இந்தியாவில், அடுத்த 12-24 மாதங்களுக்குள் சுமார் ரூ.4 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீடு ஈர்க்கப்படும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.

இந்நிறுவனம் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் தனது ஆய்வுக் குழுக்கள் வாயிலாக 1,766 பன்னாட்டு நிறுவனங்களிடம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இவற்றுள் பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்

முதலீடுகளை மேற்கொள்ளும் எண்ணத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 20 சதவீத நிறுவனங்கள் இந்தியாவில் ஏற்கனவே 8,000 கோடி டாலர் அளவிற்கு நேரடி முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

59 சதவீத நிறுவனங்கள் நம் நாட்டில் புதிதாக முதலீடு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. அதே சமயம் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் 67 சதவீதத்தினர் மீண்டும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீடு என்பது ஒரு வெளிநாட்டு நிறுவனமோ, வெளிநாட்டினரோ அல்லது ஒரு வெளிநாடு வாழ் இந்தியரோ உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிலோ அல்லது திட்டம் ஒன்றிலோ நேரடியாக மேற்கொள்ளும் முதலீடு ஆகும். இந்திய நிறுவனம் ஒன்றின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை வாங்குவதன் வாயிலாகவோ, துணை நிறுவனம் ஒன்றை தொடங்குவதன் வாயிலாகவோ, கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்குவதன் மூலமோ இது மேற்கொள்ளப்டூபடுகிறது.

Tags:

Leave a Reply