12 ஆண்டுகளாக ஜகநாதர் தேரோட்டபாதையை சுத்தம்செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் 400 ஆண்டுகால பழமைவாய்ந்த அகமதாபாத் ஜகநாதர் ஆலயதேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பாரம்பரிய மரபுகளின் படி, யானைகள் முதன் முதலாக ஜகநாதரை பார்வையிட்ட பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர் செல்லும் பாதையை சுத்தம்செய்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது ; உலகப் புகழ்பெற்ற அகமதாபாத், ஜகநாதர், சகோதரர் பாலதேவர் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் நகரவீதிகளில் தேரில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கடந்த 136 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தின் மிகமுக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

12 ஆண்டுகளாக ஜகநாதர் தேரோட்டபாதையை சுத்தம்செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்ததை வாழ்நாளின் பெரியஅதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

மழைக் காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. ஜகநாதரின் அருளால் நாடுமுழுவதும் நல்ல மழை பொழிந்து, விவசாயிகள், கிராமங்கள், ஏழைமக்கள் ஆதாயமடைந்து நலமாக வாழ ஜகநாதரை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்’ என மோடி கூறினார்.

Leave a Reply