழந்தைகளை மேம்படுத்துவது. கற்பிக்கும் முறையில் நாமும் பங்கேற்றோம் என மூத்த குடிமக்களை மனநிறைவு அடையச் செய்வது என்று இரட்டைப் பயன்களை எட்டலாம், 55 குறைந்தபட்சம் ஓராண்டுக்கு குழந்தைக்கல்வி வழங்கப்பட வேண்டும், இந்த முறை படிப்படியாக அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், இ) மேல்நிலைக் கல்வி அறிவுசார் பொருளாதாரத்திற்கு அகில உலகமே தயாராகி வரும் நிலையில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்குவதுடன் மட்டும் திருப்தி அடைந்துவிட முடியாது, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் அறிவுசார் பொருளாதாரத்தில் 8 ஆண்டுகள் மட்டுமே பள்ளிக் கல்வி முடித்த ஒருவர் கல்வி அறிவே இல்லாதவராக கருதப்படும் நிலை உருவாகும், எனவே. அனைவரும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு வரை அல்லது உயர்நிலை பள்ளி வரை கல்வி கற்பதை 11வது திட்டம் இலக்காகக் கொள்ள வேண்டும், மேலும். 10ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பொதுக்கல்வி யுத்தி வரையறுக்கப்பட வேண்டும், மேலும். 6 முதல் 16 வயது வரையுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்தக் கல்வி வழங்கப்பட வேண்டும், அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற இலக்கை அனைவருக்கும் கல்வித் திட்டம் எட்டிவிட்டதால் உயர்நிலை மேல்நிலை கல்விக்கான தேவை அதிகரிக்கும், மேல்நிலை கல்விக்காக அனைவருக்கும் கல்வித்திட்டம் இரண்டு என்ற புதிய இயக்கம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும், மேல்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதற்கு அரசுத்துறை முயற்சிகள் மட்டுமின்றி தனியார் துறை நடவடிக்கையும் தேவை, தற்போதைய நிலையில் மொத்தமுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 58 சதவீத பள்ளிகள் தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளாகும், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும், இதற்குக் காரணம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான நிதி உதவியின் அளவை அதிகரிப்பதை மாநில அரசுகள் முற்றிலுமாக நிறுத்தி விட்டதுதான், எனவே. மேல்நிலை கல்வி வழங்குவதில் அரசுக்கு உள்ள பொறுப்பையும். தனியார் நிறுவனங்கள் வளருவதற்கான வாய்ப்பையும் வ-யுறுத்தும் வகையில் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் யுத்திகள் வகுக்கப்பட வேண்டும், தனியார் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அவற்றுக்கும் அரசுப்பள்ளிகளுக்கும் இடையே போட்டித்தன்மையை வளர்ப்பது கல்வித்தரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கை உள்ளது, அதேநேரத்தில். தனியார் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் மேல்நிலைக் கல்வி வழங்க அரசுப் பள்ளிகள் இருக்கும் நிலையை ஏற்படுத்துவதுடன் தனியார் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளிகளால் கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என்ற நிலையும் உருவாக்கப்பட வேண்டும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்.பழங்குடியினர். சிறுபான்மையினர். பெண்கள் ஆகியோர் பள்ளிகளில் சேரும் விகிதம் குறைவாக இருப்பதால் அவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், ஒவ்வொரு கிராமத்திலும் மேல்நிலைப் பள்ளிகளை அமைக்க முடியாது என்பதால் கிராமப்பகுதிகளுக்கு மேல்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவது பெரும் சவாலாகவே உள்ளது, எனவே. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களுக்கு ஒரு பள்ளியாவது அமைக்கப்பட வேண்டும், போதுமான அளவுக்கு மேல்நிலைப் பள்ளிகள் அமைக்கப்பட்டவுடன். உயர் தொடக்கக் கல்வியையும் அப்பள்ளிகளுடன் இணைக்கலாம், ஈ) தொழில்நுட்ப / தொழில்கல்வி மற்றும் திறன் மேம்பாடு தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் தற்போதைய சூழ-ல். தகவல் 56 தொழில்நுட்பம். காப்பீடு. வங்கியியல். சுற்றுலா. சில்லரை விற்பனை போன்ற குறைந்த அளவு கட்டமைப்பு தேவைப்படும் தொழில்களை கற்றுத் தருவதில் பள்ளிகள் கவனம் செலுத்த வேண்டும், மேலும். பயிற்சி பெறுவதற்காக ஐ,டி,ஐ, எனப்படும் தொழிற்பயிற்சி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும், அதைவிட முக்கியமான அம்சம் இந்த மையங்களில் அளிக்கப்படும் பயிற்சி சம்பந்தப்பட்ட தொழில்துறை மற்றும் அதில் உள்ள வேலைவாய்ப்புகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான், மேலும் தற்போது பயிற்சிகள் அளிக்கப்படும் தொழில் பிரிவுகளின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரிக்க வேண்டும், உதாரணமாக தற்போது 40 பிரிவுகளில் அளிக்கப்படும் பயிற்சிகள். சீனாவில் உள்ளதுபோல் 4.000 பிரிவுகளில் வழங்கப்பட வேண்டும், 60வது சுற்று தேசிய ஆய்வில் சேகரிக்கப்பட்ட விவரங்களின்படி 15 வயது முதல் 29 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்களில் 3 சதவீதம் பேரும். நகர்ப்புற இளைஞர்களில் 6 சதவீதம் பேரும் மட்டுமே முறையான தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் வேலையில் முன்னேறுவதற்காகவும். வேலையை மாற்றிக் கொள்வதற்காகவும்தான் இந்தப் பயிற்சியைப் பெற்றுள்ளனர், எனவே. தொழிற்பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை தற்போதுள்ள 20 முதல் 30 லட்சம் பேர் என்ற அளவில் இருந்து ஒன்றரை கோடி பேர் என்ற அளவுக்கு விரிவுபடுத்த வேண்டும், இதற்காக ஐ,டி,ஐ,க்களை நவீனப்படுத்த புதுமையான வழிகளை உருவாக்குவதில் 11வது ஐந்தாண்டுத் திட்டம் கவனம் செலுத்த வேண்டும், ஐ,டி,ஐ,கள் தொழில்துறைக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்வதற்காக அவற்றின் நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காக 2004ஆம் ஆண்டில் இருந்தே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, முதல் கட்டமாக 100 ஐ,டி,ஐ,களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால். இன்னும் அதிக அளவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், தற்போதுள்ள ஐ,டி,ஐ, கல்வி முறை ஒரு அரசாங்கத்துறை எப்படி நடத்தப்படுமோ அதைப்போல நடத்தப்பட்டு. தொழில் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் செயல்படுகிறது, இந்த நிலையை மாற்ற ஐ,டி,ஐ,க்களை பதிவு செய்யப்பட்ட சங்கங்களாக மாற்றி அவற்றுக்கு நிதி மற்றும் நிர்வாக தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும், இந்த ஐ,டி,ஐ,க்கள் தகுதியுடைய தொழில்நுட்ப வல்லுநரை தலைவராகக் கொண்டு சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும், அந்த ஐ,டி,ஐ,யில் படித்துவிட்டு வெளியேறிய மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது. எத்தனைப் பேரின் ஊதியம் அதிகரித்தது என்பதைப் பொறுத்து அதன் தரம் மதிப்பிடப்பட வேண்டும், இதற்காக பொது உணர்வு கொண்ட குடிமக்கள். ஐ,டி,ஐ,யில் இருந்து மாணவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் தொழிற்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும், ஐ,டி,ஐ,க்களை நடத்துவதில் பொதுத்துறை. தனியார்த்துறை கூட்டணி ஏற்படுத்தப்பட்டால் தொழில்துறையின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை உருவாக்கவும். மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும், ஆண்களுக்கும். பெண்களுக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்கு 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிக முன்னுரிமை அளிக்கப் படுவதுடன் அதையும் ஒரு தொழிலாகக் கருதி அதற்கு முதலீட்டை ஈர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், அதிக அளவு ஊதியம் தரும் தகவல் தொழில்நுட்பம். விமானப் பணியாளர்கள். ஆடை வடிவமைப்பு போன்ற பணிகளுக்கும். அரசு வேலை வாய்ப்புள்ள பணிகளுக்கும் மட்டும்தான் தனியார் முதலீடு வழங்கப்படுகிறது, மேலும். தனியாரால் நடத்தப்படும் பயிற்சி மையங்கள் அனைத்தும் 57 மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே உள்ளன, கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சிக்கு உதவும். சிறிய நகரங்களில் ஏட்டுக் கல்வியும். கல்லூரிக் கல்வியும் மட்டுமே கிடைக்கிறது, வேளாண் பதப்படுத்துதல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது, ஆனால். தொழில் பிரிவுக்கு செல்ல முடியாத இளைஞர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வேலை வழங்கும் திறன்கொண்ட இந்தத் துறையில் இதுவரை பயிற்சிகள் வழங்கப்படவில்லை, இது தவிர அறிந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு குறுகிய கால பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு பயனளிக்கும் திட்டங்களும் உள்ளன, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு வேளாண் உற்பத்திப் பொருட்களை பதனிடுதல். நீர்ப்பாசனம். மண் வளப்பாதுகாப்பு. காடு வளர்ப்பு. தோட்ட வளர்ப்பு போன்ற பயிற்சிகளை வழங்கக்கூடிய வேளாண் பள்ளிகளைத் தொடங்குவது 11வது திட்டக்காலத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்துவது. பள்ளிக்கல்விக்கு இணையாக கருதப்பட்டு அதே அளவு ஆதாரங்கள் ஒதுக்கப்பட வேண்டும், தொழில் பயிற்சிக்காக ஒவ்வொரு வட்டார அளவிலும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும், நிதி உதவி. பணியாளர்கள் ஒதுக்கீடு. நிலம் மற்றும் இதர சேவைகளை ஒதுக்குவதில் மேல்நிலைக் கல்விக்கு இணையாக தொழில் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும், உ) உயர்கல்வி இந்தியாவில் சிறப்பாக வளர்ந்துள்ள உயர்கல்வி முறை உள்ளது, அது இதுவரை நமக்கு சிறப்பாக பயன்பட்டது, ஆனால் தற்போது அது மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது, உயர்கல்வியை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன, இந்தியாவில் கல்லூரி செல்லும் வயதுடையவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறார்கள், ஆனால். மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் இது 20 முதல் 25 சதவீதம் என்ற அளவில் உள்ளது, எனவே. உயர்கல்வி நிறுவனங்களை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, மேலும் உயர்கல்வியின் தரமும். மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது, இந்தியாவில் உள்ள சில உயர்கல்வி நிறுவனங்களின் தரம் உலகின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு உள்ளது, எனினும். இந்திய கல்வி நிறுவனங்களின் சராசரி தரம் மிகவும் குறைவாகவே உள்ளது, தனியார் துறையில் பெருகி வரும் வேலை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலும். தற்போதைய நிலையில் தேவைப்படும் திறமைகளை கற்றுத்தரும் வகையிலும் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மிகவும் தடுமாறுகின்றன, எனவே. உயர்கல்வி நிறுவனங்களின் அளவையும். தரத்தையும் மேம்படுத்த 11வது திட்டக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், அவ்வாறு செய்யப்படாவிட்டால் திறமையின்மை என்ற சிக்க-ல் நாம் சிக்கிக்கொண்டு நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான திறமையை பெற முடியாமல் போய்விடும், கல்வி ரீதியாக பின் தங்கியுள்ள பகுதிகளில் மாணவர்கள் பயில வசதியாக புதிய கல்லூரிகளும். பல்கலைக்கழகங்களும் ஏற்படுத்தப்பட வேண்டும், ஏற்கெனவே உள்ள கல்வி நிறுவனங்கள் வலுப்படுத்தப்படுவதுடன். விரிவு படுத்தப்படவும் அவற்றில் தொலைதூர கல்வி முறையை தொடங்குவது ஊக்கு-விக்கப்படவும் வேண்டும், இது தவிர சில தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் திறன்மிகு ஆதார மையங்களாக உருவாக்க வேண்டும், 11வது திட்டக்காலத்தில் குறைந்தபட்சம் 20 பல்கலைக் கழகங்கள் இவ்வாறு உலக தரம் பெற்றவையாக உயர்த்தப்பட வேண்டும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இதர 58 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவு. பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேராத மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்காத நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது, எனினும் அந்த மாணவர்களுக்கான இடங்கள் குறையாமல் தடுக்க மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது, இந்த விரிவாக்கம் நீண்ட காலமாகவே நிலுவையில் உள்ள ஒன்றாகும், எனவே. உயர்கல்வி நிறுவனங்களில் பொதுப்பிரிவினருக்கான இடங்களும் அதிகரிக்கும் அளவுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் 11வது திட்டக்காலத்தில் விரிவாக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் இடங்களை அதிகரிப்பதால் கல்வி தரம் பாதிக்கப் படாமல் இருப்பதை 11வது திட்டம் உறுதி செய்ய வேண்டும், ஐ,ஐ,டி,. ஐ,ஐ,எம், போன்ற நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அதேநேரத்தில். மாறுபட்ட தரம் கொண்ட பாடங்கள். காலத்திற்கு உதவாத பாடத்திட்டங்கள். போதுமான வசதியின்மை ஆகியவற்றை சரி செய்வதுடன். திறமை மிகுந்த பேராசிரியர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட வேண்டும், இதற்கு தற்போதுள்ள நடைமுறை முற்றிலுமாக மாற்றியமைக்கப் பட வேண்டும், இந்த இலக்குகளை எட்ட உயர்கல்வித் துறைக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், ஆண்டுத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஆதரவும் அதிகரிக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் இந்த படிப்புகளுக்கான கட்டணங்கள் நியாயமாக உயர்த்தப்படுவதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் உள் வருவாய் ஆதாரமும் பெருக்கப்பட வேண்டும், அதேநேரத்தில் தகுதியின் அடிப்படையில் கல்விக் கடனுதவி. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களும் வங்கிகள் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களும். ஏழைகளும். முன்னேறுவதற்கு உயர்கல்வி வாய்ப்பளித்து அவற்றை எளிதாக அணுகும் நிலையை ஏற்படுத்துவது முக்கியக் கடமையாகும், எனினும் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து பயன்பெறும் திறன் பள்ளி அளவிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும், இதற்கு சிறப்பான கல்வி தரும் பள்ளிகளில் அனைத்துப் பிரிவினரும் சேருவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களால் அங்கு சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே இருக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள், கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் இடம் கிடைப்பதுதான் ஒரு மாணவனின் வாய்ப்புகளை நிர்ணயிக்கும் அம்சமாக உள்ளது, கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆகியவைதான் மாணவர் சேர்க்கை அளவை கட்டுப்படுத்தும் அம்சங்களாக உள்ளன, அதே நேரத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் ஆசிரியர்களும். கட்டமைப்பு வசதிகளும் மாணவர் சேர்க்கை அளவை கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை, சிறந்த கட்டமைப்பு கொண்ட கல்லூரிகளை நாம் உருவாக்கும் வரை தொலைநிலைக் கல்வி முறை வலுப்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட வேண்டும், அதில் கற்றுத்தரப்படும் பாடப்பிரிவுகள் ஆய்வக தேவை இல்லாமலும். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட பாட உரைகள் மற்றும் இன்டர்நெட் மையங்களில் உள்ள சோதனைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இருந்தால் அது இன்னும் உதவியாக இருக்கும், மாணவர்கள் அவ்வப்போது தேர்வு எழுத வசதியாக சோதனை மற்றும் தேர்வு மையங்கள் இருந்தால். அது மாணவர்களின் தேர்வு கால மன அழுத்தத்தைக் குறைக்கும், இதற்காக 59 சோதனை மற்றும் தேர்வுகளை நடத்தும் பொறுப்புடன் கூடிய தன்னாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும், எனவே உட் கட்டமைப்பு வசதி தொடர்பான நிர்பந்தங்களை குறைக்கும் வகையில் மின்னணு முறையில் பாடத்திட்டம் மற்றும் சோதனை முறை கொண்ட உயர்நிலை அமைப்புகளை ஏற்படுத்த 11வது ஐந்தாண்டுத் திட்டம் வகை செய்ய வேண்டும், ஊ)வயது வந்தோர் கல்வித்திட்டங்கள் இந்தியாவில் 75% கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும் என்ற 10வது திட்ட கால இலக்கு 2007ம் ஆண்டில் எட்டப்படும், அதன்மூலம் இந்தியாவில் கல்வியறிவு பெறாதவர்களின் அளவை 2015ம் ஆண்டிற்குள் பாதியாக குறைக்க வேண்டும் என்ற டாக்கர் இலக்கு அதற்கு முன்பாகவே எட்டப்படும், எனினும் பிராந்திய. சமூக. பா-ன ரீதியிலான இடைவெளிகளை இணைப்பது தொடர்ந்து கவலையளிக்கும் அம்சங்களாகவே இருக்கும், இந்தியாவில் 11வது திட்டகாலத்திற்குள் கல்வியறிவை 85% என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதே 11வது திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட வேண்டும், இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் கல்வியறிவு பெறாதவர்களாக உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் எந்தவித வயதுவந்தோர் கல்வித்திட்டத்தாலும் கவனிக்கப்படுவதில்லை, எனவே 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு கல்வியளிக்கவும். மிகவும் பயனுள்ளதாக உணரப்பட்டுள்ள கணிணி அடிப்படையிலான சுயகல்வி முறையை செயல்படுத்தவும் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும், இந்தியாவிலுள்ள 600 மாவட்டங்களில் 598 மாவட்டங்களில் கல்வியறிவுத் திட்டத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட திட்ட இடைக்கால மதிப்பீட்டு முடிவுகளின்படி ஒட்டுமொத்த கல்வி பிரச்சாரம் உட்பட அனைத்து வயது வந்தோர் கல்வித் திட்டங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, பல்வேறு திட்டங்களை தொடங்கி செயல்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தரம் முறையாக கண்காணிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும், அவற்றுக்கு தர நிர்ணயம் செய்யும் முறையை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும், வயது வந்தோர் கல்வியை நாம் தற்போது அளவிடும் புதிய மதிப்பீட்டிற்கு புத்தாயிரமாவதாண்டுக்கு தேவையான செயல்பாட்டுமுறை கல்வி திறமையான முறை அல்ல, எனவே இடைவிடாத கல்வித் திட்டங்களின் மூலம் மிக உயர்ந்த கல்வியறிவை எட்ட நாம் மறுஅர்ப்பணிப்பு செய்து கொள்ள வேண்டும், மேலும் தொடர்கல்வி முறையை தனி திட்டமாக்குவதற்கு நடைமுறைக்கு உகந்த வழிமுறைகள் 11வது திட்டத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும், (எ) இந்தியாவின் பலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தற்போதைய அறிவுசார் உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கும் புதுமையான தீர்வுகளைப் பொறுத்தே நமது முன்னேற்றம் அமையும், எனவே வளர்ந்த நாடு என்ற நிலையை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறமையை வளர்த்துக் கொள்வது ஒன்றே சரியான வழியாகும், இந்த பட்டிய-ல் இந்தியா முன்னணி நிலையை எட்ட வேண்டும், அதற்கு கீழ் கண்டவை செயல்பாடுகள் அவசியமாகின்றன, (ண்) அடிப்படை ஆராய்ச்சிக்கான ஆதரவை கணிசமாக உயர்த்துதல், அடிப்படை ஆராய்ச்சிக்கு வழிகாட்டி அது தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்கு தேசிய அளவிலான அமைப்பை ஏற்படுத்துதல், (ண்ண்) விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்துதல், மேலும் திறமையான இளம் மாணவர்களை கண்டறிந்து அறிவியல் ஆராய்ச்சியை முழுநேரத் தொழிலாகக் கொண்ட கல்வியை கற்கும்படி 60 அறிவுறுத்த நடிவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், அதற்கு பல்கலைக்கழகங்களை மறுசீரமைத்து மேம்படுத்துவதும். விஞ்ஞானிகளின்பணிநிலையை மேம்படுத்துவதும் மிகவும் அவசியமாகும், (ண்ண்ண்) இந்தியாவில் தொழில்நுட்ப போட்டித் தன்மையை ஏற்படுத்த தேர்ந்தெடுத்த தேசிய முன்னோடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இதனால் சில உயர் தொழில்நுட்பங்களில் இந்தியா தலைமை நிலையை எட்ட முடியும், (ண்ஸ்) சர்வதேச அளவுக்கு போட்டியிடக்கூடிய திறன்கொண்ட ஆராய்ச்சி வசதிகளையும். திறமை மையங்களையும் ஏற்படுத்துதல், புதுமை செய்யும்உணர்வை விஞ்ஞானிகளிடையே தூண்டுவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கிடைக்கும் முடிவுகளை உயர்தொழில் நுட்பங்களாக மாற்றச் செய்தல், அந்த தொழில்நுட்பங்கள் சொத்துக்களை உருவாக்கும் தயாரிப்புகளையும் செய்முறைகளையும் நமக்கு வழங்கும், இதற்கென பொதுத்துறை தனியார்துறை கூட்டணியை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும், (ஸ்) தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்கும். ஆய்வகங்களில் கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பத்தை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும். தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி உதவி செய்யவும் தொழில்துறை மற்றும் கல்வித் துறை இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வழிகளை கண்டறியவும் வேண்டும், (ஸ்ண்) சர்வதேச அளவிலான மிகப்பெரிய ஆராய்ச்சிகளில் பங்கேற்பது உட்பட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மற்ற நாடுகளுடன் வலுவான உறவை ஏற்படுத்துதல், (ஸ்ண்ண்) விஞ்ஞான தணிக்கை. விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான நிறுவனங்களின் செயல்பாடுகளை மதிப்பிடுதல் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் (நிர்வாகம். நிதி. விஞ்ஞானம்) கவனித்து கொள்ள அதிக அதிகாரம் கொண்ட தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும், 4,2 சிறந்த சுகாதாரத்திற்கான விரிவான உத்தி அனைவருக்கும். குறிப்பாக ந-வடைந்த மக்களுக்கு. அடிப்படை ஆரம்ப சுகாதார மருத்துவ வசதியை வழங்குவதே பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கமாகும், மேலும் இந்த சேவையை வழங்குவதற்கான அதிகாரம் மற்றும் நிதியை ஆரம்பநிலை கிராம நிறுவனங்களிடம் ஒப்படைக்கும்படியும் 10வது திட்டம் வ-யுறுத்தியுள்ளது, ஆனால் இந்த இலக்குகளை எட்டுவதில் வேகம் குறைவாகவே உள்ளது, மேலும் தாய்-சேய் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக 10வது திட்ட காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கும் எட்டப்படவில்லை, கிராம சுகாதார திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டபோதிலும் மருத்துவர்கள்/சுகாதாரம் வழங்குவோர் பணிக்கு வராதது. திறமைக்குறைவு. மருந்து தட்டுப்பாடு. முறையான கண்காணிப்பின்மை. பொற்றுப்பற்ற தன்மை போன்ற காரணங்களால் அத்திட்டம் பல மாநிலங்களில் முறையாகநடைபெறவில்லை, இவையெல்லாம் சேவை வழங்குவோருக்கு கிடைத்த வெகுமதியோஅல்லதுதவறு செய்தவர்களுக்கான தண்டனையோ அல்ல, இதன் விளைவாக இந்தியாவில் சுகாதார நடவடிக்கையின் பயன்கள். அண்டை நாடான இலங்கை. சீனா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மோசமாக உள்ளன, (பார்க்க அட்டவணை 8) 61 அட்டவணை 8 : இந்தியாவும் ஒப்பீட்டு நாடுகளும் இந்தியா இலங்கை சீனா வியட்நாம் குழந்தை இறப்பு விகிதம் 60 13 30 19 (1000 குழந்தைகளுக்கு) (2003) (2003) (2003) (2003) பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி 58,0 99 84 93 போடப்பட்ட ஒரு வயது குழந்தைகள் %) (2002-04) (2003) (2003) (2003) மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிபெறும் 30 91 44 41 வாய்ப்புள்ள மக்கள்தொகை % (2002) (2003) (2002) (2002) ஐந்து வயதுக்குள் இறக்கும் குழந்தைகள் 87 15 37 23 (1000 குழந்தைகளுக்கு) (2003) (2003) (2003) (2003) திறமையுள்ள செவி-யர்களால் 47,6 97 97 85 பிரசவம் பார்க்கப்பட்டு பிறக்கும் குழந்தைகள் (2002-04) (1995-2003) (1995-2003) (1995-2003) பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் 407 92 56 130 (ஒரு லட்சம் பிரசவங்களுக்கு) (2000 ஆண்டு (2000 ஆண்டு (2000 ஆண்டு (2000 ஆண்டு கணக்கீடு) கணக்கீடு) கணக்கீடு) கணக்கீடு) இந்தியாவில் சுகாதார சேவை வழங்கும்முறைகண்காணிக்கப்பட்டு. அனைத்து நிலைகளிலும் வழிகாட்டப்பட வேண்டும், எனினும் நமது சமுதாய-கலாச்சார சூழல் மற்றும் பொருளாதார மாறுபாட்டை பார்க்கும்போது பகுதிகளுக்கு தகுந்தாற் போலவும். அத்தாட்சிகள் அடிப்படையிலும் சுகாதார சேவை முறையில் திட்டங்கள் அவசியமாகின்றன, கடந்தகால குறைபாடுகளைப் பற்றியெல்லாம்கவலைப்படாமல். தாய்-சேய் இறப்புவிகித கட்டுப்பாட்டில் பத்தாயிரமாவதாண்டின் இலக்குகளை 11வது திட்டகால இறுதிக்குள் நாம் எட்ட வேண்டும், ஆனால் இந்த நிலையை எட்ட சுகாதார நிலையங்களில் மட்டுமே பிரசவம் நடைபெறுவது. சத்துணவு பெறுவது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற மையங்களுக்கு கர்ப்பிணிகள் விரைவில் கொண்டு செல்ல வசதியாக அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ற சாலைகளை அமைத்தல். சுத்தமான குடிநீர். சுகாதார வசதிகள் போன்றவை செய்து தரப்பட வேண்டும், ஆரம்ப சுகாதார சேவை முறையை மேம்படுத்த. 11வது திட்டகாலத்தில் முதல்கட்டமாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த சுகாதார திட்டங்களும் பின்னர் வட்டார அளவிலான திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும், அந்த திட்டங்களில் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பும். சுகாதாரம் தொடர்பான அனைத்து துறையினரின் பங்கேற்பும் உறுதி செய்யப்பட வேண்டும், மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஏஐய பாதித்த பெண்கள் ஆகியோரின் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமைய வேண்டும், இதன் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது; முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது, (அ) தேசிய ஊரக சுகாதார இயக்கம் ஊரக அடிப்படை சுகாதார வசதித்திட்டத்தில் உள்ள குறைகளையும் பிரச்சனைகளையும் களையும் வகையில் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் இறுதிவரை 7 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் வகையில் தேசிய ஊரக சுகாதார இயக்கம் 62 செயல்படுத்தப்பட்டு வருகிறது (பார்க்க பெட்டி-5), இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பொது சுகாதார அணுகுமுறையை ஆரம்ப சுகாதார வசதியில் இணைப்பதுதான் மற்றொரு நோக்கம். கிராம அளவில் சுகாதார சேவைகளை நிர்வகித்து அதற்கு பொறுப்பேற்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு வழங்குவதாகும், துணை சுகாதார மையங்களை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மேற்பார்வையிடும்போது ஊழியர்களின் வருகை அதிகரிப்பு. சேவைத்தரம் அதிகரிப்பு. நோயாளிகளுக்கு திருப்தி ஏற்படும் வகையில் தகவல்களை தருதல் போன்ற பயன்கள் ஏற்படும், மேலும் அனைத்து வகையான மருத்துவ சேவைகளும் ஆரம்ப சுகாதார மையங்களிலேயே கிடைக்கும் அளவுக்கு கொண்ட செல்வதும் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் நோக்கமாகும், பெட்டி – 5 தேசிய ஊரக சுகாதார இயக்கம் ப் கிராமப்புற மக்களுக்கு சிறப்பான சுகாதார சேவை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் இந்த இயக்கம் குறைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது, இந்த விஷயத்தில் மிகவும் பலவீனமாக உள்ள 18 மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தும் நோக்குடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது, ப் இந்த இயக்கம் வழக்கமான சுகாதார இயக்கங்களி-ருந்து மாறுபட்டதாகும், அனைத்து சுகாதார திட்டங்களிலும் கிடைக்கும் பயன்கள் ஒன்றிணைக்கப் பட்டு. மாவட்ட அளவில் தொகுத்து ஒருசேர வழங்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும், ப் சுகாதாரத்தை நிர்ணயிப்பதற்கான பாதுகாப்பான குடிநீர். தூய்மையான சுகாதார வசதிகள் போன்ற அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்த மாவட்ட சுகாதார திட்டங்களின் மூலம் வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது, ப் ஒவ்வொரு கிராமத்திலும் தகுதிவாய்ந்த சமூக சுகாதார தொண்டர் ஒருவரை நியமிக்கவும். சுகாதாரகட்டமைப்பை மேம்படுத்தவும் இந்த இயக்கம் வகை செய்கிறது, லாபநோக்கற்ற நிறுவனங்கள். கிராம சுகாதார சேவையில் ஈடுபடுவதையும் இந்த இயக்கம்வ-யுறுத்துகிறது, நிபந்தனையின்றி நிதி வழங்குவதன் மூலம் செயல்பாட்டில் நெகிழ்ச்சி தன்மையையும் இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது, ப் இந்த திட்டத்தின் துணை உத்திகளானபொதுத்துறை தனியார்துறைகூட்டணியை ஏற்படுத்துதல்.தனியார் நிறுவனங்களில் தரத்தை உயர்த்தவும் மருத்துவ செலவை குறைக்கவும் வகை செய்தல். சமூக சுகாதார காப்பீடு மற்றும் பாதிப்பை சமாளிக்கும்அமைப்புகளை ஏற்படுத்துதல். உள்ளூர் மருத்துவ வழக்கத்தைபயன்படுத்துதல் போன்றவற்றைநோக்கமாகக் கொண்டவை, தற்போதைய நிலையில் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சேவை அமைப்பு பாதிக்கப் பட்டுள்ளது, அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 30% மருத்துவர் பணியிடங்கள் கா-யாக உள்ளன, பல இடங்களில் திடீர் சோதனை நடத்தியபோது 29% முதல் 67% மருத்துவர்கள் ஒழுங்காக பணிக்கு வருவதில்லை என்பது தெரிய வந்தது, இந்திய மருத்துவமுறை பயின்ற மருத்துவர்களை திரட்டுவதன்மூலம் மருத்துவர்கள் பற்றாக் குறையை போக்கலாம், தற்போதைய நிலையில் நடைமுறையில் உள்ள 2 இந்திய மருத்துவ முறைகளுக்கிடையே எந்த தொடர்பும் 63 இல்லாமல் உள்ளது, இந்தியா முழுவதும் அமைப்பு ரீதியாக திறமை பெற்ற இந்திய மருத்துவமுறை மருத்துவர்கள் 5 லட்சம் பேர் இருக்கும்போதிலும் அவர்கள் எவரும் (அரசால் வேலை வழங்கப்பட்ட 40 ஆயிரம் பேர் தவிர) பொதுத்துறை ஆதரவில் இயங்கும் ஆரம்ப சுகாதார சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை, பயிற்சி பெற்ற இந்திய மருத்துவமுறை மருத்துவர்கள் கிராம அளவிலும் வட்டார அளவிலும் சிறந்த மருத்துவ ஆதாரமாக உள்ளனர், இந்த மருத்துவமுறை மேம்படுத்தப்பட்டு ஆரம்ப சுகாதார சேவை வழங்கும் அளவுக்கு ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும், கேரளாவில் நவீன முறை மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகியவை இணைக்கப்பட்டு. அதன் பயனாக அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது, ஹிமாச்சல பிரதேசமும் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறது, இந்த நடைமுறையை பரவலாக்குவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப் பட வேண்டும், (ஆ) சுகாதார சேவைகளுக்கு நிதி வழங்குதல் மருத்துவ வசதியை மேம்படுத்துவதற்ôக சுகாதார அமைப்பை வலுவாக்க புதுமையான நிதி வழங்கும் முறைகள் அவசியமாகும். மருத்துவ சேவை வழங்குபவருக்கு எவ்வாறு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பொது மருத்துவ சேவை அமைகிறது, மருத்துவ சேவை வழங்குபவர்கள் நோயாளி அல்லது கிராம சுகாதாரக் குழுவின் திருப்திக்கேற்ற வகையில் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும், சுகாதார சேவைக்கு கட்டணம் வழங்கப்படும்போது. அந்த சேவை வழங்குவோர் பொறுப்பேற்கும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும், இந்த துறையில் பொதுத்துறை. தனியார் துறை கூட்டணி முறையும். சோதித்து பார்க்கப்பட வேண்டும், கர்ப்பிணி பெண்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் பிரசவிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும், அவ்வாறு செய்வதன் மூலம் கர்ப்பிணிகள் தாங்கள் விரும்பும் மருத்துவ மையங்களில் பிரசவம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைப்பதுடன். மருத்துவ மையங்களுக்கு இடையே போட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது, தடுப்பு மருந்து வழங்குதல் போன்ற வரையரைக்குள் வராத பணிகளை தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விட்டு விடுவது. பொறுப்பு ஏற்கும் நிலையை அதிகரிக்கும், தனியார் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் தோல்வியடைந்த ஒன்று என்பதை உலக அனுபவங்கள் காட்டுகின்றன, சமுதாய அடிப்படையிலான காப்பீட்டு முறையே சிறந்த காப்பீட்டு முறையாக வளர்ந்து வருகிறது, சமுதாய மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் சமுதாய மேம்பாட்டு முயற்சிகளும் இணைந்தால் சுகாதார சேûயின் தரம் உயருவதுடன். அதனை தேவைக்கேற்ற வகையில் விரிவுபடுத்திக் கொள்ளவும் முடியும், (இ) அனைவருக்கும் தூய்மையான குடிநீர் நோய்களை குறைக்கவும். ஊட்டச் சத்துக்குறைபாட்டை போக்கவும் தூய்மையான குடிநீர் அவசியமாகும், அசுத்தமான குடிநீரால் நமது உட-ல் தொற்றுக்கள் ஏற்படும்போது. நாம் அதிகமாக உணவு அருந்தினாலும் அதன் சத்துக்களை நமது உடல் எடுத்து கொள்ளாத வகையில் தடுக்கப்படுகிறது, அனைத்து கிராமங்களுக்கும் தூய்மையா தகுதியான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்ற 10வது ஐந்தாண்டு திட்ட கால இலக்கு இன்னும் எட்டப்படவில்லை, தற்போது பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் அடுத்த 4 ஆண்டுகளில் (2005-09) 55 ஆயிரத்து 67 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப் பட்டுள்ளது, இது ஒருபுறமிருக்க ஊரக குடிநீர் வினியோகமுறை. குடிநீர் தரக்குறைவு. பராமரிப்பு பிரச்சனை. தொடர்ந்து செயல்பட முடியாத நிலை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது, இந்தியாவில் உள்ள 14 லட்சத்து 22 ஆயிரம் குடியிருப்பு பகுதிகளில் 64 பாரத் நிர்மான் திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே 95 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தரப்பட்டு விட்டது, ஆனால் அவற்றில் 2,8 லட்சம் குடியிருப்பு பகுதிகள் தற்போது மீண்டும் தண்ணீர் வசதி இல்லாதவையாக மாறிவிட்டன, மேலும் 2,17 லட்சம் குடியிருப்பு பகுதிகளில் வழங்கப்படும் தண்ணீரின் தரத்தில் பிரச்சனைகள் உள்ளன, மேலும் 60 ஆயிரம் கிராமங்களில் வழங்கப்படும் குடிநீரில் உப்பு. ப்ளோரைடு. ஆர்சனிக் நச்சு போன்றவை கலந்துள்ளன, இத்தகைய குடிநீர் பிரச்சனையை சந்திக்கும் குடியிருப்பு பகுதிகளின் பிரச்சனைகளை தீர்க்கவும் பாரத் நிர்மான் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது, பாரத் நிர்மான் திட்டத்தின் இலக்குகள் முழுமையாகவும் குறித்த காலத்திலும் எட்டப்படுவதை 11வது ஐந்தாண்டு திட்டம் உறுதி செய்ய வேண்டும், நிலத்தடி நீர் ஆதாரத்தைக் கொண்டோ அல்லது தரைவழி நீர் ஆதாரங்களைக் கொண்டோ தொடர்ந்து குடிநீர் வழங்கப் படுவது உறுதி செய்யப்பட வேண்டும், நீர் ஆதாரங்கள் இல்லாவிட்டாலோ அல்லது நீரைக் கொண்டுவர அதிக செலவு பிடிக்கும் என்றாலோ. குடிநீர் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்யும் வகையில் நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வ-யுறுத்தப்பட வேண்டும், அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களி-ருந்து சமுதாயத்தில் ஏற்படுத்தி நிர்வகிக்கப்படும் ‘‘ஸ்வஜல்தாரா’’ போன்ற திட்டங்களுக்கு மக்கள் மாறுவது அவசியமாகும், 10வது ஐந்தாண்டு திட்டத்தில் விரைவுபடுத்தப் பட்ட ஊரக குடிநீர் வினியோகத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 சதவீதம் மட்டுமே ஸ்வஜல்தாரா திட்டத்திற்கு வழங்கப்பட்டது, 11வது திட்ட காலத்தில் ஸ்வஜல்தாரா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் படுவதுடன். குடிநீர் திட்டங்களை பராமரிக்கும் அரசின் சுமையைக் குறைக்கும் நோக்குடன் சமூகம் சார்ந்த குடிநீர் திட்டங்கள் உருவாக்கப் பட வேண்டும், இதற்காக 12வது நிதிக்குழு ஒதுக்கியுள்ள நிதியை அரசாங்கங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், (ஈ) சுகாதாரம் 1980 தொடங்கி பத்து ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 1 சதவீத பகுதி மட்டுமே சுகாதார வசதிகளை பெற்றிருந்தன, 1986ம் ஆண்டில் மத்திய கிராமப்புற சுகாதாரத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1988ம் ஆண்டில் சுகாதார வசதி பெற்ற கிராமங்களின் அளவு 4 சதவீதமாகவும். 2001ல் 21 சதவீதமாகவும் உயர்ந்தன, 1999ம் ஆண்டில் இந்த திட்டம் ஒட்டுமொத்த சுகாதார பிரச்சார திட்டம் என மாற்றப்பட்டது, அரசுத்திட்ட இலக்கு நிறைவேற அமலாக்கம், அதிக அளவு மானியம். அரசுத்துறைகளே திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற முந்தைய திட்டத்தின் அம்சங்கள் மாற்றப்பட்டு. தேவை அடிப்படையில் மட்டும். குறைந்த அளவு மானியம். சுகாதாரக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல் போன்ற அம்சங்களுடன். புதிய திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது, தற்போது 540 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இந்த திட்டத்தால் பயனடையும் மக்களின் எண்ணிக்கை 10வது திட்ட காலத்தின் இறுதியில் 35 சதவீதமாக உயரும், நீரின் மூலம் பரவும் நோய்கள் தாக்குவதற்கு சுகாதாரமின்மையே நேரடி காரணமாகும், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை வெற்றிகரமாக செயல்படுத்தப்படாவிட்டால் சுகாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படாது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது, புதிய சுகாதார திட்டத்தின்படி வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுவதால். வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதற்கு 65 பதில் முறையான கழிப்பறைகள் அமைத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டப்பட வேண்டும், எனவே சுகாதார தகவல். கல்வித் தொடர்பு பிரச்சாரம் 11வது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது, தனி வீடுகளுக்கான கழிப்பறை கட்டண விதிகள் மாற்றப் பட்டிருப்பதுடன். திடக்கழிவு மேலாண்மையும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது, சுகாதார தகவல் கல்வித் தொடர்பு திட்டத்தில் இத்தகைய சிறப்பம்சங்கள் இருப்பதால். 11வது திட்ட காலத்தில் இந்த திட்டம் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கிராமப்புற தூய்மைப்பணியை. கிராம சுகாதார இயக்கத்துடன் சேர்க்க வேண்டும் என்பதும் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, திறந்தவெளிகளில் மலம் கழிப்பது அறவே இல்லாத கிராமங்களை ஊக்குவிக்க நிர்மல் கிராம் புரஸ்கார் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு வேகமாக பிரபலமடைந்து வருகிறது, அந்த திட்டத்தின்படி வெகுமதி பெற போட்டியிடும் கிராமங்களின் எண்ணிக்கையி-ருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம், 11வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இத்திட்டத்துக்கான இடைக்கால இலக்கு 2010ம் ஆண்டுக்குள் எட்டப்பட்டுவிட்டால். முழு இலக்கும் 2012 முதல் 2015ம் ஆண்டுக்குள் எட்டப்பட்டுவிடும், 4,3 கிராமப்புற அடிப்படை வசதி கட்டமைப்பு : பாரத் நிர்மான் 2005ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாரத் நிர்மான் திட்டம். ஏழு முக்கியத் துறைகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட வேண்டும் என கண்டறிந்துள்ளது (பார்க்க பெட்டி-6), இந்த திட்டம் தற்போது 11வது திட்ட காலத்தின் முதல் 2 ஆண்டுகள் வரை செயல்படும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது, இத்திட்டம் முழுமையாகவும் திறமையாகவும் செயல்படுத்தப்படுவது அவசியமாகும், 66 பெட்டி எண் – 6 பாரத் நிர்மாண் பாரத் நிர்மாண் என்பது கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை 4 ஆண்டுகளுக்குள் (2005-2009) மேம்படுத்த வேண்டும் என்ற காலவரையறையுடன் கூடிய திட்டமாகும், பாரத் நிர்மாண திட்டத்தின்படி நீர்ப்பாசனம். கிராமப்புற சாலைகள். கிராமப்புற வீட்டுவசதி. கிராமக் குடிநீர் வினியோகம். கிராமப்புற மின்மயமாக்கல். கிராமப்புறத் தொலைதொடர்பு வசதி ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதன் விவரம் : நீர்ப்பாசனம் – 1 கோடி ஹெக்டர் அளவுக்கு கூடுதல் பாசன பகுதிகளை ஏற்படுத்துதல், கிராம சாலைகள் – ஆயிரம் பேருக்கு மேல் (மலைப்பகுதி பழங்குடியினர் வாழும் கிராமங்களில் 500 பேர்) வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் (66.802 கிராமங்கள்) அனைத்து தட்பவெட்ப சூழ்நிலையையும் தாங்கும் சாலைகளை அமைத்தல், கிராம வீட்டுவசதி – கிராமப்புற ஏழைகளுக்கு 60 லட்சம் வீடுகளைக் கட்டுதல், கிராம குடிநீர் வினியோகம் – இதுவரை பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் (55.067) குடிநீர் வசதி செய்து தருதல், ஏற்கனவே வசதி இருந்து பின்னர் அதை இழந்துவிட்ட குடியிருப்புகளுக்கும் அந்த வசதி செய்து தருதல், கிராம மின்மயமாக்கல் – இதுவரை மின்சார வசதி பெறாத (1.25.000) குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல், வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 2 கோடியே முப்பது லட்சம் குடும்பங்களுக்கும் மின் வசதியை வழங்குதல், கிராமத் தொலைபேசி வசதி – இதுவரை தொலைதொடர்பு வசதி பெறாத (66.822) அனைத்து கிராமங்களுக்கும் பொதுத் தொலைபேசி இணைப்பு வழங்குதல், பாரத் நிர்மாண் திட்டசெயல்கள் புதிது அல்ல எனினும் இலக்குகளை எட்டுவதில் அவசரம் காட்டப்பட வேண்டும், திட்டங்கள் குறித்த கால அவகாசத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், திட்டம் செயல்படுத்தப்படும் முறை வெளிப்படையானதாகவும் மற்றவர்களுக்கு பதில் கூறும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது இத்திட்ட சிறப்பம்சம், இந்த திட்டத்திற்கு தேவையான நிதி. மத்திய-மாநில பட்ஜெட் நிதி ஒதுக்கீடு. வெளியார் உதவி. சந்தையி-ருந்து நிதி திரட்டுதல். கிராம சாலைகளுக்காக தனி அமைப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றின் மூலம் காட்டப்படும், திட்டம் சார்ந்த பொறுப்பேற்கும் தன்மையை உறுதிசெய்ய அனைத்து வெப்பதட்பத்தைத் தாங்கும் சாலை வசதி பெற்ற கிராமங்கள். தூய்மையான குடிநீர் வசதி செய்து தரப்பட்ட கிராமங்கள். தொலைபேசி வசதிபெற்ற கிராமங்கள் ஆகியவற்றின் பெயர்களை இணை வலைதளத்தில் வெளியிட வேண்டும், 67 இடைவெளியை நிரப்புதல் – விடுபட்டோரையும் இணைத்தல் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உத்திக்கு ஆதரவு கிடைக்க வேண்டுமானால் வளர்ச்சிப்பாதையி-ருந்து விடுபட்ட நிலையில் இருப்பதாகக் கருதப்படும் பெரும்பகுதியினரை அப்பாதையில் கொண்டு சென்று இடைவெளியை நிரப்புவதை இது உறுதி செய்யும் என்ற கருத்து உருவாக வேண்டும், இந்தஇடைவெளிபல பரிமாணங்களைக் கொண்டது, வறுமைக் கோட்டிற்கு மேலே மற்றும் கீழே வாழ்வோருக்கிடையேகாணப்படும் இடைவெளி அவற்றில் ஒன்று, இந்த இடைவெளியால் நாட்டில் ஏற்படும் வளர்ச்சி ஏழைகளுக்கு பயன் அளிக்கிறதா என்ற வினா எழுகிறது, மற்றொரு இடைவெளியானது ஆக்கப்பூர்வமான வேலை பெற்றுள்ளோருக்கும் வேலையில்லாதோர் மற்றும் தகுதிக்கேற்ற வேலைகிடைக்காதோருக்குமிடையே நிலவுகிறது, கிராம நகர இடைவெளி. மாநிலங்களுக்கிடையே இடைவெளி. மாநிலத்திற்கு உள்ளேயே மாவட்டத்திற்கு மாவட்டம் பிற்பட்ட பகுதி என்றும் மேம்பட்ட பகுதி என்றும் காணப்படும் இடைவெளி என பட்டியல் நீள்கிறது, இவை ஒவ்வொன்றும் நியாயமான கவலைகளை ஏற்படுத்துகின்றன, எனவே இவற்றிற்கு தீர்வு காணும் வகையில் 11வது திட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும், 5,1 வளர்ச்சியும் ஏழ்மையும் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் உத்திகள் ஏழைகளை புறக்கணித்துவிட்டு வளர்ச்சியின் பயன்கள் அவர்களுக்கு கிடைக்காமல் செய்துவிடுமோ என்ற கவலை நீண்டகாலமாகவே உள்ளது, வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் தொடர்பாக ஏராளமான விவரங்கள் உள்ளன, அவை பொதுவாக வெளிப்படுத்தும் உண்மை என்னவெனில் ஏழ்மை விகிதம் குறைந்து வருகின்றபோதிலும் அது குறையும் வேகம் தேவைப்படும் அளவிற்கு இல்லை, 1999-2000 ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ தகவ-ன்படி வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவிகிதம் 26 ஆகக் குறைந்துள்ளது, இது 1993-94ல் 36 சதவிகிதமாக இருந்தது, எனினும் இந்த இரண்டு புள்ளி விவரங்களை ஒப்பிடுவது விவாதத்துக்கு உட்பட்டது, ஏழ்மைக்குறைவு வேகம் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது, 2004-05ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு மூலம் பெறப்பட்ட முதற்கட்ட மதிப்பீடுகள் 1993-94ஆம் ஆண்டையே புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க தகுதி வாய்ந்தவையாக உள்ளன, இதன்படி 2004-05ம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வோர் 28% என்று தெரிய வந்துள்ளது, இது 1999-2000 ஆண்டின் அதிகாரப்பூர்வ அளவைவிட அதிகமானதே, 1999-2000ம் ஆண்டின் புள்ளி விவரங்கள் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கவை அல்ல, 1993-94ஆம் ஆண்டு முதல் 2004-05ஆம் ஆண்டு வரை ஏழ்மை விகிதம் ஆண்டுக்கு 0,74 சதவிகிதம் குறைந்துள்ளது, 1999-2000ஆம் ஆண்டு புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் இது ஆண்டுக்கு 1,66 சதவிகிதம் என்ற அளவில் குறைந்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது, எனினும் ஏழ்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது தெளிவாகிறது, 1999-2000ஆம் ஆண்டு விவரங்களை தோராயமாக ஒப்பிடுகையில் 2004-05ஆம் ஆண்டின் ஏழ்மை விகிதம் 22 சதவிகிதமாக உள்ளது, இதன்படி 1999-2000ஆம் ஆண்டு முதல் 2004-05ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 0,78% புள்ளிகள் குறைந்து வந்துள்ளது, ஏழ்மை குறையும் வேகம் மிதமானதுதான், இதற்கு ஒரு காரணம் விவசாயத்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது சென்ற பத்தாண்டுகளாக மக்கள்தொகை பெருக்கத்திற்கு சரிசமமாகவே இருந்தது, 68 விவசாயம்சாராத துறை வளர்ச்சியானது ஏழைகளையும் சென்றடைந்துள்ளது, இவர்கள் குறைவான பணவீக்க விகிதம். குறிப்பாக உணவு பொருட்களின் விலை போன்றவற்றால் பயனடைந்திருப்பார்கள், எனினும் விவசாயத் துறையிலும் வளர்ச்சி அதிகரித்திருந்தால் அதன் பயன்கள் மிகவும் அதிகமாக இருந்திருக்கும், துரித வளர்ச்சியுடன் விவசாயத்துறையில் இரண்டு மடங்கு வளர்ச்சியும் இணைந்த உத்தியால் ஏழ்மை விகிதம் மேலும் குறையும், குறிப்பாக ஏழைகளின் வருவாய் ஆதாரத்திற்கு துணை நிற்கும் தேசிய வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம். பாரத் நிர்மாண். அனைவருக்கும் கல்வி இயக்கம். மதிய உணவு திட்டம். ஊரக சுகாதார முனைப்பு இயக்கம் போன்றவற்றை தொடர்ந்து விரிவாக்கி வந்தால் ஏழ்மையை குறைக்கலாம், ஏழைகளின் வருவாயை பெருக்குகிறது என்பதற்காக மட்டுமல்லாமல் பல ஏழ்மை ஒழிப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதியை கூடுதல் வரி வருவாய் மூலம் பெறலாம் என்பதாலும் துரித வளர்ச்சி அவசியம் என்பது வ-யுறுத்தப்பட வேண்டும், இவ்விரண்டையும் சேர்த்து ஏழ்மை நிலையை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்கலாம், ஏழ்மையைஎதிர்கொள்வதற்கு ஏழைகளுக்கேற்ற சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றும் தேவைப்படுகிறது, தற்போது சமுதாய பாதுகாப்பு திட்டங்களின் அங்கங்களாக ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம். பொது வினியோகத் திட்டம். இலவச வீட்டு வசதி. நில சீர்த்திருத்தம். தேசிய ஊரக சுகாதார முனைப்பு இயக்கம். பயிர் மற்றும் கால்நடைக் காப்பீடு. முதியோர் ஓய்வூதியம் போன்றவை திகழ்கின்றன, எனினும் அமைப்புசாரா துறையிலுள்ளோர் உட்பட நமது சமுதாயத்தின் பல பிரிவினர் இதுவரை சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் இன்னும் வரவில்லை, 11வது திட்டத்தை வகுக்கும்போது தற்போதுள்ள திட்டங்களை மறுவடிவமைத்து விரிவுபடுத்துதல். புதிய திட்டங்களை உருவாக்குதல் ஆகியவற்றுக்கு கவனம் செலுத்த வேண்டும், இத்தகைய திட்டங்களுக்கு நிதி வளம் முக்கிய காரணியாக உள்ளது, எனவே நிதிநிலையைக் கருத்தில் கொண்டு ஏழைகளின் நலனை மேம்படுத்துவதற்காக எடுக்கப்படும் இதர திட்டங்களுடன் இதனையும் சேர்த்து பரிசீ-க்க வேண்டும், 5,2 வேலைவாய்ப்பு அண்மையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் புதிதாக வேலை தேடுவோர் பட்டிய-ல் இணைந்த அனைவரையும் வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாகவில்லை என்று அவ்வப்போது கூறப்படுகிறது, குறிப்பாக அமைப்பு சார்ந்த துறைகளில் புதிய தொழில் வாய்ப்புக்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள். நிதி சேவைகள். சுற்றுலா போன்ற துறைகள் மூலம் புதிய தரம் வாய்ந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட போதிலும் தேவைப்படும் அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை, அ)வேலைவாய்ப்பு நிலைமையை மாற்றி அமைத்தல் வேளாண் வளர்ச்சியை ஆண்டுக்கு நான்கு சதவிகிதம் என்ற அளவில் இரட்டிப்பாக்குவதன் மூலம் வேளாண்துறை வேலைவாய்ப்பு நிலைமை மேம்படும், ஊதியம் உயர்வதுடன் மோசமான வேலைவாய்ப்பு நிலைமையும் குறையும், ஆண்டு பொருளாதார விகிதம் 9 சதவிகிதம் என்ற அளவிலும் வேளாண் வளர்ச்சி நான்கு சதவிகிதம் என்ற அளவிலும் மேம்படும்போது வேளாண் தொழிலாளர்களுக்கும் மற்ற துறை தொழிலாளர்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி மேலும் அதிகரிக்கும், 11வது திட்ட காலத்தில் வேளாண் துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரு கோடி என்ற அளவில் குறைத்தல். அதன் முலம் வேளாண் தொழி–ருந்து வெளியேறும் ஊழியர்களுக்கும் 69 புதிதாக வருவோருக்கும் வேலையளிக்கும் வகையில் வேளாண்துறை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பை ஆண்டுக்கு ஐந்து சதவிகிதம் என்ற அளவில் உயர்த்துதல் போன்றவை செய்யப்படாவிட்டால் இந்த வருவாய் இடைவெளியை குறைக்க முடியாது, வேளாண்துறை சாராத தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதும் அதனால் ஏற்படும் வாழ்க்கைமுறை மாற்றங்களை சமாளிப்பதும் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும், வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதாலும் அதன் மூலம் ஏற்படும் அமைப்பு ரீதியிலான மாற்றங்களை சமாளிப்பதாலும் ஏற்படும் விளைவுகளை சரி செய்ய ஒரு சில உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும், உற்பத்தியை அதிகரித்தல். அதிக வருவாய் தரும் பயிர் முறைக்கு மாறுதல். உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்தல் போன்றவை இந்த பிரச்னைகளைச் சமாளிக்க உதவும், தற்போதுள்ள அமைப்பு முறை மூலம் வேளாண் தொழி–ருந்து இவ்வளவுதான் வருவாய் ஈட்ட முடியும் என்ற கட்டுப்பாடு இருப்பதையும் நாம் அங்கீகரித்தாக வேண்டும், இந்த சீர்த்திருத்த நடவடிக்கைகளின் போது உற்பத்தியை அதிகரிப்பதற்காக விவசாயிகள் வேறு நடைமுறைக்கு மாறக்கூடும் அதனால் கூ-த்தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறையக்கூடும், வேறு சில விவசாயிகள் தங்களது நிலங்களை குத்தகைக்கு விட்டுவிட்டோ. நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுவிட்டோ அதிக வருமானம் தரும் வேளாண் சாராத தொழில்களுக்கு மாறக்கூடும், இத்தகைய மாற்றங்கள் சமூக ரீதியாக சில சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் நிலங்கள் தரிசாக மாறுவதை தடுக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், அமைப்பு சார்ந்த மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது வேளாண் துறையில் பெருமளவிலான தொழிலாளர்கள் பணிபுரிவதை பார்க்கும்போது. வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளின் போது எழுப்பப்படும் மற்ற பிரச்சினைகளை இந்தப் பிரச்சினை சிறியதாக்கிவிடும், வேளாண் துறையி-ருந்து மற்ற துறைக்கு சம அந்தஸ்துள்ள வேலைகளுக்கு தொழிலாளர்களை மாற்ற திட்டமிடுவதற்கு. குத்தகைதாரர்களின் உரிமைகள். பெண்களின் சொத்துரிமை. பாதுகாப்பு போன்ற அம்சங்களும் பரிசீ-க்கப்பட வேண்டும், வேளாண் துறையி-ருந்து தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற ஒரே அம்சத்தின் அடிப்படையில்தான் இந்த பிரச்சினைகளை அணுக வேண்டும், இல்லா விட்டால் தற்போதுள்ள நில உச்சவரம்பு சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது. பெரிய அளவிலான பண்ணைகளை அமைக்க திட்டமிடுவது போன்ற தவறான நடவடிக்கைகளுக்கு இதுவே காரணமாகின்றது, இத்தகைய தவறான நடவடிக்கைகள் மிகவும் அபாயகரமானவை, அவை முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டும், வேளாண்துறை சாராத வேலைவாய்ப்பு ஆண்டுக்கு ஆறு சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்தாலும் விவசாயத் தொழிலாளர் ஒருவருக்கு கிடைக்கும் நிலம் ஒரு ஹெக்டேருக்கும் குறைவு என்ற நிலை பத்தாண்டுகளுக்கு தொடரும், தற்போதைய உச்சவரம்புக்கு மேற்பட்ட வரம்புகளால் பொருளாதார நிலை வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை, நிலச் சீர்த்திருத்தங்களை மீண்டும் செயல்படுத்துவது. அனைவருக்கும் பங்களிப்பது போன்ற ஆக்கப் பூர்வமான திட்டங்கள்தான் நில வாடகை போன்ற சிக்கலான பிரச்சினைகளை தீர்க்க உதவும், நில ஆக்கிரமிப்பு. தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகளை திறமையாக சமாளிப்பதற்கு இது அவசியமாகிறது, வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டம் தற்போது நடைமுறையில் இருப்பதால். இயற்கை ஆதாரங்களை மறு உருவாக்கம் செய்தல். போன்றவற்றுக்காகவும். நேரடி வேலைவாய்ப்பு. சிறிய நிலங்களிலும் உற்பத்தியை அதிகரித்தல். 70 ஏழைகள் தங்களது எதிர்கால தலைமுறையின் திறமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்ற துறை வேலைகளுக்கு செல்வதன் மூலம் வாழ்க்கை ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காகவும் இத்திட்டத்தை தீவிரப் படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன, நமது வளர்ச்சி உத்திகள் வெற்றி பெறுதல். ஒட்டுமொத்த பொருளதார விகிதம் கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக வேகத்தில் வளர்ச்சியடைதல். தொழிலாளர்கள் நிறைந்த உற்பத்தித்துறை. உற்பத்தி சேவைத் துறை போன்றவற்றில் அதிக வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவை நிகழ்ந்தால் மட்டுமே வேளாண் துறை தொழிலாளர்களை வேளாண் சாராத மற்ற தொழில்துறைக்கு மாற்றுவது சாத்தியமாகும், குறுகிய காலத்தில் பயனளிப்பதுடன் ந-வடைந்த பிரிவினரின் வேலை வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலான வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டங்களில் அரசு கவனம் செலுத்தவேண்டும், குறிப்பாக. நமது கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ள குறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டும், ஆ)வேலைவாய்ப்பை பெருக்கும் துறைகள் பொருளாதார வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பெருக்கத்தை அதிகரிக்க. அதிக தொழிலாளர்கள் நிறைந்த உணவு பதனிடும் தொழில். ஜவுளி. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள். சுற்றுலா. கட்டுமானம் போன்ற துறைகளில் 11வது ஐந்தாண்டுத் திட்டம் அதிக கவனம் செலுத்த வேண்டும், தொழில் மயமான நாடுகளில் ஜவுளிகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டிருப்பதால் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலை விரிவுபடுத்தவும் அதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதே நேரத்தில் மற்ற வளரும் நாடுகளுடன் நாம் திறமையாக போட்டியிட்டால் மட்டுமே இது சாத்தியமாகும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத் தொழில் மூலம் ஹோட்டல்கள். சமையல் கலைத்துறை. பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து தொழில்களில் வேலைவாய்ப்பை பெருக்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் சந்தையை ஏற்படுத்தி அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்கவும் சுற்றுலாத் தொழில் வகை செய்கிறது, உற்பத்தித் துறை ஆண்டுக்கு 12 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமான அளவு வளர்ச்சியை ஏற்படுத்துவது கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பெரிதும் உதவும், இத்தகைய வளர்ச்சியை ஏற்படுத்துவதறக்கு. அதிக தொழிலாளர்களுக்கு வேலை தரும் துறைகளில் முதலீடு செய்வதற்கான சூழலை ஏற்படுத்துவது உட்பட சில முக்கியப் பணிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும், அதிக அளவில் வீடுகளை கட்டுவதற்கும். உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஏற்பட்டுள்ள தேவையை பார்க்கும்போது கட்டுமான துறையிலும் கணிசமான அளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும், இதற்கு ஏற்ற வகையிலேயே தொழிலாளர் சந்தைக் கொள்கைகள் அமைந்துள்ளன, தேசிய அளவிலும் உலக அளவிலும் மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் தொழிலாளர் நலத்துறையில் வளைந்து கொடுக்கும் தன்மை போட்டித்தன்மையை ஏற்படுத்துவதற்கு அவசியமாகும், எனவே தொழிலாளர் உரிமைகளில் வளைந்து கொடுக்கும் தன்மையை கொண்டு வரவும் அதே நேரத்தில் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும் உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, தொழிலாளர் உரிமையில் வளைந்து கொடுக்கும் தன்மை என்பது தொழிலாளர்களை பயன்படுத்திக் கொண்டு வேலையி-ருந்து விரட்டிவிடும் செயல் என்று அர்த்தமாகாது, நமது தொழிலாளர் சட்டங்களில் வளைந்து 71 கொடுக்கும் தன்மை தேவைப்படும் அம்சங்கள் நிறைய உள்ளன, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இத்தகைய வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க அமைப்பு சார்ந்த தொழில்துறையினரை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை பெருமளவில் பெறுக்கலாம் என்பதால் இது தொழிலாளர்களின் நலம் சார்ந்த ஒன்றாகும், ஏற்றுமதி சந்தை நமக்களிக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இந்தத் தன்மை அவசியப்படும், மற்ற நாடுகளில். குறிப்பாக சீனாவில் வளைந்து கொடுக்கும் வகையிலான தொழிலாளர் சட்டங்களை உருவாக்குவதில் பெரும் வெற்றி காணப்பட்டுள்ளது, சீனாவுடன் இந்தியா போட்டியிடுவதற்கு இதுதான் சரியான நேரமாகும், இது மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட ஒரு சிக்கலான பிரச்னையாகும், தொழில்துறை தாவா சட்டம். ஒப்பந்த தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டம் உள்ளிட்ட முக்கிய சட்டங்களில் சீர்த்திருத்தம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் தொடர்பாக கருத்தொற்றுமையை நாம் ஏற்படுத்த வேண்டும், இ) தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் வேளாண் வேலைவாய்ப்பு இல்லாத காலங்களிலும் விவசாய தொழிலாளர்களின் வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது, துவக்கத்தில் 200 மாவட்டங்களில் செயல் படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்படுகிறது, இந்தத் திட்டம் நேரடி வருவாய் ஆதரவை வழங்குவதுடன் நிலம் மற்றும் நீர் ஆதார மேம்பாட்டை ஒழுங்கு படுத்துவதற்கான வழியாகவும். பாரத் நிர்மாண் திட்டம் மற்றும் பின்தங்கிய பகுதி மானியத்துடன் இணைந்து கிராமப்புறங்களை இணைப்பதற்கான முறையாகவும். கிராமப் பகுதிகளில் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான திட்டமாகவும் விளங்குகிறது, கிராமப்புற மக்களின் தேவைகளுடன் தொடர்புடைய அமைப்பாக ஊராட்சிகள் விளங்குவதால் இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த திட்டப் பணிகளைச் செய்யலாம் என்பதை ஊராட்சிகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு போதுமான அளவு நிதி வழங்குவதையும் அத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதையும் 11வது ஐந்தாண்டு திட்டம் உறுதி செய்ய வேண்டும், கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட வேலை வாயப்பு திட்டங்கள் சரியாக தயாரிக்கப் படாததாலும் தவறான ஆள் எண்ணிக்கையை கணக்கில்காட்டி அதற்கான நிதியை தவறாக பயன்படுத்துவது போன்ற குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன, எனவே இத்தகைய குறைகளால் தேசிய வேலைவாயப்பு உத்தரவாதத் திட்டம் பாதிக்கப்படாமல் இருப்பதை மாநில அரசுகள் உறுதி செய்வது அவசியமாகும், ஈ) சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பொருளாதார செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனை வழங்குவதற்காகவும் சுயஉதவிக் குழுக்களை அமைப்பதை பொருத்தே சுய வேலைவாய்ப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கான அரசின் உத்தி அமையும், சுயஉதவிக் குழுக்களுக்கு உதவும் வகையிலான பல திட்டங்களை அரசின் பல்வேறு துறைகள் செயல்படுத்தும் போதிலும் அவற்றின் வாய்ப்புகள். செயல்படுத்தும் விதம். திட்ட அம்சம் போன்றவை ஒன்றுக்கொன்று மாறுபடுவதால் அந்தத் திட்டங்கள் குறைபாடு 72 உள்ளவையாக உள்ளன, எனவே பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் சுய வேலை வாய்ப்பு திட்டங்களை ஒரே தன்மை உடையவையாக மாற்றவும் ஒருங்கிணைந்த சுய வேலைவாய்ப்புத் திட்டம் அரசுத்த துறைகளின் எல்லைகளைக் கடந்து இருப்பதை உறுதி செய்யவும் 11வது திட்டம் முயல வேண்டும், கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான அம்சமும் இந்த திட்டத்தில் இருப்பது அவசியமாகும், இந்த பிரச்னை நாடு முழுவதும் குறிப்பாக தென்மாநிலங்களில் அதிகமாக இருப்பதால் அதில் கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியமாகும், 5,3 கிராம. நகர இடைவெளி இணைக்கப்பட வேண்டிய மற்றொரு இடைவெளி கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள இடைவெளியாகும், கிராமப்புற தனிநபர் நுகர்வைவிட நகர்ப்புற தனிநபர் நுகர்வு சற்று அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு என் எஸ் எஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன, இதர அடிப்படை சேவைகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியையும் சேர்த்து கிராமப்புறங்களையும் நகர்ப்புறங்களையும் ஒப்பிட்டால் இரண்டுக்கும் இடையிலான இடைவெளி மிகவும் அதிகமாகும் இந்த இரு விஷயங்களிலும் உள்ள இடைவெளியை போக்க 11வது ஐந்தாண்டு திட்டம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், இந்த அணுகுமுறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சி சக்தி. கிராமப்புற வேளாண் சாரா தொழில்களுக்கான கட்டமைப்பு மேம்பாட்டுடன் இணைத்தால். கிராம. நகர இடைவெளி அதிகமாவதைத் தவிர்க்கலாம், இந்த இலக்கை எட்ட பாரத் நிர்மாண் திட்டம் போன்றவை சரியான திட்டங்களாகும், கிராம நகர இடைவெளி தவிர. வளர்ந்துவரும் நகர்ப்புற பகுதிகளுக்குள்ளேயும் சில இடைவெளிகள் உள்ளன, நகர்ப்புறங்களில் மக்கள்தொகை விரைவாக பெருகும் அளவுக்கு அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும். குடிமை சேவைகளும் செய்யப்படாததால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, ஒரு சிலர் மட்டும் தான் ஓரளவு நல்ல நகர்ப்புற வசதிகளை அனுபவிக்கிறார்கள், அடிப்படை நகரத் தேவைகளில் அலட்சியம் காட்டப் படுவதன் விளைவுகளி-ருந்து அவர்கள் தப்பிக்க முடியாது என்பது நிலநடுக்கம். தொடர் மழை போன்ற இயற்கை சீற்ற காலங்களின்போது வெளிப்படையாக தெரிகிறது, சுத்தமான குடிநீர் கூட அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பது மிகப்பெரிய குறையாகும், நமது நகர்ப்புற மக்களில் பெரும்பாலானோரின் வாழ்க்கைப் பிரச்சினைகள் பல தவிர்க்க கூடியவை, நகர்ப்புறங்கள் கணிசமான ஒன்று சேர் குவிப்பு பொருளாதாரத்தை வழங்குவதுடன் பொருளாதார வளர்ச்சியின் இயக்க விசையாக விளங்குகின்றன, சமத்துவத்தையும் திறமையையும் ஏற்படுத்த நகர்ப்புறங்களை புதுப்பிப்பது அவசியமாகும், மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சேவைகளை வழங்குவதற்காகவே ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பிப்பு இயக்கம் (ஒசசமதங) செயல்படுத்தப்பட்டு வருகிறது, மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கு அரசிடமிருந்து போதுமான நிதியுதவி தேவைப்படுகிறது, அதேநேரத்தில் இந்த திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதால் மற்ற அவசியத் திட்டங்களுக்கான முதலீடும் வளர்ச்சியும் பாதிப்படையுமா என்ற கேள்வியும் எழுகிறது, உண்மையில் சிறப்பான இலக்குகளை நிர்ணயித்து திறமையான முறையில் செயல்படுத்தினால் இந்தத் திட்டங்களும் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் பொருளாதார வளர்ச்சி தூண்டுதலை ஏற்படுத்த உதவும், உதாரணமாக கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை எடுத்துக் கொண்டால் அத்திட்டம் உற்பத்திக்கு அடிப்படையான சொத்துக்களை உருவாக்குவதுடன் ஏழைகளுக்கு 73 கூடுதல் வருவாயையும் வழங்குகிறது, மேலும் உணவு மற்றும் நுகர்ப்பொருள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வளர்ச்சியை தூண்டுகிறது, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது எந்த அளவுக்கு அவசியமோ அதேபோல வேளாண்மை பொருளகளுக்கான தேவையை அதிகரிப்பதும் அவசியமாகும், இல்லாவிட்டால் உற்பத்தி அதிகரித்து அதை விற்கமுடியாத நிலை உருவாகிவிடும், மேலும் கிராம நகர இடைவெளியை குறைப்பதில் வேளாண்மை வளர்ச்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது, அதேபோல வளர்ச்சியை அதிகரிக்கவும் ஏற்றத்தாழ்வை குறைக்கவும் பின்தங்கிய பகுதி மேம்பாட்டுத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும், 5,4 சமச்சீரான மண்டல மேம்பாடு 11வது ஐந்தாண்டு திட்டம் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு சவால் மண்டலங்களுக் கிடையேயான இடைவெளியை சமன் செய்வதாகும், நமது திட்டமிடுத-ல் சமச்சீரான மண்டல வளர்ச்சி ஒரு முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும், பொருளாதார ஊக்கங்கள். தொழிற்கொள்கை. நேரடி திட்டங்கள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த இலக்கை எட்டுவதற்காக கடந்த காலங்களில் செயல் படுத்தப்பட்டுள்ளன, இன்றைய பொருளாதார சூழ-ல் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாது என்பதால். தொழிற்சாலை உரிமம் வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் தற்போது பொருத்தமற்றதாகி விட்டன, போட்டி நிறைந்த இந்த சூழ-ல் எங்கு போதுமான அளவு கட்டமைப்பு வசதிகளும் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையும் நிலவுகிறதோ அங்குதான் முதலீடு அனுமதிக்கப் பட வேண்டும், இது நிச்சயமாக திறமையை அதிகரிக்கும் என்ற போதிலும். இதன் காரணமாக மண்டல இடைவெளி அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன, மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்களில் வேறுபாடுகள் காணப்படுவதுடன் மோசமான கட்டமைப்பு வசதியை ஏழை மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது, மாநிலங்களின் வருவாய் வளர்ச்சி செயல்பாடுகள் வேறுபடும் போதிலும் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சி அடைவுகளில் ஒருமுகப்போக்கு காணப்படுவது வரவேற்கப்பட வேண்டியதாகும், சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கும் மோசமாக செயல்படும் மாநிலங்களுக்கும் இடையேயான இடைவெளி குறைத்திருப்பதுடன் சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் ஏழை மாநிலங்களின் செயல் பாட்டில் நிச்சயமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, எனினும் இந்த விஷயத்தில் இன்னும் அதிக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமே, இதற்கென அனைவருக்கும் கல்வி திட்டம். தேசிய சுகாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருகின்றன, இந்த திட்டங்கள் சிறப்பான பயன்களை அளிக்கும் வகையில் மாநில அரசுகளின் நிர்வாகத்தை மேம்படுத்த ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகும், சமூக ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றங்களுடன் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளிலும் முன்னேற்றம் தேவைப்படுகிறது, மோசமாக செயல்படும் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி உயர்வதை உறுதி செய்ய அவற்றின் பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்துவது தான் சிறந்த வழியாகும், 11வது ஐந்தாண்டு திட்டகாலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது சமச்சீரான மண்டல முன்னேற்றத்திற்கு உதவும், இதனாலேயே நாடு முழுவதும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது, இந்த நடவடிக்கைகளுக்கு சமமாக மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம், மின்சாரத்துறையில் செயல்பாட்டு பொறுப்பு 74 முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப் பாட்டிலேயே இருப்பதால் அதில் மாநில அரசுகளின் பங்கு இன்னும் அதிகமாகும், மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடு சமச்சீரான மண்டல வளர்ச்சியின் ஒரே ஒரு அம்சம்தான், அதேபோல் பலவகைகளில் சிறப்பாக செயல்படும் மாநிலத்திலுள்ள பல மாவட்டங்கள் பின்தங்கியிருக்கும் உள்மாநில வேறுபாடுகளும் முக்கியமானவையாகும், மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான காரணங்கள் : மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மாவட்டங்கள். அதிக அளவு நிலம் சீரழியும் மாவட்டங்கள். மோசமான கட்டமைப்பு மற்றும் தொடர்பு வசதிகள். மோசமான மனித மேம்பாட்டு அடைவுகள், இந்த வகை மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிப்பதும் அவற்றின் பின்தங்கிய நிலைக்குக் காரணமாகும், அங்குள்ள வனப்பகுதிகளில் பழங்குடி உரிமை பிரச்னைகள் தீர்க்கப் படாமலேயே இருப்பதும் அப்பகுதி மக்களின் அதிருப்திக்கு வழி வகுக்கிறது, இத்தகைய மாவட்டங்களில் பொருளாதார மேம்பாடு குறைந்து அதனால் கடுமையான சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன, தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தனிமைப் படுத்தப்படுவதாகவும் மக்கள் உணர்வதே அந்த சமூகப் பிரச்னைகளின் அடிப்படை, இது அப்பகுதியின் அமைதிப் பாதுகாப்பு சூழலை சீர்க்குலைப்பதுடன் வளர்ச்சிக்கும் தடையாக அமைகிறது, இந்த பிரச்னைகள்தான் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும், நக்சல்வாதம் வளர காரணமாக அமைந்தன, இத்தகைய மாவட்டங்களில் பெரும்பாலானவை பின்தங்கிய மாநிலங்களில்தான் உள்ளன என்ற போதிலும். ஆந்திரா. மகாராஷ்டிரா. கர்நாடகம் போன்ற சிறப்பாக செயல்படும் மாநிலங்களிலும் இத்தகைய பிரச்சினைகள் கொண்ட மாவட்டங்கள் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும், மாநிலத்திற்குள் சமச்சீரான மண்டல வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டிய அடிப்படை பொறுப்பு மாநில அரசுகளைச் சார்ந்தது, சராசரியாக சிறப்பாக செயல்படும் மாநிலங்கள். சொந்த திட்ட ஆதாரங்களைக் கொண்டே பின்தங்கிய மாட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி ஆதாரங்களை ஒதுக்க முடியும், துரதிருஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, மாநில நிதியை அதன் பகுதிகளை சமப்படுத்தும் வகையில் ஒதுக்குவது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய நடவடிக்கையாகும், மேலும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மத்திய அரசு அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்துவதற்காக பின்தங்கிய மண்டல மானிய நிதியை ஏற்படுத்தியுள்ளது, இத்தகைய மாவட்டங்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருக்கும் காரணிகளை அகற்ற 11வது ஐந்தாண்டு திட்டம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், 5,5 ஆதி திராவிடர். பழங்குடியினர். சிறுபான்மையினர் மற்றும் இதர விடுபட்ட பிரிவுகளை முன்னுக்கு கொண்டு வந்து சமநிலைப்படுத்துதல் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவுகளுக்கு அதிகாரமும் மேம்பாடும் அளிப்பது அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழிகளில் ஒன்று, சமூகத்தில் அவர்கள் ஆற்றல் மேம்பாட்டுக்கு கல்விதான் சிறந்த வழியாகும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் இதர பிரிவினருக்கும் இடையேயான இடைவெளி இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிலேயே இருக்கும் பொழுதும் கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்களின் பயனை அவர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர், எனவே அவர்களுக்கு சாதகமான கல்வித் திட்டங்கள் தொடர வேண்டும், அவை இரு மடங்கு உத்வேகத்துடன் 75 செயல்பட வேண்டும், அதேபோல் சிறுபான்மையினர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் கல்வி வழங்க வேண்டியது அவசியமாகும், தேசிய கல்வி சராசரியில் சில சிறுபான்மையினர் மிகவும் பின்தங்கியுள்ளனர், எனவே இந்த பிரச்சினையின் அடிப்படையை ஆராய்ந்து அவர்கள் பின்தங்கியதற்கான காரணங்களை கண்டறிவது அவசியமாகும், அதன் மூலம்தான் நிலைமையை சரி செய்வதற்கான மற்றும் நடவடிக்கைகளை 11வது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்ள முடியும், குறைந்தபட்சம் சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் அனைவருக்கும் கல்வி திட்டம். கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டம் தீவிரமாக செயல்பட வேண்டும், மேலும் சிறு பான்மையின மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், ஆதி திராவிடர். பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை தேசிய சராசரி அளவுக்கு உயர்த்த சற்று அதிக காலமாகும் என்ற போதிலும். சிலவகையான பின்தங்கிய தன்மை உடனடியாக சரிசெய்ய வேண்டும், மனிதக்கழிவை மனிதனே அகற்றும் மோசமான நடைமுறைக்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மத்திக்குள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், துப்புறவு பணியாளர்களுக்கு சுதந்திரம். மறுவாழ்வு. நிலையான வேலை வாய்ப்பு. வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலமே இதை செய்ய முடியும், அதேபோல் ஆதி திராவிடர்கள் பழங்குடியினரை அடிமைப்படுத்தும் கொத்தடிமை முறையை ஒழிப்பதும் 11வது திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும், இதற்காக கொத்தடிமைகளை கண்டுபிடித்து அவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் மறுவாழ்வு அளிக்கும் தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அதேபோல். சிறந்த அம்ச திட்டம். பழங்குடியின துணைத் திட்டம் ஆகியவற்றை தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறப்பாக செயல்படுத்துவது அவசியமாகும், மேலும் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளின் பாதுகாப்பு. அனைத்துத் துறை வளர்ச்சி. அவர்களின் நலன்பேணி ஆற்றலை மேம்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய தேசிய பழங்குடியினர் நலக் கொள்கை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதும் மிக அவசியமாகும், இதில் பழங்குடியினப் பகுதிகளி-ருந்து இடம்பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு நடவடிக்கைகளும் அடங்கியிருக்க வேண்டும், இந்தக் கொள்கையை உடனடியாக அறிவிப்பது 11வது ஐந்தாண்டுதிட்டத்தின் அவசர நடவடிக்கையாக இருக்க வேண்டும், 5,6 பா-ன சமன்பாடு பிரச்சினைகளின் மற்றொரு வடிவமாக விளங்கும் பா-ன வேறுபாட்டிலும் அவசர கவனம் செலுத்த வேண்டியுள்ளது, பா-ன பாகுபாடு நமது சமுதாயத்தில் ஊறி ஊன்றிப் போய் இருக்கிறது, ஆண். பெண் விகிதம் மாணவர் மாணவிகளிடையேயான கல்வி அடைவுநிலை வேறுபாடு. பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் போன்ற அடைவுநிலை முறையீடுகள்இந்த பாகுபாட்டினை தெளிவாக வெளிப்படுத்துகின்றன, இந்த விபரங்கள்கூட பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை முழுமையாக வெளிக்கொணரவில்லை, எனவே பா-னச் சமன்பாட்டுக்கான 11வது ஐந்தாண்டு திட்ட உத்திகள் பெண்களின் சிறப்புத் தேவையான சுத்தமான சமையல். எரிபொருட்கள். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும், பா-ன சமன்பாட்டினை ஏற்படுத்த பல்வேறு அமைச்சகம்/துறைகளின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் தேவையான பிரிவுகள் சேர்க்கப்படுவது அவசியமாகும், அவற்றுடன் பாரம்பரிய பா-ன வேறுபாட்டு கொள்கைப்பிடியில் சிக்கியுள்ள ஆண்களும் பெண்களும் தற்போது உருவாகி வரும் சமூக பொருளாதார உண்மைகளை 76 அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் செய்யப்பட வேண்டும், பா-ன சமத்துவம் மற்றும் அதிகார மயமாக்கலுக்கான சிறப்பு நடவடிக்கைகள் 11வது திட்டத்தில் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும், அனைத்துத் துறைகளிலும் பெண்களின் தேவைகள் பூர்த்தி செய்யப் படுவதுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல். அவர்களது ஆற்றலை அதிகரித்தல். பெண்களின் சுகாதாரம் ஆகிய மூன்று அம்சங்களுக்கு 11வது ஐந்தாண்டு திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், குடும்பத் தகராறு. பெண் சிசுக்கொலை முதல் பா-யல் பலாத்காரம் வரை பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன, இவற்றை சிறப்பான கொள்கைகள் மற்றும் சட்டங்களின் மூலம் தடுக்க 11வது ஐந்தாண்டுத் திட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மற்றும் மாநகர சூழ்நிலைகள் பெண்களுக்கு சாதகமானவையாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும், அதேநேரத்தில் விவசாயம் மற்றும் வீட்டு வேலைகள் பெண்கள் சார்ந்ததே என்ற எண்ணப் போக்கைத் தடுக்கவும் 11வது ஐந்தாண்டு திட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கிணையாக பெண்கள் நுழைவதை உறுதி செய்யத் தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுவதற்கு 11வது திட்டத்தில் வகை செய்யப்பட வேண்டும், ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார ரீதியாக ஆற்றல். அதிகாரம் பெறவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும், இதன்மூலம் பெண்கள் சுயமாக முடிவெடிக்கும் திறன் வளருவது மட்டுமின்றி அவர்களுக்கு எதிரான வன்முறை குறையவும் வழி ஏற்படும், இறுதியாக. பெண்கள் நலமாக இல்லாத நாடு நலமாக இருக்க முடியாது என்பதை 11வது திட்டம் அங்கீகரிக்க வேண்டும், மேலும் விடலைப் பருவப் பெண்கள் இரும்புச் சத்துக் குறைவு போன்ற உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது. பிரசவத்தின்போது ஏற்படும் தாய்-சேய் உயிரிழப்பு ஆகியவற்றை ஒழிக்கவும் அவர்களின் பலவீனம். சுத்தமற்ற தன்மையைக் குறைக்கவும் 11வது ஐந்தாண்டு திட்டம் பாடுபட வேண்டும், 6, பொதுத்துறைத் திட்டம் : உதவிகரமான சூழல் எதிர்பார்க்கும் அளவுக்கு தனியார் துறையும் பொதுத்துறையும். செயல்பட்டால் மட்டுமே இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள உத்திகள் செல்லுபடியாகும், இந்தியாவின் மொத்த முதலீடுகளில் எழுபத்தைந்து விழுக்காடு தனியார்துறை சார்ந்த விவசாயம். சிறு மற்றும் நடுத்தரத் தொழில். பெரிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ளன, வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் அவை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன, மத்திய மாநில அரசுகள் தனியார்த்துறையின் விரிவாக்கத்தையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும், பொதுத்துறைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அதிக பொறுப்பு உள்ளது, நேரடியாகவோ அல்லது தனியாருடன் இணைந்தோ அது உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும், அத்துடன் விவசாயம். நீர்ப்பாசனம். ஊரக வளர்ச்சி. சுகாதாரம். கல்வி ஆகியவற்றில் பொதுத்துறை பெரும் பங்கு வகிக்க வேண்டும், விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கியமானது, பதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பொதுத்துறைக்கான செயல்பாடுகள் சவால் நிறைந்தவை, முதலாவதாக பொதுத்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகளுக்கு நிதி மிகவும் அதிகம், அதனை எவ்வாறு சந்திப்பது என்பது ஆராயப்பட வேண்டும், 77 இரண்டாவதாக.பொதுத்துறையின் செயல்பாடுகளில் பல. மாநிலங்களின் வரம்புக்குள் வருபவை, இதனால் திட்டங்களை உருவாக்குதல்.செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய மாநில அரசுகள் சார்புத் தன்மையுடன் திகழ வேண்டியுள்ளது, மூன்றாவதாக சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ள பெரும்பாலான பணிகளின் அமலாக்கத்திற்கு உள்ளூர் மக்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமாக உள்ளது, எனவே உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் செயல்பாடுகள் பெருக வேண்டும், இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளன, 6,1 பொதுத்துறைத் திட்டங்களுக்கான நிதிவளம் பதினோராவதுஐந்தாண்டுத்திட்டத்துக்கான நிதி குறித்த தெளிவான நிலை பல்வேறு அலுவல் குழுக்கள் மாநிலங்களுடனும் மத்திய அமைச்சகங்களுடனும் கலந்தாலோசித்து தமது அறிக்கைகளை சமர்ப்பித்த பின்புதான் தெரிய வரும், எனினும் முந்தைய அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ள பணிகளை கருத்தில் கொண்டால். பல்வேறு மத்திய மாநில அரசுத் துறைகளுக்கு மிக அதிகமான நிதிவளம் தேவைப்படும் என்பது தெளிவு, உதாரணமாக நீர்ப்பாசனம். மானாவாரி நிலங்களுக்கான நீர் சேமிப்பு ஆகியவை இத்திட்டத்தின் உத்திகளில் முக்கியமானவை, அவற்றுக்கு தற்போதைய நிலையைக் காட்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0,5% கூடுதலாக நிதி தேவைப்படும், பதினோராவது திட்டக்காலத்தில் சுகாதாரத்திற்கு குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாகவாவது ஒதுக்கீட்டை அதிகரிக்கவேண்டும், பதினோராவது திட்டகாலத்தின் இறுதியில் உயர்நிலைக் கல்வியை விரிவுபடுத்துவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலும் 0,5% அதிகரிக்க வேண்டும், அத்துடன் உயர்கல்விக்கு மேலும் 0,25% நிதி தேவைப்படும், இது தவிர. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை படிப்படியாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவு படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்காக 2005-6ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலும் 0,75% நிதி 11-வது திட்டத்தின் இறுதிக்குள் தேவைப்படும், இவற்றால் தற்போதைய செலவு அளவைவிட 2007-08ம் ஆண்டில் ஒரு சதவீத அளவுக்கும் 2011-12-ம் ஆண்டில் 2,5 சதவீத அளவுக்கும் கூடுதல் நிதி தேவைப்படும், அத்துடன் மூன்றாவது அத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளஉட்கட்டமைப்புப் பணிகளுக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது, உதாரணமாக நமது நகரங்களை மேம்படுத்த வேண்டுமானால் மிக அதிக செலவாகும், அவற்றில் பல நகரங்கள் பல காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன, சில பணிகளுக்கான நிதிச்சுமை. பொது மற்றும் தனியார்த் துறைகள் கூட்டாக செயல்படுவதன் மூலம் குறையும், இருப்பினும் பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சி ஏற்படும்போதிலும் மொத்த தேவை அதிகமாகவே இருக்கும், பொதுத் துறையில் ஒதுக்கீடு அதிகமாக உயர்த்தப்பட வேண்டும், ஏனெனில் சில கட்டமைப்புத் துறைகளில் தனியார் முதலீடு வருவது சிரமமே, இதர சில கட்டமைப்புத் துறைகளில் தனியார் ஒதுக்கீடு வர வாய்ப்புள்ள போதிலும். பொதுத்துறையின் ஆதரவும் அவற்றிற்கு தேவைப்படும், மேலும். தனியார்த்துறை முதலீட்டை கட்டமைப்புக்களில் மட்டுமே செய்தால் பிற ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு அவை போதிய அளவு கிடைக்காமல் போய்விடும், முன்னுரிமை அல்லாத திட்டங்களுக்கும். பயன்தராதவை என்று நிரூபணமாகியுள்ள திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டு வந்த நிதியை முன்னுரிமைத் திட்டங்களாக அறியப்பட்டுள்ளவற்றுக்கு மாற்றி அளிப்பதன் மூலம்நிதித்தேவையை ஓரளவுக்கு 78 சரிக்கட்டலாம், பல பழைய திட்டங்கள் தமது நோக்கத்தை இழந்துள்ளபோதிலும் அவற்றுக்கு தொடர்ந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது, அத்தகைய பயனற்ற திட்டங்களை மத்திய மாநில அரசுகள் பதினோராவது திட்ட காலத்தில் கைவிட வேண்டியது அவசியமாகும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8,5% வளர்ச்சி என்பது எஈட-யில் இத்தனை சதவீதம் என்ற ஒதுக்கீடுகளைகுறைப்பதற்கு உதவுவதுடன் மொத்த அளவில் கணக்கிடும் போது வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும், எனினும். பல துறைகள் சுயசார்புடன் செயல்படுவது சிரமம், ஏனெனில் திட்டங்களின் அமைப்பு சமுதாயத்துறைகளை மையமாகக் கொண்டே அமைகிறது, மேலும். பயிர் மற்றும் கால்நடைக் காப்பீடு. அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்புத்திட்டம் ஆகியவையும் நிதி தேவைப்படும் சில துறைகளாகும், இவை. திட்டம் சாராத் தன்மையுடையவை என்ற போதிலும். திட்ட ஒதுக்கீடும் இவற்றுக்கு தேவைப்படலாம், பட்ஜெட் ஒதுக்கீட்டி-ருந்து இவை நிதி கோரக்கூடும், அலுவல் குழுக்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகுதான் தேவைப்படும் நிதி தொடர்பான முழு விபரம் தெரியவரும், எனினும் தற்போதைய நிலையில் திட்ட ஒதுக்கீடுகளுக்கு மத்திய மாநில அரசுகளுக்கு சேர்த்து தற்போதைய பத்தாவது திட்ட ஒதுக்கீடான 7,15% சதவீதத்தைவிட பதினோராவது திட்டகாலத்தில் 9,5% சதவீத நிதி தேவைப்படலாம், இதற்கான கூடுதல் நிதியை மத்திய மாநில அரசுகளுக்குச் சேர்த்து எவ்வாறு திரட்டுவது என்பது கவனமாக ஆராயப்பட வேண்டும், கொள்கையளவில் கீழ்காணும் முறைகளில் அவற்றைத் திரட்டலாம், ப் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் சதவீதத்தை அதிகரித்தல், ப் நேரடி மற்றும் மறைமுக மானியங்கள் உட்பட திட்டம் சாராத செலவினத்தைக் குறைத்தல் ப் நிதிப்பற்றாக்குறையை அதிகரித்தல், ஆனால் திட்டச் செலவினங்களுக்கென நிதிப்பற்றாக்குறையை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களை நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டம் கட்டுப்படுத்தி விட்டது, இச்சட்டத்தின்படி வரும் 2009ம் ஆண்டுக்குள் மத்திய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியி-ருந்து 3 சதவீதமாகக் குறைத்தாக வேண்டும், மேலும். வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யம் என்ற நிலைக்கு கொண்டு வரவேண்டும், இதுபோன்ற சட்டங்களை பல மாநிலங்களும் இயற்றியுள்ளன, இதனால். மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப்பற்றாக்குறை 2008-09ம் ஆண்டி-ருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% ஆக குறைக்கப்பட வேண்டும், எனவே. நிதியைத் திரட்டுவதற்கு நிதிப் பற்றாக்குறையை அதிகரிப்பது சிரமமே, இதனை அடுத்து 11-வது திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில். வருடத்துக்கு ஒரு சதவீத நிதிப்பற்றாக்குறையைக் குறைத்தாக வேண்டியுள்ளது, இந்நிலையில். திட்ட ஒதுக்கீட்டு நிதியை அதிகரிக்க வரி வருவாயைப் பெருக்குவது. திட்டமல்லாத செலவினங்களை குறைத்தல் ஆகியவை நல்ல வழிகளாகும், முதற்கட்ட மதிப்பீடுகளின் (விவரங்களுக்கு பிற்சேர்க்கையைப் பார்க்கவும்) படி வரி வருவாய் பெருகவும். திட்டம் சாராத செலவு குறையவும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,5% ஆக அதிகரிப்பது அவசியம், இம்மதிப்பீடுகளின்படி. பத்தாவது திட்டகாலத்தைவிட பதினோராவது திட்ட காலத்தில் திட்டம் சாராத செலவினங்கள் மெய்மதிப்பில் 5% அதிகரிக்கக்கூடும், எனினும் பதினோராவது திட்ட காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காரணமாக 79 திட்டம் சாராத செலவினத்தின் சதவீதம் குறைவாகவே இருக்கும், பதினோராவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8,5% ஆக இருக்கும் என்றும் வருவாய் உயர்வு மத்திய அரசுக்கு 1,25 சதவீதமாகவும். மாநில அரசுக்கு 1,1 சதவீதமாகவும் இருக்கும் என்றும் கருதி. அதன் அடிப்படையில் செய்யப்பட்ட மதிப்பீடுகள் அட்டவணை-9ல் தரப்பட்டுள்ளன, அதன்படி. மத்திய மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வரி வருவாயின் சராசரி 9,43 சதவீதமாக இருக்கும், இதன்மூலம் மத்திய அரசுக்கான ஒட்டுமொத்த வரி வருவாய் 11-வது திட்டகாலத்தில் 1,7 சதவீதம் அதிகமாகவும் அதே அளவுக்கு அதன் திட்டம் சாராத செலவினங்கள் குறைவாகவும் இருக்கும், இது. 2008-09-ல் நிதிப்பற்றாக்குறையை 3% ஆகக் குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இலக்குக்கு ஏற்ப அமைந்துள்ளது, எனினும் இரண்டு விதமான அம்சங்களில் பிரச்சினைகள் எழும், முதலாவது. பட்ஜெட் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான கால இடைவெளி, இரண்டாவது. வருவாய்ப் பற்றாக்குறை, அட்டவணை-9 : 8,5% வளர்ச்சி அடிப்படையில் 11-வது திட்டத்துக்கான நிதி வளங்கள் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில்) 10-வது 11-வது திட்ட திட்ட சராசரி சராசரி 1, மத்திய அரசின் பொது பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு 4,33 5,08 (ண்) அதில் மாநிலங்களுக்கான மானியம் 1,37 1,47 2, மாநில அரசின் பொது பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு 4,19 5,83 3, மத்திய மாநில அரசுகள் சேர்த்து (1 + 2 – 1 (ண்)) 7,15 9,43 (அ) கால இடைவெளிப் பிரச்சினை இணைப்பில் தரப்பட்டுள்ளபடி. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின்படி 11-வது திட்டகாலத்தின் முதல் இரு ஆண்டுகளில் தலா ஒரு சதவீத நிதிப் பற்றாக்குறையை குறைக்க வேண்டியுள்ளதால் நிதி மேலாண்மையில் கால இடைவெளிப் பிரச்சினை ஏற்படுகிறது, இதன்மூலம் முதல் இரு ஆண்டுகளில் நிதி வளங்களின் அதிகரிப்பு மிகவும் மிதமாகவே இருக்கும், ஆனால் அதன்பிறகு வருவாய் வேகமாக அதிகரிக்கும், இதனால். வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சில திட்டப் பணிகளை ஒத்தி வைக்க வேண்டியிருக்கும், எனவே சில கட்டமைப்புப் பணிகளும். இன்னல்களைச் சந்திக்கலாம், அப்பணிகளில் ஏற்படும் காலதாமதத்தால் வளர்ச்சியும். அதன் காரணமாக வருவாயும் பாதிக்கப்படும், அத்துடன். இவ்விரு ஆண்டுகளில் எதிர்ச்சுழற்சி நிதி நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தால்கூட அவற்றை செயல்படுத்த இயலாத நிலை ஏற்படும், இதனால். நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் இலக்குகளை மேலும் இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைக்கலாமா என்ற கேள்வி எழுகிறது, அவ்வாறு நிதிப்பற்றாக்குறை இலக்கினை இரண்டாண்டுகளுக்கு ஒத்தி வைத்தால் 80 ஏற்படும் விளைவுகளை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட மற்றொரு மதிப்பீடு பிற்சேர்க்கையில் அட்டவணை – 9ல் தரப்பட்டுள்ளது, அதன்படி 11-வது திட்டத்தின் முதல் இரு ஆண்டுகளில் சிறப்பான கால அவகாசம் கிடைக்கிறது, அதற்கு மாறாக. நிதிப்பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை இலக்குகளை குறிப்பிட்ட அளவாக நிர்ணயம் செய்யாமல்.சர்வதேச அளவில் பின்பற்றப்படும்நடைமுறையைப் போலவே அந்தந்த காலத்திற்கேற்ற வகையில் இலக்கு நிர்ணயிப்பது நல்லது, ஆனால் இந்த வாய்ப்பு பன்னிரண்டாவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் காரணமாக. மாநிலங்களுக்கு கிடைக்காது, எனவே. இதற்கான முழுப் பொறுப்பையும் மத்திய அரசே ஏற்க வேண்டியுள்ளது, இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில். திட்ட செலவினங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்கு. துரித வளர்ச்சியும் வருவாய்ப் பெருக்கமும். திட்டம் சாரா செலவினங்களை மட்டுப் படுத்துவதும் அவசியமாகும், வருவாய்ப பெருக்கத்திற்கு தற்போதைய வரிச்சீர்திருத்தம் மற்றும் வரி நிர்வாகத்தை தொடர வேண்டும், (ஆ) வருவாய்ப் பற்றாக்குறை பிரச்சினை இரண்டாவது பிரச்னை. மத்திய நிதிப் பொறுப்பு மற்றும் வணிக மேலாண்மை சட்டத்திலும் பல்வேறு மாநில சட்டங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை இடைவெளியை குறைப்பதற்கான இலக்குகளை அடைவது தொடர்பானது, இந்த இலக்குகளை அடைவது கடினமாக இருக்கலாம், ஏனெனில் தற்போதைய பட்ஜெட் வரையறைகளின்படி. இனி மேற்கொள்ளப்பட வேண்டிய சமூகத் துறை திட்டங்களுக்கான செலவினங்களில் பெரும்பாலானவை வருவாய் செலவினங்களாகும், இச்சமூகத் துறை திட்டங்களுக்குத் தான் 11வது திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது, பட்ஜெட் வரையறைகளின்படி மத்திய அரசின் துறைகளுக்கும் மாநிலங்களுக்கும் தனியார்த் துறைக்கும் வழங்கப்படும் மானியங்கள் வருவாய் செலவினங்களாகவே கருதப்படுகின்றன, இச்செலவு மூலம் நிலையான சொத்துக்கள் உருவாக்கப் படுகின்றனவா என்பது கருத்தில் கொள்ளப் படுவதில்லை, இதனால் நிதிப்பற்றாக்குறை இலக்குகளை நாம் அடைந்தாலும் கூட வருவாய்ப் பற்றாக்குறை இடைவெளி எட்ட முடியாத சூழ்நிலை ஏற்படலாம், திட்ட செலவுகளுக்கு அதிக அளவு வருவாய் செலவினம் தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும், உதாரணமாக பாரத் நிர்மாண். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம். பிற்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம். விவசாயத்துறையில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய தோட்டக் கலை முனைப்பு இயக்கம் போன்ற பல திட்டங்களுக்கான முழு பட்ஜெட் செலவினமும் வருவாய் செலவினமாகவே கருதப்படுகிறது, ஏனெனில் இந்நிதி. மாநிலங்களின்செயல்படுத்தும்அமைப்புகளுக்கு மானியமாகவே தரப்படுகிறது, அவை அடிப்படை மட்டத்தில் அசையாச்சொத்துக்களை ஏற்படுத்தும் போதிலும் வருவாய் செலவினமாகவேஇது கருதப்படுகிறது, இதுபோலவே தனியார்-பொதுத் துறை கூட்டு முதலீட்டு திட்டங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியமும் வருவாய் செலவினமாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது, இப்பிரச்னைகள் காரணமாக மத்திய அரசால் ஒரு பக்கம் வருவாய் செலவினம் அதிகம் கொண்ட திட்ட செலவுகளை சமாளித்தவாறே மற்றொரு பக்கம் வருவாய் பற்றாக்குறையை 2006-07 ஆண்டின் 2,1% என்ற அளவி-ருந்து 2008-09 ஆண்டில் பூஜ்யம் என்ற அளவிற்கு கொண்டு வருவது சிரமமே, உண்மையில் நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்ட வரம்புகளை வ-யுறுத்தியவாறே 11வது ஐந்தாண்டு திட்டத்தை எதிர்கொள்வது அதன் நோக்கத்தை 81 சிதைத்துவிடக்கூடும்,ஏனெனில் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களான கல்வி. சுகாதாரம். விவசாயம் போன்றவற்றுக்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க தேவைப்படும் நிதி. வருவாய் செலவினத்தைச் சார்ந்தே உள்ளது, மாநிலங்களுக்கு தற்போது இந்த பிரச்சனை மத்திய அரசு அளவுக்கு இல்லை என்றபோதிலும் வருவாய் இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளால் பஞ்சாயத் ராஜ் அமைப்புகளுக்கும் நகராட்சிகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து பின்னடைவை ஏற்படுத்தலாம், இதை சமாளிப்பதற்கான ஒரு அணுகுமுறையாக வருவாய் பற்றாக்குறை என்றால் என்ன என்பதை மறு வரையறை செய்யலாம், அதன்படி சொத்துக்களை ஏற்படுத்தும் வருவாய் செலவினத்தை வருவாய் பற்றாக்குறையின் வரம்பி-ருந்து நீக்கி விடலாம், எனினும் வருவாய் செலவினத்துக்கான வரையறை. நமது கணக்கிடும் பாரம்பரியத்திலும் அரசியல் அமைப்பிலும் மிகத் தெளிவாக உள்ளதால் இது மிகச் சிறந்த தீர்வாக அமையாது, ஆனாலும். மிக அடிப்படையான அணுகுமுறை என்னவெனில். வருவாய் செலவினத்தை நிதிக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சேர்ப்பது சரியா என்று கேள்வி எழுப்புவதே, நிதிப் பற்றாக்குறை தெளிவான பொருளாதார எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அது பொதுக்கடனை அதிகரிக்கிறது, ஆனால் வருவாய் பற்றாக்குறை என்பது ஒரு கணக்கீட்டு முறை மட்டுமே, அதற்கும் சேமிப்பு. முதலீடு போன்ற பொருளாதார காரணிகளுக்கும் நேரடி தொடர்பு எதுவும் கிடையாது, வருவாய் செலவினங்களை மூலதன செலவினங்களாக காண்பித்தே வருவாய் பற்றாக்குறை இல்லாத சூழ்நிலையை எட்டிவிடலாம்; மானியங்களை வட்டியில்லா கடன் என்ற பெயரில் அளித்து இந்த இலக்கை அடைந்து விடலாம், சர்வதேச அளவில் நிதிப்பொறுப்பு தொடர்பான சட்டங்களில் நிதிப்பற்றாக் குறைக்கும் முதன்மை பற்றாக்குறைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, இதில் வருவாய் பற்றாக்குறையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை, தேங்கியுள்ள கடனுக்கான வட்டி அரசின் கட்டுப்பாட்டிற்குள் அமையாததும் இந்த வட்டி வீதம் மாறிக்கொண்டேயிருப்பதுமே முதன்மை பற்றாக்குறையை கருத்தில் கொள்வதற்கு காரணமாகும், எனவே நமது நிதிக்கட்டுப்பாடு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் சர்வதேச நடைமுறைகளுக்கேற்ப திருத்தப்பட வேண்டும், 6,2 மத்திய மாநில அரசுகளின் சார்பு நிலை பொருளாதாரக் கொள்கை மாநில அரசுகளின் வளர்ச்சிப் பணி நடைமுறைகளில் தலையிடுவது அல்லது அவற்றி-ருந்து விலக்கி விடுவதாக அமைகிறது என அத்தியாயம் 6,1ல் கூறப்பட்டுள்ளதைப்போல இந்த அறிக்கையில் கூறப்படும் உத்தி அதுவல்ல, மாறாக. சில துறைகளில் மாநில அரசின் பங்கு மிகத் தீவிரமாக இருந்தாலன்றி வளர்ச்சியை துரிதப்படுத்துவது. அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சியின் பயனை அளிப்பது ஆகிய இலக்குகளை எட்ட இயலாது, எனினும் அரசின் செயல்பாட்டு முறைமைகளை மாற்றியமைக்க அவசியமில்லை, நேரடி தலையீட்டைக் குறைப்பது. மிகக் குறைவாக உள்ள பொது நிதி வளங்களை தனியார்துறை ஈடுபட்டுவரும் சேவைத்துறைகளில் செலவிடாமல் இருப்பது போன்ற முடிவுகளை மேற்கொள்ள வேண்டும், அதற்குப் பதிலாக தனியார்துறையால் மட்டுமே செயல்பட முடியாத துறைகளில் பொது நிதியை செலவிட முன்வர வேண்டும், உதாரணமாக தேசிய நெடுஞ்சாலை. ரயில்வே. விமான நிலையம். துறைமுகம். மின் திட்டங்கள் போன்றவை மத்திய அரசின் முதன்மைக் கடமைகளில் சில என்பதாலும் இவற்றில் தனியார்த்துறை முழுமையாக சேவை வழங்க இயலாது என்பதாலும் பொது நிதி முதலீடு செய்யப்பட வேண்டும், இது தவிர விவசாயம். நீர்ப்பாசனம். மானாவாரி நில நீர் மேலாண்மை. ஊரக குடிநீர்த் திட்டங்கள். 82 கல்வி. சுகாதாரம். சாலைக்கட்டமைப்பு. நகர்ப்புறக் கட்டமைப்பு உள்ளிட்ட மாநில அரசு வரம்பிற்குள் வரும் துறைகளிலும் பொது நிதி செலவிடப்பட வேண்டும், மின்துறையில் வினியோக அமைப்பை சீரமைத்தல். தேவைப்படும் முதலீடுகளைத் திரட்டுதல் ஆகியவை மாநில அரசுகளின் கடமையாகும், பெரும்பாலான முக்கிய திட்டங்கள் மாநிலங்களின் பொறுப்புக்குள் அமைபவை, இணைப்பில் கூறப்பட்டுள்ள நிதி மதிப்பீடுகளின் படி 11வது திட்ட காலத்தில் பெருமளவு நிதி மாநிலங்களுக்கு தேவைப்படும், மாநில வரம்பிற்குள் வரும் திட்டங்களுக்கான நிதியை அவை திரட்ட வேண்டியிருக்கும், மேலும் மத்திய அரசின் பெருமளவு உதவியும் அவற்றிற்குத் தேவைப்படும், இதனால் மத்திய அரசின் உதவி எந்த வடிவத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற வினா எழுகிறது, இவ்வுதவியை மத்திய அரசுத் திட்டங்கள் என்ற பெயரில் வழங்குவதா அல்லது சாதாரண மத்திய நிதியாக அளிப்பதா? எந்த வகையில் இதனை வழங்கினாலும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்களிப்பும் தேவைப்படுகிறது, அ)மத்திய அரசுத் திட்டங்களா? மத்திய உதவியா? தேசிய வளர்ச்சி சபையில் மத்திய அரசுத் திட்டங்கள் தொடர்பாக பலமுறை விவாதிக்கப் பட்டுள்ளது, எனினும் இது தொடர்பாக கருத்தொற்றுமையை ஏற்படுத்துவது சிரமம், இது பற்றி கூறப்பட்ட ஒரு கருத்தின்படி. இத்திட்டங்கள் மாநில அரசு வரம்பிற்குள் வருபவை என்பதால் இத்திட்டங்களையும் அவற்றுக்கான நிதியையும் சேர்த்து மொத்தமாக மாநிலங்களுக்கே திருப்பி விட வேண்டும் என்று கூறப்பட்டது, ஆனால் இந்த அணுகுமுறையில் பல சிக்கல்கள் உள்ளன, பொதுவான மத்திய உதவிகளின் கீழ் மாநிலங்களுக்கு நிதியை வழங்குவதானால் காட்கில் சமன்பாட்டின்படிதான் அவை வழங்கப்பட முடியும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ள தேவை என்ன என்பதை தனித்தனியாகவே கணக்கிட்டு வழங்க முடியாது, மாநிலங்களின் குறிப்பிட்ட தேவை என்ன என்பதை ஆராய்ந்து கூடுதல் மத்திய உதவி வழங்குவதற்கும் மத்திய அரசு திட்டங்கள் மூலம் நிதி தருவதற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது, ஆனால் மாநில அரசுகளின் பார்வையில். மத்திய அரசு திட்டம் 100 சதவீத மானியத்தை வழங்குவதாலும். கூடுதல் மத்திய உதவி என்பது அவ்வாறு 100 சத மான்ய உதவியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் அது மாநிலங்களுக்கு கவர்ச்சிகரமாக விளங்காது, அண்மைக் காலங்களில் அனைவருக்கும் கல்வி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற சில முக்கியமான திட்டங்கள் 100 சதவிகித மானியம் தரும் மத்திய அரசு திட்டங்களாகவே கருதப்பட்டு மத்திய உதவி வழங்கப்பட்டு வருகிறது, அதே வேளையில் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்.பின்தங்கிய பகுதிகளுக்கான மானிய திட்டம் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி மத்திய உதவியாக வழங்கப்படுகிறது, இது ஒவ்வொரு திட்டத்திற்கும் மாறுபடுகிறது, இவற்றுக்கான மாநில அரசுகளின் பங்கும் வேறுபடுகிறது, தற்போதுள்ள வருவாய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு இத்திட்டங்களுக்கான மாநில அரசுகளின் பங்கு நியாயமான அளவிற்கு நிர்ணயிக்கப்பட வேண்டும், ஆ)வடிவமைப்பில் நெகிழ்வு தன்மை இவ்விரண்டுவிதமான மத்திய உதவிகளுக்கும் உள்ள பொதுவான அம்சம் என்னவெனில் மத்திய அரசு இத்திட்டங்களின் எல்லைகளை வரையறுத்துத் தருகிறது, அந்த எல்லைகளுக்குள் மாநில அரசுகள் செயல்பட வேண்டியிருப்பதால் உள்ளூர் நிலவரத்திற்கு ஏற்றபடி இத்திட்டங்களில் நியாயமான அளவிற்கு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவது கடினமாக உள்ளது, மற்றொரு பிரச்னை என்னவெனில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதியை சரிவர செலவிடுவதை உறுதி செய்யும் பொருட்டு பயனீட்டுச் 83 சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டால்தான் அடுத்தகட்ட மத்திய நிதி வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் சில வகையான திட்டங்களை வருடத்தின் குறிப்பிட்ட சில மாதங்களில் தான் மேற்கொள்ள முடியும் என்ற சூழ்நிலை உள்ளது, எனவே 11வது திட்ட காலம் தொடங்குவதற்கு முன்பு இத்தகைய திட்டங்களுக்கான பயனீட்டுச் சான்றிதழ் முறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும், 6,3 திட்டமிடுத-ல் அதிகாரப் பகிர்வு முன்னுரிமைத் திட்டங்களில் பெரும்பகுதி மாநிலங்களின் வரம்பிற்குள் வரும் சமூகத் துறைகளையே சார்ந்தவை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம், இத்திட்டங்களில் பெரும்பாலானவை அதிகாரப் பகிர்வு மூலம் அரசின் மூன்றாவது அடுக்காகிய பஞ்சாயத்து அமைப்புகளிடம் சென்று சேர வேண்டும், பழைய அனுபவங்களின்படி பார்த்தால் கல்வி. சுகாதாரம். வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம். கிராம வீட்டு வசதி. ஊரகக் குடிநீர்த் திட்டங்கள் போன்றவற்றை வடிவமைத்து அவற்றின் செயலாக்கத்தை மேற்பார்வை இடுவதில் உள்ளூர் சமுதாயத்தினரின் ஈடுபாடு இருந்தால் அவை நன்றாக அமைகின்றன, அண்மைக்கால நமது முயற்சிகளில் இது தெளிவாகவே தெரிகிறது, உதாரணமாக. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் உள்ளூர் மக்களைச் சுற்றியே அமைக்கப்பட்டதாகும், எத்தகைய பணிகளை மேற்கொள்வது என்பதை கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து அதன் வளர்ச்சியை கண்காணித்து வந்தது, இத்திட்டத்தின் கீழ் வேலை கோரி பதிவு செய்தவர்கள் யார் என்பது தொடர்பான ஆவணத்தையும் கிராமப் பஞ்சாயத்து பராமரிக்கிறது, இத்திட்டத்தின் கீழ் உள்ளூரில் மேற்கொள்ளப்பட்ட பணி திருப்திகரமாக முடிந்தது என்று கிராமப் பஞ்சாயத்து சான்றளித்தால் மட்டும் தான் அதற்கான நிதி வழங்கப்படுகிறது, இது போலவே கல்வி. சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றை அமல்படுத்துவதிலும் கிராம அளவிலான குழுக்களை ஏற்படுத்தி கண்காணிக்கச் செய்யலாம், அ)அதிகாரப் பகிர்வுடன் கூடிய திட்டமிடுதலுக்கான அமைப்புகள் தனிப்பட்ட திட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளின் பங்கு என்ன என்பதை வரையறை செய்வதுடன் நில்லாமல் மாவட்ட அளவிலான திட்டப் பணிகளை கிராம அளவி-ருந்தே தொடங்கி வடிவமைக்கும் அளவிற்கு அரசியல் சாசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளபடி அவற்றை உயர்த்த வேண்டும், இதன்படி மாநிலங்கள் மாவட்ட திட்டக் குழுக்களை உருவாக்குவது அவசியமாகிறது, பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அமையும் திட்டங்கள் தொடர்பாக கிராம அளவிலான குழுக்களும் உருவாக்கப்பட வேண்டும், இவை உருவாக்கும் திட்டங்கள் மாவட்ட திட்டக் குழுக்களால் தொகுக்கப்பட்டு. மாநிலத் திட்ட நிதி வளங்களி-ருந்து கிடைக்கும் நிதியையும் கருத்தில் கொண்டு மாவட்ட அளவிலான திட்டங்களை வகுக்க வேண்டும், இந்நடவடிக்கையை மிகத் தீவிரமாக மேற்கொள்வதுடன் மாநிலங்கள் தமது திட்ட நிதியில் குறைந்தது 30% அளவையாவது பரிந்துரைக்கப்பட்டபடி மாவட்ட அளவிலான திட்ட அமைப்பிற்கு வழங்கினால் மத்திய அரசு அவற்றுக்கு வழங்கும் நிதியுடன் சேர்த்து மிகப்பெரிய தொகை கிடைக்கும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறையில் இருக்கும் மாவட்டங்களில் இந்நிதியின் அளவு அதிகமாகவே இருக்கும், இந்நடைமுறையை செயல்படுத்தினால் பல்வேறு நிதி வளங்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதுடன் முழுமையான திட்டமிடுதலையும் மேற்கொள்ள இயலும், ஆனால் இந்த அணுகுமுறையின் வெற்றி மாநில அரசுகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது, இது தொடர்பான முன்னேற்றங்களில் பலவிதமான சூழல்கள் நிலவுகின்றன, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் அரசியல் ரீதியாகவலுவடைந்துள்ளதுடன்பெரும்பாலான 84 மாநிலங்களில் தேர்தல் ஒழுங்காக நடைபெறுகிறது, பஞ்சாயத்துக்களுக்கான பணி எல்லைகளும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன, ஆனாலும் அவற்றுக்கு நிதி வழங்குவதில் சுணக்கம் காணப்படுகிறது, நிதி வழங்கப்படும் அளவிலும் வேறுபாடுகள் உள்ளன, சில மாநிலங்கள் தமது பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவுநிதியை பஞ்சாயத்துகளுக்கு வழங்குகின்றன, ஆனால் பல மாநிலங்கள் இதுவரை அவ்வாறு செய்ய முன்வரவில்லை, மேலும் பல மாநிலங்களில் மாவட்ட அளவிலான திட்டக்குழுக்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை, ஆனால் இக்குழுக்கள். அதிகாரப் பகிர்வுடன் கூடிய திட்டமிடும் நடைமுறைக்கு மிகவும் முக்கியமானவை, உள்ளூர் அளவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாக இருப்பதற்கு பஞ்சாயத்து அமைப்புகள் மட்டத்தில் திறன்களை வளர்ப்பதும் மிகவும் முக்கியமாகும், இதனைக் கருத்தில் கொண்டு தான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறையில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படக் கூடிய பின்தங்கிய பகுதிகள் மானிய திட்டம். பஞ்சாயத்து ராஜ அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் திறன் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன, பல திட்டங்களில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அரசு சாரா அமைப்புகள் உதவி செய்வது மிகவும் பயனுள்ளது என்று தெரிய வருகிறது, 11வது திட்டத்திலும் அரசு சாரா அமைப்புகளின் ஈடுபாட்டை ஊக்குவிக்க வேண்டும், ஆ)பொறுப்பு நிதியை உள்ளூர் மற்றும் நடுத்தர பஞ்சாயத்துகளுக்கு பகிர்ந்தளிக்கும்போது அவற்றின் கடமை பொறுப்புக்கும் அதிகரிக்கும் படி அமைய வேண்டும், எப்போதும் பதில் சொல்லக்கூடிய நிலைமையில் இருப்பதற்கு ஒளிவு மறைவில்லாத தன்மை மிகவும் முக்கியமானது, 2005ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தகவல் உரிமைச் சட்டம் இதில் முக்கியப் பங்காற்றுகிறது, இச்சட்டத்தின் மூலம் பயனாளிகள் அல்லது அவர்களைச் சார்ந்துள்ளோர். தேவைப்படும் தகவல்களை பெறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது; இணையதள வசதிகள் அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலையில் கிராமப் பகுதிகளிலும் பயனாளிகள் தேவையான தகவல்களை பெறுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடைத்துள்ளது, உதாரணமாக. ராஜீவ் காந்தி கிராம மின் திட்டத்தின் மூலம் மின்வசதி அளிக்கப்பட்ட கிராமங்களின் பட்டியல். பாரத் நிர்மாண் திட்டத்தின் மூலம் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் கிராமங்களின் பட்டியல். அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்ற சாலை போடப்பட்ட கிராமங்களின் பட்டியல் போன்றவற்றை இணைய தளத்தின் வாயிலாகவே அறிந்து கொண்டு உண்மையிலேயே அத்திட்டங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டன என்பதை கண்காணித்துக் கொள்ளலாம், இதனால் தரமான சேவை வழங்கியேயாக வேண்டும் என்ற நெருக்குதலை ஏற்படுத்தலாம், இ) சமூக அமைப்புகள் பஞ்சாயத்து அமைப்புகளின் திறனை மேம்படுத்துவதில் சமூக அமைப்புகளின் பங்கு பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது, பல சமூக அமைப்புகள் திறன்வளர்ப்பு பணிகளுடன் திட்டங்களை கீழ் மட்டத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி நல்ல பலனை அளித்துள்ளன, இதனை அங்கீகரித்துஇந்த அமைப்புக்களுக்கும் பஞ்சாயத்து நிறுவனங்களுக்கும் இடையே கூட்டுறவை ஏற்படுத்த 11வது ஐந்தாண்டுத் திட்டம் முனைகிறது, ஆனால் எந்தெந்த சமூக நலஅமைப்புகளைஇதற்கென்று தேர்ந்தெடுப்பதுஎன்ற பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளிடமே விட்டுவிட வேண்டும் எனினும் மத்திய மாநில அரசு திட்டங்களில் இந்நிறுவனங்களை அனுமதிப்பதற்கான இடமிருந்தால்தான் இவ்வாறு செய்யப்பட வேண்டும், இவ்வாறு பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதால் அரசின் உயர் அடுக்கு 85 பணிகளில். குறிப்பாக கண்காணிப்பு. மதிப்பீடு ஆகிய பணிகளில் தரம் மேம்படும், மத்திய அரசு விரைவில் தன்னார்வ அமைப்புகளுக்கான கொள்கை ஒன்றை வெளியிடவுள்ளது, வளர்ச்சி திட்டங்களில் இத்துறை ஆற்றும் நற்பணிகளை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, மாநில அரசுகளும் இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது பற்றி பரிசீ-க்க வேண்டும், 6,4 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைவிட அவற்றின் செயல்பாட்டைக் கண்காணித்தல் அரசு திட்டங்களை வடிவமைத்தல். செயல்படுத்துதல் ஆகியவை தொடர்பான நல்ல பாடங்களை பயில்வதற்கு அவற்றை கண்காணித்து மதிப்பீடு செய்தாலே போதும், இதனால் இத்திட்டங்களின் திறனை மேம்படுத்தலாம், காலங்காலமாகவே திட்டத்திற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்பது மட்டுமே கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது, இது முக்கியமான செயலாக இருந்தபோதிலும் இதன் மூலம் எந்த அளவிற்கு பயன் ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியாதிருந்தது, இதனை எதிர்கொள்ள நிதிஒதுக்கீடு. செலவுஆகியவற்றை கண்காணிப்பதோடு அதன் பயன்களையும் மதிப்பிட வேண்டும், இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக 2005-06 பட்ஜெட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, எனினும் இதற்கு சிரமங்களும் இல்லாம-ல்லை, உதாரணமாக கல்வியை எடுத்துக் கொண்டால் அளிக்கப்பட்ட நிதியின் மூலமாக எத்தனை பள்ளிக் கட்டடங்கள் நிறுவப்பட்டன. எத்தனை பணி கா-யிடங்கள் நிரப்பப்பட்டன. எத்தனை குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர் என்ற விவரங்களை சேகரித்து விடலாம், ஆனால் இவற்றால் ஏற்படும் உண்மையான பலன் அளிக்கப்படும் கல்வியின் தரத்தில்தான் உள்ளது, மேலே கூறப்பட்ட இடைப்பட்ட மதிப்பீடுகள் தேவையானவைதான், அவை கண்காணிக்கப்பட வேண்டும், ஆனால் இறுதி பயன்பாட்டை வரையறை செய்வதில்தான் அதன் முழு பயன் குறித்து அறிய முடிகிறது, ஆனால் இதனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர்தான் நிர்ணயிக்க முடியும்,சிலவேளைகளில் சில பிரச்னைகளுக்கான மூல காரணம் ஒரு திட்டத்தின் வரம்பிற்கு வெளியே அமைகிறது, உதாரணமாக சுகாதாரத்தை எடுத்துக் கொண்டால். நல்ல சுகாதார நிலைமையை ஏற்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைவது தீங்கில்லாத தூய்மையான குடிநீர். துப்புரவு ஆகியவைதான், இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது திட்டங்களை அமல்படுத்தும் அமைப்புகள் மூலமாக அவற்றின் செயல்பாடுகளை கண்காணிப்பதைவிட அமல்படுத்துவதுடன் தொடர்பில்லாத சுயேச்சையான அமைப்புகளை ஈடுபடுத்தி கண்காணிப்பது அவசியம் என்பது புலனாகிறது, ஆனால் இத்தகைய சுயேச்சையான கண்காணிப்பிற்கு தேவைப்படும் அளவுகோல் என்ன என்பதை தெளிவாக வரையறுப்பது அவசியம், எனவே எந்த திட்டமானாலும் அதன் குறைந்தபட்ச தர மதிப்பீட்டு அளவுகோல் என்ன என்பதையும் திட்டக் கருத்துருவில் சேர்த்து அளிக்க வேண்டும் என வ-யுறுத்துவது பற்றி திட்டக்குழு பரிசீ-த்து வருகிறது, இது தவிர. சிறப்பாக மதிப்பீடு செய்யும் ஆற்றல் வாய்ந்த ஆய்வு நிலையங்களையும் சமூக அமைப்புகளையும் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் திட்டக்குழு ஆய்வு செய்து வருகிறது, இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும் மேற்கொண்டு திட்டங்களின் தரத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும், 7, முடிவுகள் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான முழு உத்திகளும் தற்போது நடைபெற்று வரும் கலந்தாலோசனைகளுக்குப் பிறகுதான் வெளியாகும், இப்பணியில் இந்த அணுகுமுறை அறிக்கை ஒரு முதல் படி மட்டுமே, இது 86 விரிவான நோக்கங்களையும் இலக்குகளையும் அவற்றுடன் தொடர்புடைய சவால்களையும் கொள்கைகள் மீதான நோக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறது, 11வது ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கப்படும்போது இதை மத்திய மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும், இந்த அணுகுமுறை அறிக்கை மூலம் கிடைக்கும் முக்கிய முடிவுகளின் சுருக்கம் வருமாறு :-7,1 நோக்கங்களும் இலக்குகளும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைக் கூறுகள் வலுவடைந்துள்ளன, இதன் மூலம் ஏழைகள் உட்பட நம்நாட்டு குடிமகன்கள் அனைவரின் வாழ்க்கைத் தரத்திலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் திறனை நாம் பெற்றுள்ளோம், இம்முன்னேற்றம் அடைய சராசரி இந்தியரின் உண்மையான வருவாயை 10 ஆண்டுகளுக்குள் இரு மடங்காக அதிகரிப்பதும் பத்தாண்டுகளுக்குள் ஏழ்மை விகிதத்தை 10 சதவிகிதத்திற்கு கீழே கொண்டு வருவதும் வழி வகைகளாகும், இதற்கு தேவைப்படுவது 11வது திட்ட காலத்தில் எட்டு சதவிகித மொத்த உள்நாட்டு உற்பத்தியும் முன்னிருந்ததைவிட விரிவான வளர்ச்சியும் ஆகும், இந்த உத்தியின் முக்கிய பங்கானது மக்களுக்கு சுகாதாரம். கல்வி ஆகிய வசதிகளை எளிதில் கிடைக்கச் செய்வதாகும், இதற்கான சிறப்பு திட்டங்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், 11வது திட்ட காலத்தில் 8,5 சதவிகித சராசரி வளர்ச்சியை அடைவதற்கு நிலையான வளர்ச்சி வேகம் தேவைப்படும், தற்போதைய வளர்ச்சி ஏழு சதவிகித அளவிற்கு இருப்பதால் 11வது திட்ட காலத்தின் இறுதியில் இது 9,5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட வேண்டும், தென்கொரியாவும். சீனாவும் இதே வளர்ச்சிப் பாதையை முன்பு கடந்து வந்துள்ளன, இந்த அணுகுமுறை அறிக்கை இத்தகைய வளர்ச்சிப் பாதையை அடைய முடியும் என்று வ-யுறுத்துகின்ற போதிலும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான வளர்ச்சியை அடைய வேண்டுமானால் சிறப்பு முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது, 7,2 சுகாதாரம். கல்வி மற்றும் இதர அடிப்படை சேவைகள் 11வது ஐந்தாண்டு திட்டத்தின் மையக் கருவே அடிப்படை பொது சேவைகளான சுகாதாரம். கல்வி. தூய்மையான குடிநீர். துப்புரவு போன்றவற்றை மக்களுக்கு அளிப்பதுதான், இவை தற்போது பல இடங்களில். குறிப்பாக கிராமப் பகுதிகளில் சரிவர கிடைக்காத நிலை உள்ளது, சமுதாயத்தின் முக்கிய சமநிலைப்படுத்தும் கருவி தரமான கல்வியே, எனவே இதற்கென மாபெரும் முயற்சி ஒன்றை எடுக்க வேண்டிய தருணம் இதுவே, ஆரம்ப கல்விக்கென ஒரு நல்ல தொடக்கத்தை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நாம் எடுத்துள்ளோம், ஆரம்பக் கல்வியையும் தாண்டி நாம் செல்ல வேண்டும், உயர்நிலை. மேல்நிலை கல்வி துறைகளில் சந்திக்கும் பிரச்னைகளையும் மேற்கொண்டு வளர்ச்சி காண வேண்டும், இதுபோன்ற முயற்சிகளை சுகாதாரம் மற்றும் அது தொடர்புடைய இதர சேவைகளிலும் எடுக்க வேண்டியுள்ளது, விரிவான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு மேற்கண்ட துறைகளில் திட்ட செலவினம் மிக அதிகம் தேவைப்படுகிறது, இத்துறைகளில் மாநில அரசுகளுக்கு உதவ மத்திய அரசு நிதி வழங்க வேண்டும், ஆனால் நிதி என்பது ஒரு அம்சம் மட்டுமே, மற்றொரு சம முக்கியத்துவம் வாய்ந்த அம்சம் என்னவெனில் தற்போது உள்ள அமைப்புக்கள் மூலம் இத்துறைகளில் தரமான சேவையை வழங்க இயலுமா என்பதைப் பார்க்க வேண்டும், இதனால் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய கீழ்க்கண்ட பல நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன, (1) கல்வி. சுகாதாரம் போன்றவற்றுக்கான செலவினங்களில் குறிப்பிடத்தக்க அளவு பணியாளர்களுக்கு ஊதியம் போன்ற நடப்புச் செலவுகளாக உள்ளன, எனவே திட்டம் சாராத செலவினங்களுக்கு மாநில அரசுகள் போதிய 87 நிதி ஒதுக்க வேண்டும், தற்போது சுகாதாரம். கல்வி அமைப்புகளில் பல கா-யிடங்கள் நிதி பற்றாக்குறை காரணமாக நிரப்பப்படாமல் உள்ளன, (2) போதிய பணியாளர்கள் இல்லாத நிலை மட்டுமின்றி அரசு பணியாளர்கள் போதிய செயல்திறன் இல்லாதவர்களாக இருப்பது மற்றொரு குறையாகும், செலவினத்திற்காக கூடுதல் நிதி வழங்கும் வேளையில் அந்நிதிக்கான பொறுப்புணர்வு மேம்படா விட்டால் பலன் தராது, ஆரம்பக் கல்வி. சுகாதாரம் ஆகியவை உள்ளூர் அளவில் வழங்கப்படும் சேவைகள், எனவே அவை பஞ்சாயத்து அமைப்பின் கண்காணிப்பிற்கே உட்படுத்தப்பட வேண்டும், ஆனால் உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்விக்கும் மூன்றாம் நிலை சுகாதார சேவைக்கும் இதர கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன, (3) அரசுத் திட்டங்களை உள்ளூர் அளவில் வடிவமைத்து செயல்படுத்துவதில் அரசு சாரா அமைப்புகளையும் ஈடுபடுத்துவதால் நல்ல பலன் கிடைக்கிறது, இத்திட்டங்கள் மூலம் மக்கள் அடையும் திருப்தியை அளவிடுவதற்கான புதுமையான உத்திகளை கையாள்வதால் பொதுநிதி தொடர்பான பொறுப்புணர்வை உருவாக்க முடிகிறது, அரசு சாரா அமைப்புகள் பெரிய அளவில் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும், திட்டக் குழு விரைவில் மத்திய அரசுக்கு இது தொடர்பான வரைவு தேசியக் கொள்கையை சமர்ப்பிக்க உள்ளது, இதுபோன்ற கொள்கைகளை மாநில அரசுகளும் உருவாக்க முயல வேண்டும், 7,3 விவசாயம் 11வது திட்ட காலத்தில் சராசரி தனி நபர் வருவாய் வளர்ச்சியை கிராமப்புறங்களிலும் இருமடங்காக அதிகரிப்பதற்கு விவசாயத் துறை வளர்ச்சி இருமடங்காக வேண்டும், பத்தாவது திட்ட காலத்தில் இரண்டு சதவிகிதமாக இருந்த இந்த வளர்ச்சி 11வது திட்ட காலத்தில் நான்கு சதவிகிதமாக உயர வேண்டும், இதற்கு மத்திய மாநில அரசுகள் பலமுனை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும், (1) நீர்ப்பாசனம். மானாவரிப்பகுதிகளில் நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம். கிராம சாலை இணைப்பு திட்டம். கிராம மின்வசதி திட்டம் ஆகியவற்றுக்கு பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும், இதற்கு திட்ட நிதி ஒதுக்கீடு மிகவும் கூடுதலாக தேவைப்படும், பிரதமரின் கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம். ராஜீவ் காந்தி கிராம மின்வசதி திட்டம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம். பிற்பட்ட பகுதிகளுக்கான மானிய நிதி ஆகியவை மூலம் மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கலாம், எனினும் மாநிலங்களும் இத்துறைகளில் அவற்றின் திட்ட ஒதுக்கீடுகள் மூலம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், எந்த பணிக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நிர்ணயிப்பது மிகவும் முக்கியமாகும், இதன்மூலம் நிதி முழுவதும் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே செலவிடுவதைத் தவிர்க்கலாம், பல மாநிலங்களில் நீர்ப்பாசனத் திட்டங்கள் இந்த வகையில்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன, மத்திய அரசிடமிருந்து பல வடிவங்களில் கிடைக்கும் பெருமளவு நிதியை மாநில அரசின் நிதி வளங்களுடன் ஒருங்கிணைத்து சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவது பெரிய சவாலாகும், (2) தற்போதுள்ள தொழில்நுட்பங்களின் மூலமாகவே விவசாயத்தில் உற்பத்தித் திறனை மிக அதிக அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கும் நிலையிலும் ஏன் அதனை எட்ட முடியவில்லை என்பதற்கு விவசாயிகளிடையே காணப்படும் அறிவாற்றல் இடைவெளியை காரணமாக கூறுகிறது தேசிய விவசாயிகள் கமிஷன், இப்பிரச்னையை சமாளிப்பதற்கு பல மாநிலங்களில் சிதிலமடைந்து போய்விட்ட விவசாய விரிவாக்க அமைப்பிற்கு புத்துயிரூட்ட வேண்டும், இதற்கான பிரச்னைகளில் ஒன்று என்னவெனில் இத்திட்டத்திற்கான செலவு திட்டம் சாராத செலவாக கருதப்படுகிறது, இச்செலவிற்கான நிதி பல மாநிலங்களில் குறுகி விட்டது, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய விரிவாக்கப் பணிகளை வேளாண் அறிவியல் மையங்களுடன் இணைக்க வேண்டும், அப்போதுதான் அந்தந்த பகுதி 88 நிலப்பரப்புக்கு ஏற்ற ஆலோசனையை விவசாயிகள் பெற முடியும், மண்ணிலுள்ள நுண்ணூட்ட சத்து குறைபாடுகள் பற்றி விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் பணியை ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் அறிவியல் மையம் மூலம் மேற்கொள்ள முடியும், (3) விவசாயத்தில் தனிப்பட்ட பயிர்களின் உற்பத்தித் திறன் மீது கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு விவசாய வருவாய் அதிகரிப்பு மீது கவனம் செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் விவசாயம் பல விளைபொரும் சார்ந்ததொரு நடைமுறையாகும், ஒவ்வொரு வேளாண் காலநிலை மண்டலத்திற்கும் ஏற்ற திட்டம் உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் மண்டலத்திற்கு மண்டலம் விவசாய நடைமுறைகள் மாறுபடுகின்றன, இவ்விஷயத்தில் ஒவ்வொரு மாநிலத்துடனும் இணைந்து மத்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்ற தனித்தனி உத்திகள் உருவாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் உரிய பிரச்சினைகளை கையாள்வதற்கான நேரடி ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும், (4) விவசாயத்தில் பல்வேறு பயிர்களை பயிரிடுவதை ஊக்குவிப்பதற்காக உள்ளூர் சந்தைகளில் சில்லரை விற்பனை செய்வோர். உணவு பதனீட்டாளர்கள். ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் விவசாய விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே வாங்க செய்வது உட்பட நவீன வணிக உத்திகளைப் பின்பற்ற வேண்டும், பல மாநிலங்களில் நவீன சந்தைகளை உருவாக்குதல். ஒப்பந்த விவசாயத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் வேளாண் விளைபொருள் வணிகக் குழு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும், இதனை தற்போதைய காய்கறி மண்டிகளின் சுயநலக்காரர்கள் எதிர்க்கக்கூடும், ஆனால் இத்தடைகளை மாநில அரசுகள் சமாளித்தாக வேண்டும், (5) விவசாயத்துறை இன்று சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு விவசாயக் கொள்கைகளால் ஏற்பட்ட கோளாறுகளே காரணம், உதாரணமாக. மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்கியதன் காரணமாக தேவைக்கு அதிகமாகவே நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு இன்று நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போய்விட்டது, கால்வாய் தண்ணீருக்கான கட்டணம் மிகக்குறைவாக விதிக்கப்பட்டதால் தண்ணீர் விரயமாக்கப்பட்டு வருகிறது, கால்வாய் தொடங்கும் பகுதியை ஒட்டிய இடங்களில் அதிக தண்ணீரை உறிஞ்சும் பயிர்கள் சாகுபடி செய்யப் படுவதால் மொத்த நீர்ப்பாசனப் பரப்பு குறைந்து விடுகிறது, மேலும் உரத்திற்கு வழங்கப்படும் மானியம் சீராக அனைத்து ரக உரங்களுக்கும் வழங்கப்படாததால் நைட்ரஜன் கலந்த உரங்கள் விவசாயிகளால் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, இதனால் நாளடைவில் வேளாண் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது, இவை யாவும் அரசியல் ரீதியாக மிகவும் சிக்கலான அம்சங்கள், ஆனாலும்அவற்றைகண்டு கொள்ளாம-ருந்தால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும், இத்தகைய கொள்கை அடிப்படை கோளாறுகளை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, (6) விவசாயிகளுக்கு போதிய அளவில் கடன் கிடைக்காதது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது, இதனால் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் விழுந்து விடுகிறார்கள், எனவே வைத்தியநாதன் குழு பரிந்துரைத்தபடி கூட்டுறவுக் கடன் சங்க அமைப்பு புத்துயிரூட்டப்பட வேண்டும், கூட்டுறவு கடன் சங்கங்களி-ருந்து அரசியல் தலையீட்டை அகற்றிவிட்டால் இச்சங்கங்களுக்கு நிதி வழங்க தயார் என்று மத்திய அரசு ஏற்கனவே கோடிட்டுக் காட்டியுள்ளது, இம்மாற்றங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும், (7) நீண்டகால அடிப்படையில் விவசாய ஆய்வுப்பணிகளுக்கு புத்துயிரூட்ட வேண்டும், நமது விவசாய-காலநிலை சூழ்நிலைகளில் அதிக விளைச்சலை எட்டுவதற்கு ஏற்ப நவீன அறிவியல் முன்னேற்றங்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும், இதற்காக சுவாமிநாதன் மற்றும் மஷேல்கர் குழுக்கள் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும், 89 7,4 தொழில் வளர்ச்சி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8,5 சதவிகித வளர்ச்சியை அடைவதற்கு தொழில்துறை 10 சதவிகித அளவிலும் உற்பத்தித் துறை 12 சதவிகித அளவிலும் வளர்ச்சியடைய வேண்டும், இதற்கு பெருமளவு முதலீடு. தொழில்நுட்ப மேம்பாடு. நவீனப்படுத்துதல் ஆகியவை தேவைப் படுகின்றன, போட்டி நிறைந்த இவ்வுலகில் நிலைத்து நிற்பதற்கு இத்தகைய திறன் மேம்பாடு அவசியமாகும், இதற்கான பணிகள் பெரிய மற்றும் அதிக முதலீடு தேவைப்படும் தொழில்துறைகளில் ஏற்கனவே தொடங்கி விட்டது, ஆனாலும் அதிக தொழிலாளர்களைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் இந்நிலை ஏற்படவில்லை, 11வது திட்ட காலத்தில் அதிகளவு வேலைவாய்ப்பை வழங்கும் திறன் கொண்டவை இவைகளே, இத்துறைகளில் விரிவாக்கத்திற்கும் நவீன மயமாக்கலுக்கும் ஏற்ற உதவிகரமான சூழலை உருவாக்குவது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும், மத்திய அரசு ஏற்கனவே தேவையில்லாத கட்டுப்பாடுகளி-ருந்து தொழில் முனைவோரை விடுவித்துள்ளது, எனினும் கீழ்க்கண்ட அம்சங்களில் மேலும் கவனம் தேவைப்படுகிறது : (1) உரம். சர்க்கரை போன்ற தொழில்துறைகள் தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை சந்தித்து வருகின்றன, அக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும், (2) சிறுதொழில்துறை வளர்ந்து போட்டியிடத்தக்க அளவிற்கு மேம்படத்தக்கதாக சிறுதொழிலுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தொழில்களுக்கான அட்டவணையி-ருந்து சில தொழில்களை விடுவிக்க வேண்டும், (3) இந்தியாவின் சுரங்கம் அகழ்வு கொள்கை மறு சீரமைக்கப்பட வேண்டும், அதிக மூலதனம் தேவைப்படும் இத்துறையில் மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ப இம்மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், இந்தியாவின் உள்நாட்டு சுரங்கம் வளங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன, (4) நமது தொழிலாளர் சட்டங்களின் தளர்வில்லாத கடுமைத் தன்மை. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு தடையாக உள்ளது, எனவே மத்திய அரசு இதுதொடர்பாகதொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசி கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும், தொழிலாளர் நலன் பாதிக்கும் எவ்வித தீவிர நடவடிக்கைகளை எடுக்காமலேயே இவ்விஷயத்தில் முன்னேற்றத்தை எட்டும் வாய்ப்புள்ளது, (5) சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை என்ற போதிலும் நமது கட்டுப்பாட்டு நடைமுறைகள் சர்வதேச நடைமுறைகளுக்கேற்ப அமைய வேண்டும், ஆனால் துரதிருஷ்டவசமாக தொழில்களுக்கான சுற்றுச்சூழல் சான்றிதழ் வழங்குவதற்குரிய நடைமுறைகள் மிகவும் சிக்கலானதாகவும் வெளிப்படை தன்மை இல்லாதவையாகவும் உள்ளன, இது தொடர்பாக விரிவான மறுபரிசீலனை செய்ய வேண்டும், அப்போது தான் வளர்ச்சித் திட்டங்களில் நியாயமான சுற்றுச்சூழல் வினாக்கள் மட்டுமே எழுப்பப் படுவதை உறுதி செய்ய முடியும், இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும், சில மாநிலங்கள் பலவிதமான புதிய முதலீடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான அனுமதி வழங்கும் நடைமுறையை சீரமைக்கத் தொடங்கியுள்ளன, இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் அவை முன்னேற்றம் கண்டுள்ளன, இந்நிலை அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும், வெளிப்படை தன்மையை அறிமுகப்படுத்துதல்.ஆளுமையை மேம்படுத்துதல். கண்காணிப்பாளர்களின் குறுக்கீடு என்ற சுமையைக் குறைத்தல் ஆகியவை சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு உதவிகரமாக இருக்கும், முதலமைச்சரின் முதலீட்டுக் குழு அல்லது தொழில் ஆலோசனைக் குழு அமைப்பது. தனியார் முதலீட்டாளர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள மாநில அரசுகளுக்கு உதவியாக இருக்கும், 90 7,5 கட்டமைப்பு வசதிகள் நமது பொருளாதார செயல்பாடுகளுக்கு பெரிய தடை. போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே, இதற்கு மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை கொடுத்து சமாளிக்க வேண்டும், இதற்கான பல முயற்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, இவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும், (1) அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கு கிராம உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும், இதற்காக பாரத் நிர்மாண் திட்டம் நல்லதொரு தொடக்கமாக அமைந்துள்ளது, இதனை 11வது திட்டத்தில் மேலும் வலுப்படுத்த வேண்டும், இதன்மூலம் நீர்ப்பாசனம். கிராம சாலை இணைப்பு. கிராம குடிநீர்த் திட்டம். கிராம வீட்டு வசதி. கிராம தொலைபேசி இணைப்பு ஆகிய முக்கிய இலக்குகளை அடையலாம், (2) மின்சாரம். சாலை. ரயில்வே. துறைமுகம். விமான நிலையம். தொலைத் தொடர்பு ஆகியவை தொடர்பான பொதுவான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்பட்ட இடைவெளிகளை அகற்றும் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன, ஆனால் இது தொடர்பாக மேலும் பல பணிகள் செய்யப்பட வேண்டும், பத்தாவது திட்ட காலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்பட்ட முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4,5 சதவிகிதமாக இருந்தது, இதனை 11வது திட்ட காலத்தில் 7,5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும், இதில் ஒரு பகுதி பொது முதலீட்டி-ருந்தும் எஞ்சிய பகுதி தனியார் முதலீட்டி-ருந்தும் பெறப்பட வேண்டும், இதற்கான முயற்சிகள் தற்போது மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகின்றன, (3) தொழில்வளர்ச்சிக்கு மின்வசதி அடிப்படையாக அமைகிறது, இத்துறை சந்திக்கும் மிகப்பெரும் பிரச்னை அதன் வினியோக அமைப்பில் உள்ளது, வினியோகம் முழுக்க முழுக்க மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகிறது, எனவே மாநிலங்கள் மின் வினியோகத் துறையில் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், (4) பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் தனியார் பங்குதாரர் நியாயமற்ற வகையில் சலுகைகளை அடைந்தால் அதனால் பிரச்னைகள் ஏற்படும், எனவே உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் எத்தகைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நெறிமுறை தெளிவாக வகுக்கப்பட வேண்டும், அப்போதுதான் இக்கூட்டு முயற்சி பொதுமக்களின் நலனுக்கு ஏற்றதாகக் கருதப்படும், இதற்காக சலுகை ஒப்பந்தங்களின் ஷரத்துக்கள்தெளிவானதாகவும். பொதுநலனைப் பாதுகாப்பதாகவும். அதிக போட்டிக்குப் பின்னர் தனியார் பங்குதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அமைய வேண்டும், சாலை. துறைமுகம். விமான நிலையம். ரயில்வே போன்ற துறைகளில் மத்திய அரசு ஏற்கனவே இவ்வழி முறையைத்தான் பின்பற்றுகிறது, மாநில அரசுகளும் இதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும், அப்போதுதான் பொது தனியார் கூட்டு திட்டங்கள் வெற்றி பெறும், 7,6 ஏழைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் துரித வளர்ச்சி. விவசாயத்தின் மீது அதிக கவனம். உற்பத்தித்துறையில் ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி ஆகியவை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழி வகுக்கும், இதற்கு பக்கபலமாக ஏழைகளுக்கு வாழ்வாதாரங்களை வழங்கும் சில திட்டங்களை மேற்கொள்ள வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் இதற்கான முக்கிய மைல் கல்லாகும், இது தொடக்க நிலையில் 200 மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது, இது மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது, இது தவிர. பொன்விழா சுயவேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை ந-வுற்ற பல்வேறு பிரிவினருக்கு நேரடி வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன, அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இவை பக்கபலமாகத் திகழ்கின்றன, இவை வலுப்படுத்தப்பட்டு 11வது திட்ட காலத்தில் மேலும் திறன்மிக்கதாக செயல்பட வேண்டும், 91 மத்திய மாநில அரசுகளால் தாழ்த்தப் பட்டோருக்கான துணை திட்டம். பழங் குடியினருக்கான திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட வேண்டும், 7,7 நிதி மேம்பாடு 11வது திட்ட காலத்தில் 8,5 சதவிகித சராசரி வளர்ச்சியடைவதற்கு உள்நாட்டு முதலீடு 29 சதவிகிதத்தி-ருந்து மேலும் அதிகரித்து 34 சதவிகிதமாகப் பெருக வேண்டும், இதில் பாதி அல்லது 5 சதவிகித புள்ளிகள் தனியார்துறையி-ருந்து செய்யப்பட வேண்டும், எஞ்சிய முதலீடு. முக்கியமான உட்கட்டமைப்புத் துறைகளில் பொதுத் துறையால் செய்யப்பட வேண்டும், மேலே குறிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏற்பட்டால் தனியார் முதலீடும் தேவைப்படும் அளவிற்கு அதிகரிக்கும், அதற்கு உதவியாக முதலீடு செய்வதற்கான நல்ல சூழலையும் உருவாக்க வேண்டும், இவ்விரண்டு காரணிகளும் உள்நாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதோடு வெளிநாட்டு நேரடி முதலீட்டையும் ஈர்க்கும் திறன் வாய்ந்தவை, இவை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வந்தாலும் மேலும் அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன, பொது முதலீட்டை அதிகரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களின் நிதி வளங்கள். பட்ஜெட் சார்ந்த மற்றும் பட்ஜெட் சாராத நிதி வளங்கள் மற்றும் மத்திய மாநில அரசுகளின் திட்ட பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம், நிதி அம்சத்தைப் பொறுத்தவரை உள்நாட்டு சேமிப்பு. பெருகிவரும் வருவாய் நிலைகளுக்கேற்ப அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம், மேலும் அடிப்படை ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதமாக இருந்த நிகர வெளிநாட்டு முதலீடு 11வது திட்ட காலத்தில் 2,8 சதவிகிதமாக அதிகரிக்கக் கூடும், எனினும் சேமிப்பில் சமநிலை ஏற்பட அரசின் சேமிப்பும் அதிகரிக்க வேண்டும், இது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு பெரிய நிதிச்சவாலாக அமையக்கூடும், திட்ட நிதியின் உதவியுடன் செய்யப்படும் பொது முதலீட்டுடன் பொது சேவைகளும் அதிகரிக்கப்படுவதற்கு வழி செய்ய வேண்டும், இதற்கு தேவைப் படுவது முதலீடு அல்ல. மாறாக வருவாய் செலவினம், இந்த உயர்வை அடைவதற்கு சராசரி திட்ட செலவினம் 10வது திட்ட காலத்தில் உள்ள 7,5 சதவிகிதம் என்ற அளவி-ருந்து 11வது திட்ட காலத்தில் 9,5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும், இதற்கு தேவைப்படும் நிதியை. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நிகரான வரி வருவாய் அதிகரிப்பு. திட்டம் சாராத செலவினங்களைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் திரட்டலாம், வளர்ச்சி இலக்குகளை எட்டுவதன் மூலமும் வருவாய்ப் பெருக்கத்தின் மூலமுமே வரி வருவாயை அதிகரிக்க முடியும், எனவே எதிர்பார்த்த அளவிற்கு வரி நிர்வாகத்தில் மத்திய மாநில அரசுகள் சீர்த்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும், நிதி ஒழுங்கு முறைக்கு மத்திய மாநில அரசுகள் திட்டம் சாராத செலவினத்தை கட்டுப்படுத்துவது அவசியம், ஆனால் சில திட்டம் சாராத செலவினம் பொது சேவைகளை பொதுமக்களுக்கு திறம்பட வழங்குவதற்கு அவசியமாகும், மற்றொரு பகுதி ஓய்வூதியம் வழங்குவதற்கும் வட்டி செலுத்துவதற்கும் தேவைப்படுகிறது, இவை தவிர எஞ்சிய திட்டம் சாராத செலவினத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அப்போதுதான் திட்ட இலக்குகளை அடைய முடியும், சுருங்கக்கூறின் மானியங்கள் கட்டுப்படுத்தப்பட்டு நியாயமான அளவில் பயனீடுகளுக்கான கட்டணங்கள் விதிக்கப்பட வேண்டும், அப்போதுதான் பட்ஜெட் செலவினத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும், பிற்சேர்க்கை திட்டத்திற்கான மொத்த பட்ஜெட் வளங்கள் குறித்த நிதி மதிப்பீடுகள் 11வது திட்ட காலத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய நிதி வளங்கள் தொடர்பான விவரங்கள் தற்போது திட்ட நிதி தொடர்பான அலுவல் குழு தயாரித்துவரும் அறிக்கை கிடைத்த பிறகுதான் தெரியவரும், எனினும் இந்த அணுகுமுறை அறிக்கைக்காக 92 மேற்கொள்ளப்பட்ட சில ஆரம்பக்கட்ட மதிப்பீடுகளின்படி கிடைத்த முடிவுகள் கீழே சுருக்கமாக தரப்பட்டுள்ளன, பிற்சேர்க்கை அட்டவணை 1 – 8 வரை ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சியை 7%. 8%. 8,5%. 9% ஆகியவையாக கருதினால் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கக்கூடிய மொத்த பட்ஜெட் ஆதாரம் எவ்வளவாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகின்றன, இந்த மதிப்பீடுகள் அனைத்தும் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 5 சதவிகிதமாக இருக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை, இந்த மதிப்பீடுகள் அனைத்திலும் திட்டம் சாராத செலவினங்கள் அட்டவணைகளில் குறிப்பிட்டுள்ளபடி மத்திய மாநில அரசுகளுக்கு தனித்தனி விகிதங்களில் அமைந்துள்ளன, மத்திய அரசின் திட்டம் சாராத செலவினம் மெய் மதிப்பீடுகளின்படி 5 சதவிகிதமாகவும் மாநிலங்களுக்கு 7 சதவிகிதமாகவும் வளர வாய்ப்புள்ளது, மத்திய அரசுக்கான கடன் வட்டி வீதம் 7 விழுக்காடாகவும் மாநில அரசுகளுக்கு எட்டரை விழுக்காடாகவும் அமைந்துள்ளது, ஒவ்வொரு வளர்ச்சி மதிப்பீட்டிலும் மத்திய அரசின் வரி வருவாய் வளர்ச்சி தொடர்பாக 1,25 மற்றும் 1,15 என்ற இரண்டு மாற்று அனுமானங்கள் கையாளப்பட்டுள்ளன, சென்ற சில ஆண்டுகளில் வரி வருவாய் வளர்ச்சி பத்தாவது திட்ட காலத்தின்போது 1,5 ஆகவும் சென்ற 10 ஆண்டுகளில் சராசரி 1,1 ஆகவும் இருந்ததை கருத்தில் கொள்ள வேண்டும், 11வது திட்ட காலத்தில் 1 முதல் 8 வரையிலான பிற்சேர்க்கை அட்டவணை தரும் நிதிவளங்கள் தொடர்பான தகவல்கள் கீழே சுருக்கமாக தரப்பட்டுள்ளன

Tags:

One response to “11வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான ஓர் அணுகுமுறை”

  1. Shalom Knight says:

    வணக்கம், நான் ஷாலோம் நைட், பணம் தனியார் கடன், நீங்கள் கடன்? உங்களுக்கு நிதி ஆதாயம் தேவை? நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்த உலகளவில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டது. கடனைத் தேவைப்படும் அனைவருக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச கடன்களை நான் கடனளிப்பேன், மேலும் 2% வீதத்தில் கடனை திரும்ப செலுத்த முடியும். வங்கிக் காசோலை அல்லது வங்கிக் காசோலை வழியாக கடனளிக்கிறேன். நிறைய கடிதங்கள் தேவையில்லை. நீங்கள் எங்கள் புகழை ஒரு கடன் பெற வேண்டும் என்றால். மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளலாம்:  நன்றி ஷாலோம் கடன் நிறுவனம் திருமதி ஷாலோம் நைட்

Leave a Reply